Wednesday, September 13, 2017

சிங்கப்பூருக்கு! (5). சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.


நாங்கள் சிங்கப்பூருக்கு பயணிக்கும் ஏர் இந்தியா விமானம் சாங்கி விமான நிலைய ரன்வேயை தொடும் போது மணிக்கு 27கிமி வேகம் இருந்தது. படிப்படியாக நான்கு கிமி நீளம் கொண்ட ரன்வேயில் ஓடி வேகத்தை குறைத்து சரியாக மாலை ஐந்தரை மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு) சாங்கி விமான நிலையத்தை அடைந்தோம். உதவி தேவைப்படுவர்களை முதலில் விமானத்தில் இருந்து வெளியே அனுமதித்த பிறகுதான் மற்றவரை வெளியே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். விமானத்தில் இருந்து டெர்மினல்க்கு செல்ல ஏரோ பிரிட்ஜைதான் பயன்படுத்துகிரார்கள். அதில் நடக்கும்போது சென்னையில் இருந்த ஏரோ பிரிட்ஜுக்கும் இதற்கும் ஏதோ வித்யாசம் இருப்பதாக உணர்ந்தேன். சில நொடிகள் அதில் நடந்தால் இரண்டாம் டெர்மினலில் அரைவல் பகுதியை அடைவோம். அங்கிருந்து இமிக்ரேஷன் பகுதிக்குள் நுழைந்தோம்.

ஃப்ளைட்டில் கொடுத்த இமிக்ரேஷன் ஃபார்ம், பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் கையில் எடுத்துக்கொண்டு இமிக்ரேஷன் கவுண்டருக்குச் செல்ல வரிசையில் நின்றோம். வரிசையில் முதலில் இருந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாததால் ஃபார்மாலடீஸ் முடித்துக்கொண்டு வெளியே சென்று விட்டார்கள். (அடிக்கடி சிங்கப்பூருக்கு வருபவர்கள் போலும்). அதன் பிறகு வரிசையில் வந்த ஒருத்தர் இமிக்ரேஷன் ஃபார்மில் ஏதோ ஒரு இடம் நிரப்ப படாமல் விட்டுவிட அதை நிரப்பிவிட்டு வருமாறு பெண் அதிகாரி சொன்னதும் வரிசையில் இருந்த மற்றவர்கள்
சுதாரித்துக்கொண்டார்கள்.

என்னோட சமயம் வரும்போது இமிக்ரேஷன் ஃபார்ம், பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ்ஐ பெண் அதிகாரியிடம் கொடுத்தோம். இமிக்ரேஷன் ஃபார்ம் பரிசீலித்து சிக்நேச்சர் காலம் மட்டும் விட்டு விட்டதை கேட்டார். ‘ஐகாண்ட் சைன்’னு சொன்னதும். மேலும் அதைப் பற்றி எதுவும் கேக்கல.
அடுத்து எனது இரண்டு கட்டை விரல்களையும் ஒரே சமயத்தில் பையோமெட்ரிக் டிவைசின்மீது வைத்து பதிவு செய்துக்கொண்டு பாஸ்போர்ட்டில் அரைவல் இமிக்ரேஷன் ஸ்டாம்ப் டொக் டொக்னு அடிச்சு அதிகாரி பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் இரண்டையும் கையில் கொடுத்தார். சிங்கப்பூர் இமிக்ரேஷனிலும் ஏமாற்றம்தான். அதிகாரி எதையாவது கேள்வி கேட்பார் என்று முடிவு செய்துவைத்திருந்தேன். எதுவும் கேட்கல.

இமிக்ரேஷன் பார்மாலிட்டி முடிந்ததை அடுத்து செக்யூரிடி பரிசோதனைக்காக சென்றோம். சென்னையில் நடந்ததைப்போன்றுதான் இங்கும் நடந்தது. அது முடிந்ததும் செக்-இன் லக்கேஜ் எடுத்துக்க சென்றோம். கன்வேயரில் வரிசையாக வரும் பைகளை பார்த்துக்கொண்டு வர ஐந்து நிமிடம் கூட நின்றிருக்க மாட்டோம். அதற்குள் எங்களோட பைகள் வந்துவிட்டது.

