Monday, February 11, 2019

கவிதையும் நானும்- கவிப்பூரணியும்இன்றோடு (11/02/2019) எனக்கு 28 முடிந்து 29 துவங்குகிறது. ஏதோ நேற்றுதான் 2013 - 14 கல்வி ஆண்டில் முதுகலை படிப்பு சேர்ந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளயும் இரண்டு ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கை முடிவடைந்து கடந்த வருடம் டிசம்பரோடு ஸ்டேட்பேங்கில் சேர்ந்து பணியிலும் இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கிறது.

மன அழுத்தம்; பணி அழுத்தம்; பண அழுத்தம் என சுற்றிலும் எத்தனை எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் திரும்பி பார்க்கும்போது 2017ஆம் வருடம் குடும்பத்தோடு சிங்கப்பூர் சென்று வந்ததும்; 2018 ஆம் வருடம் தனியாக தாய்லாந்த் சுற்றி வந்ததும் இதுவரையிலும் என் அளவில் பெரிய வெற்றியாக நினைக்கிறேன்.

தினமும் காலையில் திருத்தனிக்கும்; வேலை முடிந்து மீண்டும் மாலையில் வீடு திரும்ப திருப்பதிக்கும் மொத்தம் நான்கு மணி நேரம் பயணத்திலே செலவிடுவதாலும் வீடு திரும்பியதும் உடலும்; மனமும் சோர்ந்து விடுவதால் பதிவு எழுதவும் ஆர்வம் வர மாட்டேங்கிறது.

முடிந்த வரை சமயம் கிடைக்கும்போது பதிவர்களது பதிவுகளை வாசித்து விடுகிறேன். சென்ற வாரம் ஒருநாள் கரந்தை ஜெயக்குமார் சாரோட பதிவு ஒன்றில்
திருச்சி பதிவர் இளங்கோ சார் மறைவு பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
2015 புதுக்கோட்டை வலைப்பதிவர்விழாவில் அவரை சந்திச்சு பேசிய அனுபவம் மறக்க முடியாதது.

*

என்னோட கவிதை வாசிப்பு குறித்தான புரிதல் எப்போது ஆரம்பித்ததென்று பார்த்தால் அனேகமாக 2014ஆம் ஆண்டு இருக்கலாம். தைரியமா ஒரு கவிதை தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடிச்சேன். கவிஞர் வைரமுத்து அவரது தண்ணீர் தேசம். அதுதான் முதலும் கடைசியுமானது. அதன் பிறகு இன்று வரையிலும் முழுவதுமாக எந்த கவிதை தொகுப்பையும் வாசித்தது கிடையாது.

2015ஆம் ஆண்டு ஜீவா அக்கா தனது முதல் புத்தகமான தென்னங்கீற்றுகளின் சாட்சியாக கவிதை தொகுப்பை வெளியிட்டிருந்தாங்க. ‘அக்கா கவிதை ஒன்னுமே புரியல அக்கா’னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன். அன்பான ஜீவா அக்காவோட கவிதைக்கே அந்த கதி என்றால் புரிஞ்சுக்கோங்க அந்தளவிற்கு கவிதையினா அவ்வளவு பயம்.

திடீரென கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம கவிதை பத்தி இங்கு பேச...

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இருக்கும். பலரும் பார்த்து கொண்டாடிய 96 படம் பற்றிய பேச்சு எங்கள் இருவருக்கும் இடையே வந்தது. இங்கு இருவர் என்றால்
நானும்-சுடர்விழியும். ’96 சாதாரணமான படம் கிடையாது; கவிதை; படம் பொயட்டிக்கா இருக்குது; என்றெல்லாம் இஷ்டத்திற்கு படத்தை புகழ்ந்து தள்ளிட்டேன் சுடரிடம்.

‘உனக்குதான் கவிதையே வாசிக்க பிடிக்காதே?’ கவிதைக்கும் உனக்கும் ஏணி வெச்சு இல்லல இல்ல ஏரோப்ளைன் ஏற்றி கவிதை உலகில் உன்னை பிடிச்சு தள்ளினாலும்; ஜென்மத்துக்கும் உன்னால கவிதையை புரிஞ்சுக்க முடியாது’ ‘படம் மட்டும் எப்படி பொயட்டிக்கா இருக்கு’னு அவ கேட்டதும் இல்லாம ஒரு கவிதை ஒன்றை அனுப்பி
வாசிச்சு பார்த்து சொல்லு ‘அப்போ 96 ஒரு பொயடிக்கான படம் அப்படினு நம்புறேன்’னு சொல்லி இருந்தாள். அடுத்து புதிதாக நா கவிப்பூரணி பெயரில் புதுவருடத்தில் வலைதளம் எழுத இருப்பதாவும் சொல்லி இருந்தாள். எதோ ஆர்வ கோளாரில் விழியின் ஓவியத்தில் எழுத ஆரம்பிச்சவ; அரை லூசாட்டம் உளரி இருப்பானு விட்டுட்டேன்.
நெஜமாலுமே எழுத ஆரம்பிச்சிருக்கா இந்த புத்தாண்டில் இருந்து!


