Monday, August 28, 2017

சிங்கப்பூருக்கு! (3). சென்னை விமான நிலைய அனுபவங்கள்.ஆகஸ்ட் 11-வெள்ளிக்கிழமை இரவு பயணத்திற்கு  தேவையான பொருட்கள், சாப்பிடுவதற்கான தீனிபண்டங்கள்,  ஐந்து நாட்கள் அணிய வேண்டிய துணிகள் எல்லாம் பைகளில்  அடுக்கினாலும் அடுத்த நாள் (12 ஆகஸ்ட் சனிக்கிழமை) எழுந்திரிச்சதுல இருந்து வீட்டை விட்டு புறப்படும் கடைசி நிமிடம் வரை ஒரே பரபரப்புதான். ’அத எடுத்தியா’ ‘இது மறக்கலியே’னு மாறி மாறி எங்களுக்குள்ள கேட்டுகிட்டு ஒரே ரகளை. ஒருவழியா சரியா அதிகாலை மூன்று மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டோம். முதலில் திருப்பதிக்கு அருகில் 10கிமி தொலைவில் இருக்கும் ரேனிகூண்டா தொடர்வண்டி நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆட்டோ ஒன்றை பிடித்து ரேணீகுண்டா ரயில் நிலையத்திற்குச் சென்றோம். அங்கிருந்து காச்சிகூடா-சென்னை எக்மோர்-வழியாக செங்கல்பட்டு வரை  செல்லும் தினசரி ரயிலில் சென்னைக்கு போக வேண்டும். அங்கிருந்து சிங்கப்பூர் போவதற்கான  விமானம் ஏறவேண்டும். அதுதான் எங்களது திட்டம்.திருப்பதியில் இருந்து  14கிமி தொலைவில் இங்கும் விமான நிலையம் ஒன்று இருக்கிறது. 2016ஆம் ஆண்டு சர்வதேச விமான நிலையமாக திருப்பதி விமான நிலையம் தரம் உயர்த்தபட்டு அனைத்து பணிகள் முடிவடைந்த நிலையில் தயாராக இருந்தாலும் இதுவரை எந்த ஒரு சர்வதேச விமானம் புறப்படவும் / தரை இறங்கியதும் கிடையாது. இத்தனைக்கும் தினம் தோறும் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசிக்க இந்தியா  மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களது வசதிக்காக ஆச்சும் ஏதாவது ஒரு நிறுவனமாவது விமானத்தை இயக்குவார்கள்னு எதிர்பார்த்திருந்தேன். எனது முதல் வெளி நாட்டு பயணம் உள்ளூர் விமான நிலையத்தில் இருந்துதான் துவங்கணும் (அப்போதானே தெரிந்தவர்கள்/உறவினர்கள் நெறைய பேர் வந்து செண்டாஃப் கொடுக்க முடியும்) என்றெல்லாம் கணக்கு போட்டு எவ்வளவோ கனவு கண்டிருந்தேன். அதெல்லாம் நடக்காதுனு தெரிஞ்சதும் திருப்பதியில்  இருந்து சிங்கப்பூருக்கு சென்னை வழியாக போகலாம்னு முடிவு செய்து எங்கள் பயணம் திருப்பதி – சென்னை – சிங்கப்பூர் என்று ஆரம்பிச்சது. திருப்பதியில் இருந்து சென்னைக்கு 150கிமி தூரம்.

விமானம் காலை 11.30க்குதான். வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் பயனிகள் மூன்று மணி நேரம் முன்னரே விமானநிலையத்தில் இருக்கனும் என்பதால்தான் அந்த அதிகாலையில்  அவ்வளவு சீக்கிரம் கிளம்பியதன் காரணம். ஒரு மாதம் முன்பே  நான்கு பேருக்கும் ரயிலில் சென்னை-தாம்பரம் வரை முன்பதிவு  செய்திருந்ததால் எங்களுக்கான பெட்டியில் ஏறியதும் ரயில் புறப்படவும் உடனே படுத்ததும் தூக்கம் வரவும் சரியாக இருந்தது. (அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் எழுந்துரிச்சதன் தாக்கமோ என்னவோ). காலை  ஆறரை மணிக்கு நாங்கள் பயணிக்கும் ரயில் சென்னை கடற்கரை  நிலையத்தில் நின்றது. ’எப்படியும் எக்மோர் ஸ்டேஷனில்  இறங்கி புறநகர் ரயில் ஏற ப்ளாட்பாரம் மாறிதானே ஆகனும்’ என்பதால் இங்கையே மாறிடுவோம்னு கடற்கரை நிலையத்தில் இறங்கிட்டோம். அங்கிருந்து தாம்பரம்  செல்லும் புறநகர் ரயிலில் ஏறினோம். அப்போதான் திடீருனு ஒரு குழப்பம். ’விமான நிலையத்திற்கு எந்த நிறுத்தத்துல இறங்கனும்’னு. எனக்கு தெரிஞ்சதெல்லாம் சென்னைல இருக்கும் விமான நிலையம் மீனம்பாக்கத்துல இருக்குனு மட்டும்தான். ஒரு க்ளாரிட்டிக்காக உடனடியாக அந்தச் சமயம் விமான நிலையத்தில் பணி புரிந்த
 ராஜேந்திரன்

