சிங்கப்பூரில் முதல் நாள் சிங்கப்பூர் ஃப்லைய்யர், கார்டன்ஸ் பை தி பே, மெரினா பே மற்றும் மெர்லயன் பார்க் சுற்றிப் பார்த்து இரவு உணவு லிட்டில் இந்தியாவில் முடித்து அறைக்கு திரும்பியபோது இரவு பத்தரை ஆகி இருந்தது. அன்றைய தினம் காலையில் இருந்து தொடர்ந்து நடந்ததால் படுத்ததும் உடனடியாக உறங்கி விட்டோம்.
ஆகஸ்ட் 14 திங்கட்கிழமை இரண்டாம் நாள் நாங்கள் ஒவ்வொருத்தராக எழுந்து குளித்து தயார் ஆவதற்குள் மணி ஒன்பதை தாண்டி விட்டது. அன்று விடுதியில் காலை உணவை முடித்துவிட்டு விடுதியில் இருந்து புறப்பட்டு ஃபெரர் பார்க் ரயில் நிலையத்திற்கு வந்து வடக்கு கிழக்கு வழித்தடத்தில் ஹார்பர்ஃப்ரெண்ட் நோக்கிச் செல்லும் ரயில் ஏறினோம். இரண்டாவது நாள் நாங்கள் சுற்றிப்பார்க்க திட்டமிட்டது செண்டோசா திவீல் இருக்கும் யுனிவர்சல் ஸ்டூடியோஸ் என்ற தீம் பார்க்.
முதன்முதலாக செண்டோசா தீவை பற்றி கேள்விபட்டதும் ’கடல்ல படகில் போகனும்போல‘னு யூகித்திருந்தேன். பிறகு தெரிந்தது சிங்கப்பூரைச் சுற்றி இருக்கும் சிறிய தீவுகளில் இந்த செண்டோசா ஒன்று. செண்டோசாவிற்குச் செல்ல ஹார்பர்ஃப்ரெண்ட் நிறுத்தத்தில் இறங்கி மோனோ ரயில், கேபிள் கார் அல்லது Sentosa Boardwalk எனப்படும் நடை பாதை மார்கங்களில் செல்ல முடியும். நாங்கள் ஹார்பர்ஃப்ரெண்ட் ஸ்டேஷனில் இறங்கி எஸ்குலேடர் வழியாக ஒவ்வொரு தளமாக மேலே ஏறி விவோ சிட்டி ஷாப்பிங் மால் இருக்கும் லெவல் மூன்றை அடைந்தோம். அங்கிருந்துதான் செண்டோசா எக்ஸ்ப்ரஸ் என அழைக்கப்படும் மோனொ ரயில் ஏறி செண்டோசா தீவிற்கு போகனும். அதற்கு முன்பு...
செண்டோசாவைப் பொருத்தவரையில் நுழைவு இலவசம். ஆனால் ஒவ்வொரு அட்ராக்ஷனுக்கும் தனித் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். எல்லாம் கூட்டிக் கழிச்சு பார்த்ததில் கட்டணம் ரொம்ப அதிகமாக இருப்பதால் 2-DAY FUN PASS வாங்குவதென முடிவு செய்தோம். ஒருத்தருக்கு 175$. நான்கு பேருக்குசேர்த்து 700$. இந்திய ரூபாயில் 35,000 ஆச்சு. சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தோம்.
2-DAY FUN பாஸ் தவிர வேறு சில பாஸ்களும் இருக்கு. அவர் அவர் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து போகலாம்.
செண்டோசா பாஸ்கள் பற்றீய மேலும் விவரங்களுக்கு
இங்கே செல்லவும்.
2-DAY FUN பாஸை, டிக்கட்டா மாத்தணும். இணையத்தில் முன்பதிவு செய்தபோது வந்த கன்ஃபர்மேஷன் சீட்டைக் கொடுத்து டிக்கெட்டாக மாற்றனும் என்பதால் அதற்கான வசதி விவோ சிட்டிலையே இருப்பதால் மொதல்ல அந்த வேலையை முடிச்சோம்.