*
பொதுவாக கவிதை புரிதல் விசயத்தில் திரைப்பட பாடல்களின் வரிகளை கவனிக்க ஆரம்பித்தால் கவிதையின் புரிதலை நோக்கி முதல் அடி எடுத்து வைத்து விட்டதாக நினைக்கிறேன். ஆனால் இது மட்டுமே கவிதை புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு காரணியாக இருக்காதென நம்புகிறேன். சிறு வயதில் இருந்தே நிறைய திரைப்பட பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். என்ன ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாடல் கேட்டதால் அதன் விளைவாக வரிகளை கவனிப்பதில் கோட்டை விட்டுவிட்டேன். இளங்கலையின் போது பாடல் கேட்கவேண்டியதன் அவசியம் இல்லாததால் எப்போதாவதுதான் கேட்பது. முதுகலைக்கு பிறகு திரைப்பட பாடல்களை கேட்பதை முற்றிலும் மறந்திருந்தேன். வேலைக்கு போக ஆரம்பிச்சதன் பிறகுதான் தினமும் காலையிலும்-மாலையிலும் பயணத்தில் பாட்டு சில நாட்களுக்கு துணையாக வந்தது. அப்போது வரிகளை கவனிக்க ஆரம்பிச்சதன் பலனாக அது ஏற்படுத்தும் உணர்வுகள் பிடிக்காததால் கவனிப்பதை விட்டுவிட்டேன். கூடவே பாடல் கேட்பதையும் நிறுத்தி இருந்தேன்.

*

சுடர்விழி அனுப்பி இருந்த கவிதையை வாசிக்க ஆரம்பிச்சதும் ஃபஸ்ட் டைம் கவிதை நிச்சயம் ஸ்பானிஷ்லயோ; ஜெர்மன்லயோ கவிதை எழுதலனு புரிஞ்சது. கண்டிப்பா தமிழாகத்தான் இருக்கும் அப்படீங்கிற தைரியத்தில் செக்கண்ட் டைம் வாசிக்க ஆரம்பிச்சேன். ஓரளவிற்கு கவிதை மேலோட்டமாக புரிந்தது. ஆனாலும் கவிதையை புரிந்துக்கொள்வதில் ஏதோ ஒரு குறையாகவே எனக்கு பட்டது. மனதை திட படுத்திக்கொண்டு தேர்ட் டைம் வாசிக்க ஆரம்பிச்சேன். இம்முறை வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததால் ஓரளவிற்கு கவிதையின் சாரத்தை சுவைக்க முடிந்தது. அப்படியே நின்று விட்டால் எப்படி. ஃபோர்த் டைம் வாசிக்க ஆரம்பிச்சேன். அப்போதுதான் கவிதையும்... ஒரு விஷயமும் புலபட்டது!
எளிமையாக; நகைச்சுவையாக எழுதிய கவிதையை புரிந்து கொல்வதில் எனக்கு இருக்கும் சிக்கல் நினைக்கும்போது ‘எனக்கு கவிதையை புரிஞ்சுக்க கூடிய பக்குவமோ; பொறுமையோ
இல்லைனு புரிந்தது!

இதே எவ்வளவு கடினமாக தத்துவ கட்டுரைகளாக இருக்கட்டும்; அறிவியல் கட்டூரைகளாக இருக்கட்டும்; உளவியல் பற்றிய கட்டுரைகளாக இருக்கட்டும்; வாசித்து புரிந்துக்கொள்வதில் சிக்கல் இல்லை. மனம் அது போன்ற கட்டுரைகளைதான் தேடி தேடி வாசிக்க ஊக்குவிக்கிறது. ஆனால் கவிதை என்று வந்து விட்டால் கடினமாக இருக்கிறது.
ஒரு வேளை கவிதை எல்லாம் ரொம்ப சென்ஸிடிவ் பர்சன்ஸ்தான் விரும்புவாங்க போல! (அப்போ நீயாராம் மனசாட்சி:)

*
எப்படியோ பல வருடங்களுக்கு பிறகு கவிதை ஒன்றை வாசித்த திருப்தி கிடைத்திருக்கிறது. (எல்லாம் பூரணி புண்ணியத்தில்!)அடுத்து இன்னும் சிறப்பாக ’கவிதையை புரிந்து கொள்வது எப்படி’னு கூகுல் ஆத்தாவிடம் கேட்டு கத்துக்க போறேன்! எல்லாம் #கவிப்பூரணிக்காக!
*

நான் வாசித்து ரசித்த கவிப்பூரணி அவர்களோட கவிதை இதோ:

தையலுக்குத் தையல்!