*
சாங்கி விமான நிலையத்தில் இருந்து நகருக்கு சுமார் இருவது கிமி தூரம் இருக்கும். காரில் சென்றால் 25 முதல் 30 டாலர்கள் வரை செலவு பிடிக்கும் என்பதால் நாங்கள் இருக்கும் இரண்டாம் டெர்மினலில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சோம்.
போகும் வழியில் லோக்கல் சிம் ஒன்று வாங்க ஒரு கடையில் விசாரித்தால் 30 டாலர்கள் சொன்னார்கள். மைண்ட் வாய்ஸ்: ‘1500 ருபாயா! வேண்டாம்’னு அங்கிருந்து நகர்ந்தோம்.

ஐந்து நிமிடத்திற்குள் மெட்ரோ ரயில் நிறுத்தம் இருக்கும் இடத்தை அடைந்தோம். சிங்கப்பூரில் பெரும்பாலும் பாதாள ரயில்கள்தான் ஓடுவதால் லிஃப்ட் வழியே கீழ் தளத்திற்குச் சென்றோம்.
சிங்கப்பூரை பொருத்தவரை ரயில் பேருந்து என எங்கும் நாம் காசு கொடுத்து டிக்கேட் வாங்க முடியாது. அதனால் சிங்கப்பூரில் இறங்கியதும் முதலில் அனைவரும் செய்ய வேண்டியது EZ-Link கார்ட் எனப்படும் கார்ட் ஒன்று ஒவ்வொருவருக்கும் தனித் தனியே வாங்க வேண்டும். அந்த கார்டில் டாலரை டாபப் செய்து விட்டு ரயில், பேருந்து, மற்றும் ஷாப்பிங் என பல இடங்களில் பயன்படுத்தும் வசதி உண்டு. இந்த கார்டோட lifespan ஐந்து வருடங்கள். 500டாலர் வரை அட்வான்சாக டாபப் செய்து வைக்கலாம். இந்த கார்ட் அனைத்து மெட்ரொ ரயில் நிலையங்களில் கிடைக்கும். மேலும் இந்த கார்டைப் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள
 இந்த

இணையதளத்திற்குச் செல்லவும்.

நாங்கள் நாங்கு பேரும் EZ-Link கார்ட் வாங்கினோம்.
 ஒரு கார்டின் விலை 12டாலர்கள். நான்கு பேருக்குச் சேர்த்து 48 டாலர்கள் ஆச்சு. கையில் ரொக்கமாக கொண்டு வந்திருந்த 532 சிங்கப்பூர் டாலர்களில் இருந்து சிங்கப்பூரில் முதல் செலவு செய்தோம். 12டாலர் கொடுத்து வாங்கும் கார்டில் 7டாலருக்கு டாபப் செய்து கொடுப்பார்கள். அது தீர்ந்துவிட்டால் டாபப் செய்யும் வசதி அனைத்து மெட்ரோ நிலையங்களில் உண்டு. கார்ட் வாங்கியதை அடுத்து ரயில் ஏர ஃப்ளாட்பாரம் ஏரியாவிற்குள் செல்ல இந்த கார்டை கதவிற்கு அருகில் இருக்கும் ரீடரில் வைத்து எடுக்க
வேண்டும். சில நொடிகள் மட்டுமே கதவு திறக்கும் உடனே நாம் உள்ளே சென்று விட வேண்டும்.
முதலில் அப்பா தனது கார்டை tap செய்து உள்ளே சென்று விட்டார். அவரை தொடர்ந்து தம்பி சென்று விட்டான். மூன்றாவது நான் செல்ல கார்டை tap செய்தால் கதவு திறந்துக்கல...

மீண்டும் மீண்டும் கார்டை tap செய்து பார்த்தோம் என்னோட கார்ட் மட்டும் டிடெக் ஆகல.
வெளிபக்கம் நானும் அம்மாவும் உள்ளே தம்பியும் அப்பாவும் இருக்கிறார்கள். எங்களுக்கு இடையே இருக்கும் கதவு போன்ற பகுதி ஒரு நாங்கு அடிக்கும் குறைவான உயரம்தான் இருக்கும்.
அதனால் இருபுறமும் பேசிக்கலாம். என்னோட கார்ட் பிரச்சனையால் ஃப்ளாட்பாரத்திற்குள் போக மற்றவருக்கு வழி விட அவசியம் தேவை இல்லை. வரிசையாக எப்படியும் பத்து கதவுகள் இருக்கும்
எதோ ஒன்றில் பயணிகள் கார்டை tap செய்து செல்வார்கள். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்க... ’சிங்கப்பூரில் இறங்கியதும் முதல் பிரச்சனை ஆரம்பிச்சிடுச்சா’னு நா யோசிக்க...

