Saturday, November 10, 2018

ருபாய் 15,750 கட்டணத்தில் நான் சுற்றி பார்த்த தாய்லாந்த்!

bat travels பற்றி முதன்முதலாக என்னோட ஃபிரண்ட் அரவிந்த் வழியாக ஆறு மாதங்களுக்கு முன்பு தெரிய வந்தது. அதுவரையிலும் நான்  குடும்பத்தோடு மட்டுமே பயணம் செய்திருந்ததாலும் எதிர்காலத்திலும் அவர்களோடு மட்டுமே தொடர்ந்து பயணிக்க விரும்பியதாலும் அவர்களது இந்திய பயணங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவகளது இனைய தளத்தில் thailand ட்ரிப் பற்றீய தகவல் பார்த்ததும் முதலில் என்னை அட்ராக் செய்தது விலைதான். ’அவ்வளவு குறைந்த விலையில் எப்படி அதுவும் வெளி நாட்டில் சுற்றி காட்ட சாத்தியப்படும்?’ என்கிற கேள்வியோடு ஆச்சர்யத்தோடும் ஏற்கனவே அவர்களோடு சிக்கிம் பயணம் செய்திருந்த வம்சி என்பவர் எனக்கு அறிமுகம் இருந்ததால் அவரிடம்
தாய்லாண்ட் ட்ரிப் பற்றி சொன்னேன். அவரும் அதை பார்த்ததாகவும். தாய்லாந்த் ட்ரிப்பில் பங்கேற்க விருப்பம் இருப்பதாகவும் சொன்னார். எனக்கு அந்த நிமிடம் ரொம்ப சந்தோஷம். ஒரு துணை கிடைத்து விட்டதால்.

இவ்வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சில நாட்களாவது வீடு மற்றும் வேலைக்கு மாறுதலுக்காக சுதந்திரமாக நாட்கள் கழிக்கலாம் என முடிவு செய்து
எதை பற்றியும் யோசிக்காமல் விமான டிக்கட் முன்பதிவு செய்து bat team க்கு தகவலும் தெரிவித்து விட்டேன். அதன் பிறகு அவர்களிடம் தொடர்பு கொள்ளவில்லை.
எல்லாம் வம்சி சார் பார்த்துகொள்வார் என்கிற நம்பிக்கையில் விட்டுவிட்டேன்.
அதன் பிறகு எனது தினசரி இயந்திர தனமான வாழ்க்கை காரணமாக
தாய்லாண்ட் ட்ரிப் பற்றியே மறந்திருந்தேன்.

அக்டோபர் முதல் வாரம் இருக்கும் திடீரென ஒருநாள் தாய்லாந்த் ட்ரிப் நினைவு வரவும் வம்சி சாருடன் பேசவும் எங்கள் பயணத்திற்கு வேண்டியதை கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் அது வரையும் வம்சி சார் என்னிடம் ஏற்பாடுகளை பற்றி  எதுவும் கேட்காததுதான் ஆச்சர்யம்:-)

எனது தரப்பில் எங்கள் இருவருக்கும் தாய்லாந்த் விசா சென்னையில் எடுக்க முயற்சி எடுத்தேன் அவ்வளவுதான். அக்டோபர் 10 எங்கள் இருவருக்கும் விசா வரவும்
எதிர்பாரா விதமாக அக்டோபர் 12 வெள்ளிக்கிழமை அன்று வம்சி சார் கால் செய்து
’ட்ரிப்பில் இருந்து நான் பின் வாங்கிக்கிறேன்’னு சொன்னார்.  அதை கேட்டதும் அதிர்ச்சி. அந்த சமயம் நான் வேலை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
என்ன பேசுவதென்று வார்த்தைகள் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கும் என்பார்கள் இல்லையா அது மாதிரியானதொரு உணர்வு. தொடர்ந்து அவர் வராதற்கான காரணத்தை என்னிடம் எடுத்து சொன்னார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் அந்த முடிவு எடுத்திருக்கிறார். இது வரையிலும் அவர் செலவு செய்த பணத்தை பற்றி கேட்டேன். அதுக்காக ஆச்சும் கட்டாயம் வர சொன்னேன்.
பணத்தை விடவும் சில விஷயங்கள் முக்கியம் உணர்ந்ததால் பணம் ஒரு பொருட்டாக தெரியலைனு சொன்னார்.

ஆரம்பத்தில் இருந்தே வீட்டில் நான் தாய்லாண்ட் ட்ரிப் போவதே பிடிக்கவீல்லை. வம்சி சார் வருவதாக சொன்னதால் கொஞ்சம் இறங்கி வந்தார்கள். வம்சி சார் ட்ரிப்பில் இருந்து பின் வாங்கியதை பேருந்தை விட்டு இறங்கியதும் அம்மாவிடம் சொல்ல பயமாக இருந்தது.  அடுத்த நாள் சனிக்கிழமை காலையில் விட்டில் என்ன ரியாக்சன் வரும்னு முன்பே தெரிந்ததால் எல்லாவற்றிற்கும் தயார் ஆகி நடந்ததை சொல்லி முடித்தேன்.