 அவருக்கு போன் செய்தேன். ’சிங்கப்பூர் ஃப்ளைட் ஏற மீனம்பாக்கம் நிறுத்தத்துல இறங்குனா சரியா இருக்குமா சார்?’ கேக்க ‘இல்ல இல்ல திரிசூலம் நிறுத்தத்துலதான் இறங்கனும். அங்கிருந்துதான் இண்டர்னேஷ்னல் ஃப்ளைட்ஸ்கு கிட்ட’னு சொன்னார்.

ராஜேந்திரன்  சார் சொன்ன படி திரிசூலம் நிறுத்தத்தில் இறங்கினோம். மணி அப்போது காலை  ஏழரைதான் தொட்டிருந்தது. ரயில்நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. சூரியன் லேசாக கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்க ஆரம்பிச்சிருந்தான். வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த இட்லி பார்சலை பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சோம். ஒரு இருவது நிமிஷம் அங்கு இருந்திருப்போம். எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும் திரிசூலம் ரயில் நிலைய சுரங்கப்பாதை வழியே வெளியே வந்து ஒரு சாலையை கடந்தால் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்து விட்டோம். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்  டர்மினல் மூன்றில்தான் விமானம் ஏறமுடியும். (இது விமான டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்தது). சரியாக நாங்கள் சேர்ந்த இடமும் டர்மினல் மூன்றுதான்.

பயணிகள் வசதிக்காக விமான நிலையத்திற்குள் லக்கேச் கொண்டு செல்ல ஆங்காங்கே ட்ராலிக்கள் நிறுத்தப்பட்டிருந்தது. நிறுத்தபட்டிருந்த ட்ராலி ஒன்றில் எங்களது பைகளை அடுக்கி ட்ராலியை தள்ளிக்கொண்டு போனோம். டர்மினல் மூன்றில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் முதலில் லிஃப்ட் வழியாக  மூன்றாம் தளத்திற்கு போக வேண்டும். கொஞ்சம் தூரம் நடந்ததில் லிப்ட்  வந்தது. அப்படியே ட்ராலியை சர்ன்னு தள்ளிக்கொண்டு லிஃப்ட்டில் நுழைந்து மேலே போனோம். லிஃப்ட்டைவிட்டு வெளியே வந்தால் ஒரு பெரிய ஹால். நமக்கு அங்கே சென்னையில் இருந்து இயக்கப்படும் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் தனித்தனியே  செக்கின் கவுண்டர்கள் பிரித்து வைத்திருப்பது தென்படும். பயணிகள் தாங்கள் பயணிக்கும் நிறுவனத்தின் செக்கின் கவுண்டருக்குச் சென்று முதலில் போர்டிங் பாஸ் வாங்க வேண்டும்.

எங்களோடது ஏர் இந்தியா விமானம் என்பதால் அது தொடர்பான கவுண்டருக்குச் சென்றோம். ஏர் இந்தியா செக்கின் கவுண்டர்கள் நான்கைந்து இருந்தாலும் அந்தச் சமயம் ஒன்று மட்டுமே திறந்திருந்தது. அதில் 25வயது மதிக்க தக்க இளைஞர் இருந்தார். வரிசை ஏதும் இல்லாததால் நேராக சென்று எங்களது பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட் பிரிண்டவுட் காப்பி கொடுத்தோம். அதைப் பெற்றுக்கொண்டதும் ’டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சீட் தேர்ந்தெடுத்தீங்களா’னு கேட்டார். ‘இல்ல சார்’னு சொல்ல டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நாங்கள் தனித் தனியே டிக்கெட் எடுத்ததோடு இல்லாமல் விமானத்தில் தேவையான சீட்டும் ப்ளாக் செய்யாததால் ’அருகருகே உங்களுக்கு சீட் கிடைப்பது கஷ்டம்னு அந்த அதிகாரிச் சொன்னார். ‘கொஞ்சம் ஒரே இடத்துல இருக்குறமாதிரி முயற்சித்து பாருங்க சார்’னு கேக்க சிறிது நேரம் பார்த்துவிட்டு இருக்குறதாச் சொன்னார். தம்பி  விண்டோ சீட் கிடைக்குமா சார்னு கேக்க அதெல்லாம் முன்னாடியே டிக்கெட் போடும் போது சீட் ப்ளாக் பண்ணனும் அப்போதான் கிடைக்கும் சொன்னார். அந்த நொடிதான் நாங்கள் செய்த தவறு புரிந்தது. இனி அடுத்த தடவை டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சீட்டையும்  சேர்த்து ப்ளாக் பண்ணனும்னு முடிவு பண்ணி இது போன்ற தவறு நடக்காம பார்த்துக்கனும்னு முடிவு செய்து எங்களோட போர்டிங் பாஸ் வாங்க காத்திருந்தோம்.

