Thursday, January 14, 2016

விறுவிறுப்பு என்றால் அது எண்டமூரி வீரேந்திரநாத்ஒரு தலைமுறைக்கு அவர் ஒரு பரிசோதனை நாடக எழுத்தாளர்... மற்றொரு தலைமுறைக்கு ஒரு பிரபல நாவல் எழுத்தாளர்... அதன் பிறகு புகழ் பெற்ற திரைக்கதை எழுத்தாளர்... இன்றைய தலைமுறைக்கு அவர் ஒரு பர்ஸ்னாலிட்டி கவுன்சிலர்... காலத்திற்கேற்ப தனது எழுத்தையும்-சிந்தனையையும் மாற்றிக்கொண்டு தொலைநோக்கு பார்வையோடு செயலாற்றுவது இவரது தனித்தன்மை.

1980 முதல் தெலுங்கு இலக்கியத்தில் லச்சக்கணக்கான புத்தகப் பிரதிகள் விற்பனை; கோடிக்கணக்கில் வருமானம்; தி மோஸ்ட் பாப்புலர் தெலுங்கு எழுத்தாளர்தான் எண்டமூரி வீரேந்திரநாத்.

இவரது எழுத்து-தெலுங்கையும்-கடந்து கன்னடத்திலும் இன்றும் பேசப்படும் ஒரு தெலுங்கு எழுத்தாளர்; வெளிவந்த ஒரு சில தினங்களில் கன்னடத்தில் இவரது படைப்புக்கள் மொழிபெயர்க்கப்படும்;
தமிழிலும் இவரது படைப்புக்கள் கெளரி கிருபானந்தன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

நான் வியந்து ஆச்சர்யபட்ட விஷயம் என்னவெனில் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற நாவல் எழுத்தாளர்களின் வரிசையில் தமிழ் இலக்கிய வட்டத்தில் இவரைக் கொண்டாடும் வாசகர்கள் இருப்பதை பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

ஆரம்ப காலகட்டத்தில் 500 பேர் பார்ப்பதற்காக நாடகம் எழுதினார். லச்சக்கணக்கில் நாவல் பரவலாக மக்களிடையே கவனம் பெறத் துவங்கியது எனத் தெரிந்ததும் நாவல் எழுத துவங்கினார். சினிமாவில் கதவுகள் திறக்க அங்கும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார். டாலிஹுட்டில் மெகாஸ்டார் சிரஞ்சீவி 1985-95 இல் தொடர்ச்சியாக வெற்றி கொடுத்ததில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
ஒரு பக்கம் பத்திரிகைகளில் நாவல் எழுதிக்கொண்டு, மறுபுறம் சினிமாவில் 20ஆண்டுகள் திரைக்கதை-வசன எழுத்தாளராக இருந்துக்கொண்டு ஆந்திராவில் எண்டி ராமாராவ் பிறகு பிரபலமான ஆளுமையாக திகழ்ந்தார். மிகப் பெரிய அளவில் இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்களும் கொண்டாடிய தெலுங்கு மக்கள் இரண்டாயிரத்திற்கு பிறகான தலைமுறை இவரை கவனிக்காததால் எழுதுவதை குறைத்துக்கொண்டார்.

இதுவரை 5 நாடகங்கள், 51 நாவல்கள் தெலுங்கில் எழுத 11 மட்டுமே படித்திருக்கிறேன். இவருக்கு புகழைத் தேடித்தந்த நாவல்கள் பார்த்தால் துளசி தளம், மீண்டும் துளசி, பணம் மைனஸ் பணம், அந்தர் முகம், நிகிதா, 13-14-15 என்று பெரிய பட்டியலே இருக்கிறது.
நிகிதா, இந்த ஒரு நாவல் போதும் 1994 இல் எழுதியது. 20 ஆண்டுகள் கடந்தும் இன்றைய சூழலுக்குப் பொருந்தும் சரியான நாவல். எனது தனிப்பட்ட முறையில் எண்டமூரி வீரேந்திரநாத்தின் இந்த நாவலை பெஸ்ட் நாவல் பட்டியலில் முதல் இடத்தில் வைத்திருக்கிறேன். (பிறகு ஒருநாள் இந்த நாவலைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.)