நாங்கள் வாங்கிய 2-DAY FUN பாஸ்ஐ கொண்டு செண்டோசாவில் இரண்டு நாள் சுற்றிப்பார்க்க முடியும். ஒரு நாள் யுனிவர்சல் ஸ்டூடியோஸ்ஐயும் இன்னொருநாள் செண்டோசா தீவில் இருக்கும் மற்ற அட்ராக்ஷன்கள் சுற்றிப்பார்க்கலாம். முதல் நாள் நாங்கள் யுனிவர்சல் ஸ்டூடியோஸ் போக முடிவு பண்ணியதால் செண்டோசா எக்ஸ்ப்ரஸ் ஏற சென்றோம். விவோசிட்டியில் இருந்து செண்டோசா தீவில் இருக்கும் வாடர்ஃப்ரெண்ட், இம்பியா லுக்கவுட் மற்றும் பீச் பகுதிகளை இந்த மொனொ ரயில் இணைக்கிறது.
கட்டனம் நபருக்கு 4$. EZ-Link கார்ட் பயன்படுத்தி மோனோ ஏறினால் நாங்கள் இறங்க வேண்டிய வாட்டர்ஃப்ரெண்ட் நிறுத்தமோ புறப்பட்ட ஐந்தாவது நிமிடம் வந்துவிட்டது. சிங்கப்பூர் நிலப்பரப்பில் இருந்து செண்டோசா தீவுக்கு இடையிலான நீர் பரப்பு சில மீட்டர்கள் மட்டும்தான். இது தெரியாததால செண்டோசா எக்ஸ்ப்ரஸ் ஏறினோம். நடந்திருந்தாக்க கூட ஒரு அஞ்சு நிமிஷம் ஆகி இருக்கும். அடுத்த நாள் விவோ சிட்டியில இருந்து தீவிற்குள் நடந்தே போவோம்னு முடிவு செய்தோம்.
வாட்டர்ஃப்ரெண்ட் நிறுத்தத்துல இறங்கி ஒரு 150மீட்டர் நடந்து இருப்போம். யுனிவர்சல் ஸ்டுடியோஸ் வந்திடுச்சு. மணி அப்போ பத்தரை ஆகி இருந்தது. பயங்கர வெயில்.
2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த யுனிவர்சல் ஸ்டுடியோ ஜப்பானுக்கு அடுத்து ஆசியாவில் திறக்கப்பட்ட இரண்டாவது மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முதலாவது ஆகும். சுமார் 49 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றிப்பார்க்க வருவதால் வருடம் முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும்.
செண்டோசாவில் யுனிவர்சல் ஸ்டுடியோசை மட்டும் சுற்றிப்பார்க்க விரும்பினால் டிக்கெட் நபருக்கு 76$. டிக்கெட் வாங்கியதை அடுத்து உள்ளே தனித்தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை.
யூனிவர்சல் ஸ்டூடியோ மொத்தம் ஏழு ஜோன்களாக பிரித்திருக்கிறார்கள்.
1. Hollywood.
2. New York City.
3. Sci-fi city.
4. The lost world.
5. The Ancient Egypt.
6. Far Far Away.
7. Madagascar.
ஒவ்வொரு பகுதியிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் திருப்தி படுத்தும் வகையில் ரைட்ஸ் மற்றும் ஷோஸ் இருக்கும். தவிரவும் ஆங்காங்கே ஸ்டேஜ் ஷோஸ் நடந்துகிட்டு இருக்கும். அனைத்தும் ஹாலிவுட் பிரபல திரைப்படங்களின் தீம் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.
யூனிவர்சல் ஸ்டுடியோ நுழைவாயிலில் யூனிவர்சல் ஸ்டுடியோ பார்க் மேப் பிரிண்ட் செய்து வச்சிருப்பாங்க. வேணும்னா ஒண்ணு எடுத்துகிட்டு உள்ளே சுத்திப்பார்க்கும் போது எந்தெந்த ஐட்டம் எங்க இருக்கு அப்படிங்கிறத தெரிஞ்சுக்க உதவியாக இருக்கும்.
