Monday, April 11, 2016

குருவாயூர்சமீபத்தில், 25-03-2016 மற்றும் 26-03-2016 இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோயிலுக்கும், கர்னாடகாவில் இருக்கும் உடுப்பி கோவிலுக்கும் சென்று வந்தேன். அந்த பயண அனுபவத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து எழுதும் தொடர் இது. முதல் பகுதி.இரண்டாம் பகுதி.

2011 அக்டோபர் முதல் வாரத்தில், புதுச்சேரி, திருச்சுராப்பள்ளி மற்றும் கோயம்பத்தூர் என இணையம் வாயிலாக அறிமுகமான நண்பர்களை நேரில் சந்திக்கச் சென்றபோது, கோயம்புத்தூர் நண்பன் பிரகாஷ் ‘சும்மா வீட்டுலயே இருந்தோம்ன்னா போர் அடிக்கும். வந்ததற்கு பாலக்காட்டிலுள்ள மலம்புழா அணையை பார்த்துவருவோம்’ எனச் சொல்லி அழைத்துச் சென்றான். கோயம்பத்தூர் -பாலக்காடு பேருந்தில் பயணித்து அங்கிருந்து 12கிமி தொலைவில் மழம்புழா அணை இருப்பதால் அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடித்துச் சென்றோம்.
ஆந்திராவில் நாங்கள் வசிப்பது ராயலசீமா பகுதி என்பதால், வரண்ட ஆறுகளையும், ஏரிகளையும், குளங்களையும் பார்த்து சலித்துப்போன எனக்கு மலம்புழா அணையின் நீர்மட்டம், அணைக்கு வரும் நீர்வரத்தை பார்த்தபோது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நாங்கள் சென்றது விடுமுறை தினம் என்பதால் எங்களைப் போன்று பல சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அணைக்கு அருகில்-சற்று தொலைவில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப்வே அமைத்து ஒரு சிறந்த அனுபவத்தை நமக்குத் தருகிறார்கள். 2011ல் அப்போது நபருக்கு 40ருபாய் ரோப்வேயில் பயணிக்க கட்டணமாக வசூலித்ததாக நினைவு. தவிரவும் அருகில் பாம்புப் பண்ணை, மீன் பண்ணையை பார்த்த ஞாபகம். அன்று இரவே திருப்பதிக்கு புறப்பட இருந்ததால் மழம்புழா அணைக்கு டாட்டா சொல்லிவிட்டு நண்பனது வீட்டிற்கு வந்து விட்டோம்.
பிரகாஷ் காரணமாக தற்செயலாக எதிர்பாராவிதத்தில் எனது முதல் கேரள பயணம் அன்று ஆரம்பித்தது. அதன் பிறகு கால ஓட்டத்தில் இயந்திர தனமான வாழ்க்கைக்குள் சிக்கிக் கொண்டு கேரளாவையே மறந்துவிட்டேன். சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இதோ 2011க்கு பிறகு 2016ல் இரண்டாவது முறையாக கேரள மண்ணில் மீண்டும் காலடி வைக்கிறேன்.

