Wednesday, January 18, 2017

என் திருமணம் பற்றிய ரகசிய குறிப்புகள்!


மனுசனா பொறந்தா படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை, குடும்பம்..னு வாழ்ந்து சாகுறதுதான் முழுமையான வாழ்க்கைக்கு அர்த்தமா? வேலைக்கு போக ஆரம்பிச்சு சரியா முழுசா ஒரு மாசம் கூட முடியல. அதுக்குள்ளயும் என்னிடம் பலர் ‘வேலை கிடைச்சாச்சு திருமணம் எப்போ’னு தொடர்ந்து கேக்குறாங்க. இன்னும் ஒரு சிலர் ‘கட்டுனா வேலைக்கு போற பொண்ணா பார்த்து கட்டிக்கோ’னு அட்வைஸ் வேற கொடுக்குறாங்க.
எனக்கு ஒன்னுமே புரியல. ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் ‘படிப்பு முடிச்சாச்சு வேலைக்கு எப்போ போவ?’னு அம்புகளால் துரத்திய சமூகம் வேலை கிடைச்சதும் இப்போ பாக்குறவுங்க எல்லாம் என்னுடைய திருமணம் பத்தி என் கிட்ட பேசுறாங்க.
மனுசன கொஞ்சம் நேரம் ஃப்ரியா விடலாமே? அவனுடைய தனிப்பட்ட ஆசைகள், லச்சியங்கள், விருப்பங்கள்னு ஓட ஆரம்பிக்கும் சமயத்தில் இப்படி முட்டுக்கட்டை போடுறது ஞாயமா? அக்கறையில் கேக்குறாங்களோ இல்ல ஆலோசனை கொடுக்குறேன் பேர்வழினு பேசுறாங்களோ தெரியல. சமூகத்தின் ஒரு அங்கமான நான் சமூகத்தின் விருப்பபடிதான் வாழனுமா?
எனக்கு திருமணத்தின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ கிடையாது. ஒரு வேளை எந்த பெண்ணிடமாவது காதல் வசபட்டிருந்தால் மட்டுமே அடுத்து திருமணம் பற்றிய எண்ணம்தான் என்னுடைய மூளை முழுக்க ஆக்கிரமித்து, வேலைக்கு போக ஆரம்பிச்சதுல இருந்து அடுத்து அடைய வேண்டிய லட்சியமாக திருமணம் இருந்திருக்குமோ என்னவோ? அதுமாதிரியான ஒரு விபத்து இது வரை ஏற்படாததற்கு சந்தோஷப்படுகிறேன்.
என்னுடைய தனிபட்ட சில ஆசைகள் முதலில் நிறைவேற சந்தர்ப்பம் கிடைச்சதாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன். திருமணம் பற்றிய எண்ணம் பிறகு பார்த்துக்கலாம்.
 ***
விவரம் தெரிந்ததில் இருந்து இந்த நொடி வரைக்கும் சொற்ப எண்ணிக்கையில்தான் திருமண அழைப்பிற்கு சென்றிருக்கிறேன். திருமண தம்பதியர் யாராவது ஒருத்தர் எனக்கு நெருங்கிய சொந்தமாகவோ/நண்பராகவோ இருந்தால் மட்டும் செல்வது. காரணம் இன்னதென்று சரியாக தெரியாது. ஆனால் சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஆஜரான ஒரு திருமணம் என்னை மிகவும் கவர்ந்தது. அன்றில் இருந்து சொல்ல ஒரு காரணம் கிடைச்சது.
திருமணம் என்கிற ஒரு நாள் சடங்கிற்கு லட்சங்களில் செலவு செய்து ஆடம்பரமாக ஜாம்ஜாம்னு நடத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் செலவு செய்து போகட்டும். இல்லாதவர்களோ தங்களுடைய சக்திக்கும் அதிகமாக செய்ய நினைத்து, கடன்காரர்களாகி அவர்களது சேமிப்பு+சம்பாத்தியத்தை எல்லாம் திருமண செலவுகள்+கடன் அடைக்கவே ஓடுபவர்களை நம்மைச் சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்க்கும்போது இன்னும் எனக்குள் ஒரு வித வைராக்கியம் கொழுந்து விட்டு எரிகிறது. ‘செலவே இல்லாமல் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்கிற ஆசைதான் அது.
என்னை மாதிரியே எல்லாரும் யோசிக்கனும்னு சொல்லல. இந்த காலத்துல பணம் சம்பாதிப்பதில் இருக்கும் சிக்கல்கள் தெரிந்ததால் என்னவோ செலவு செய்ய புத்தி அனுமதிப்பதில்லை. பிற்கால செலவுகளுக்கு அந்த பணத்தை தம்பதியினர் பயன்படுத்தலாம் என்கிற முன் எச்சரிக்கை மட்டும்தான்.