யூனிவர்சல் ஸ்டூடியோவில் நுழைந்தால் முதலில் நமக்கு தென்படும் பகுதி ஹாலிவுட். ஹாலிவுட் பகுதி முடிந்ததும் பாதை இடது-வலதுபுறம் என இரண்டாக பிரியும். எந்த பக்கம் சென்றாலும் பத்து நிமிடத்திற்குள் அனைத்து பகுதிகளையும் சுற்றிவிட்டு மீண்டும் ஹாலிவுட் பகுதிக்கு வந்து விடலாம்.
ஹாலிவுட் பகுதியில் ரைட்ஸ் எதுவும் இல்லாததால் ஹாலிவுட் கடந்து வலது பக்க பாதையில் போனால் நியூ யார்க் சிட்டி பகுதி வந்தது. 1960-70 கால நியூ யார்க் நகர் மாதிரியான செட்டப் இடையே நடந்துக்கொண்டு வந்தால் Lights, Camera. Action!™ Hosted by Steven Spielberg ஷோ ஒண்ணு இருப்பதைப் பார்த்து ஷோ பார்க்க வரிசையில் போய் நின்னோம். உள்ளே ஏற்கனவே ஷோ ஓடிகிட்டு இருந்ததால் பத்து நிமிடம் காத்திருந்த பிறகு ஷோ முடிந்ததும் எங்களை உள்ளே அனுமதித்தார்கள். பொதுவாக ஷோ என்பது ஒரு அரங்கிற்குள் அல்லது திறந்தவெளி பகுதியில் இருக்கைகளில் உட்கார்ந்துக்கொண்டு பார்ப்பதுதான் எனக்கு தெரியும். ஆனால் இந்த ஷோவோ வித்யாசமாக இருந்தது.
அரங்கிற்குள் அனுமதித்தவர்களை தரைப் பகுதியில் பிரத்தியேகமாக போடப்பட்டிருக்கும் இரும்பாலான தரைப்பகுதியில் மட்டும் நிற்கச் சொல்கிறார்கள். அப்போதுதான் ஸ்டீவன் ஸ்டீல்பர்க்கின் ஸ்பெஷல் எஃபர்ட்ஸ் ஷோவை முழுவதும் ரசிக்க முடியுமாம். கதவுகள் சாத்தப்பட்டதும் நமக்கு முன்பிருக்கும் திரையில் ஸ்டில்பர்க் தோன்றி லைட்ஸ் கெமரா ஆக்ஷன் ஷோ பற்றி ஒரு முன்னுரை கொடுக்கிறார். அதன் பிறகு ஷோ ஆரம்பிக்கிறது.
அமைதியான நியூயார்க் நகரம் கேட்டகரி 5 ஹர்ரிகேனால் தாக்கப்படுவதை லைவாக காட்டுவார்கள். ஷோ முடிஞ்சு வெளியே வந்து நியூயார்க் சிட்டி பகுதியில் பார்க்க வேற எதுவும் இல்லாததால நியூயார்க்ல இருந்து Sci-Fi City பகுதிக்கு போனோம்.
எடுத்ததும் எங்களுக்கு முதலில் தென்பட்டது Transformers The Ride. சரி ரைட் ஏறுவோம்னு வரிசையில் நுழைந்தோம். மணி அப்போது பணிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன்பு யுனிவர்சல் ஸ்டூடியோஸ்ஐ பற்றி இணையத்தில் தேடியபோது ’முடிந்தவரை வாரயிறுதியைத் தவிர்த்துவிட்டு வார நாட்களில் சென்றால் கூட்டம் இருக்காது நல்லா என்சாய் பண்ணலாம்’ சொல்லி இருந்தார்கள். ’திங்கட் கிழமைதானே கூட்டம் இருக்காது’னு ஏதோரு தைரியத்தில் சென்றோம்.