ஒவ்வொருத்தரோட பாஸ்போர்ட் தனித் தனியே ஸ்கேன் செய்து டிக்கெட்டில் இருக்கும் டேடா என்ரி செய்து எங்களுக்கான போடிங் பாஸ் ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தார்.

 அடுத்ததா  அவரே செக்-இன் லக்கேஜூம் எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு அடையாலத்திற்கு பைகளுக்கு தனித் தனியே டேக் போட்டு பைகளின் எடை பார்த்து எடுத்துச் சென்று விட்டார். ஏர் இந்தியாவில் நபருக்கு 25கிலோ வரை செக்கின் லக்கேச் இலவசம் என்பதால் கொண்டு வந்த அனைத்து பைகளையும் செக்கின் லக்கேசில் போட்டுவிட்டோம். இந்த செக்கின் லக்கேச் எல்லாம் நாம பயணிக்க இருக்கும் விமானத்தில் ஒதுக்கபட்ட பகுதியில் தனியாக  நம்முடன் வரும். போர்டிங் பாஸ் வாங்கியதை அடுத்து நீண்ட வரிசை ஒன்று அருகில் இருந்தது. நாங்களும் அந்த வரிசையில் நின்றோம்.


 கொஞ்சம் கவனித்தால் தெரிந்தது பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள்தான். தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் என்னைப்போன்று பலர் கிளம்பிவிட்டார்கள். இது எனக்கு இரண்டாவது விமான பயணம் என்றாலும் ஒவ்வொரு நொடியும் அந்தச் சமயம் முதன்முறை பயணிப்பதைபோன்றுதான் உற்சாகமான உணர்வு என்னுள்  ஏற்பட்டுக்கொண்டிருந்தது. வரிசை கொஞ்சம் கொஞ்சம் நகர்ந்து மற்றொரு ஹாலிற்குள் நுழைந்தது. அங்கு ஒரு அதிகாரி  பாஸ்போர்ட் மற்றும்  போடிங் பாசை வாங்கி  பரிசோதித்தார். அதன் பிறகு நாங்கள் செல்ல வேண்டியது இமிக்ரேஷன்க்காக. அங்கிருக்கும் 4 ஐந்து இமிக்ரேஷன் கவுண்டர்கள் தெரிவித்தது.  வரிசையில் வந்தவர்கள் ஏதாவது ஒரு இமிக்ரேஷன் கவுண்டர் வரிசையில் நிற்க்க வேண்டும்.

இமிக்ரேஷன்- இந்த வார்த்தை அதுவரை கேள்வி பட்டதோட சரி. வெளி நாடு போறவுங்க கிட்ட இமிக்ரேஷன் அதிகாரிகள் நோண்டி நோண்டி நிறைய  கேள்வி மேல கேட்பாங்கனு முடிவு செய்திருந்தேன். அதிலும் முதல் தடவை வெளிநாட்டிற்கு செல்வதால் குறைந்தது அஞ்சு நிமிஷம் ஆச்சும் எதுக்கு அந்த நாட்டுக்கு போவ கேள்விமேல கேள்வி  விசாரிப்பாங்கனு கற்பனையெல்லாம் செய்து வைத்திருந்தேன். என்னோட சமயம் வந்ததும் அதிகாரி முன்பு  நின்றேன். தம்பி என்னுடைய பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் அதிகாரியிடம் கொடுத்தான். அடுத்த சில நொடிகளில் இமிக்ரேஷன் அதிகாரியிடம் இருந்து நான் எதிர் கொண்ட கேள்வி ‘எப்போ மீண்டும் இந்தியா வர்றிங்க?’ பதில் சொன்னதும் அதன் பிறகு முகத்தை  அங்கிருக்கும் கேமிராவை நோக்கி திருப்பச் சொன்னார். முகத்தை புகைப்படம் எடுத்தாரா அல்லது கண்களை  பதிவு செய்தாரா தெரியவில்லை. பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் இரண்டிலும் டொக் டொக்னு ஸ்டாம்ப் அடிச்சு அதிகாரி பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் இரண்டையும் கையில் கொடுத்தார். அவ்வளவுதான். ஒரே ஒரு கேள்விதான். எதிர்பார்த்த அளவிற்கு இமிக்ரேஷனில் பெருசா எதையும் கேக்காதது கொஞ்சம் ஏமாற்றம்தான்:)