அடுத்ததா திருமணம் செய்துக்க போற துணை பற்றிய எதிர்பார்ப்பு,
 எனக்குள்ள நிறைய இருக்கு,
 சொல்ல தைரியம் இருக்கு ஆனா கூட வெட்கமாகவும் இருக்குது:)))
பொதுவாக திருமன தம்பதியினரை எடுத்துக்கொண்டால் மணமகனுக்கும்-மனப்பெண்ணுக்கும் ஒரு வருடத்தில் இருந்து சராசரியாக ஐந்தாறு வருடங்கள் இடைவெளி இருக்கும். எந்த ஆண் மகனாவது தன்னுடைய வயதிற்கும் அதிகமான மூத்த பெண்னை திருமணம் செய்துக்கொண்டால் அவ்வளவுதான். மண்டபத்திற்கு வந்து வையிறு முட்ட சாப்பிட்டு பின்னால் சாப்பிட்டது செரிமானம் ஆகும் வரை தம்பதியினரைப் பற்றி பேசி தீர்ப்பார்கள். எப்படி ஒரு பெண் தன்னை விடவும் வயதில் மூத்த நபரை திருமணம் செய்துக்க எந்த ஒரு ஆட்சேபனையும் சமூகத்தில் இல்லையோ அது போல ஆணும் தன்னை விடவும் வயதில் பெரிய பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதிலும் யாருடைய ஆட்சேபனையும் இருக்க கூடாது.
அறிவியல் விளக்கம்;சாம்ப்ரதாய பழக்கம்; என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதை பற்றி எல்லாம் கண்டுக்காமல் என் வயதை விடவும் மன பொருத்தம் ஆன இரண்டு அல்லது மூன்று வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துக்க ஆசை:)))
அடுத்ததா குழந்தை விசயத்தில் ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கனும்னு ஆசை. திருமணம் முடிந்ததும் வருடம் முடிவதற்குள் குழந்தை பெற்றெடுத்து அதனுடைய படிப்பு, வேலை, திருமணம்னு எல்லாரைப் போல ஓட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தை மற்ற குழந்தைகளை விடவும் பெஸ்ட்டாக இருக்கனும்னு பெருமைப்பட பெற்றோர்கள் ஓடுவதன் பின்னால் இருக்கும் சிரமங்கள் எனக்கு பார்த்து பார்த்து சலித்து விட்டது. தங்களை வருத்திக்கொண்டு ஓடுவதோடு குழந்தைகளையும் வாட்டுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. வீட்டுக்கு வீடு அதே கதைதான்.
அதனால் குழந்தை தத்தெடுத்து வளர்ப்பதால் என் வாரிசு என்கிற ஒரு கர்வம் மனதில் இருக்காது என்பதால் நிம்மதியாக வாழ முடியும்+ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்வு அமைச்சு கொடுத்த திருப்தியும் இருக்கும்னு நா நினைக்கிறேன்.
 இப்போ வரைக்கும் நா சொன்னது செயல்படுத்த முடியாட்டி திருமணமாகி குழந்தையோடு வாழ்ந்துவரும் விதவைப் பெண்ணையாவது திருமணம் செய்துக்கொள்ளனும்னு ஆசை.
அப்பறம் ஒரு விசயம்: இங்கு எழுதிய மாதிரியே வாழ்க்கை அமைச்சுக்கனும்னு லட்சியம் எல்லாம் இப்போதைக்கு கிடையாது. எல்லாம் ஒரு ஆசைகள் அவ்வளவுதான். அதற்கான சமயம் வரும்போது பார்க்கலாம்.
 மேற்சொன்ன விசயங்கள் அனைத்தும் இத்தனை நாளா மனசுக்குள்ள பூட்டி வெச்சிருந்தேன். ஒன்று ரெண்டு பேரைத் தவிர யாரிடமும் பகிர்ந்துக்கொண்டது கிடையாது. வீட்டில் இதைப் பற்றி மூச்சு கூட விடல. காரணம் எவ்வளவு தூரம் பெற்றோர் புரிந்து கொள்வார்கள் என்கிற பயம் உண்டு. எதோ ஒரு தைரியத்தில் இங்கே எழுதியாச்சு. காரணம் ஒன்றுதான். அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ தமிழ் எழுத வாசிக்க தெரியாது என்கிற ஒரே தைரியத்தில்தான்:)))
தொடர்புடைய பதிவுகள் :


16 comments:

 1. உங்கள் எண்ணம் போல் வாழ்வு அமையட்டும் மஹேஷ்... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!