யுனிவர்சல் ஸ்டூடியோஸ்ல எங்களோட பொறுமைய சோதிக்க ஆரம்பிச்ச இடம்னா அது இந்த Transformers ரைட்தான். கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் வரிசையில் காத்திருந்துதான் ரைட்ல போனோம். அந்த இரண்டு மணி நேரம் இருக்கே...
சரி நமக்குதான் பார்த்தா மத்த நாட்டுகாரன் எல்லாம் அமைதியா வர்ரான். யாரையும் முந்துவதில்லை, முட்டி மோதி முன்னோக்கிச் செல்ல யாரும் முயல்வதில்லை. கோயிலுக்கு போனா கூட நம்ம ஆளுங்க தியேட்டர்ல டிக்கெட் வாங்க முந்தியடிக்குமாதிரி நடந்துக்குவாங்க. ஆனா இங்கு வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மனிதர்களின் பொறுமை/சகிப்புத் தன்மையப் பார்த்து மெரிசல் ஆயிட்டேன். அப்பரம் ‘க்யூவில் காத்திருக்கதான் பல நூறு டாலர்கள் செலவுசெய்தோமா’ என்கிற முணுமுணுப்பு எங்களைத் தவிர வேற எந்த நாட்டவருக்கும் வந்த மாதிரி தெரியல. ஆச்சர்யம்+அதிசயமா இருந்திச்சு.
வரிசையில் காத்திருந்தபோது எடுத்த சில படங்கள்:
ஒரு வழியா ரைட் ஏற எங்களோட நேரம் வரவும் 3டீ கண்ணாடி ஒன்றைக் கொடுத்தார்கள். அதை போட்டுகிட்டு ரைடுக்கான வாகனத்தில் உட்காரனும். இந்த ரைட் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தின் தீம் அடிப்படையில் என்பதால் வாகனத்தோட வடிவம் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்துல வரும் Autobot வடிவில் இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு 12 பேர்தான் ரைட் போக முடியும். வாகனத்தில் மொத்தம் நாலு ரோக்கள் இருக்கும். ஒவ்வொரு ரோவிலும் மூன்று பேர் விதம் உட்காரனும். செக்யூரிட்டி மெஷர்மெண்ட்ஸ் முடிந்ததும் ரைட் ஆரம்பிக்கும்.
ரைட் ஆரம்பிச்சதும் வாகனம் மெதுமெதுவா முன்னோக்கிபோய் ஒரு டர்ன் எடுத்து அப்படியே மேல கீழ குதிச்சு செம வேகமா போய் சவுண்டு எஃபெக்ட்ஸ்க்கிடையே ரைட் த்ரில் ஏற்படுத்தினாலும் என்னால் பார்க்க முடியாது என்பதால் என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை என்னால் யூகிக்க முடியல. ஆனாலும் சும்மா சொல்லகூடாது எனக்கு ரைட் சமயத்தில் ஒன்னுமே புரியாட்டியும் ரைட் என்சாய் பண்ணினேன்:)
ரைட் முடிச்சு வெளியே வந்ததும் தம்பிகிட்ட கேட்டப்போ ’ரைடில் செல்லும்போது நல்ல/கெட்ட டிரான்ஸ்ஃபார்மர்ஸ்க்கு இடையிலான சண்டையில் நிஜத்தில் நாமும் பங்கேற்ற மாதிரியான உணர்வு ஏற்படுமாம்’ சொன்னான். அடுத்து ’ரைட் போகும் சமயம் பார்த்தா நாலரை நிமிஷம்தான் ஆனா நாம வரிசையில நின்னதோ இரண்டு மணி நேரம். ரைட் முடிச்சதும் வரிசையில் பட்ட எல்லாம் கடுப்பும் போச்சு’ தம்பி சொன்னதை கேட்டதும் எனக்கு ஒரே சந்தோஷம்:)
ஆங்காங்கே பிரபல ஹாலிவுட் கேரக்டர்ஸ் சுத்திட்டு இருப்பாங்க. அவுங்களோட புகைப்படமும் எடுத்துக்கலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த மர்லின் மன்றோ உடன் ஜோடியாக ஒரு புகைப்படம்:)
மதிய சாப்பாட்டை பொறுத்தவரையில் கொஞ்சம் பிரச்சனை. ஃபுட் கோர்ட்ஸ் என்னவோ அனைத்து பகுதியிலும் இருக்குது என்ன எங்களுக்கு ஏத்த விலையும் ஐட்டமும்தான் செட் ஆகல. கடைசியா பர்கர் சாப்பிட்டு அடுத்த ரைட் ஏறலாம் போனா வெயிட்டிங் டைம் 60, 70 நிமிஷம் காத்திருக்கனும்னு போர்ட்ல டிஸ்ப்லே ஆகிகிட்டு இருந்திச்சு.