அப்பா அம்மாவிற்கு வருத்தம்தான். சொல்ல போனால் எனக்குமே வம்சி சார் வராததை அடுத்து நானும் பின் வாங்கி விடலாம் என்கிற முடிவை நோக்கி யோசிக்க ஆரம்பிச்சேன்.

தாய்லாண்ட் போக நான் ஆர்வம் காட்ட மிக முக்கிய காரணம் வம்சி சார் தான்.
அவரோடு இணைந்து போனால் பல விஷயங்களில் எனக்கு வசதியாக இருக்கும் என்று முடிவு செய்து எல்லாம் ரெடி செய்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவில் கொண்டு வந்து விடும் என எதிர் பார்க்கவில்லை. அது வரை bat team மோடு பேசாததால் அன்றைய தினம் ஃபஸ்ட் டைம் பேசினேன். முதல் பேச்சிலே அவர்கள் கொடுத்த நம்பிக்கை; ஊக்கம் ஒரு வித தைரியத்தை எனக்கு கொடுத்தாலும்
உண்மையில் சொல்ல போனால் எனக்கு உள்ளுக்குள் எவ்வளவோ தயக்கங்கள்; பயம்; கூச்சம் பலவற்றை குறித்து இருந்தாலும் அவற்றையெல்லாம் என்னுடன் சுமந்துக்கொண்டு அக்டோபர் 15 வீட்டில் இருந்து பேங்காக்குக்கு தனியாக பயணிக்க ஆரம்பிச்சேன்.
*
அக்டோபர் 21 சண்டே தாய்லாண்ட் ட்ரிப்பும் வெற்றிகரமா முடிச்சு வீடும் திரும்பியாச்சு.

சுற்றுலா என்பது எனக்கு பிடித்தமானதொரு விஷயம் என்றாலும்
இப்போதெல்லாம் அன்றாட வாழ்வில் ஏர்படும் பணி அழுத்தம்; மன அழுத்தத்தில் இருந்து சில தினங்களுக்காவது விடுதலை கொடுக்கும்பொருட்டு
செல்வது பழக்கமாக போய்விட்டது.
அந்த நோக்கத்திற்காக மட்டுமே நான் தாய்லாந்த் பயணம் சென்றிருந்தாலும்;
அதில் 100% நிறைவு பெற்றாலும்; அதோடு நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளவும்;
என்னை நான் பல விஷயங்களில் எதிர்கால நலனுக்காக திருத்திக்கவும் உதவியாக இருந்தது.

மொத்தத்தில் இன்ப சுற்றுலா என்பது எனக்கு மனதிற்கு தேவையான புத்துணர்வையும்; பொது மற்றும் தனிபட்ட வாழ்வில் அடுத்தவரிடம் எப்படி நடந்துக்கணும் என்கிற பாடம் கற்றுக்கவும்; தாய்லாந்த் ட்ரிப் ஏணி படியாக இருந்தது.

இந்த தருணத்தில் இந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த bat குழுவினரான Divya Saxena மற்றும் Ritu Sinha இருவருக்கும் எனது வாழ்த்துக்களும்; நன்றிகளும்.

என்னை போன்று பார்வை திறன் சவாலை சந்திக்கும் பலருக்கும் பயணம் செய்ய ஆர்வம் இருக்கும்.  ஆனால் எப்படி; யாருடன்; எங்கு; என்கிற பல தயக்கத்தினாலே கடைசி வரைக்கும் பயணம் வெறுமனே ஆசையாகவே இருந்து விடுகிறது. ஆனால் divya மற்றும் Ritu இருவரும் ஏற்படுத்தி கொடுத்த தளம் நிச்சயம் எங்களுக்கு உதவியாக இருக்கும்.


*

பேங்காக் ஸ்வர்ண பூமி விமான நிலையத்தில் திவ்யா மற்றும் ரீட்டு இருவரிடம் இருந்து விடை பெறும்போது நிச்சயம் நண்பர்களுக்கு bat பரிந்துரைப்பேன் என்று உத்திர வாதம் கொடுத்து விடை பெற்றேன்.

தாய்லாந்த் ட்ரிப் முடித்து இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆனாலும் அதை குறித்து எழுத சில விஷயங்கள் தடுத்துக்கொண்டிருந்ததாலும்; கடைசியாக எழுதி விடலாம் முடிவு செய்து இதோ எழுதவும் துவங்கியாச்சு.