   Delete
 2. சரியாக சொன்ன தல.
  எனக்கும் வேலை கிடச்சதிதிருண்து இதே இம்சை சுற்றி இருப்பவர்களால். அவர்களிடம் இண்த எதிர்பார்ப்புகளை சொல்லி பெந் பார்க்கச்சொல். இம்சை குடுக்காமல் ணிம்மதியாக உன்னை விட்டுவிடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! செம ஐடியாவா இருக்கே!
   பேசாம இந்த பதிவ ப்ரிண்ட் அவுட் எடுத்து கொடுத்திடலாம்னு இருக்கேன்:)))

   Delete
 3. கரெக்ட்டா சொன்நிங்க ஜி. ிந்த சமுதாயம் ெதாவது ொரு அம்ப அடுத்தடுத்து தொடுத்திட்டே ிருக்கும். படிப்பு முடிச்ச ொடநெ வேல, வேலைல சேந்தா தனியார் வேலயா ிருக்கே, அரசாங்க வேலயாிருந்தா......... ிப்படி போய்ட்டே ிருக்கும்.
  தடைகலை தாண்டி ுங்கல் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கல். :)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் நீங்க சொல்லுரதும் சரிதான்
   என்ன செய்ய பொருத்துகிட்டுதான் போக வேண்டி இருக்குது.
   உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி!

   Delete
 4. ஹா ஹா ஹா மகேஷ் க்கு தலையிடி ஆரம்பமாகி விட்டதா? வேலை கிடைத்துவிட்டது எனும் உங்கள் போஸ்ட் பார்த்தவுடன் அடுத்து என்னவா இருக்கும் எனத்தான் நானும் எண்ணினேன்.

  மிக தெளிவாக இருக்கிறீங்க, அழகா உங்கட உள்ளத்தை வெளிப்படுத்தியிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.

  ஆனா தானாக வரும் எதையும், திருமணம் பற்றி பேசுவோர் யாரையும் உதாசீனம் செய்யாதீங்க, அப்பா அம்மா சொல்லும்போதுகூட காது கொடுத்துக் கேளுங்கோ.. சந்தர்ப்பங்கள் எப்பவும் அமையாது என்பதால் கிடைக்கும் எதையும் .. மலிவாக எண்ணாமல் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கோ.

  ReplyDelete
 5. எப்பவுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்காமல் யார் அவசரப் படுத்தினாலும் அவசரப்படாமல் குறைந்தது ஒரு வருடமாவது காலம் எடுத்து பெண்ணோடு பேசிப்பார்த்து பின்னரும் ஒத்துப் போகும் பட்சத்தில் திருமண பந்தத்துள் இறங்குவது நல்லது என்பது இந்த அக்காவின் புத்தியில் தெரிவது. நல்ல கொள்கையோடு இருக்கிறீங்க... ஆனா நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என இருந்திடக்கூடாது, சந்தர்ப்பம் சூழலுக்கேற்ப மாற்ற வேண்டி நேரிட்டால் மாத்தவும் தயாராக இருங்கோ அப்போதான் வாழ்க்கை இனிக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தானாக வரும் எதையும், திருமணம் பற்றி பேசுவோர் யாரையும் உதாசீனம் செய்யாதீங்க, அப்பா அம்மா சொல்லும்போதுகூட காது கொடுத்துக் கேளுங்கோ.. சந்தர்ப்பங்கள் எப்பவும்
   அமையாது என்பதால் கிடைக்கும் எதையும் .. மலிவாக எண்ணாமல் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கோ.////

   கண்டிப்பாக நீங்கள் சொல்லியது 100% உண்மை.

   ---

   பின்னரும் ஒத்துப் போகும் பட்சத்தில் திருமண பந்தத்துள் இறங்குவது நல்லது என்பது இந்த அக்காவின் புத்தியில் தெரிவது.////

   ம்ம்ம். ஆமாம் அக்கா! நீங்க சொன்னதை யோசிச்சு பார்த்தேன்! எனக்கு சரின்னு படுது.