அதைப் பார்த்ததும் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் ரைட்ல வரிசையில் கடுப்பானதால நாங்க மனதளவில் மீண்டும் சோர்ந்து போயிட்டோம். ஆனாலும் கொடுத்த டாலருக்கு கொஞ்சமாச்சும் பலன் கிடைக்கட்டும்னு கூட்டம் இல்லாத ரைட் எந்த பகுதியில் இருக்குனு ஒவ்வொரு ஜோனா தேடி போனப்போ ஃபார் ஃபார் அவே ஜோனில் Shrek 4-D Adventure ஷோக்கு காத்திருப்பு சமயம் கம்மியா இருந்ததால போனோம்.
நுழைவாயிலில் 4டி கண்ணாடி குடுப்பாங்க போட்டுக்கனும். ஷ்ரெக் படத்தோட தீம்தான் இந்த ஷோ. அந்த படம் பார்க்காததாலும் திரையில் ஓடும் காட்சி புரியாததாலும் சொல்லுறதுக்கு எதுவும் இல்ல. ஆனா ஒரே ஆறுதல் உட்கார்திருக்கும் இருக்கை திடீரென இடது/வலதுபுறம் அசையுது. முன்பின் சாயுது, குலுங்கியது, பத்து நிமிஷம் ஷோ என்பதால் அப்படியே ஒரு குட்டி உறக்கமும் போட்டுவிட்டேன்:)
ஷோ முடிந்ததும் 4டி கண்ணாடி குடுத்து வெளியே வந்து மடகாஸ்க்கர் பகுதிக்கு வந்தா கூட்டம் இல்லாம ஒரு ரைட் இருந்திச்சு. King Julien’s beach party merry-go-round. பாப்புலர் ரைட் எல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் காத்திருக்கனும்னு இருக்கும்போது கூட்டம் இல்லாத ரைட் ஏதாவது ஏறுவோம்னு ஏறியதுதான் இந்த ரைட். சின்ன வயசுல வி.ஜி.பில போன ரைட் நினைவு படுத்தியது. குட்டிப்பசங்களுக்கான ரைட்:)
மணி அப்போ மாலை நான்கு இருக்கும். அதுவரைக்கும் Transformers Ride தவிர சொல்லிக்கும் படி எந்த ரைடும் எங்களை ஈர்க்கவில்லை. பயங்கர டிசப்பாயிண்ட்மெண்ட். எந்த ரைட் ஏற போனாலும் காத்திருப்பு சமயம் பார்த்து கடுப்பானதுதான் மிச்சம். எவ்வளவு நேரம் ஆனால் ஆகட்டும் ஒரு பெஸ்ட் ரைட் ஆச்சும் கடைசியா பார்த்துட்டு போவோம்’னு முடிவு பண்ணி மீண்டும் Sci-Fi City பகுதிக்கு வந்து Battlestar Galactica ஏற முடிவு பண்ணினோம்.