நாங்க டூரிஸ்ட் விசாவில் அதிலும் ஹாலிடே சமயத்தில் செல்வதால் என்னவோ கண்டுக்கலைனு நினைத்துகொண்டு எனக்கு நானே பதில் சொல்லிகிட்டேன். இமிக்ரேஷன் ஃபார்மாலிட்டி முடிந்ததில் ஒரு த்ருப்தி. முதன்முறையாக பாஸ்போர்டில் முத்திரை பதிந்ததால் என்னவோ அங்கிருந்து அடுத்த கட்டமான கஸ்டம்ஸ் மற்றும் செக்யூரிடி பரிசோதனைக்காக  செல்ல வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியே செக்குரிட்டி பரிசோதனை செய்வதால் தனித் தனி வரிசையில் நிற்க்க வேண்டும். வரிசையில் நிற்பதற்கு முன்பு நம்முடன் எடுத்துச் செல்லும் அனைத்தையும் (சட்டை மற்றும் பேண்ட் பேக்கட்டில் வைத்திருக்கும்  அனைத்து பொருட்களையும்) அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு ப்ளாஸ்ட்டிக் டப்பா எடுத்து எல்லாவற்றையும் டப்பாவில் போட வேண்டும். அந்த டப்பாவை ஸ்கேனிங் மெஷினில் வைத்து விட்டு வரிசையில் வந்து நிற்க வேண்டும். டப்பா தானாக நகர்ந்து நமக்கு சமமாக சைட்ல நகர்ந்துகிட்டு வரும். இதற்கிடையே வரிசையில் நின்றவர்களை ஒவ்வொருத்தராக ஒரு மேடான ஒரு பகுதியில் ஏறி நிற்கனும். இரண்டு கைகளையும் அகலமாக விரிக்க சொல்லி செக்குரிட்டி அதிகாரி தனது கையில் வைத்திருக்கும் மெட்டல் டிடெக்டர் வைத்து   நமது உடலின்  மேற்பகுதியில் தலைல இருந்து கால் வரை சர்சர்னு ஒரு இழு இழுத்து சோதனை செய்து பார்ப்பார்.

 ‘வெடிகுண்டு, தங்கம் மற்றும் தடை செய்ய பட்ட போதை பொருட்கள் ஏதாவது உடற்பாகத்திற்குள் மறைத்து விமானத்திற்குள் எடுத்துச் செல்கிறார்களா’ என்பதை பரிசோதிக்க அந்த செக்கிங். அது முடிந்து மறுமுனையில் சென்றதும் டப்பாவில் போட்ட லக்கேஜ் ஸ்கேனிங்  மெஷின் வழியே தானாக பயணித்து செக்கிங் முடிந்து நாங்கள் எடுத்துக்க தயாராக இருந்தது. போன், பர்ஸ் மற்றும் பேக்கட்டில் வைத்திருந்து போட்ட அனைத்து பொருட்களை எடுத்துக்கொண்டோமா சரி பார்த்துவிட்டு  அங்கிருந்து சில அடிகள் வைத்தாலே விமானம் ஏறுவதற்கான  கடைசி வெய்ட்டிங்க் ஹாலிற்கு வந்திடுவோம். இனி விமானத்தில் ஏறுவதுதான் மீதம் இருக்கிறது.

 வரிசையாக போட பட்டிருக்கும் இருக்கை ஒன்றில் அமர்ந்த பின் மணி பார்த்தால் காலை 10.00தான் ஆகி இருந்தது. விமானம் கிளம்ப இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கிறது. இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் மற்றும் செக்கிங் எதை பற்றியும் தெரியாத போதிலும் வெற்றிகரமாக  முடித்துவிட்டு விமானம் ஏற காத்திருப்பதை நினைச்சப்போ சந்தோஷமாக இருந்தது. உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து நாங்கள் பயணிக்கும் விமானத்தை பார்க்க முடிந்தது. (நாங்கள் பயணிக்க இருக்கும் விமானத்தின் புகைப்படம்).


