Monday, July 18, 2016

எத்தனை எண்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறது?நேற்று விடுமுறை என்பதால் அப்பா வீட்டிலிருப்பாரென கருதி அவரைத் தேடி ஒருத்தர் வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு அவசர வேலையின் காரணமாக வெளியே சென்றிருப்பதாக அம்மா சொன்னதும் அவரோடு அவசரமாக பேச வேண்டும் எனச் சொன்னார். ‘அவருடைய அலைபேசி எண் கொடுக்குறீங்களா?’னு அம்மாவிடம் கேட்டிருக்கிறார். அம்மாவோ எண்ணை என்னைச் சொல்லச் சொன்னார்.
அப்பாவோட மொபைல் நம்பர்தானே ‘இதோ சொல்லுறேன்’ சொல்லி ஒவ்வொரு எண்ணாக சொல்ல ஆரம்பித்தேன். ’எட்டு, ஏழு, எட்ட்ட்ட்டு’, இல்ல இல்ல திரும்பவும் சொல்லுறேன் சொல்லி வெளியே எனது பதற்றத்தை காட்டிக்காம இம்முறை நிருத்தி நிதானமா யோசித்து எண்ணை சொல்லி முடித்தேன். வீட்டிற்கு வந்திருந்தவர் நான் சொன்னதை எழுதிக்கொண்டு ஒரு முறை சரி பார்த்து விட்டு சென்று விட்டார். அதன் பிறகு எனக்குதான் ஒரே யோசனை ஆரம்பிக்க துவங்கியது.

’போயும் போயும் அப்பாவோட நம்பர சில நொடிகள் மறந்து போய்/குழப்பத்தில் சொல்ல ஆரம்பிச்சேனே’ என்கிற உறுத்தல் சிறிது நேரம் என்னை யோசிக்கச் செய்தது. தற்போது அப்பா பயன்படுத்தும் எண் ஒன்றும் புதுசு கிடையாது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேல பயன்படுத்துகிறார்.
‘எனக்கு என்னவோ ஆச்சுடோய்’னு ஒரு சின்ன பரிட்சை எனக்கு நானே செய்துக்கொண்டு பார்த்தேன்.
அதுக்கு முன்னாடி......

நான் ஆறாவது படிக்கும்போதுதான் வீட்டில் முதல் கைபேசி வந்த நினைவு. அப்போது குடும்பத்தில் ஒரு கைப்பேசி இருந்தாலே பெரிய விஷயம். தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என எனக்கு தெரிந்தவர்களது எண்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பேன். நடு இரவில் கேட்டா கூட கிடுகிடுனு சொல்லிடுவேன். அதெல்லாம் பன்னிரெண்டாவது முடிக்கிற வரைக்கும் சொல்லலாம். கல்லூரிக்கு வந்ததும் கைப்பேசி பயன்படுத்த ஆரம்பிச்சேன். நிலமை ஒன்னும் அப்போ மோசமொன்னும் ஆகல. புதிய எண் யாராவது சொன்னாலும் கைபேசியில் பதிவு செய்து விட்டு அப்படியே மூளையிலும் போட்டு வைப்பேன்.
அது எப்போதில் இருந்து சரியாக தெரியல படிபடியாக சோம்பேறி பட்டோ இல்ல வேறு என்ன காரணமோ தெரியல நேற்று வரையிலும் புதிய எண் யாராவது சொன்னால் நேரடியாக கைபேசியில் பதிந்து விட்டுவிடுவேன்.
இன்றைய கால கட்டத்தில் நமக்கு தெரிந்த கைபேசி எண்களையெல்லாம் நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றதுனு நினைக்கிறேன். நூற்றுக்கணக்கான எண்கள்; அதில் சிலர் அடிக்கடி மாற்றுபவர்கள்; அப்படி இருக்க அனைத்து எண்களையும் நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றது.
ஆனாலும் தற்போதையச் சூழலில் பலரும் தங்களது குடும்பத்தாருடைய எண்களை கூட நினைவில் வைக்க முடியாத அவல நிலைக்கு வந்து விட்டோம்.
அப்பா கைபேசி எண்ணை சொல்ல ஆரம்பிச்சதும் ஏற்பட்ட தடுமாற்றம் குற்ற உணர்ச்சி காரணமாக எனக்கு நானே ஒரு பரிட்சைசெய்துக்கொண்டேன் சொன்னேன் இல்லயா?
அது என்னன்னா தற்போது எத்தனை கைபேசி எண்கள் நினைவில் இருக்கிறதென எண்ணிப் பார்த்தேன். சொன்னால் வெட்கக்கேடு
***
 நீங்களும் ஒரு முறை கண்ணை மூடிக்கொண்டு ‘உங்களுக்கு எத்தனை கைபேசி எண்கள் நினைவில் இருக்கு’னு உங்களை நீங்கள் சோதித்து பாருங்கள்.
--
 நன்றி.
தொடர்புடைய பதிவுகள் :


3 comments:

 1. yes boss eye opener!!!!!!!!
  me to felt shame after that test
  so sad.
  super post.

  ReplyDelete
 2. இங்கு செய்த ஆராய்ச்சி படி ஒரு சராசரி மனிதனால், எழு நம்பர்களை மனதில் வைத்துக் கொள்ள முடியும்.
  அதனால் தான் இங்கு டெலிபோன் நம்பர்கள் ஏழு வரை மட்டுமே இருக்கும். area code-ஐ எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளமுடியும்.

  அடுத்து வரும் மூன்று நம்பர் ஒரு இடத்தை குறிக்கும். உதாரணமாக அடையார் என்றால் 111 என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்க்கு அப்புறம் வரும் நான்கு நம்பர்கள் உங்கள் வீட்டு டெலிபோன் நம்பர்.

  ReplyDelete
 3. மகேஷ்,

  சொன்னால் நம்ப மாட்டீர்கள். என் கைபேசி எண்ணையே சில நேரங்களில் தொலைபேசியில் இருந்துதான் பார்த்து சொல்லுவேன். அந்தவகையில் நீங்கள் எவ்வளவோ மேல். என்னது என் தொலைபேசி எண்ணா? இருங்க கொஞ்சம் பார்த்துட்டு பிறகு கூப்பிடுகிறேன்.

  கோ

  ReplyDelete