இது டுயல் ரோலர் கோஸ்டர் ரைட். ரெண்டு ரோலர் கோஸ்டர் இருக்கு. ஹ்யூமன் உட்கார்ந்துகிட்டே போற மாதிரி மற்றும் சைலோன் தொங்கிகிட்டே போற மாதிரி. முதலில் நம்முடன் கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் அருகில் இருக்கும் லாக்கரில் வைக்க வேண்டும். ரோலர் கோஸ்டர் மணிக்கு 90 கிமி வேகத்தில் 42.7 மீட்டர் உயரத்தில் பயங்கர வேகத்தில் சுற்றும் என்பதால் நம்முடன் வைத்திருக்கும் பொருட்கள் கீழே விழும் என்பதால் லாக்கர் வசதி செய்திருக்கிறார்கள். முதல் ஒரு மணி நேரத்திற்கு லாக்கர் இலவசம் அதன் பிறகு 4 சிங்கப்பூர் $ செலுத்த வேண்டி இருக்கும்.
லாக்கரில் பொருட்களை வைத்துவிட்டு நாங்கள் ஹ்யூமன் ரோலர் கோஸ்டர் ரைட் ஏற வரிசையில் போய் நின்றோம். வரிசையில் ஹைதிராபாதைச் சேர்ந்த மருத்துவ மாணவிகள் இருந்தார்கள். அவர்களும் முக்கிய ரைட்ஸ் வெயிட்டிங் சமயம் காரணமாக ஏற முடியாததால் டிசப்பாய்ண்ட்மெண்ட் ஆனதாச் சொன்னாங்க. வரிசையில் இருந்த சமயம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.
பேட்டில்ஸ்டார் கலாக்டிகா-ஹ்யூமன் ரோலர் கோஸ்டர் இரண்டு பேர் உக்காரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எல்லாரும் உட்கார்ந்ததும் ரைட் ஆரம்பிச்சதும் ரோலர் கோஸ்டர்க்கென பிரத்தியேகமாக ஒரு கிமி நீளமும் 42.7 உயரமும் கொண்ட தண்டவாளத்தில் மணிக்கு 90 கிமி உட்சபச்ச வேகத்தில் வளைந்து, நெளிந்து, திடீரென மேலேறி, தடாலென்று சரிந்து கீழிறங்கி, மொத்த ரைட் சமயமான ஒன்னரை நிமிடத்திற்குள் உச்சபட்ச த்ரில்லை நாம் அனுபவிப்போம்.
ரைட் முடிந்தும் சில நிமிடங்களுக்கு ரைட் தந்த பரவசத்தில் இருந்து என்னால் வர முடியவில்லை என்றால் பாருங்க அவ்வளவு தூரம் ரோலர் கோஸ்டர் நான் எஞ்சாய் செய்திருக்கேன்.
அடுத்து தொங்கிகிட்டே போகும் சைலோன் ரோலர் கோஸ்டர் ஏற ஆசைதான். அப்பா மற்றும் அம்மா உடன் இருப்பதால் இருக்கும் கொஞ்சம் சமயத்தில வேற ஏதாவது பெஸ்ட் ரைட் எல்லோரும் ஏறுவோம்னு முடிவு செய்தோம். ஒரு மணி நேரத்துக்குள்ளவே பேட்டில்ஸ்டார் கலாக்டிகா-ஹ்யூமன் ரைட் முடிச்சிருந்தோம். மணி அப்போ ஐந்தாகி இருந்தது. நாங்க அடுத்து Ancient Egypt பகுதியில் Revenge of the Mummy ரைட் ஏற வரிசையில் போய் நின்றோம். வெளியே 30 நிமிஷம் காத்திருக்கனும்னு டிஸ்ப்லே போர்ட் காட்டி இருந்தது.
ரைட் ஏற வரிசையில் உள்ளே நுழைந்தால் கண்ணுக்கு யாரும் தென்படல. அதனால இதுதான் சான்ஸ்னு...