**

Divya Saxena மற்றும் Ritu Sinha பற்றி சிறு அறிமுகம்:


அவர்கள் இருவர்தான் bat travels நிறுவனத்தின் founders. பயணம் என்பது வெறும் பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமே கிடையாது பார்வையற்றவர்களும் பயணம் செய்ய முடியும்; அவர்களுக்கும் ஆசை இருக்கும்; உணர்வுகள் இருக்கும்;  என்கிறதை உணர்ந்ததால் bat travels ஆரம்பித்தார்கள்.

ஒரு முறை இருவரும் ஐரோப்பா சுற்று பயணம் மேற்கொள்ளும்போது இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இரு நபர்களை சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற தகவல் நினைவில்லை ஆனால் அவர்கள் ஒருவர் பார்வையற்றவர்; மற்றொருவர் அவருக்கு உதவியாக வந்த அவரது நண்பர்.
அவர்கள் இருவருக்கும் பயணம் என்கிற விஷயத்தில் ஒத்து போனதால் கடல் கடந்து சுற்றி பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை சந்தித்த திவ்யா மற்றும் ரீட்டு இருவரும்
இந்தியா திரும்பியதும் அது வரை அவர்கள் செய்து வந்த நல்ல சம்பளம்; பாதுகாப்பான வேலையை உதறிவிட்டு மனதிற்கு பிடித்த வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதனுடைய செயலாக்கம்தான் bat travels.

இதுவரை இந்தியாவில் 10 சுற்று பயணங்கள் வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். தாய்லாண்ட் ட்ரிப் அவர்களது முதல் இண்டர்னேஷனல் அனுபவம். இவர்களது கான்சப்டே இன்க்லூசிவ் ட்ராவல். பார்வையுள்ளவர்களையும்; பார்வையற்றவர்களையும்; ஒன்றாக இணைத்து சுற்று பயணம் ஏற்படுத்துவதுதான்.

ஒரு முறை ரீட்டு மேம்மோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஆரம்பத்தில் இருந்து இதுவரை எவ்வளவு தூரம் bat travels வெற்றி கண்டிருக்கிறது என்பதை எல்லாம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டேன். அப்போது அவர் சொன்ன விஷயங்கள் கேட்க கேட்க கஷ்டமாக இருந்தது. இது இருவரோட தொழில் சம்பந்த பட்ட விஷயம் என்பதாலும்; இவர்களை போன்று மாற்று பார்வையில் சிந்திக்க விருப்பப் படுபவர்களுக்கு தன்னம்பிக்கையாக இருக்கும் வகையில் ஊக்கம் கொடுக்கும் பொருட்டு திவ்யா மற்றும் ரீட்டு அவர்களது முயற்சிக்கு நான் அவர்கள் வாயிலாக பெற்ற அனுபவத்திற்கு கொடுக்கும் ஒரு சிறு பரிசு இந்த பதிவு

*
bat ஓட குணாதிசயங்கள் பலருக்கும் பரிச்சியமாக இருக்கும் நம்புகிறேன். அந்த பெயரை வைத்து தனியாக இரண்டு பெண்கள் அவர்களது எண்ணங்களுக்கு செயலாக்கம் கொடுக்கும் பொருட்டு bat travels ஆரம்பித்தார்கள். அந்த முயற்சி எனக்கு எதோ ஒரு விதத்தில் உத்வேகம்; தன்னம்பிக்கை கொடுப்பதால் இங்கு bat பற்றி பகிர்ந்து கிட்டேன். விருப்ப பட்டவர்கள் ஒருமுறை இந்த

 தளத்தை சென்று பாருங்கள்.
சற்று வித்யாசமாக பயணம் செய்ய விருப்பப்படுவர்கள் முயற்சித்து பார்க்கவும் நான் பரிந்துரைக்கிறேன்!

தொடர்புடைய பதிவுகள் :


15 comments:

 1. உங்களது தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள் நண்பரே பயண அனுபவங்கள் வரும் என்று நினைக்கிறேன் - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பயண அநுபவத்தை எழுதனும்னு ஆசை சார்.
   பார்க்கலாம் எந்த அளவிற்கு எழுத முடியும்னு தெரியல!

   வருகைக்கும் முதல் பின்னோட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி சார்!

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் பின்னோட்டத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

   Delete
 3. மிக மகிழ்ச்சி ..

  சுவாரஸ்யமாகவும் இருக்கிறது ...

  அருமையான ஒரு இடத்தின் (bat travels ) அறிமுகம் ..

  ReplyDelete
  Replies
  1. பதிவை வாசித்து சுவாரஸ்யமாக இருப்பதாக சொன்னதற்கு
   நன்றிகள் மேடம்!

   Delete
 4. மகேஷ் கலக்கல்!!! பேட் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டாச்சு...