நாங்கள் இருக்கும் ஹாலில்  மொத்தம் இரண்டு கேட்டுக்கள் இருந்தது. கேட் 16 மற்றும் கேட் 17). இந்த கேட்ஸ் ஏதாவது ஒன்றில் (போர்டிங் பாஸ்லையே எந்த கேட்ல நுழையனும்னு போட்டிருக்கும்). அந்த கேட் வழியாகத்தான் நாம் விமானத்திற்குள் ஏற போக வேண்டும். எங்களோடது கேட் 17. உட்கார்ந்திருந்த இடத்திற்கு  அருகில்தான் இருந்தது.

அடுத்து விமான நிலைய அறிவிப்பை பற்றி சொல்லனும். ரயில் நிலையங்களில் அறிவிப்பு  செய்வது போன்று ஆங்கிலம் மற்றும் தமிழில் ’இன்ன நிறுவன விமானம் இந்த நாட்டிற்கு புறப்பட தயாராக இருக்கிறது. பயணம் செய்பவர்கள் விமானத்திற்குச் செல்லவும்’ என்று அறிவிப்பு அவ்வப்போது ஒலிப்பெருக்கியில் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. நாங்கள் இருந்தச் சமயம் கொலும்பு மற்றும் அபுதாபி நாட்டிற்குச் செல்லும் விமானங்களின் அறிவிப்பு கேட்டுக்கொண்டிருந்தோம்.

எவ்வளவு நேரம்தான் சும்மா உக்கார்ந்திருப்பதுனு ஹாலை ஒரு ரவுண்டு  சுற்றி பார்ப்போம்னு தம்பியும் நானும் நடக்க ஆரம்பிச்சோம். விமான நிலையத்தில் ஒரு காப்பி விலை 100 ரூபாய் இருக்கும்னு கேள்விபட்டிருக்கேன். அதை நேரடியாக பார்த்தேன். ஒரு பூரி செட் 120 ரூபாய். தோசை 140 ருபாய். லைட்டா எதையாவது சாப்பிடலாம்னு நினைப்பவர்களுக்கு விலை பட்டியலை பார்த்தாலே வயிறு நிரம்பிடும். அடுத்து அருகில் இருக்கும் ட்யூட்டிஃப்ரீ கடைகளைச் சுற்றி பார்க்கச் சென்றோம். டூட்டி ப்ரி கடைகளில் விற்பனை வரி கிடையாது சொல்கிறார்கள். ஆனால் விலையோ ரொம்ம்ம்ம்ப அதிகம்.

அதற்கடுத்து  பார்க்க வேறு எதுவும் இல்லாததால்  ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். மணி அப்போது பத்தரைதான் ஆகி இருந்தது. சரி கடைசியாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு  போன் பேசிவிடலாம்னு போன் எடுத்து பேச ஆரம்பிச்சென். 11 மணி அளவில் நாங்கள் பயணிக்க வேண்டிய விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. முதலில் பிசினெஸ்க்லாஸ் இருக்கை பயணிகளை அழைத்தார்கள். அவர்களோடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் நடக்க முடியாதவர்கள்  தனியாக பயணிப்பவராக இருந்தால் அவர்களையும் அழைத்தார்கள். ‘நம்மளைத்தான் அலைச்சாங்கனு ஏகானமி வகுப்பு பயணிகள் பாதி பேர் வரிசையில் நின்று விட்டார்கள். பத்து நிமிஷம் பிறகு எகானமி வகுப்பு பயணிகளை பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் செக் செய்த பிறகு கேட் 17க்குள்  போக அனுமதித்தார்கள்.
 சருக்கலான ஒரு பாதையில் ஒரு ஃப்லோர் அளவிற்கு இறங்குவோம் அங்கிருந்து டர்மினலில் இருந்து விமானத்தோடு இணைக்க பட்டிருந்த aerobridge எனப்படும் பாலம் வழியே நடக்க ஆரம்பிச்சோம்.  சுரங்கமாதிரியான சாய்வாக சென்ற அந்த பாதை இடையே திடீரென ஒரு அதிகாரி  விமானத்திற்குள் ஹேண்ட் லக்கேஜ் கொண்டு செல்பவர்களது பைகளை மட்டும் நிறுத்தி பரிசோதித்து கொண்டிருந்தார். சந்தேகம் வரும்படியான பொருட்கள் அவருக்கு ஏதாவது பைகளில் தென்பட்டால் அதைப் பற்றிய விளக்கம் கேட்ட பிறகுதான் மேற்கோண்டு தொடர விடுகிறார். பொதுவாக விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் கேபின் லக்கேஜ் அல்லது ஹேண்ட் லக்கேஜில் திரவ நிலை பொருட்களை கொண்டுச் செல்வதில் சில ரிஸ்ட்ரிக்‌ஷன் இருக்கிறது. அது தெரிந்திருந்தாலும் ஏதோ ஒரு மறதியில் எப்படியோ அம்மா  கைப்பையில் எனக்கான இரும்பலுக்கான டானிக் பாட்டில் இருந்துவிட்டது. செக்கிங் லக்கேஜில் போட மறந்ததால் அந்த அதிகாரிக்கு விளக்கம் கொடுத்து கடைசியாக அத்தனை  செக்கிங்கும் முடிந்த நிலையில் விமானத்திற்குள் நுழையும் இடத்தில் இருபுறமும் ஏர் ஹோஸ்டஸ்  புன்னகையோடு நின்றுக்கொண்டு நம்மை விமானத்திற்குள் வரவேற்கிறார்கள்.