ஒரு விதத்தில் இவரை தெலுங்கு சுஜாதா என்று கூடச் சொல்லலாம். எப்படி தமிழில் சுஜாதாவை கமர்ஷியல் எழுத்தாளர் என்கிற முத்திரையை குத்தி வைத்திருக்கிறார்களோ அதே போன்று தான் தெலுங்கிலும் இவரது நிலமை. ஆனால் லச்சக்கணக்கான வாசகர்களை வாசிப்பு பக்கம் ஈர்த்ததில் தமிழில் சுஜாதாவிற்கும்-தெலுங்கில் இவருக்கும் மறுக்க முடியாத பங்கு உண்டு.

இவரது நாவல்களில் எனக்கு பிடித்தது கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்துவது இவரது தனிச்சிறப்பு. அதனால்தான் பதிவின் தலைப்பே விறுவிறுப்பு என்றால் அது எண்டமூரி வீரேந்திரநாத் என்றுதான் வைத்தேன்.

பின்குறிப்பு:
தமிழில் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புதிதாக ஒரு எழுத்தாளரை வாசிக்க விரும்பினால் நிச்சயம் எண்டமூரி வீரேந்திரநாத் ஒரு குட் சாயிஸ். இவரது நாவல்களை கௌரி கிருபானந்தன் தமிழாக்கம் செய்திருக்கிறார். அல்லயன்ஸ் பதிப்பகத்தில் வாங்கலாம்.
www.alliancebook.com 
நன்றி.

***
நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துகள்.

Saturday, January 09, 2016

தமிழுக்கு அந்த நிலமை வராதுனு நினைக்கிறேன்!நண்பர்கள், சக பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் எனதினிய தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வங்கி தேர்வுக்காக தயாரிப்பில் மூழ்கி இருந்ததால் இங்கு எட்டிப்பார்க்க முடியாமல் போனது. இந்த வாரம் ஞாயிறு அன்று தேர்வை எழுதியாச்சு.
இனி எப்போதும் போல் எனது மொக்கையான கிறுக்கல்கள் எதிர்பார்க்கலாம்:))) அவ்வ்வ்
***
எனக்கு பொதுவாக தமிழ்; தெலுங்கு; என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. என்னால் இரண்டு மொழிகளிலும் பேச முடியும்; படிக்க முடியும்; எழுதவும் முடியும்! ஆனாலும் 12 ஆண்டுகள் சென்னையில் இருந்ததால் என்னவோ தாய்மொழியையும் தாண்டி தமிழின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. (கவனிக்க சென்னையில்தான் தமிழைக் கற்றுக்கொண்டேன்). நான் முதன்முதலாக வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்தது தமிழில்தான். ஒரு கட்டத்தில் ’சரி நம்ப மொழியில் யார் எழுதுறா; தமிழைப் போன்று தெலுங்கிலும் பல வலைப்பதிவர்கள் உச்சாகத்தோடு எழுதிக் கொண்டிருப்பார்கள்; கூடிய சீக்கிரம் அங்கும் ஒரு தளத்தை திறந்திடனும்; என்றெல்லாம் நினைத்துக்கொண்டு தெலுங்கு வலைப்பூக்களை தேடியபோது கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.

ஆம்; நான் முதலில் தெலுங்கில் பிரபலமாக பேசப்படும் ஒரு திரட்டியில் நுழைந்தேன். அந்த திரட்டியைப் பார்த்ததும் நிலமை புரிந்துவிட்டது. முழுவதும் வணிக நோக்கத்தில் பதிவுகள் இருந்தது. அதுவும் திரட்டியின் தரம் புக் மார்க் லச்சனத்தில்தான் இருந்தது. சில பதிவர்களின் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். இது நடந்து இரண்டு வருடத்திற்கும் மேல் ஆகிறது. எழுதிக்கொண்டிருக்கும் ஒன்று இரண்டு பதிவர்கள் கூட விருப்பமின்றி எதோ கடமைக்கு--தங்களின் திருப்த்திற்கு எழுதிக்கொண்டிருந்தார்கள்.

