Thursday, January 14, 2016

விறுவிறுப்பு என்றால் அது எண்டமூரி வீரேந்திரநாத்ஒரு தலைமுறைக்கு அவர் ஒரு பரிசோதனை நாடக எழுத்தாளர்... மற்றொரு தலைமுறைக்கு ஒரு பிரபல நாவல் எழுத்தாளர்... அதன் பிறகு புகழ் பெற்ற திரைக்கதை எழுத்தாளர்... இன்றைய தலைமுறைக்கு அவர் ஒரு பர்ஸ்னாலிட்டி கவுன்சிலர்... காலத்திற்கேற்ப தனது எழுத்தையும்-சிந்தனையையும் மாற்றிக்கொண்டு தொலைநோக்கு பார்வையோடு செயலாற்றுவது இவரது தனித்தன்மை.

1980 முதல் தெலுங்கு இலக்கியத்தில் லச்சக்கணக்கான புத்தகப் பிரதிகள் விற்பனை; கோடிக்கணக்கில் வருமானம்; தி மோஸ்ட் பாப்புலர் தெலுங்கு எழுத்தாளர்தான் எண்டமூரி வீரேந்திரநாத்.

இவரது எழுத்து-தெலுங்கையும்-கடந்து கன்னடத்திலும் இன்றும் பேசப்படும் ஒரு தெலுங்கு எழுத்தாளர்; வெளிவந்த ஒரு சில தினங்களில் கன்னடத்தில் இவரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்படும்;
தமிழிலும் இவரது படைப்புக்கள் கெளரி கிருபானந்தன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

நான் வியந்து ஆச்சர்யபட்ட விஷயம் என்னவெனில் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற நாவல் எழுத்தாளர்களின் வரிசையில் தமிழ் இலக்கிய வட்டத்தில் இவரைக் கொண்டாடும் வாசகர்கள் இருப்பதை பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் 500 பேர் பார்ப்பதற்காக நாடகம் எழுதினார். லச்சக்கணக்கில் நாவல் பரவலாக மக்களிடையே கவனம் பெறத் துவங்கியது எனத் தெரிந்ததும் நாவல் எழுத துவங்கினார். சினிமாவில் கதவுகள் திறக்க அங்கும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். டாலிஹுட்டில் மெகாஸ்டார் சிரஞ்சீவி 1985-95 இல் தொடர்ச்சியாக வெற்றி கொடுத்ததில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
ஒரு பக்கம் பத்திரிகைகளில் நாவல் எழுதிக்கொண்டு, மறுபுறம் சினிமாவில் 20ஆண்டுகள் திரைக்கதை-வசன எழுத்தாளராக இருந்துக்கொண்டு ஆந்திராவில் எண்டி ராமாராவ் பிறகு பிரபலமான ஆளுமையாக திகழ்ந்தார். மிகப் பெரிய அளவில் இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்களும் கொண்டாடிய தெலுங்கு மக்கள் இரண்டாயிரத்திற்கு பிறகான தலைமுறை இவரை கவனிக்காததால் எழுதுவதை குறைத்துக்கொண்டார்.

இதுவரை 5 நாடகங்கள், 51 நாவல்கள் தெலுங்கில் எழுத 11 மட்டுமே படித்திருக்கிறேன். இவருக்கு புகழைத் தேடித்தந்த நாவல்கள் பார்த்தால் துளசி தளம், மீண்டும் துளசி, பணம் மைனஸ் பணம், அந்தர் முகம், நிகிதா, 13-14-15 என்று பெரிய பட்டியலே இருக்கிறது.
நிகிதா, இந்த ஒரு நாவல் போதும் 1994 இல் எழுதியது. 20 ஆண்டுகள் கடந்தும் இன்றைய சூழலுக்குப் பொருந்தும் சரியான நாவல். எனது தனிப்பட்ட முறையில் எண்டமூரி வீரேந்திரநாத்தின் இந்த நாவலை பெஸ்ட் நாவல் பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கிறேன். (பிறகு ஒருநாள் இந்த நாவலைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.)

ஒரு விதத்தில் இவரை தெலுங்கு சுஜாதா என்று கூடச் சொல்லலாம். எப்படி தமிழில் சுஜாதாவை கமர்ஷியல் எழுத்தாளர் என்கிற முத்திரையை குத்தி வைத்திருக்கிறார்களோ அதே போன்று தான் தெலுங்கிலும் இவரது நிலமை. ஆனால் லச்சக்கணக்கான வாசகர்களை வாசிப்பு பக்கம் ஈர்த்ததில் தமிழில் சுஜாதாவிற்கும்-தெலுங்கில் இவருக்கும் மறுக்க முடியாத பங்கு உண்டு.

இவரது நாவல்களில் எனக்கு பிடித்தது கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்துவது இவரது தனிச்சிறப்பு. அதனால்தான் பதிவின் தலைப்பே விறுவிறுப்பு என்றால் அது எண்டமூரி வீரேந்திரநாத் என்றுதான் வைத்தேன்.

பின்குறிப்பு:
தமிழில் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புதிதாக ஒரு எழுத்தாளரை வாசிக்க விரும்பினால் நிச்சயம் எண்டமூரி வீரேந்திரநாத் ஒரு குட் சாயிஸ். இவரது நாவல்களை கௌரி கிருபானந்தன் தமிழாக்கம் செய்திருக்கிறார். அல்லயன்ஸ் பதிப்பகத்தில் வாங்கலாம்.
www.alliancebook.com 
நன்றி.

***
நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துகள்.
தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

 1. நான் இவரைப் பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவரின் நாவல்கள் படிக்கும் ஆர்வத்தையும் விதைத்தது. நல்ல அறிமுகத்திற்கு நன்றி மகேஷ்.
  த ம 1

  ReplyDelete
 2. அப்படியா? தமிழில் சுஜாதா எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அறிமுகத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 3. ஆமாம் மகேஷ் இவரைப் பற்றி அறிவோம் வாசித்ததுண்டு. உண்மையே சுஜாதா எனலாம் ஆனால் தமிழில் மொழி பெயர்க்கப்படும் போது அது கொஞ்சம் மிஸ்ஸிங்கோ என்றும் தோன்றியதுண்டு....மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் அவரது புத்தகம் வாசித்து. மிகப்பிரபலமானவர். தொடர்கள் கூட வந்ததுண்டு தமிழ் பத்திரிகைகளில்.

  ReplyDelete
 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. Thanks for introducing him. I have heard of him, but, not much. Will read.

  ReplyDelete
 6. Those days his novels will be translated and published as serial in Kungumam magazine. His novels will be very detailed oriented like English novel- kandavelu

  ReplyDelete
 7. எண்டமூரி வீரேந்திரநாத் படைப்புகளை விரும்பி படிக்கும் வாசகர்கள் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
 8. எண்டமூரி வீரேந்திரநாத் படைப்புகளை விரும்பி படிக்கும் வாசகர்கள் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
 9. //Total Pageviews
  119,500//

  முதலில் வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. அவரது புதினம் "துளசிதளம்" சாவியில் தொடராக வந்தபோது படித்திருக்கிறேன்...
  மற்றவை படித்ததில்லை...

  ReplyDelete