 எங்களுக்கு ஒதுக்க பட்டதோ 25ஆம் ரோவில் சீட் நெம்பர் d,e,f,g மற்றும் h. விமானத்தில் சீட் அரெஜ்மெண்ட்ஸ் பார்த்தால்: ஒரு வரிசையில் இடதுபக்கம்  ஒரு மூன்று  இருக்கைகளும்,  நடுவில் ஒரு மூன்று இருக்கைகள் மற்றும் வலது புறம் மூன்று இருக்கைகள் என ஒரு வரிசையில் 9 இருக்கைகள் இருக்கும். நடுவரிசைக்கு இரு புறமும் விமானத்திற்குள் நடக்க பாதை இருக்கு. வலது புறம் மூன்று பேர் உட்காரும் அந்த இருக்கைகளில் தம்பி மற்றும் நான் அமர்ந்தோம். எனக்கு வலது பக்கம் இருக்கும் விண்டோ சீட் காலியாக இருந்தது. ’யார் வரப்போறா’னு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லைனு சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்:).

அடுத்த ஒரு சில நொடிகளில் ஒரு  யுவதி வந்து ஆங்கிலத்தில் ‘எக்ஸ்குஸ்மி கொஞ்சம் சீட்டுல இருந்து வெளிய வந்தீங்கன்னா என்னுடைய சீட்டில் போய் உக்காந்துக்குவேன்’னு கேட்டாங்க. ஆஹா ஒரு யுவதியா நான்கு மணி நேரம் பக்கத்தில் பயணிக்க போறேனா நினைச்சா (இதற்குத்தானே ஆசை பட்டாய்னு #மைண்ட் வாய்ஸ்)
 ‘முதன் முறை விமானத்தில் போகிறோம் விண்டோ சீட் கொடுக்க முடியுமா’னு தம்பி கேட்க ‘நானும் ஃபர்ஸ்டைம்’ சொல்லி தனது சீட்டில் உட்கார்ந்தாள்.

விமானத்திற்குள் நடக்கும் நிகழ்வுகளை நான் கவனித்துக்கொண்டிருந்ததால் அந்த யுவதியோடு எதுவும் பேசிக்கல. நமக்கு முன்பு இருக்கும் இருக்கைகளின் பின் பகுதியில் ஒவ்வொரு சீட்டிற்கும் தனித் தனியே குட்டி டிவி மாதிரியான ஒரு ஸ்க்ரீன் இருக்கு. அதுல நோண்டி பார்த்ததுல தமிழ் படங்கள் பார்க்க முடியும்னு தெரிஞ்சது.


பட்டியலை ஓபன் செய்து பார்த்தால் பார்க்க தூண்டும் அளவிற்கு எந்த படமும் இல்ல + படம் பார்க்கும் மூடிலும் அந்தச் சமயம் இல்லாததால அடுத்து சுற்றி இருப்பவர்களை கவனிக்க ஆரம்பிச்சேன். சிறிது நேரத்தில் விமான பைலட் தனது கேபினில் இருந்து ஸ்பீக்கர் வழியே தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு  மற்றும் தன்னுடன் பயணிக்கும் கோ பைலெட்டுகளைப் பற்றி அறிமுக படுத்தினார். பிறகு சில இன்ஸ்ட்ரெக்‌ஷன் கொடுக்க ஆரம்பிச்சார்.