வலைப்பதிவுகள்தான் எழுதுவது கிடையாது ஃபேஸ்புக்கிலாவது--சுத்தம்.
உலக அளவில் தமிழரைக்காட்டிலும் தெலுங்கர் அதிகம்; உலக அளவில் பேசப்படும் மொழிகளிலும் தெலுங்கிற்கு முக்கியமானதொரு இடம்; ஆனாலும் என்னவோ இணையத்தைப் பொருத்தவரை பின்தங்கியே இருக்கிறார்கள்.

கூகுளில் நமக்கு தேவையான தகவல்களை தமிழில் தேடினால் எளிதில் கிடைக்கிறது. இதற்கு ஒரே காரணம்: தமிழ் விக்கியில் இருந்து; தனிநபர்கள் எழுதும் வலைப்பதிவுகள்; இணைய பத்திரிக்கைகள்; இவை எல்லாம் நாளுக்கு நாள் இணையத்தில் தமிழின் வளர்ச்சியை உயர்த்துகிறது. ஆனால் தெலுங்கை எடுத்துக்கொண்டால் நிலமை இதற்கு முற்றிலும் நேர் எதிராகத் தான் இருக்கிறது. சென்ற வாரம் ஒரு தலைப்பில் தெலுங்கில் சில தகவல்கள் தேவைப்பட்டதால் தேடிய போது கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான். அதே தகவலைத் தமிழில் தேடினால் தேவையான தகவல்கள் எளிதில் கிடைத்துவிட்டது.
தமிழர்கள் தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தெலுங்கர்கள் தெலுங்கிற்கு மட்டும்--கிடையாது; ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. அதனால் ஏற்படும் விளைவுகள் கவனிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. மொழி என்பது மிகவும் அவசியம். தாய் மொழியிலும் சரி; ஆங்கிலத்திலும் சரி எதோ ஒன்றிலாவது புலமை பெற்றிருந்தால்தான் எளிதில் படிக்கவும்-எழுதவும் வசதியாக இருக்கும்; அதைவிடவும் சிந்திக்கவும் மொழி அவசியம்.

இன்றைய அவசர உலகில் கணிதம்; இயற்பியல் மற்றும் வேதியியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பொரியியலையும் தாண்டி பல துறைகளில் வாய்ப்புகள் இருக்கிறது; ஆனால் சரியான விழிப்புணர்வுதான் கிடையாது.

அது போகட்டும். சொல்ல வந்த விஷயம் வேறு.

ஒரு மாதம் பிறகு நேற்று பதிவுகள் வாசிக்க ஆரம்பிக்க  ஞானப் பிரகாசம் அவரது பதிவை வாசிக்கவும் அதில் ஒரு அதிர்ச்சியான  செய்தியை படித்தேன். வரிசையாக செயலற்று போகும் திரட்டிகள் பட்டியலில் இண்ட்லி திரட்டியும் சேர்ந்திருப்பதாக எழுதி இருந்தார். அதனை உறுதி செய்துக்கொள்ள இண்ட்லி தளத்தை தேட இண்ட்லி தளம் திறக்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது.

தமிழ் மணம், தமிழ் வேலி மற்றும் இண்ட்லிதான் வாசகர்களை அதிகம் கொண்டு வரும் தமிழ் திரட்டிகள். இதில் ஏற்கனவே தமிழ்வேலி பல மாதங்களுக்கு முன்பே மூடபட்டுவிட்டது இப்போது இண்ட்லியும் அந்த வரிசையில் சேர்ந்துக்கொண்டது.
இப்போது இருக்கும் தமிழ் மணம் கூட சரியாக பராமரிக்க முடியாமல் இருக்கிறது. நிர்வாகத்திற்கு பல சிக்கல்கள் இருந்தாலும் தானியங்கி திரட்டி என்பதால் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் மணமும் இண்ட்லி வரிசையில் சேர்ந்துக்கொண்டால் தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த நிலமை தமிழுக்கு வராதுனு நினைக்கிறேன்.
தமிழ் மணம் மீண்டும் சிறந்து செயலாற்ற விரும்புகிறேன்.
இப்படிக்கு தமிழ்மண திரட்டியால் பலன் பெற்றவன்.