திருப்பதியில் இருந்து திரிசூர் வரை பயணம் மேர்க்கோண்ட குருதேவ் எக்ஸ்பிரெஸ் சராசரியாக மணிக்கு 60கிமி வேகத்தில் பயனித்து பத்து மணி நேரத்தில் 603 கிமி தொலைவு கடந்து நேரத்தில் இரக்கி விட்டது. குருவாயூர் பயணத்தை பற்றி நவீணிடம் தெரிவித்தபோது கோயம்பத்தூரில் இருந்து தானும் குருவாயுரப்பனை தரிசிக்க எங்களுடன் வருவதாக தெரிவித்திருந்தான். சொன்னபடியே நாங்கள் இரயில் நிலையத்தில் இறங்கவும் நொடிப்பொழுதில் எனக்கு முன்பு தோன்றி ஆச்சர்யப்படுத்தினான். இத்துடன் இன்னும் இருவர் எங்களுடன் பயணத்தில் சேர்ந்து பயணிக்க இரயில் நிலைய காத்திருப்பு அறையில் காத்திருந்தார்கள். நாங்கள் இறங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்புதான் நாகர்கோவிலில் இருந்து நாகர்கோயில்-மங்கலூர் பரசுராம் தொடர்வண்டியில் வந்திறங்கி காத்திருந்தார்கள் வேல் முருகனும்-அவனது மனைவி சைலஜா அவரும்.
 பள்ளியில் வேல்முருகன் எனக்கு நாங்காண்டு சீணியர் என்பதால் அந்தச் சமயம் பரிச்சையம் அதன் பிறகு சுமார் 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்கிறோம்.
மதிய உணவு யாரும் சாப்பிடாததால் இரயில் நிலையத்தில் சாப்பிட்டுவிட்டு குருவாயூரை நோக்கி பயணிக்க முடிவு செய்தோம். ’திரிசூர் இரயில் நிறுத்தத்தில் இருந்து வெளியில் வந்த சில நிமிடங்களுக்குள் பேருந்து நிலையத்தை அடையலாம்’ சொல்லிருந்தார்கள். நாங்கள் பிரதான சாலையை அடையவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. சரியாக மதியம் 03:00 அளவில் பேருந்தில் ஏறினோம். இணையத்தில் சுமார் 30கிமி தொலைவு இருப்பதாக படித்தேன். எப்படியும் ‘35-ரூபாய் பேருந்துக் கட்டனம் இருக்கலாம் என யூகித்திருந்த எனக்கு நடத்துனரிடம் கட்டணம் எவ்வளவு கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. 45 முதல் 50 நிமிட பயணம்-25 கிமி இருக்கலாம். பேருந்துக் கட்டணம் 21ரூபாய்.

2011இல் புதுச் சேரியில் முதன்முதலாக பயணித்தபோது பேருந்து கட்டணம் என்னை ஆச்சர்யபடுத்தியது. அதே இம்முறை கேரளாவில். தொடர்ந்து 6 அல்லது 7 மலையாலப்பாடல்களை கேட்க முடிந்தது- பேருந்தில். இதில் தெலுங்கு மற்றும் தமிழில் கேட்ட இரண்டு பாடல்களை மலையாளத்தில் கேட்டேன். இசையை ரசித்துக்கொண்டே பயணித்ததால் நேரம் போனதே தெரியவில்லை. குருவாயூர்வந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

கடிகாரத்தில் மணி அப்போது மாலை நான்கைகூட தொடவில்லை. கோயில் சன்னதி மதியம் 12மணிக்கு சாத்தினால் மாலை ஐந்து மணிக்கு மேல்தான் மீண்டும் திறக்கப்படும் என இணையத்தில் படித்ததால் அதற்குள்ளாக முதலில் அனைவரும் 3கிமி தொலைவில் இருக்கும் புன்னத்தூர் கோட்டை யானைகள் சரணாலயத்தை பார்த்து வர முடிவு செய்தோம். 10நிமிட ஆட்டோ பயணத்தின் பிறகு நாங்கள் யானை காப்பகத்தை அடைந்தோம். குருவாயூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இருக்கிறது. குருவாயூருக்கு நாங்கள் ஒதுக்கிய நேரம் குறைவாகவே இருந்ததால் எப்போது பேருந்து வரும் தெரியாததால் ஆட்டோவில் பயணித்தோம்.

சுமார் 18ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த யானை சரணாலயத்தில் சுற்றி வர நுழைவு கட்டணம் ஆக நபருக்கு ரூபாய் 5 வசூலிக்கிறார்கள். நுழைவாயுலுக்குள் நாம் நுழையவும் யானையின் மலம்-சாணம் வாசனை நமது நாசிக்குள் நுழைகிறது. சிறியது முதல் பெரியது வரை என வயதில் 60க்கும் மேலான யானைகளை இங்கு பராமரித்து வருகிறார்கள். கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் யானைகள்தான் இங்கு இருக்கும் பெரும்பாலானவை. அத்தனை யானைகளையும் ஒரே இடத்தில் ஒன்றாக பார்ப்பது புதிதாக இருந்தது. ஒரு சில யானைகள் எழுப்பும் சப்தத்தைக் கேட்கவும், அது செய்யும் சேஷ்ட்டைகளைப் பார்க்கவும் உள்ளுக்குள் கொஞ்சம் திகிலாகவும், ஒருவித த்ரில்லாகவும் இருந்தது!
 யானை காப்பக வளாகத்திற்குள் சுற்றிப் பார்த்த அரைமணி நேரம் அருமையாக இருந்தது. காப்பகத்தில் கிடைத்த அனுபவத்தை பற்றி சொல்ல நிறையவே இருக்கு. எழுதினால் பதிவு நீண்டுக்கொண்டே செல்வதால் குருவாயூர் சென்றால் தவறவிடாமல் ஒரு முறை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்.