 அவசர கால  லேண்டிங் சமயத்தில் என்னென்ன சேப்டி மெஷர்ஸ் ஸ்டெப்ஸ் எடுக்கனும்னு சொல்லிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் விமானம் சிங்கப்பூருக்கு எந்த வழியாக எவ்வளவு உயரத்தில்,  எவ்வளவு வேகத்தில் பறக்க இருக்கிறது என்பதையும் தெரிவித்தார். நாங்கள் இந்திய பெருங்கடல் வழியாக அந்தமான் மற்றும் நிக்கோபார் வழியாக இந்தோனேஷியா மீது  28,000 அடி முதல் 40,000 அடி உயரத்தில் மணிக்கு சராசரியாக 800கிமி வேகத்தில் பறந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள்ளாகவே சிங்கப்பூரில் சேர்க்க முயற்சிப்பதாகச் சொன்னார். அதனை அடுத்து சீட் பெல்ட் அணியுமாறு அறிவிப்பு கொடுத்தார். மொபைல், எலக்ட்ரானிக் திங்ஸ் எல்லாவற்றையும் ஆப் பண்ணவும் சொன்னார்.  டேக்காப் சமயத்தில் இடையூறு ஏற்படுத்துமாம். மேற் சொன்ன அனைத்து அறிவிப்பையும் விமானி  ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு சென்றார்.

அவர் பேசி முடித்ததை அடுத்து தனித் தனியே   ஏர் ஹோஸ்டஸ் ஒவ்வொருத்தரையும்  சீட் பெல்ட் சரியாக போட்டிருக்கிறார்களா என செக் செய்துச் சென்றார்கள். சரியாக இந்திய நேரம் 11.30க்கு நாங்கள் பயணிக்கும் ஏர் இந்தியா 346 விமானம் மெல்ல மெல்ல முன்னோக்கி நகர ஆரம்பிச்சது. சில அடிகள் முன்னோக்கிச் சென்றதும் ஃபைலெட்  விமானத்தை ரிவர்ஸ் எடுத்தார். இப்போது பின்னோக்கி சிறிது தூரம் மெதுவாக ரிவர்சில் சென்றுக்கொண்டிருந்தது. அதன் பிறகு திடீரென நிறுத்துவிட்டார். மீண்டும் விமானம் புறப்படும்னு  எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றம்தான்.

அஞ்சு நிமிஷம் ஆச்சு. பத்து நிமிஷம் கடந்தாச்சு. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பைலெட்டிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அதன் பிறகு சிறிது நேரத்தில் பைலட் ’விமானத்தின் பிரேக் திடீரென ஜாம் ஆனதால் விமான பொரியாளர்கள் பழுது பார்ப்பதாகவும் அது சரியானதும் புறப்பட வேண்டியதுதான்’னு சொல்லி லைன் கட் செய்தார். அந்த செய்தியைக் கேட்டதும் எனக்கோ மனக்கண்முன் பல காட்சிகள் ஓட ஆரம்பித்தது. அது வரை கேள்வி பட்ட விமான விபத்துக்களின் செய்திதொகுப்பு தான் நினைவுக்கு வந்து இம்சித்தது. அடி வயிறு கலங்க ஆரம்பிச்சது. என்னதான் பிரச்சனை  பொரியாளர்கள் சரி செய்துவிடுவார்கள்னு பைலட் அறிவிப்பின்போது சொன்னாலும் ’இறங்கும்போது மீண்டும் பிரேக் ஜேம் ஆச்சுனா என்ன செய்வது’னு ஒரே பயம் + ’விமானம் புறப்பட்டபிறகுதான் இந்த பிரச்சனை எல்லாம் தெரிய வருமா’னு ஒரே கோவம் ஏர் இந்தியா மீது.

மணி மதியம் பன்னிரெண்டரை ஆகி இருந்தது. ஒரு மணி நேரமா பிரச்சனை சரி செய்ய முயற்சிக்கிறார்கள் அப்படின்னா கொஞ்சம் சீரியசான பிரச்சனைனு விஷயம்னு யூகிக்க ஆரம்பிச்சேன். பதற்றம்... பதற்றம்...

பயணிகள் ஒவ்வொருத்தராக தங்கள் உறவினர்களுக்கு போன் போட்டு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இனிய  பயணமாக ஆரம்பிச்சது இப்படி இம்சையில் போய்கிட்டு இருக்கேனு ஒரு புறம் கவலை இன்னொரு புறம் பயணம் தாமதமானதால்  அன்று இரவு சிங்கப்பூரில் சுற்றிப் பார்க்க நினைத்திருந்த இடத்தை  எங்கே பார்க்காமல் போய் விடுவோமோனு பதற்றம்.