   ---

   நல்ல கொள்கையோடு இருக்கிறீங்க... ஆனா நான் பிடிச்ச முயலுக்கு 3 கால் என இருந்திடக்கூடாது, சந்தர்ப்பம் சூழலுக்கேற்ப மாற்ற வேண்டி நேரிட்டால் மாத்தவும் தயாராக இருங்கோ அப்போதான் வாழ்க்கை இனிக்கும். வாழ்த்துக்கள்.///

   ம்ம்ம்.
   பதிவை முழுவதும் உள்வாங்கி தம்பிக்கு சரியான ஆலோசனை கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி அக்கா!

   Delete
  2. தம்பி இதுக்குதான் அதிரா மாதிரி வயசில் மூத்தவங்களை பெரியவங்களை நட்பில் வச்சுக்கணும் ..பார்த்திங்களா ஸ்வீட் 16 எவ்ளோ தெளிவா விவரமா பேசறாங்க

   Delete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
 6. நம்ம மக்கள் வாழ்க்கை முழுக்கா எப்போ எப்போ என கேள்விகேட்டே நம்மை ஓட வைப்பாங்க இந்த எப்போக்கள் படிப்பு வேலை திருமணம் குழந்தை ரிட்டயர்மண்ட் என சலிக்காமல் ரெஸ்ட் எடுக்காம நம்மை நோக்கி பாயும் அம்புகள் ..
  சில நேரம் எரிச்சல் வரும் .கண்டும் காணாம போயிடனும் ..
  உங்கள் மன விருப்பப்படியே வாழ்க்கை துணை மற்றும் உங்கள் விருப்பம் நிறைவேற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 7. அவனுடைய தனிப்பட்ட ஆசைகள், லச்சியங்கள், விருப்பங்கள்னு ஓட ஆரம்பிக்கும் சமயத்தில் இப்படி முட்டுக்கட்டை போடுறது ஞாயமா? அக்கறையில் கேக்குறாங்களோ இல்ல ஆலோசனை கொடுக்குறேன் பேர்வழினு பேசுறாங்களோ தெரியல. சமூகத்தின் ஒரு அங்கமான நான் சமூகத்தின் விருப்பபடிதான் வாழனுமா? // யெஸ் மகேஷ் என் மகனும் இப்படியேதான்...உங்கள் பதிவு முழுவதுமே மகனை நினைவூட்டியது. இந்தக் கேள்விக் கணைகள் இன்னும் தொடரும் கல்யானம் என்பார்கள் அடுத்து குழந்தை பிறக்கலையானு அடுத்து ஒன்னே ஒன்னும் போதும்னு வைச்சுட்டீங்களானு, ஆண் குழந்தை என்றால் பெண் குழந்தை வேண்டாமா...பெண் என்றால் ஆண் குழந்தை வேண்டாமா இப்படி இதற்கு முடிவே கிடையாது. இதற்கெல்லாம் செவி சாய்த்து நேரத்தை வேஸ்ட் செய்யவே கூடாது. நம் இலட்சியங்களை மனதில் கொண்டு பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்...

  திருமணங்கள் எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உங்க்ளுடன் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்! உங்கள் ஆசைகள் நிறைவேறிட வாழ்த்துக்கள்! இப்போதைக்கு அடுத்து நாம் பேசியபடி உங்கள் அடுத்த இலக்கை அடைய உங்கள் முயற்சி, உழைப்பு தொடருட்டும்!! வாழ்த்துக்கள் மகேஷ்!

  ReplyDelete
 8. மெரிசலயிட்டேன் 👌

  ReplyDelete
 9. ஆணைவிட அவனுக்கு மனைவியாகப் போகிறவள் சற்றே வயது குறைந்திருக்க வேண்டும் என்னும் நமது மரபு, அறிவியல் பூர்வமானது. ஏனெனில், பெண்ணானவள், ஆணைவிட வேகமாக உடலளவில் முதுமை எய்திவிடுகிறாள். - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  ReplyDelete
 10. அழகா உங்களோட எண்ணத்தை சொல்லிட்டீங்க. உங்களோட விருப்பம் எதுவோ அதன்படியே செயல்படுங்க! வேலை கிடைச்சவுடனே கேட்கிற கேள்வியை உங்களையும் கேட்டு இருக்காங்க. அதுக்கான வயசு இருந்தால், விருப்பம் இருந்தால் திருமண வாழ்வில் இணையலாம். தவறேதும் இல்லை. ஆனால் அது உங்களுடைய லட்சியத்திற்கு தடையாக இருக்க கூடாது. வாழ்த்துகள் மகேஷ்.

  ReplyDelete