Saturday, December 31, 2016

திருப்பதிக்கும், திருத்தணிக்கும்டிசம்பர் 19 அன்று வாழ்வில் முதன் முதல் வேலை அப்பாயிண்மெண்ட்டில் கையெழுத்திட்டேன். அன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் state bank learning center ல் ஓரியெண்டேஷன் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை அன்று வேலை செய்ய இருக்கும் இடத்தை குறித்த posting order கொடுத்து அனுப்பினார்கள்.
சென்னையிலிருந்து வீடு திரும்பியதும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருத்தராக  ஐந்து நாட்கள் சென்னையில் இருந்த அனுபவத்தைக் கேட்டார்கள். கேட்ட அனைவரிடத்திலும் கொடுத்த பதில் ஒன்றுதான். ‘ஐந்து நாட்கள் ஐந்து நிமிடம் கடந்து வந்ததைப் போன்று உணர்வு’ என்று சொல்லி இருந்தேன். நூத்துக்கு நூறு சதவிகிதம் உண்மை. புதிதாக அறிமுகமான சக வகுப்பு நண்பர்களில் இருந்து அங்கு பணிபுரியும் ஒட்டு மொத்த அதிகாரிகளும் அருமையானவர்கள்.
வீடு திரும்பியதும் எடுத்ததும் சென்னையில் கிடைத்த அனுபவத்தைப் பற்றிதான் நிறைய எழுத நினைத்திருந்தேன். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு உடனடியாக திங்கட்கிழமை திருத்தணி ஸ்டேட் பேங்கில் சேர வேண்டி இருந்ததால் இடை பட்ட இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய சில வேலைகளுக்கே சரியாக இருந்தது. நிச்சயம் எழுத வேண்டும் என்கிற ஆசை/விருப்பம் மனதில் உண்டு. நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம்.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிதாக ஜூனியர் அசோசியேட் ரிக்ருட் செய்ய நோடிஃபிகேஷன் விட்டதும் சென்னை வட்டத்தில் தேர்வு எழுத முடிவு செய்திருந்தேன்.  நான் இருக்கும் ஹைதிரபாத் வட்டத்தில் ஓ கட்டாஃப் பார்த்தால் வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதென்பதால் ’எப்படியும் திருத்தனியில் போஸ்ட்டிங் வாங்கிடலாம்’, ‘வீட்டில் இருந்து தினமும் சென்று வர வசதியாக இருக்குமே’னு முன்கூட்டியே பல கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் போட்டுதான் அப்ளை செய்து தேர்வு எழுதி இருந்தேன்.
திட்டமிட்ட படி எல்லாம் சரியாக நடக்க விருப்பபட்ட இடத்தில் வேலை என எல்லாம் சரியாக அமைய உற்சாகத்தோடு 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலையில் அப்பாவும் நானும் ரயிலில் திருத்தனி ஸ்டேட் பேங்கில் சேர புறப்பட்டோம். இங்கிருந்து எழுபது கிலோ மீட்டர்தான். அன்றிலிருந்து தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு நான் எழுந்து, குழித்து முடிப்பதற்குள் எனக்கு முன்பே அம்மா எழுந்து காலை மற்றும் மதிய உணவை சமைத்து தயாராக வைத்திருப்பார்கள். சரியாக வீட்டில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் திருப்பதி ரயில் நிலையம் இருப்பதால் தினமும் ஆறரை மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டால் 6,45 மணிக்கு திருப்பதி-சென்னை ரயில் பிடிக்க சரியாக இருக்கும். இரண்டு மணி நேரம் ரயில் பயணத்திற்கு பிறகு சுமார் ஒன்பது மணி அளவில் திருத்தனி ரயில் நிலையத்தில் இறங்குவேன்.
வங்கி பத்து மணிக்குதான் துவங்கும் என்பதால் வீட்டில் இருந்து கொண்டு வந்த காலை உணவை ரயில் நிலையத்தில் முடித்து விட்டு நேரத்தையும் கடத்தி ஒன்பதரை மணி அளவில் வங்கியை நோக்கி நடக்க ஆரம்பித்தால் மெதுவாக நடந்தாலே பத்து நிமிடத்திற்குள் வங்கியை சென்றடையக்கூடிய தொலைவில்தான் பணி புரியும் ஸ்டேட் பேங்க் இருக்கிறது.
காலையில் வங்கிக்குள் நுழைவதில் இருந்து மாலை வெளியே வருவது வரையிலும் அலுவலக நேரம் எல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. கீழ்மட்ட பணியாளர்களில் இருந்து மேல் மட்ட அதிகாரிகள் வரை நன்றாக பழகுகிறார்கள். தேவைப்படும் உதவியைச் செய்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு போகப் போக எல்லாம் சரியாகி விட்டது. தினம் தினம் புதிது புதிதாக கற்றுக்கொள்ளவும் தெரிஞ்சுக்கவும் நிறைய இருக்கிறது. அதே சமயத்தில் செய்யும் வேலையில் திருப்தியும் இருக்கிறது.
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பேருந்து வீதம் திருப்பதிக்குச் செல்லும் பேருந்து  வங்கி முன்பிலிருந்துதான் செல்வதால் மாலை வீடு திரும்ப பேருந்து ஏற வசதியாக இருக்கிறது. வங்கி செக்கூரிட்டி அதிகாரிகள் பேருந்தை நிறுத்தி ஏற்றிவிடுகிறார்கள். அதனால் பேருந்து ஏறுவதில் சிக்கல் ஏதும் கிடையாது.
இரண்டு மணி நேர பேருந்து பயண  நேரம் தவிர காலையில் இருந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் இரவு வீடு திரும்புவதற்குள் உடலும் மனமும் சோர்வடைந்து விடுகிறது. புதிதாக எதையும் வாசிக்கவும் எழுதவும் மனம் ஒத்துழைப்பது கிடையாது. கடந்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே வீடு வேலை மட்டுமே மூளை முழுக்க ஆக்கிரமித்திருப்பதில் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.
வாழ்வின் அர்த்தமே தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்வதில்தான் இருக்கிற்து என்பதை உணரத் துவங்கி இருக்கிறேன். அதனால் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை வர வரும் புத்தாண்டில் இதற்கொரு நன்கு திட்டமிட்டு நல்ல முடிவெடுத்து வேலையும் தனி பட்ட வாழ்க்கையையும் சம அளவில் சமாளிக்க புத்தாண்டு சபதம் எடுக்க இருக்கிறேன். பார்ப்போம்.
மற்றதை பிரிதொரு நாள் சொல்கிறேன்.
நண்பர்கள், அன்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புது ஆண்டில் சந்திப்போம்.