*

அப்புறம் என்ன ஆச்சு? விமானம் எப்போ ரெடி ஆச்சு? அன்று இரவு போட்ட திட்டத்தின்படி சிங்கப்பூரில் இறங்கியதும் இரவு சுற்றி பார்க்க போனேனா என்பதை பற்றியெல்லாம் விரிவா/ தெளிவா அடுத்த பகுதியில்... (பதிவு கொஞ்சம் நீஈஇண்டுடுச்சு நினைக்குறேன்)...

தொடர்ந்து  வாசித்து கருத்துச் சொல்ல இருப்பவர்களுக்கும், தொடரின் துவக்கத்தில் இருந்து தொடர்ந்து வாசித்து கருத்துச் சொல்பவர்களுக்கும் நன்றிகள்...


*
 முந்தைய பாகங்கள் வாசிக்க.

முதல் பாகம்
 சிங்கப்பூருக்கு!


இரண்டாம் பாகம்
 ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி?
தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

 1. பதிவு நீளவில்லை மகேஷ்! சுவாரஸ்யமாக இருந்தது. இறுதியில் சொன்ன பதற்றம் ஆம் தொற்றிக் கொள்ளும்...சரி காத்திருக்கிறோம் என்ன ஆச்சு என்று அறிய..

  கீதா: அது சரி டொமஸ்டிக் என்றால் செக்கின் செய்யும் போதுதான் போர்டிங்க் பாஸ் வாங்கும் போதுதான் ஸீட் அதுவும் நாம் முன்னால் முதலில் சென்றுவிட்டால் அப்போதுதான் நம்மிடம் விண்டோ ஸீட் வேண்டுமா என்று கேட்டு தருவார்கள். நம் விருப்பப்படி கேட்டுக் கொள்ளலாம்...சில ஃப்ளைட்களில் புக் செய்யும் போதே நமது ஸீட்டையும் ப்ளாக் செய்துவிடலாம்...ஆனால் ஒரு முறை பயணித்த போது அங்கு போர்டிங்க் பாஸ் வாங்கும் போதுதான் ஸீட் என்னிடம் கேட்டு என் விருப்பப்படி ஜன்னல் சீட் தந்தார்கள்.

  தொடர்கிறோம்...

  ReplyDelete
 2. அருமையான அனுபவப் படைப்பு
  காத்திருக்கிறோம் என்ன ஆச்சு என்று அறிய..

  ReplyDelete
 3. Awesome! post. as usual taught many things.
  waiting for upcoming parts.
  First time I vertually entered in to Chennai airport.

  ReplyDelete
 4. தங்களின் எழுத்து தங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வு அருமை.

  ReplyDelete
 5. மகேஷ்,

  ஜாம் ஜாம் என்று துவங்கிய உங்கள் பயணத்தில் இப்படியொரு ஜாம் நிகழ்ந்தது வருத்தத்திற்குரியது. இருந்தாலும் அந்த ஜாமை விமானம் தரையில் இருக்கும்போதே கண்டறிந்தது மகிழ்ச்சிக்குரியது.

  பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள், தொடர்வதை உங்கள் பதிவின் வாயிலாக தொடர்வதற்கு காத்திருக்கின்றேன்.

  கோ.

  ReplyDelete
 6. ஆஹா மிக அருமையான அனுபவம் மகேஷ்.. முழுவதையும் படிச்சு முடிச்சேன்ன்ன்.. முதல் அனுபவம் எப்பவும் த்றிலிங்காகத்தான் இருக்கும்.. முக்கியமாக முதல் அனுபவத்தில், பிளேன் ரொயிலட் பற்றியும்.. அதன் சத்தம் பற்றியும் குறிப்பிடுவார்களே.. போகாதுவிட்டால் திரும்பி வரும்போது நிட்சயம் ரொயிலட் போய் .. பாருங்கள்.. முதன் முதலில் போகும்போது பயங்கர நடுக்கமாக இருக்கும்.

  ரிக்கெட் புக்கிங் செய்யும்போதே சீட்டும் செய்து விட வேண்டும்.. அப்போதான் விருப்பப்படி கிடைக்கும்.. ஆனா அதுக்கும் எக்ஸ்ரா காசு கொடுக்கோணும்... இப்போ செய்யலாமே திரும்பி வரும்போது இருக்கும் seat .. ஒன்லைனில் செய்யலாம்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் தல. no words to describe. i am travelling abroad with u free off cost.

  ReplyDelete
 8. அறுமை மகேஷ். நீங்க போன ஃப்லைட்ல கோலாரு வந்ததும் ஒருவிதமான அணுபவம் தானே? ஆக உங்கள் பயனத்தில் பல்வேரு சுவாரசியம் அடங்கியுல்லதுப்போலும். காத்திருக்கிரேன் உங்கள் அடுத்த பதிவிற்காக.

  ReplyDelete