ரெடிமேடாடைகளால் போரடித்து – நல்ல
சுடிதார் துணியை எடுத்துவந்தே – தையல்
கடையில் கொடுத்து தைக்கச் சொன்னேன் – அளவும்
படித்தே எடுத்தான் டேப்பினிலே!

கடைக்காரனோ சரக்கின் வசமிருக்க – அவன்
படைப்பாற்றலை மலைபோல் நம்பிநிற்க – நானும்
கிடைத்திடவே நாளிரண்டு ஆகுமென்றான் – திரும்பி
வடைசுடவே படையெடுத்து வீடு வந்தேன்!

நாளிரண்டு ஆன பின்னே ஆவலோடு வாங்கவந்தேன் – ஆங்கே
தாளிரண்டு ஒதுக்கி வைத்து கொண்டை கொண்ட மான்விழியாள் – தங்க
கையிரண்டை நீட்டிவிட்டே ஆடை காட்டி சண்டையிட – எடுத்த
அளவினுக்கும் தைத்ததற்கும் சம்மந்தமே இல்லை என்றாள்!

அவளுடைய அளவினிலே என்னினிய சுடிதாரும் – மொக்கை
கலரதனில் நாய்துரத்தும் அவளுடைய சுடிதாரோ – மங்கை
கொடியிடையாள் என்னுடைய அளவினிலே தைத்திருக்க – சொம்பால்
அடித்துவிட்டு பணம்பிடுங்கி கோபத்திலே சாபமிட்டோம்!

என்னினிய கணவனிடம் நடந்ததையே நான் உரைக்க – அந்த
மற்றொருவள் வனப்பதனைக் கேட்டவரைக் கண் முறைக்க – சிந்தும்
சிரிப்பினிலே என்னாடைதனை அவர் குறைக்க – தந்தே
சரிஎன்றேன் கட்டுடலின் வலிமைதனில் தினம் திகைக்க!

-கவிப்பூரணி.

புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் அந்த மழலை கவிஞருக்கு உங்களது அன்பும் ஆதரவும் ஊக்குவிப்பும் என்றென்றும் இருக்க அவரை இங்கு அறிமுக படுத்தி இருக்கேன்.
மேலும் அவரது கவிதைகளை வாசிக்கவும் தொடரவும்இந்த வலை பக்கம் செல்லவும்


பின் குறிப்பு:

இரண்டு நாட்களுக்கு முன்பே ‘என்னோடதுதான் இந்த வருட முதல் பிறந்தநாள் வாழ்த்தா இருக்கனும்’னு அடிச்சு பிடிச்சு வாழ்த்து தெரிவித்த பூரணிக்கு மிக்க மிக்க நன்றி!!!!
தொடர்புடைய பதிவுகள் :


10 comments:

 1. சுவாரஸ்யமான உரையாடல். புன்னகைக்க வைத்த கவிதை.

  ReplyDelete
 2. மென்மேலும் உயர வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. ஓ மகேஷ், நீங்க கிரேட் தான், இவ்ளோ வேர்க் பிசியிலும் வலைப்பக்கம் விடாமல் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

  ஓ மகேஷ் க்கும் பெப்ரவரியிலோ பிறந்தநாள்.. வாழ்த்துக்கள் மகேஷ். கவிப்பூரணியின் கவி அழகு.

  ReplyDelete
 4. மகேஷ்,

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  அப்போ என்னுடைய கவிதைகளை அவ்வப்போது வாசித்துவிட்டு பிரமாதம் என்று சொன்னதெல்லாம் ...?ம்ம்ம்... நல்லா இரு....

  நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்.

  கோ.

  ReplyDelete
 5. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மகேஷ்...

  கவிப்பூரணி கவிதை சிறப்பு.

  ReplyDelete
 6. சுவாரஸ்யமான எழுத்து!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்.நானும் தங்களைப்போல் வங்கி ஊழியன்தான்.பாண்டியன் கிராம வங்கியில் பணி!எனது வலைதளமுகவரி:vimalann.Blogspot. com

  ReplyDelete
 8. சாரி மகேஷ் தாமதத்திற்கு...

  தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்!

  பதிவு வாசித்துவிட்டு வரோம்..

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 9. மகேஷ் ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. எங்களுக்கு சுடரின் நட்பும் கிடைத்ததற்கு மிக்க நன்றி. நாங்களும் அவரை தொடர்கிறோம்...

  பல இடங்கள் சிரிக்க வைத்தன...சுடரின் கவிதை உட்பட...

  துளசிதரன், கீதா

  கீதா: மகேஷ் பரவால்ல கவிதை வாசிக்க வாசிக்க புரிய ஆரம்பிச்சுரும்...தனுஷ் ஏதோ ஒரு படத்துல சொல்ற டயலாக்தேன்!!! ஹா ஹா ஹா

  ReplyDelete