ஆமம் அடுத்து என்ன நடந்ததுனு தொடரும் :)


தலைப்பில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்”னு பாத்து சொந்த கதை/சோக கதை எழுதினால் எப்படி இருக்கும்? சாங்கி விமான நிலையம் பற்றி கேள்விபட்டதை இங்கே எழுதுகிறேன்.
*
சிங்கப்பூரில் இறங்குவதற்கு முன்பு எனக்குத் தெரிந்தது சாங்கி விமான நிலையத்தை காண்பதற்காகவே வருடம்தோறும் பல்லாயிர கணக்கான வெளிநாட்டவர்கள் வருகை தருகின்றனர் என்பதை மட்டும் கேள்விப்பட்டிருந்தேன். ‘சிங்கப்பூர் நாட்டை சுற்றிப்பார்க்க போகிறோம் விமான நிலையத்துல என்ன இருக்கபோகுது’னு கொறைச்சு மதிப்பிட்டிருந்தேன்.

*
இன்றைய தேதியில் உலகின் சிறந்த விமான நிலையம் ஒன்று என்றால் அது சிங்கப்பூரின் ஒரே விமான நிலையமான சாங்கி சர்வதேச விமான நிலையம் மட்டும்தான். உலக அளவில் விமான நிலையங்களை பட்டியலிடும் அமைப்பான Skytrax ஆண்டுதோறும் சிறந்த விமான நிலையங்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. உலகின் சிறந்த விமான நிலையத்துக்கான ஆய்வில்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐநூறூக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் பங்கேற்கும். அதில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததோடு இல்லாமல் இதுவரை மொத்தம் 8 முறை சாங்கி விமான நிலையம் அந்த விருதினை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இந்த தரவரிசை பட்டியலில் நம்ம ஊர் விமான நிலையங்கள் ஏதாவது இருக்குமானு ஒரு சின்ன ஏக்கம்.

சாங்கி விமான நிலைய வரலாறு:

சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் சாங்கி என்னும் இடத்தில்1981 ல் தொடங்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் துவக்க காலத்தில் முதல் டெர்மினல் மட்டும் இருந்தது. அதன் பிறகு 1990ஆம் ஆண்டு இரண்டாம் டெர்மினலும், 2008 ஆம் ஆண்டு மூன்றாம் டெர்மினல் திறக்க பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூன்று டெர்மினல்களைச் சேர்த்து ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி
பயணிகள் வந்து செல்கின்றனர் சாங்கி விமான நிலையத்திற்கு . இதோ அடுத்த மாதம் நான்காம் டெர்மினல் திறக்க இருக்கிறார்கள். இந்தடெர்மினல் முழு பயன்பாட்டிற்கு வந்தால்
சாங்கி விமான நிலையம்- ஆண்டுக்கு மேலும் 16 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும்.
இதோடு நின்றுவிடாமல் 2022க்குள் ஐந்தாவது டெர்மினல் திறந்து ஆண்டிற்கு 135 மில்லியன் அதாவது பதிமூன்றைக் கோடி பயணிகளைக் கையாள கூடிய அளவிற்கு சாங்கி விமான நிலையத்தை உயர்த்தும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள்.