  பயணம் என்பதே நமக்குப் படிப்பினைதான் மகேஷ். அது எல்லோருக்குமே. பல அனுபவங்கள் நம்மைச் செதுக்க உதவும். சுற்றுலாவை எஞ்சாய் செய்வதோடு அனுபவங்கள் பாடங்களும் கற்றுத் தரும்.

  உங்கள் தன்னம்பிக்கை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் தனியாகச் செல்லப் போகிறேன் என்றதும் நான் பயப்படவில்லை. மாறாக நீங்கள் கண்டிப்பாக உங்களால் முடியும் என்றே தோன்றியது. என்னைப் பொருத்தவரை நீங்களும் எங்களைப் போலத்தான் என்ற நினைப்பே....

  உங்கள் தாய்லாந்த் அனுபவங்களை அறிய ரொம்பவே ஆவல். இடம் பற்றியும் உங்கள் ஃபீலிங்க்ஸ், கிடைத்த நண்பர்கள் பற்றியும் குறிப்பா தோழி கிடைத்தாரா...ஹா ஹா ஹா ஹா... என்பதைப் பற்றியும் அறிய ரொம்பவே ஆவல்!!

  வாழ்த்துகள் மகேஷ்! பாராட்டுகளும்...நீங்கள் இன்னும் கலக்குவீர்கள்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன் சார் மற்றும் கீதா மேடம்!

   அங்கு கிடைத்த அழகிய; இனிமையான பயண அனுபவத்தை தொடர் பதிவுகளாக
   எழுதனும்னுதான் இருக்கேன்.
   பார்க்கலாம்.

   தோழி கிடைச்சாளானு கேட்டிருந்தீங்க.
   ம்ம்ம்... கிடைச்சா கிடைச்சா. ஒத்த வார்த்தையில சொல்லனும்னா
   ஞானக் கண் திறந்து வைத்த தெய்வம் ஆயிட்டா
   எனக்கும் கடவுளுக்கும் செட் ஆகாது என்பதால என்ன செய்ய ஒரே ஃபீலிங்ஸ்:)

   அவளுடன் பயணித்த அந்த 5 நாட்கள் நினைத்து பார்த்தால் என்றென்றும் உள்ளமெங்கும் ஒரு வித இன்பம் பரவும்; கூடவே ஒருவித குற்ற உணர்ச்சியும் உருத்தும்.
   அதையெல்லாம் தாண்டி எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்!
   ஏன்னா அவ மனசும்; குனமும் சோ ஸ்வீட்:)
   இப்படியே அவளை பற்றி எழுதினால் எப்படி? அடுத்து பதிவுகளில் என்னத்த எழுதுறது? அதுனால அவளை பற்றி தனியாகவே ஒரு பதிவு போடனும்னு ஆசை!
   அப்போ தெரிஞ்சுக்கோங்க! ஹீ.ஹீ.ஹீ

   Delete
 5. வாழ்த்துக்கள் தல.

  ReplyDelete
  Replies

  1. அரவிந் நான் அடிக்கடி நினைப்பேன். ஒரு வேளை நீங்க பேட் பற்றிய அந்த மின் அஞ்சல் அனுப்பாமல் இருந்திருந்தால்
   தாய்லாந்த் எனது கனவு தேசமாகவே கடைசி வரை இருந்திருக்கும்!

   யோசிச்சு பார்த்தா ஆச்சர்யமாக இருக்கு! ஒரே மின் அஞ்சல்தான் தாய்லாந்த் வரை என்னைய கூட்டிட்டு போய் இருக்கு!


   மிக்க நன்றி அரவிந்த் !

   Delete
 6. வாழ்த்துகள் 🎊 நணபரே. Bat Travels பற்றி அறிந்து கொள்ள அவர்கள் தளத்திற்கு செல்கிறேன்.

  ReplyDelete
 7. மகேஷ் நல்ல பயண அனுபவம் என்று தெரிகிறது. தனியாகச் சென்று வந்திருக்கின்றீர்கள்! பாராட்டுகள். இப்பயணம் உங்களது மன உறுதியை வலுப்படுத்தியிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நீங்கள் கண்டது கற்றது எல்லாம் அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.

  ReplyDelete
 8. அருமையான பயணம் மகேஷ். துணிந்தவருக்கு புல்லும் ஆயுதம்.. துணிவே துணை..

  ReplyDelete
 9. அருமையான பதிவு. னானும் ுங்கல் பயன அனுபவ பதிவிர்க்காக காத்திருக்கிரேன். விரைவில் எழுதூவீர்கல் என நம்புகிரேன். BAT ட்ராவெல்ஸ் பட்றி ஏர்கனவே கேல்விப்பட்டிருக்கிரேன் ஆனால் இந்த பதிவில் சட்று விரிவாகவே தெரிந்துகொல்லமுடிந்தது. கணவுதேசத்திர்க்கு சென்று வந்ததர்க்கும் என்னுடய வாழ்த்துக்கல்.

  ReplyDelete