Saturday, June 12, 2021

நியூயார்க்கில் இருந்து உஷுவியா வரை இவ்வருடம் ஜனவரி மாதம் இருக்கும். வீட்டில் ஒரு மாலை பொழுது தம்பியும் நானும் பேசிக் கொண்டிருக்கும்போது ’கிங் ரிச்சர்ட் சீனிவாசன் இறந்திட்டார் போல’னு சொல்லியிருந்தான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியில் என்ன உண்மையாதான் சொல்லுரியானு கேட்டேன். ஆமாம் பைக்கர் கிங் ரிச்சர்ட் பத்திதான் நா சொல்லுறது சொன்னான்.


என்னால் நம்பவே முடியல. உடனடியாக இணையத்தில் தம்பி சொன்னது உண்மையா என உறுதி படுத்திக்குவோமேன்னு கூகுல் செய்து பார்த்ததில் ஜெனவரி 15 அன்று மூன்று நண்பர்கலோடு ராஜஸ்தானில் பைக்கில் அவர் சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென இவரது பைக்கிர்க்கு குருக்கே சாலையில் ஒரு ஒட்டகம் வந்துவிட பைக்கின் வேகத்தை கட்டு படுத்த முடியாமல் ஒட்டகத்தின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏர்பட்டு சிகிச்சை பலன் இன்றி இரந்து போனதாக வாசித்ததும் கூட...


கிராஸ்-கன்ட்ரி பைக்கிங்கில் ஐந்து கண்டங்களில் பயனித்த ஒருத்தருக்கா இந்த நிலமை. என்னால் நம்ப முடியவில்லை.

தனது சொந்த பைக்கில் ஆல்மோஸ்ட் உலகத்தையே சுத்தி பார்த்த ஒருத்தருக்கா இந்த நிலமைனு

 என அந்த சமயம் மிகவும் வருத்த பட்டேன்.


யூட்யூபில் ஒரு விடியோவழியாகதான் ரிச்சர்ட் சீனிவாசன் எனக்கு பரிச்சையம் ஆனார். பெங்கலூரைச் சேர்ந்த தமிழரான இவர் பைக்கில் உலக பயணங்களை மேற்கொள்வதில் பெயர் பெற்றவர். ஆசியா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் தனது பைக்கில் பயனம் செய்தவர்.

அடுத்ததாக ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதர்க்குல் இப்படி...


2018 ஆம் ஆண்டில், அவரும் அவரது நண்பர் மஞ்சுனாத் என்பவரோடு சேர்ந்து பெங்கலூரில் இருந்து லண்டனுக்கு பைக்கில் சென்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். அவரும் அவரது நண்பர் விஜையுடன் சேர்ந்து அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரில் இருந்து இரண்டு பைக்குகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாக மெக்ஸிகோவில் நுழைந்து பெலிஸ், குவாத்தமாலா, ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடார் வரைக்கும் இருவரும் பயணிக்க

 பெரு நாட்டில் விஜய் கீழே விழுந்ததில் ஒரு கையில் ப்ராக்சர் ஆனதால் தொடர்ந்து அவரால் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது.


இருவரும் தங்களது பைக்குகளை பெரு நாட்டு தலைநகரான லீமாவில் ஒரு பைக் ஸ்டேண்டில் பைக்குகளை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பி விட்டனர்.

மீண்டும் ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு ரிச்சர்ட் சீனிவாசன் லீமாவிற்கு வந்து

 விட்ட இடத்தில் இருந்து பயணத்தை தொடர்ந்தார்.


சிலி மற்றும் அர்ஜென்டினா நாட்டில் கடினமான சாலைகளில் இயற்கை தனக்கு சாதகமாக இல்லாதபோதும்

 பயணித்து அவரது இலக்கான உலகத்தின் தென்கோடி நகரமான அர்ஜென்டீனா நாட்டில் இருக்கும் உஷுவியா ( ushuaia)

வரை வெற்றிகரமாக பயணம் செய்தார்.


பூமியின் வடக்கில் இருந்து தெற்கு. சுமார் முப்பதாயிரம் கிலோமீட்டர்;

14 நாடுகள் பைக்கில் பயணம் செய்தது சாதாரண விஷயமாக எனக்கு தெரியல.

ஒவ்வொரு நாளும் தங்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து பயணிக்கும் ஒவ்வொரு நாட்டு விசா ஏற்பாடுகள் என நிறைய உழைப்பு கோரி இருக்கும். இதற்கெல்லாம் ரிச்சர்ட் அவரது மனைவி துணை நின்று அவரை ஊக்குவித்திருக்கிறாங்க. ரிச்சர்ட் சீனிவாசன் இறந்துவிட்டார் என உறுதி ஆனதுமே அவரது மனைவியும் குழந்தையும்தான் நினைவுக்கு வந்து போனாங்க.


***


காலையில் Madventure நிறுவனத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. உலகின் வட துருவத்திற்கு அருகில் இருக்கும் அலாஸ்காவில் உள்ள ஏங்கரெஜ் நகரில் இருந்து உலகின் தென்கோடி முனையான உஷுவியா ( ushuaia) வரை ஒரு சாலை பயணம் ட்ரிப் ஏற்பாடு செய்வதாகவும்;

213 நாட்கள்;

15 நாடுகள்;

எங்கள் நிறுவனத்துடன் பயணம் செய்ய தயாராக இருந்தால் முன்பதிவு செய்யுமாறு மின்னஞ்சலில் எழுதி இருந்தது.


வாழ்நாளில் எனக்கும் இதுபோல ஒரு epic trip journey போகணுமுன்னு ஆசை.

என்ன ட்ரிப்புக்கு மொத்தம் எவ்வளவு செலவு பிடிக்கும் பார்த்தபோது

 அடுத்த நொடியே ட்ராஷ் ஃபோல்டருக்குள் மின்னஞ்சல் சென்றிருந்தது.