சாங்கி விமான நிலையம் பற்றி மேலும் ஒரு சில குறிப்புகள்:


இந்த விமான நிலையம் மொத்தம் 13 கிமீ சதுர சுற்றளவு கொண்டது. 4000 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு ரன்வேக்கள் உள்ளது. 90 நொடிகளுக்கு ஒரு விமானம் உலகின் ஏதோ ஒரு மூலைகளில் இருந்தும் வந்து இறங்கிக்கொண்டு இருக்கும் அல்லது புறப்பட்டுக்கொண்டு இருக்கும்.
 சராசரியாக வாரத்திற்கு 7000 விமானங்களை கையாளுகிறது
கிட்டத்தட்ட 100 விமான நிறுவனங்கள் இந்த மூன்று டெர்மினல்களை பயன்படுத்தி நாள்தோறும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் 380க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்காக ஏற்பாடு செய்த வசதிகள்:


இங்கு ட்ரான்சிட்காக வரும் வெளிநாட்டு பயணிகள், 'ஒரு நாள் முழுவதும் விமானத்திற்காக காத்திருந்தாலும் போர் அடிக்காத அளவிற்கு சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர் அவர் ரசனைக்கேற்ப நேரத்தை செலவிடும் வகையில் சாங்கி விமான நிலையத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

24 மணி நேர திரை அரங்குகள், ஓய்வு எடுக்க விடுதிகள், ஷாப்பிங் மால்கள், ரேஸ்டாரெண்டுக்கள், குழந்தைகள் பொழுது போக்குவதற்கான வசதிகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம்என இங்கு இல்லாத வசதிகளே இல்லை. அதோடு இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக விதம் விதமாக பூங்காக்கள் இங்கு உண்டு. இங்கு குறிப்பிட்ட அனைத்தும் ஏதோ ஒரு டெர்மினலில் மட்டும் இருப்பதாக முடிவிற்கு வர வேண்டாம். விமான நிலையம் முழுவதும் வைஃபை இருப்பதால் மொபைல் மற்றும் லேப்டாப்பில் எங்குவேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கலாம்.
சார்ஜிங் தீர்ந்து விட்டாலும் மீண்டும் சார்ஜ் செய்ய வசதிகளும் உண்டு. ஒரு டெர்மினல் இருந்து இன்னோரு டெர்மினல்க்கு செல்ல இலவசமாக ஸ்கை ட்ரைன் வசதி உண்டு. அல்லது நடக்கும் பொறுமை இருந்தால் நடந்தும் செல்லலாம்.

பொதுவாக மேற்கில் இருந்து ஆஸ்த்ரேலியா, நூசிலாந்த், ஜப்பான், ஹாங்காங், பிலிபைன்ஸ்,
பேங்காக் போன்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர் விமான பயணத்தில் இருந்து விடுப்பட சிங்கப்பூரில் ட்ரான்சிட்காக இங்கு இறங்குவார்கள்.
*

மேற்சொன்ன அனைத்துமே ஜேஸ் சேம்பில்தான். பளபளப்பான தரை; இரவு நேரங்களில் வண்ணவண்ண விளக்குகள்; அழகும், பிரமாண்டமும் நிறைந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை சுற்றி பார்க்காமல் ஊர் திரும்பி விட்டோமே என்று வருத்தம் உண்டு.
சாங்கியில் இறங்கிய முதல் நாள் ’ஊர் திரும்பும்போது கடைசி நாள் அன்று சுற்றிப்பார்க்கலாம்’ என முடிவு செய்திருந்தோம். அன்று நடந்த நிகழ்வே வேறு. அதனால் கடைசி தினத்தன்றும் சாங்கி விமான நிலையம் சுற்றி பார்க்க முடியாமல் போனது.

அடுத்த முறை சிங்கப்பூருக்குச் செல்லும்போது நிச்சயம் சில மணி நேரம் ஆச்சும் சாங்கி விமான நிலையத்தின் பிரமாண்டத்தையும், தரத்தையும் தரிசித்து என்னோட ஆசையை தீர்த்துக்கனும்னு இப்பவே திட்டமெல்லாம் போட்டாச்சு :)
*
தொடரும்...
*
முந்தைய பாகங்கள் வாசிக்க.

முதல் பாகம்
 சிங்கப்பூருக்கு!

இரண்டாம் பாகம்
 ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி?

மூன்றாம் பாகம்
சென்னை விமான நிலைய அனுபவங்கள்.

 நான்காம் பாகம்
 விமான பயண அணுபவம்.


தொடர்புடைய பதிவுகள் :


14 comments:

 1. வாசித்து வரும்போது கார்ட் வேலை செய்யலை என்ற தவிப்போடு நிறுத்தி விட்டீர்களே...