அம்மாடியோ எவ்வளவு நீண்ட வரிசை. முக்கால்வாசி வரிசையை ஓடி கடந்திருந்தோம். ஒரு வேளை வரிசை முழுவதும் மனிதர்கள் நிரம்பி இருந்தால் நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு டிரான்ஸ்பார்மர்ஸ் ரைட் எங்களை பாதிச்சிருந்தது. இந்த ரைட் ஓட தீம் மம்மி படம் என்பதால் ரைடுக்கு போகும் வழி நெடுக்க படத்துக்கு தொடர்பான செட்ஸ் இருக்கும்.
ரைட் ஆரம்பிச்சதும் என்ன நடக்கிறது என்பதை தம்பி சொல்லிட்டு வர நான் கற்பனை செய்து வரவுமே த்ரில்லா இருந்தது. மற்றவர்கள் ரைடில் கண்களால் பார்த்து த்ரில்லிங் அடைந்தார்கள் நான் கற்பனைசெய்து பார்த்து ஏற்படும் உணர்வால் திருப்தி அடைந்தேன்:)
அப்பா அம்மா மற்றும் தம்பிக்கு இரண்டு மணி நேரம் மூன்பு இருந்த மன நிலைக்கும் தற்போதைய மன நிலைக்கும் பெரிய மாற்றம். முக்கியமான ரைட்ஸ் ஒவ்வொன்றாக முடிச்சிட்டு வர்றதுதான் காரணம். அடுத்து நாங்கள் சென்ற Jurassic Park Rapids adventure ரைட் தி லாஸ்ட் வேர்ல்ட் பகுதியில் இருக்கு. இந்த ரைடிலும் ஏறணும்னா மொதல்ல நம்முடன் கொண்டு வந்த பொருட்களை லாக்கர்ல வைக்கனுமாம். ரைடின் ஒரு பகுதியில் நம்மீது தண்ணிர் தெறிப்பதால் நனைந்திடுவோம்னும் லாக்கர் ஏற்பாடு.
லாக்கரில் பொருட்களை வைச்சிட்டு ரைட் ஏற வரிசையில் போய் நின்றோம். 50 நிமிஷம் வெயிட்டிங்க் டைம் வெளியே காட்டியது. நாங்கள் வரிசையில் நுழைந்த சில நிமிடத்திற்கு பிறகு ரைட் ஏற வரிசைக்கு புதியவர்களை அனுமதிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஒரு 40 நிமிஷம் வரிசையில் காத்திருந்து ஜுராசிக் பார்க் ராப்பிட் ரைடுக்கான போட்டில் ஏறினோம்.
ஜுராஸிக் பார்க் படம்தான் இந்த பகுதியோட தீம் என்பதால் ரைட் செல்லும் போது வழியில் முதலில் டைனோசரஸ்கள் நம்மை பயமுறுத்தும். சோவென நீரை கொட்டிக்கொண்டிருந்த நீர்வீழ்ச்சியை நாங்கள் நெருங்கியதும் திடீரென நீர் கொட்டுவதை நிறுத்திவிடும். அங்கிருந்து நாங்கள் தொடர்ந்து பயணித்து திடீரென நாற்பதடி உயரத்திற்கு எங்கள் போட் உயர்த்தப்பட்டு யாரும் எதிர்பார்க்காதச் சமயத்தில் அங்கிருந்து பிடிமானத்தை விடிவித்துக்கொண்டு கிழே விழுந்தது. முழங்கால் அளவிற்கு தண்ணிரில் நனைந்திருப்போம்.
ரைட் முடிச்சிட்டு வெளியே வர மணி ஏழாகி இருந்தது. ஒவ்வொரு ரைடும் நிறுத்திகிட்டு வர்ராங்க. மக்கள் நடமாட்டமும் குறைய ஆரம்பிச்சுடுச்சு. நாங்களும் பார்த்த வரைக்கும் போதும்னு திருப்தி அடைஞ்சு வெளியே வந்தோம்.