ஐந்து மணிக்கெல்லாம் கோயில் பிரகாரத்திர்க்குள் வந்துவிட்டோம். குருவாயூர் போக வேண்டும் என முடிவு செய்ததும் இனையத்தில் தேவையான தகவகலை துலாவினால் கோயில் பிரகாரத்திற்குள் ஆண்கள் நுழைய வேஸ்ட்டியும், மேல் சட்டை இல்லாமலும் போக வேண்டும் என படித்தேன். இந்த வகையான சாம்ரதாயம் எனக்கு புதிதாக இருந்தது. அதற்கான ஏற்பாட்டோடு வந்ததால் உடனடியாக கோயில் சீருடைக்கு மாறிவிட்டோம் குழுவில் இருந்த 4ஆண்களும். சாமியை தரிசிக்க செல்லும் முன்பு கோயிலுக்கு இருக்கும் குளத்தில் நீராடிவிட்டு செல்ல வேண்டும் என்கிற பாரம்பரிய நம்பிக்கையின் படி குளத்தினுள் காலை நனைத்துவிட்டு சாமியை தரிசிக்க வரிசையில் நின்றோம். வரிசை மெதுவாக நகர்ந்து செல்ல சுமார் ஒன்னரை மணி நேரத்திற்கு பிறகு கிரிஷ்ணரை தரிசிக்க முடிந்தது. திருப்பதியில் 'ஜருகண்டி’ சொல்வதுபோல் இங்கு மலயாலத்தில் எதோ நடை சொல்கிறார்கள். கருவறைக்குள் மூலவருக்கு முன்பு பல விளக்குகள் எரிந்துக்கொண்டிருந்தது.

நாங்கள் அனைவரும் இரவு 09:20க்கு திரிசூரில் இருந்து உடுப்பிச் செல்ல எர்ணாகுளம்-ஓகா தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் இரவு எட்டு மணிக்கெல்லாம் குருவாயூரை விட்டு வெளியேரவேண்டும் என திட்டமிட்டதால் சாமியை தரிசித்துவிட்டு அவசரமாக குழுவில் நண்பர்களது மனைவியர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஷாப்பிங் செய்துவிட்டு பேருந்து நிலையத்தை அடைந்தோம். நவின் அன்று இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் மீண்டும் க்ரிஷ்ணரை தரிசித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லி எங்களை பேருந்தில் ஏற்றிவிட்டு எங்களிடமிருந்து விடை பெற்றான். குருவாயூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டபோது நேரம் இரவு எட்டுகூட ஆகவில்லை. குருவாயூரில் பார்த்த புன்னத்தூர் கோட்டை யானை காப்பகத்தையும், கோவில் அனுபவத்தையும் அசைபோட்டுக்கொண்டு பேருந்தில் திரிசூரை நோக்கி பயணித்தோம்.
***
(தொடரும்)
தொடர்புடைய பதிவுகள் :


1 comment:

  1. அருமை மகேஷ்....அழகான வர்ணனை. திருச்சூர் ரயில் நிலையத்திருந்து வெளியில் வந்து இடப்பக்கம் அப்படியே ரோட்டில் வெகு அருகில் சில நிமிடங்கள் நடந்தால் திருச்சூர் பேருந்து நிலையம். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான்..நல்ல நுணுக்கமான, சிறு தகவல்கூட விடாமல் பதிகின்றீர்கள் வாழ்த்துகள் மகேஷ்

    ReplyDelete