  இங்கும் பேருந்து, மெட்ரோ எல்லாவற்றுக்கும் கார்டுதான்...

  ReplyDelete
 2. மகேஷ்

  கதவை திற காற்று வரட்டும் என்பதுபோல கார்டை காட்டு கதவு திறக்கும் என்றாகிவிட்டது.

  இதுபோல் ஏற்படுவது சஜம்தான் - இயந்திரம்தானே? . இதுபோன்ற சமயங்களில் அருகிலேயே மெட்ரோ அலுவலர்கள் இருப்பார்கள் அவர்கள் நம்மை வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்.

  நீங்களும் அப்படித்தான் சென்றிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  தொடருங்கள்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. மெட்ரோ அலுவலர்கள் இருப்பார்கள்தான் சார்...
   புதிய நாடு... புது இடம்... சகஜமாக்அவே ஏர்படும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது...
   அங்கு இருக்கும் அலுவலர்கள் இடம் உதவி பெற்றிருந்தால்
   இந்த பதிவு இதோடு நிருத்த வேண்டி இருந்திருக்காது.

   அடுத்து நடந்த சம்பவம் ஏர்படுத்திய ஃபீலிங்ஸ் என் அலவில் மிக முக்கியமாணது.
   ஸ்வாரஸ்யமாண அந்த சம்பவத்தைப் பற்றி இந்த பதிவில் சொல்லல.
   அப்போதானே வாசிக்குரவுங்க நாம எழுதுர பதிவ பத்தி ஒரு நொடிப்பொழுதாச்சும் யோசிப்பாங்கல:))))
   எப்படி? ஹிஹிஹி:)
   எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்ட வித்தை:)

   Delete
  2. ஹாஹாஹாஹ் செமையா சொல்லிட்டீங்க நான் யூகித்ததை மகேஷ் சொல்லிவிட்டீர்கள்..அதுவும் சரியாக இங்கு கோ வேறு ஆம்,...கோவின் டெக்னிக்!!!

   கீதா

   Delete
 3. சகஜம் என வாசிக்கவும் - பிழை திருத்தம்.

  ReplyDelete
 4. ஹெய் அடப்போயா அப்பப்ப ஒரு ட்விஸ்ட வக்கிர.

  ReplyDelete
 5. அடடா... பிறகு என்ன நடந்தது?

  தில்லி மெட்ரோவில் கூட கார்டு சில சமயங்களில் இப்படித் தான் படுத்தும்!

  ReplyDelete
 6. ஆமாம் இந்தக் கார்டு இப்படிப் படுத்துவதுண்டு...சாங்கி மிகச் சிறந்த விமான நிலையம்...மிக அழகான விமான நிலையம்...

  தொடர்கிறோம்...

  ReplyDelete
 7. NICE. மெஷீன ரெண்டு தட்டுதட்டிநா ணம்ம ஊரு எண்திரங்கள் மாதிரி சரி ஆகிடும்.

  ReplyDelete

 8. மகேஷ் ,
  என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது உங்களுக்கு குறை இருப்பதை நம்ப முடியவில்லை.நீங்கள் சொன்ன பதிவை படித்திருக்கிறேன்.அப்போதும் கூட தோன்றவேயில்லை.ஏன் எனில் உங்கள் எழுத்து அப்படி. வருத்தம் என்று சொல்லவே மாட்டேன்.
  பாராட்டுகள்தான் சொல்வேன் .
  அன்புடன்
  அம்மா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எழுத்துக்களை படிக்கும்போது உங்களுக்கு குறை இருப்பதை நம்ப முடியவில்லை. ஏன் எனில் உங்கள் எழுத்து அப்படி.///

   மிக்க மகிழ்ச்சி மேடம். இது போன்ற பாராட்டைத்தான் எதிர்பார்ப்பது.

   என்னுடைய எழுத்துதான்ன் பேச வேண்டும். குறை அல்ல!!!

   Delete
 9. நான் இங்கு வரத் தாமதமாகிவிட்டது மகேஸ், மிக அருமையாகத் தொடர் எழுதுறீங்க.. மிகவும் பயனுள்ள தகவல்கள்.. தொடருங்கோ.

  ReplyDelete