நாங்கள் சிங்கப்பூர் சென்றச் சமயம் செண்டோசாவிற்குள் மோனோ ரயிலில் வர மட்டும்தான் கட்டணம். தீவில் இருந்து வெளியேற டிக்கட் இல்லாததால் வாட்டர்ஃப்ரெண்ட் ஸ்டேஷனில் செண்டோசா எக்ஸ்பிரஸில் ஏறி விவோசிட்டியில் இறங்கினோம். அங்கிருந்து ஹார்பர்ஃபிரெண்ட் மெட்ரோ ஸ்டேஷன் அமைந்திருக்கும் b2 தளத்திற்கு எஸ்குலேடர்களில் இறங்கி ஹார்பர் ப்ரெண்டில் இருந்து பொங்கோல் வரைச் செல்லும் வடக்கு-கிழக்கு பாதையில் பயணித்து லிட்டில் இந்தியாவில் இறங்கினோம்.
கையில் ரொக்கமாக கொண்டு வந்திருந்த சிங்கப்பூர் டாலர்கள் தீந்து விட்டதால் நாங்கள் ட்ராவல் கார்ட் பயன்படுத்த ஆரம்பிச்சிருந்தோம். முந்தைய நாள் இரவு சாப்பிட்ட கோமள விலாஸ் உணவகத்துக்குச் சென்று ’ட்ராவல் கார்ட் ஸ்வைப் பண்ணும் வசதி இருக்கிறதா’ என கேட்க ’ட்ராவல் கார்ட் இல்லை, பதிலாக குலோபல் ஏடியம் கார்ட் இருந்தால் ஸ்வைப் செஞ்சுக்கலாம்’ என சொல்லவும் ’எங்களிடம் குலோபல் ஏடியம் கார்ட் இல்லை ‘ என சொல்லி நாங்கள் வெளியே வந்து சில அடிகள் சென்றதும் இன்னொரு ஹோட்டல் தென்பட்டது.
‘டிராவல் கார்டு அக்சப்ட் பண்ணுவீங்களா’ கேட்டதற்கு ’ஓ எஸ்’ சொன்னதும் உள்ளே நுழைந்து
மெனு கார்டைப் பார்த்து ஆடர் செய்து சாப்பிட்டோம். இங்கும் சுவை அட்டகாசம்.
சிங்கப்பூரைப் பொறுத்த வரையில் இரவு உணவு ஃபுல் மீல்ஸ் சாப்பிடனும்னா நபருக்கு 8$க்கு மேலதான் செலவாகிறது. நாங்க சாப்பிட்டுவிட்டு லிட்டில் இந்தியா நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து ரயில் ஏறி ஃபெரர் பார்க் நிறுத்தத்தில் இறங்கி ஐந்து நிமிடம் நடந்து ரூமை அடைந்து இரண்டாவது நாளை வெற்றிகரமா முடிச்சோம்.
அடுத்த நாள் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்பதால் அலாரம் வைத்துவிட்டு கட்டிலில் படுத்ததும் தூக்கம் வந்து விட்டது.
*
எதோ என்னால் முடிந்த வரை யுனிவர்சல் ஸ்டுடியோ சுற்றிப் பார்த்து உணர்ந்ததை எழுதி இருக்கேன்.
நீங்கள் சிங்கப்பூர் சுத்திப்பாக்க போவதாக இருந்தால் டோண்ட் மிஸ் யூனிவர்சல் ஸ்டுடியோ. உலகத் தரம் வாய்ந்த டிரான்ஸ்ஃபார்மர்ஸ், பேட்டில்ஸ்டார் கலாக்டிகா, Jurassic Park Rapids adventure மற்றும் Revenge of the Mummy ரைட்ஸ் ஏறவும். உங்களுக்கு நிச்சயம் வித்யாசமான அனுபவத்தை தரும்.
**
சிங்கப்பூரில் மூன்றாம் நாளான 15 ஆகஸ்ட் தினத்தன்று சுற்றிப்பார்த்த செண்டோசா தீவு அனுபவங்கள் அடுத்த பதிவில் தொடரும்.