தொடர்புடைய பதிவுகள் :


9 comments:

 1. வாழ்த்துகள் மகேஷ்.... பணி சிறக்கட்டும்....

  ReplyDelete
 2. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 3. Fantastic Mahesh..... Wish you all the best for your bright future.

  ReplyDelete
 4. Fantastic Mahesh..... Wish you all the best for your bright future.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் மகேஷ்! புத்தாண்டு வாழ்த்துகளூம்! எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது எழுதுங்கள்! இந்த வேலையும் உங்களுக்குப் பழகிவிடும். நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும்! வாழ்வில் எது மிக முக்கியமோ அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பது இன்றியமையாதது இல்லையா! அதனால் மெதுவாகத் திட்டமிட்டு எழுதுங்கள் இப்போது இந்த வேலைதான் முக்கியம்! வாழ்த்துகள்!! சிறப்பாக வருவீர்கள்!

  ReplyDelete
 6. பணியில்பு ்தாசேர்ந்தமைக்கு மிக்க ்டுமகிழ்ச்சி வாழ்த்துகள் மகேஷ்.வங்கிப் பணியில் உங்கள் திறமைகள் நிச்சயம் வெளிப்படும்.ஒய்வு நேரத்தில் எழுதலாம். அனுபவங்களும் வசப்படும்

  ReplyDelete
 7. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. இந்த புத்தாண்டு இனியதாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வாழ்வின் அர்த்தமே தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்வதில்தான் இருக்கிற்து

  ந்றுக்கென்று சரியாகச் சொன்ன வார்த்தை. அடுத்தடுத்த கட்டங்களும் நல்ல கட்டங்களாக இருக்க வாழ்த்துகள்.

  ReplyDelete