Sunday, January 08, 2017

இரண்டாம் வாரம்
 

நேற்றோடு வேலைக்கு போக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. முதல் வார முடிவில் இருக்கும் களைப்பேதும் இம்முறை தெரியவில்லை. நிலமை என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன். அதிகாலை எழுந்துரிக்கணும், அவசரம் அவசரமாக ரயிலை பிடிக்க ஓடணும்என்கிற பரபரப்பான காலை பொழுதிற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

 

வங்கிக்கு ரயிலுக்கு பதிலாக பேருந்தில் செல்கிறேன். காலை உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்புகிறேன். ஒன்னரை மணி நேரம் பேருந்து பயணம் மட்டும்தான் பிரச்சனை. இசையின் துணையோடு அதையும் கடக்கிறேன்.

 

சரியாக வீட்டில் இருந்து ஏழரைக்கு புறப்பட்டால் ஏழே முக்காலுக்கு ஒரு பேருந்து திருப்பதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புறப்படும். அந்த பேருந்தில் ஏறினால் ஒன்பதரை அளவில் திருத்தனியில் இறங்கிடுவேன். இறங்கியதும் நடக்க ஆரம்பித்தால் சரியாக ஐந்து நிமிடத்திற்குள் வங்கியில் நுழைந்து விடலாம்.

 

சராசரியாக ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து திருப்பதிக்குச் செல்பவை வங்கி முன்பிலிருந்து செல்வதால் மாலை வீடு திரும்ப பேருந்து ஏற வசதியாக இருக்கிறது. தினமும் நாலே முக்காலுக்கு ஒரு பேருந்து இருக்கிறது. வங்கி வாசலிலே ஏறிடுவேன். ஆறரை மணிக்கு திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கிடுவேன்.

 

தம்பியோ, அப்பாவோ யாராவது ஒருத்தர்  பேருந்து நிலையத்திற்கு வருவார்கள். இரவு ஏழு மணிக்கு முன்பாகவே வீட்டிற்குள் வந்து முகம், கை கால் கழுவி மாலை சிற்றுண்டியையும் முடித்து விடுவதால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஏதாவது கனினியில் பார்க்க வேண்டி இருப்பதை பார்த்துவிட்டு இரவு உணவை முடித்து விட்டு உறங்க சரியாக இருக்கிறது.

 

வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு பயண களைப்பு முதல் வாரத்தை விடவும் இரண்டாம் வாரம் பல மடங்கு குறைந்திருப்பதாக உணர்கிறேன். பணியில் பத்து மணியில் இருந்து தொடர்ந்து வாடிக்கையாளர்களோடு பேசிக்கொண்டிருப்பதால் மதிய உணவிற்குள்ளாகவே ஒட்டுமொத்த எனர்ஜியும் தீர்ந்து விடுவதைப் போன்றதொரு உணர்வு.

 

எது எப்படியோ மோடியின் டீமானிடைசேஷன் புண்ணியத்தில் வங்கி ஊழியர்கள் ஒருபுறம்; பொது மக்கள் ஒருபுறம் அவஸ்தை படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. என்றுதான் இந்த நிலமை தீருமோ? அவர் சொல்லுற மாதிரி பணமில்லாப் பொருளாதாரம் சாத்தியமானால் இப்பொது வங்கிக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே நாங்களும் கூலாக வேலை செய்து வீடு திரும்பலாமே :)

 
தொடர்புடைய பதிவுகள் :


6 comments:

 1. Yes.... Digital India is sure to happen

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நண்பர் திருப்பதி மகேஷ் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். தங்களது கடந்த பதிவுகள் இரண்டினையும், இந்த பதிவினையும் இப்போதுதான் படித்தேன். வங்கியில் தங்களுக்கு வேலை கிடைத்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. மீண்டும் எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. மகேஷ் புத்தாண்டு வாழ்த்துகள்! இறுதி வரிகள் ஹஹஹஹ் சரிதான்!!!! இப்போதைய பிரச்சனை விரைவில் தீர்ந்தால் சரி. எதற்காக இந்த டிமானிட்டைசேஷன் கொண்டு வரப்பட்டதோ அது நிறைவேறுமா??!! தொடர்ந்து தங்கள் அனுபவங்களைப் பதியுங்கள் மகேஷ்..வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. ஒ மகேஷ் க்கு வேர்க் கிடைத்துவிட்டதோ? வாழ்த்துக்கள், மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது, ஒன்றரை மணிநேரப் பிரயாணம் கொஞ்சம் அதிகம்தான், இருப்பினும் பறவாயில்லை காலப்போக்கில் பழகிவிடும். இந்தப் புத்தாண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete