Wednesday, April 15, 2020

சாமுண்டீஸ்வரி அக்கா
2011 மே மாதம் ரேவதியின் திருமணத்திற்கு சென்று வந்த பிறகு ஒருநாள் ரேவதியிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. ஃபோன் பேசி முடிச்சதுமே என்னவோ ’இதோடு ரேவதி chapter க்ளோஸ்’னு mind ல தோண ஆரம்பிச்சிடுச்சு. ரேவதியோட நட்பு எப்படினா ரயில் ஸ்னேகிதம் மாதிரி. 2010 ஆகஸ்ட்ல ஒரு நிருத்தத்துல ஏறி 2011 மே மாதம் திருமணம் என்கிற அவளது நிருத்தம் வரவும் இறங்கி போன மாதிரி இருந்தது. அதை தாண்டி பெருசா ரேவதியின் பிரிவு என்னைய பாதிக்கல. சரியா 2011 ஆகஸ்ட்ல ....


****
2011 ஆகஸ்ட் 20 ல இருந்து 25க்குள்ள ஏதோ ஒரு நாள்லதான் ஸ்கைப்பில் கண்ணன் என்பவரால் சாமுண்டீஸ்வரி அக்கா அறிமுகம் ஆனாங்க. சரியா அது என்ன நாள்னு மட்டும் க்ளாரிட்டி இல்ல. எங்களது முதல் ஸ்கைப் அறிமுகத்துலயே தெரிஞ்சிடுச்சு சாமுண்டீஸ்வரி அக்காவோட ப்ரொஃபஷன் ம்யூஸிக்னு (என்னடா கொடுமைனு நினைச்சுகிட்டேன்:)))


ரேவதியோடு நான் அதிகம் பேச பழக அவரது பாட்டுதான் காரணமாக இருந்தது. சாமுண்டீஸ்வரி அக்கா அறிமுகமான அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தேன். ‘எக்காரணம் கொண்டும் ரேவதிகிட்ட நடந்துகிட்ட மாதிரி இவுங்க கிட்ட நடந்துக்க கூடாது- (பாட்டு பாடச் சொல்லி கேட்க கூடாது’னு). இப்போ யோசிச்சு பார்த்தா ஏன் அப்படி அன்னைக்கு ஒரு முடிவு எடுத்தேனு தெரியல. எங்களது முதல் அறிமுகத்தில் அவரை ஒரு பாட்டு பாடச்சொல்லி கண்ணன் சார் கேட்ட ஞாபகம். அவரும் பாடினார் - பாடலை. ரொம்ப நாளைக்கு அவுங்க எந்த பாட்டு பாடினாங்கனு ஞாபகம் இருந்தது. இப்போ அது என்ன பாட்டுனு மூளைய கசக்கி பிழிஞ்சு யோசிச்சு பார்த்தாலும் உம்... ஞாபகத்துக்கு வரவே மாட்டேங்கிறது. ஆனா அவர் பாடியது இளையராஜாவின் பாடல் மட்டும் நியாபகம் இருக்கு. அதுதான் முதலும் கடைசியுமாக சாமுண்டீஸ்வரி அக்கா நேரில் பாடி நான் கேட்டது. அதன் பிறகு ஒரு நாளும் எனக்காக பாட்டு பாடச் சொல்லி கேட்டதில்ல. ஆனா ரொம்ப நாளா கன்னத்தில் முத்தம் இட்டால் படத்தில் சின்மையி பாடிய ஒரு தெய்வம் தந்த பூவே பாட்டை அக்கா பாடி நா கேட்கணும்னு ஆசை பட்டேன். கடைசி வரை அந்த ஆசை நிராசையா போச்சு.


****


செப்டம்பர் மாசம் சாமுண்டீஸ்வரி அக்காவை அறிமுக படுத்தி வெச்ச கண்ணன் சாருக்கு பையன் பிறந்தான். அதே நாள் அவரது அம்மாவும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார். நேரில் அவரது வீட்டுக்கு ஒருநாள் சென்று பையனையும் பார்த்திட்டு துக்கம் விசாரிச்சிட்டு வரலாம்னு முடிவு பண்ணி பாண்டிச்சேரிக்கு போகலாம்னு இருந்தேன். இதற்கிடையே நானும் சாமுண்டீஸ்வரி அக்காவும் அறிமுகம் ஆகி முழுசா ஒரு மாசம் கூட முடியல. அதற்குள்ளாகவே என்னவோ அறிமுகம் ஆகி பல வருஷம் பழகிய நெனப்புல ‘பாண்டிச்சேரி வருகிறேன்; அப்படியே உங்களையும் பார்க்க வரலாம்னு இருக்கேன்; ஃபோன் நெம்பர் கொடுக்குறீங்களா’னு ஸ்கைப்ல மேசேஜ்ல கேட்டிருக்கேன். அதற்கு அவர் என்ன பதில்சொன்னாங்கனு தெரியல. உடனே அக்கா என்னைய அவுங்களுக்கு அறிமுகம் படுத்திய கண்ணன் சாருக்கு கால் பண்ணி சொல்லி இருக்கிறார். அப்போது அவர் அக்காவிடம் ‘அவன் சின்ன பையன்; படித்துக் கொண்டிருக்கிறான்; திருமணமும் ஆகவில்லை; நீங்க அவனுக்குள்ள எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாம பார்த்து பத்திரமா நடந்துக்கோங்க மேடம்’னு சொல்லி இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்த தொலை பேசி உரையாடல் எனக்கு பின்னாளில் தெரியவந்த போது ‘ச்சே அவசர பட்டுட்டோமே’னு என் மீது எனக்கு கோவம் ஏற்பட்டது.
அக்டோபர் ஒண்ணு நினைக்குறேன். வீட்டில் இருந்து நானும் தம்பியும் கிளம்பி முதலில் பாண்டிச்சேரியில் இருக்கும் கண்ணன் சார் வீட்டுக்குச் சென்றோம். அன்று இரவு அவரது வீட்டில் தங்கிவிட்டு. ஸ்கைப் மூலம் அறிமுகமான வேறு ஒரு சில நண்பர்களை நேரில் சந்திக்க திருச்சி மற்றும் கோயம்புத்தூர் சென்றிருந்தோம்.


சாமுண்டீஸ்வரி அக்காவும் பிறவியில் இருந்தே பார்வைச் சவாலை சந்திப்பவராக இருந்தாலும் ஓரளவு அவரால் பார்க்க முடியும் என்பதால் சுயமாக அதுவரைக்கும் மானிடரை பார்த்து கம்யூட்டர் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவ்வாறு அவர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது கண்களுக்கு அதிகமாக ஸ்ட்ரெயின் ஆவதால் அதனை தவிர்க்கும் வகையில் ஸ்க்ரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை கற்றுக் கொள்ள கண்ணன் சார் என்னிடம் ஸ்கைப்பில் அக்காவை அறிமுகம் செய்து வைத்தார். 2011 அக்டோபர் 26 இல்ல 27 ஆனு தெரியல. அன்னைக்கு தீபாவளினு மட்டும் தெரியும். ஸ்க்ரீன் ரீடிங் சாஃப்ட்வேரான ஜாஸ் மென்ப்பொருளை அக்காவின் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தார். ஏற்கனவே அவருக்கு கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை நாலேட்ஜ் இருந்ததால் நான் எப்படி மவுஸ் தொடாமல் எல்லா வேலைகளையும் கீபோர்ட் மூலம் செய்வதை பற்றி ஜெஸ்ட் ஒரு டூ த்ரீ டேஸ் சொல்லி கொடுத்திருப்பேன். அவ்வளவுதான். இயல்பாவே அவுங்களோடது கற்பூற புத்தி போல. நான் சொல்லி கொடுத்ததை உடனே பிடிச்சிகிட்டாங்க.
நவம்பர் ஒண்ணு, 2011 ல இருந்து கம்யூட்டரை தாண்டி வெளியே வந்து மத்த விசயங்கலை பேச ஆரம்பிச்சோம். அக்கா அறிமுகம் ஆகும்போதே திருமணம் ஆனவர். பி.ஏ, எம்.ஏ மற்றும் எம்பில் ம்யூசிக்கில் முடித்து யூஜீசீ நெட் தேர்வில் தேர்ச்சியும் பெற்று நிரந்தர வேலை கிடைக்குற வரைக்கும் அந்தச் சமயம் வீட்டில் இருந்துக் கொண்டு ஒரு இணையதளம் வழியாக கர்நாடக சங்கீத வகுப்புக்கள் எடுத்திட்டிருந்தாங்க. நவம்பர் மாதம் ஒரு வாரம் ஓடி இருக்கும். ஆகஸ்ட் மாதம் அவர் அறிமுகம் ஆனதுல இருந்து அது வரைக்கும் அவரை மேடம் மேடம்னுதான் அழைச்சிட்டிருந்தேன். அவர்தான் என்னை அக்கானு அழைக்க சொன்னாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமாதான் இருந்தது. மேடம்னு கூப்பிடறத நிறுத்தி அக்கானு அழைக்க. தினமும் நான் காலேஜுக்கு போய்ட்டு வந்ததுமே ஈவினிங் ஸ்கைப்ல பேசுவோம்; அவரால் ஆன்லைனில் வர முடியாத நாட்களில் ஃபோனோ அல்லது மெயில் மூலமாவோ ஆன்லைக்கு வர முடியாததை எனக்கு தெரிவிச்சிடுவாங்க. எனக்கும் அக்கா ஆன்லைன்ல வரலியே என்கிற ஏமாற்றம் ஏற்படாம இருந்தது. 2011 டிசம்பர் மாத தொடக்கத்துல இருக்கலாம். ஒரு நாள் நாங்க ரெண்டு பேரும் ஸ்கைப்பில் பேசிட்டு இருக்க திடீரென எந்த தருணத்துல ஏன் அப்படி கேட்டாங்கனு தெரியல. ‘இந்த அக்காவ அவ்வளவு பிடிச்சிருக்கா’னு கேட்டதா ஞாபகம். அவர் அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடி எத்தனையோ பேர் ஸ்கைப்ல வருவாங்க; பேசுவாங்க எல்லாமே கம்ப்யூட்டர் சம்பந்த பட்டதாவே இருக்கும். அவர்களோட தேவை அது. நானும் எதையும் எதிர் பார்க்காம பலருக்கு சொல்லி கொடுத்திருக்கேன். அவர்களது தேவை முடிந்ததும் பிறகு பேச மாட்டார்கள். ரேவதியிடம் அப்படி இல்லாமல் பழகினாலும் ஒரு நாளும் ஏனோ ரேவதி மீது அக்கா என்கிற உணர்வு அவ மேல ஏற்படல. இத்தனைக்கு ரேவதியும் சாமுண்டீஸ்வரி அக்காவும் ஒரே வருஷம் பிறந்தவங்கதான். என்னவோ அன்னைக்கு அவுங்க கேட்ட அந்த கேள்வி இன்னும் அவரிடம் நெருக்கமா பழக தைரியம் கொடுத்தது.


***


வீட்டில் எனக்கு உடன் பிறந்த அக்காவோ தங்கச்சியோ கிடையாது. ஒரே ஒரு தம்பிதான். பெரியப்பா பொண்ணு ஒரு அக்கா இருந்தாங்க. சின்ன வயசுலயே என்னைய சென்னையில் சிறப்பு பள்ளியில் படிக்க சேர்த்து விட்டதால கோடைகால விடுமுறையில் ஊருக்கு செல்லும்போது மட்டுமே அவரை பார்ப்பேன். 2006 ஜெனவரி மாசம் அக்காவுக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்சதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா எனக்கும் அக்காவுக்கும் கேப் விழ துவங்கியது. உன்மையச் சொல்லணும்னா அம்மாவுக்கு பிறகு எனக்கு அக்காவதான் ரொம்ப பிடிக்கும். என்னைய சரியா புரிஞ்சுகிட்ட ஜீவனு சொல்லலாம். அக்காவோட மேரேஜ் பிறகு ஃபோன்ல பேசுறதும் கூட குறைஞ்சு போச்சு. வருஷத்துல ஒண்ணோ ரெண்டோ தடவை வீட்டுக்கு அக்கா வந்தாலும் ஒருநாள் மட்டுமே தங்கிட்டு போய்விடுவாங்க. ஒவ்வொரு தடவையும் அக்கா போய்ட்டு வர்ரேனு சொல்லும்போது ‘இன்னும் கொஞ்ச நாட்கள் வீட்டுல அக்கா இருந்தா நல்லா இருக்குமே’னு மனசு ஏங்கும். அந்த அளவு எனக்கு அக்கானா பாசம். 2010 ஆகஸ்ட்ல எனக்கு ஸ்கைப்ல ரேவதி அறிமுகம் ஆனாலும் என்னோட ஃபீலிங்ஸ்கு இம்பார்டெண்ட் கொடுக்குற பர்சன் இல்லைனு 3 மாசத்துலயே புரிஞ்சதால பெரிதாக ரேவதியோடு அட்டாச் ஆகாம இருந்திட்டேன். அது என்னவோ நான் மானசீகமாக தேடிட்டிருந்த ஜீவன் சாமுண்டீஸ்வரி அக்காதான் அந்த நொடி எனக்கு தோண ஆரம்பிச்சதுல இருந்து ஒரு தம்பியாக அக்காவிடம் என்ன எதிர்பார்க்கணுமோ தானாக மனசு அதை அவரிடம் எதிர் பார்க்க ஆரம்பிச்சிடுச்சு.


2011 டிசம்பர் இருவதாம் தேதிக்கு மேல பாண்டிச்சேரியில தானே புயல் தாண்டவம் ஆடத் துவங்கியது. அன்னைக்கு நான் கல்லூரியில் இருந்தேன். திருப்பதியிலும் எந்த நொடியும் மழை பெய்ய தயாராக வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தது. அப்போது அக்காவிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. ’இங்க பவர் கட் ஆகிடுச்சு. காத்து பயங்கரமா வீசுது. ஃபோன்ல சார்ஜிங் குறைஞ்சுகிட்டே வருது. இதோடு எப்போ உன் கிட்ட பேசுவேனு தெரியல. இதை உன் கிட்டசொல்லிடணும்’னு சொல்ல கால் பண்ணியதா சொன்னாங்க. ம்ம்ம் சரி ’நீங்க பத்திரமா இருந்துக்கோங்க அக்கா’னு 2011 ஆண்டில் கடைசியாக பேசியது...


தானே புயல் கரையை கடந்து பாண்டிச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்படுத்தியது.


எங்கள் உறவிலும் 2012 துவக்கத்துல இருந்து இருவருக்கும் இடையே விரிசல் விழத் துவங்கியது....


---


தொடரும்.


Saturday, April 11, 2020

ரேவதி


நான் சென்னையில் படித்த சிறப்பு பள்ளியில் இசையைத் தவிர வேற எந்த கோ-கரிகுல ஆக்டிவிட்டிசும் எங்களுக்குத் தேவை இல்லைனு நினைத்ததன் விளைவால் வேறு எந்த துறையிலும் எங்களை என்கரேஜ் பண்ணல. எனக்கு சிறுவயதில் இருந்தே கணினி மேல் ஒரு ஈர்ப்பு/காதல் எதோ ஒண்ணு. பள்ளியில் கம்ப்யூட்டர் இருந்தும் சொல்லி தந்தது கிடையாது.

2009 மார்ச் மாதம் +2  எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்ததுமே அப்பாவிடம் ‘எனக்கு கம்யூட்டர் வேணும்ப்பா’ன்னு கேட்டேன். அனேகமா அப்பா அந்த ஒரு விஷயத்துலதான் ஏன், எதுக்கு எல்லாம் கேக்காம வாங்கி கொடுத்தார். நான் கம்ப்யூட்டர் வாங்கிய தினம் ஜூன்7 2009. வாழ்வில் மிக சந்தோஷமாக உணர்ந்த நாட்களில் அதுவும் ஒன்று. புதிய கம்ப்யூட்டர் என்பதால் அதில் இருந்து வரும் ஒரு வித வாசனை, கம்யூட்டர் ஆன் செஞ்சதும் கீக் என வரும் சப்தம் எல்லாம் மிகவும் ரசித்தேன். கம்ப்யூட்டரில் அப்போது விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ரேடிங் ஸிஸ்டம் நிறுவி இருந்தார்கள். எடுத்ததும் நான் கம்ப்யூட்டரில் எனக்கு தேவையான மென்பொருள் (jaws) நிறுவினேன்.

ஜாஸ் என்பது ஸ்கிரீன் ரீடர் வகை மென்பொருளை சேர்ந்தது. அதாவது பார்வைச் சவாலை சந்திப்பவர்களுக்கு திரையில் தோன்றும் எழுத்துக்களை படித்துக் காட்டுவதே இந்த ஜாஸ் மென்பொருளோட வேலை. ஜாஸ் மென்பொருள் நிறுவிய எந்த கம்ப்யூட்டரிலும் கீபோர்டில் எந்த கீயையும் அழுத்தினால் அதற்கான விடை கம்ப்யூட்டரில் இணைத்திருக்கும் ஸ்பீக்கர்ஸ் வழியே கேட்கலாம். பார்வைச் சவாலை சந்திக்கும்  யாரும் mouse பயன்படுத்துவதே கிடையாது. முழுவதும் கீபோர்ட் மீதுதான் சார்ந்திருக்கிறோம். இதனால் எதுவும் பெரிதாக இழப்பு கிடையாது.
நிறைய ஷாட்கட் கீஸ் யூஸ் செய்வோம். உதாரணத்திற்கு கட், காபி, பேஸ்ட் எக்செட்ரா...

நாங்கள்  யாருடைய உதவியுமின்றி சுயமாக கணினியை இயக்கிக் கொள்ள முடியும். அதாவது: எல்லா விதமான டாக்குமெண்ட்ஸ் படிப்பது, பாட்டுக் கேட்பது, படம் பார்ப்பது, டைப் பண்ணுவது, இணையத்தில் தகவல்களைப் பெறுவது, மின்னஞ்சல் படிப்பது, அனுப்புவது, செய்தித்தாள் படிப்பது, ஃபேஸ்புக்/வாட்ஸாப்பில் எதிர் பாலினத்தவரிடம் கடலை போடுவது:))
கிட்டத்தட்ட 95% வேலைகளை செய்ய முடியும்!

***

வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கிய பிறகு ஒரு மாசத்துல பிஏ முதலாம் ஆண்டு சேர்ந்திருந்தேன். எப்படியோ கொஞ்ச நாள்லயே அப்பாவ கன்வின்ஸ் பண்ண வெச்சு ப்ராட்பெண்ட் கனெக்‌ஷனும் வாங்கிட்டேன். காலேஜ் வாழ்க்கை எல்லாம் காலை 9 மணியில இருந்து மாலை 4 மணி வரைதான். அடுத்து இருக்கும் ஒரு உலகம் இணைய உலகம்.

ஆரம்பத்துல அப்போ எல்லாம் ஜஸ்ட் மெயில்ஸ் பார்க்குறதும் கம்ப்யூட்டர்ல கத்துக்க பல விஷயங்கள் இருந்ததால பெருசா ஒண்ணும் தெரியல. மெதுமெதுவா ஸ்கூல் நண்பர்கள் அப்புறம் அவர்களது நண்பர்கள் அப்படினு என்னோட ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஸ்கைப்ல ஒரு வட்டம் உருவாகி கொண்டு இருந்தது. கம்ப்யூட்டர்ல யாருக்காவது சந்தேகம் வந்தால் ஸ்கைப்ல க்ளியர் செய்து வைக்குறதால- அதுனாலயே நண்பர்களது மத்தியில் நான் கொஞ்சம் பிரபலம் ஆயிட்டேன்.

2010 ஆகஸ்ட்ல ரேவதினு ஒருத்தவுங்கள பிரகாஷ்னு ஒரு நண்பர்  ஸ்கைப்பில் அறிமுகம் படுத்தி வெச்சார். அவுங்க B com முடிச்சிட்டு medical transcription வேலைய work  from home பண்ணிட்டு இருந்தாங்க. ரேவதி அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடி நிறைய டேலண்டட் பர்சன்ஸ் பார்த்திருக்கேன். பட் visually challenged பர்சன்ஸ்ல நா  பார்த்ததுலையே talent ஆன பொண்ணுனா அது ரேவதிதான். ஸ்கைப்ல பேசிய மொத நாளே அவர் தெலுகு ப்ராமின்  தெரிந்ததுல இருந்து எந்த  தயக்கமும்; பயமும் இல்லாம அக்கா அக்கானு பேச தைரியம் வந்திடுச்சு. (என்னை விடவும் நான்கு வயசு பெரியவுங்க என்பதால).

ரேவதி என் கிட்ட பெருசா கம்ப்யூட்டர் பத்தின சந்தேகம் கேட்டதா ஞாபகம் இல்ல. நாங்க  அதிக நேரம் பேச ஒரு விஷயம் ரெண்டு பேருக்கும் இடையே இருந்ததுனா அது  பாட்டுதான்.

ரேவதி நல்லா  பாடுவா. ம்யூஸிக் ஃபீல்ட்ல  அவளுக்கு ஆர்வம் இருந்தது. கர்நாடக சங்கீதம்  வீட்டுக்கு ஒரு  குரு  வரவெச்சு கத்துகிட்டும் இருந்தா.

ரேவதி சென்னையில் பிறந்து வளர்ந்த  ஐயர் வீட்டு பொண்ணா இருந்தாலும் அவளது  தாய் மொழி தெலுங்கு என்பதால
தெலுகு பாட்டும் பாடுவா. ‘இந்த படத்துல இந்த பாட்டு நல்லா இருக்கு அக்கா’னு சொன்னா போதும். உடனே பாடி காட்டிடுவா. இதுக்கு நடுவுல  அவளோட ஆசைகள்; கனவுகள் எல்லாம்  சொல்லுவா. காலேஜ் டேஸ்ல இருந்து எப்படி எல்லாம்  பாய் ஃப்ரென்ட்ஸ்  ப்ரொபோஸ் பண்ண ட்ரை பண்ணியத; அவ யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா செய்த சேட்டைகளை எல்லாம் சொல்லுவா. அந்த சமயம்தான் வீட்டுல  அவளுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சாங்க. பெண் பார்க்க பையன் வீட்டுகாரங்க வரும்போது என்ன என்ன கூத்து நடந்தது எல்லாம் ஸ்கைப்ல கூப்பிட்டு
சொல்லுவா. நாங்க பேச ஆரம்பிச்ச 2010 சமயத்துல ரேவதி ஏஸ்பியை க்ளர்க்  எக்ஸாம் எழுதி இண்டர்வ்யூக்கு சென்று ஃபைனல் ரிசல்ட்ஸ்காக காத்திருந்தா. ஒரு நாள் results  உம் வந்தது.

’நா எக்ஸாம் பாஸ் பண்ணிட்டேன்’னு ரேவதி கால் பண்ணி சொல்லுவானு காத்திருக்க அது எதுவும் நடக்கல. exam pass பண்ணிட்டானு  அவளோட  friend ஒருத்தன் மூலம் தெரிய வந்திடுச்சு. ரெண்டு மூணு நாள் கழிச்சு ரேவதி ஸ்கைப்ல அழைச்சிருந்தா. ’ஸ்டேட் பேங்க்ல ரேவதிக்கு ஜாப் கிடைச்சிடுச்சுனு    தெரிஞ்சதுமே சந்தோஷமா இருந்தாலும் எனக்கு போன் பண்ணி சொல்லலியேனு வருத்தமாவும் ; கோவமாவும் இருந்தது. அதை எதுவும் காட்டிக்காம
‘என்ன அக்கா  எக்சாம் பாஸ் ஆகிட்டீங்க; ஒரு வார்த்த போன் பண்ணி சொல்லி இருக்க கூடாதா’னு கேட்டுட்டேன்.
‘இப்படியே  எல்லாரும் கேட்டுட்டே இருந்தா  யாருக்குதான் நா  பதில் சொல்லுறது’னு அவரிடம் இருந்து பதில் வந்தது.
அது மாதிரி  பதில் அவளிடம் இருந்து வரும்னு நா கொஞ்சம் கூட எதிர் பார்க்கல. ஃபஸ்ட் டைம் ரேவதி மேல கோவம் வந்திடுச்சு. ‘நமக்கு இம்பார்டன்ஸ் தரல’னு புரிய ஆரம்பிச்சதுமே
இனி  ரேவதிகிட்ட  அட்டாச்மெண்ட் இருக்க கூடாதுனு  முடிவு பண்ணிட்டேன்.

அடுத்த  கொஞ்ச நாள்லயே டிசம்பர் மாத கடைசியில வீட்டு பக்கத்துல  இருக்கும் ஒரு எஸ்பிஐ கிளையில்  போஸ்டிங் ஆர்டர் கிடைச்சு  வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா. அதன் பிறகு நாங்க பேசுறது கம்மியாகிடுச்சு. 2011 ஸ்டார்டிங்ல ஒண்ணு ரெண்டு தடவை ஸ்கைப்ல பேசிய  ஞாபகம். அல்மோஸ்ட்   அப்போ  அவளுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. ஏப்ரல்
மாசம்  ஒரு நாள் போன்ல அழைச்சு வீட்டு அட்ரஸ் கொடு இன்விடேஷன் அனுப்புறேன்னு சொல்லி இருந்தா. அவ போன் பண்ணி கூப்பிட்டது கூட எனக்கு பிடிக்கல. கால் பண்ணி அட்ரஸ் கேட்டதால சொல்லிட்டேன். ‘மேரேஜ் திருமலையிலதான் நடக்குது; நீ கண்டிப்பா  வரணும்னு சொல்லி இருந்தா.

‘போகவே கூடாது நினைச்சுகிட்டு இருந்தேன். எனக்கும் ரேவதிக்கும் காமன் ஃப்ரென்ட்ஸ்    ஒரு சிலர் இருந்தாங்க.
அதுல முக்கியமானவர்னா  அது வினோத் பென்ஜமீன் அண்ணாதான். அவருக்கு தெரியும்  எந்த அளவு ரேவதினா எனக்கு பிடிக்கும்னு.
2011ஆம் வருடம் மே மாதம். தேதி சரியா  ஞாபகம் இல்ல.  ரேவதியோட மேரேஜ் நாளும் வந்திடுச்சு.
வினோத் பென்ஜமீன் அண்ணாவ அழைச்சு என்னணா சொல்லுறே  ரேவதி மேரேஜுக்கு போகவா  வேண்டாமானு கேட்டிருந்தேன்.
‘உன்னைய  கூப்பிட்டு இருக்கா; அதுவும்  பக்கத்துலயே இருக்க போய்ட்டு வா’னு சொன்னார்.

எனக்கு மேரேஜுக்கு போறதுல விருப்பம் இல்லாட்டியும் அவர் சொன்னதுல ஞாயம் இருந்ததால கிளம்பி போனேன்.

டைம் அப்போ ஈவினிங்  ஏழு மணி இருக்கும். அன்னைக்கு நைட்  11 மணிக்கு மேலதான் திருமலையில் ஒரு மண்டபத்தில் முகூர்த்தம்.

அவசர அவசரமா    ஒரு கிஃப்ட்  வாங்கிகிட்டு தம்பிய அழைச்சுகிட்டு மலைக்கு போக பஸ் பிடிக்க ஓடினோம்.

ரேவதி வீட்டுல யாரும் எனக்கு பரிட்சையம் கிடையாது; அவர்களுக்கும் என்னைய தெரியாது. மண்டபத்துக்கு போனதுமே யாரிடமும் பேச்சு குடுக்க வேண்டிய அவசியம் இல்லாததுனால
திருமணம் நடக்கும் ஹாலில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகிட்டோம். நெருங்கிய  உறவினர்கள் தவிர  அவளது க்லோஸ் ஃப்ரென்ட்ஸ் மட்டும் கூப்பிட்டிருந்தா. சின்ன மண்டபம்தான்.

கூட்டம் இல்ல. ‘நீங்கதான் மஹேஷா’னு அவளோட  ஏதோ ஒர் தங்கச்சி வந்து பேசுனா. அக்கா சொல்லி இருந்தா  நீங்க வருவீங்கனு. அப்படி அவள் பேசியதும்தான் எனக்கு தைரியமே வந்தது. அதன் பிறகு அவரது அப்பா  அம்மாவிடம் அறிமுகப்படுத்தி வெச்சா.

சினிமாவுல ஹீரோ லவ் பண்ணிய பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது ஹீரோ எப்படி மனசுக்குள்ள ஃபீல் பண்ணுவானோ அது மாதிரி எனக்கும் உள்ளுக்குள்ள ஒரே ஃபீலிங்ஸ். அவ்வளவு சீக்கிரமா ரேவதிக்கு மேரேஜ் ஆகுறத நினைச்சு.

எக்சாம்ஸ்  ரிசல்ட்ஸ்  விஷயத்துல இருந்து அவ மேல எனக்கு கோவமா இருந்தாலும் அவள பத்தின நினைப்பு  தடுக்க முடியல. மேரேஜ் முடிஞ்சதும் கொண்டு போன கிஃப்ட் கொடுத்து போட்டோ எடுத்துகிட்டு  ரெண்டு வார்த்த பேசிட்டு  வீடு வந்து சேர்ந்தோம்.

ஜூன்ஆ இல்ல ஜூலை மாசம்ஆனு தெரியல. ஒரு நாள் ரேவதி ஃபோன்ல கால் பண்ணி கிஃப்ட் ரொம்ப நல்லா இருந்தது;
வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சு இருந்ததுனு சொல்லி இருந்தா.

அதுக்கு மேல பேச  வேற எதுவும் இல்லாததுனால ஃபோன் வெச்சாச்சு.

அவ்வளவுதான் இனி ரேவதி  chapter close னு mind க்கு நல்லாவே உரைச்சிடுச்சு.

அடுத்த ஒரு மாசம் சரியா  2011 ஆகஸ்ட்ல ....

***

Friday, April 10, 2020

நானும், சாரதா மேடமும், நவீனும் - முனிரத்தினம் சாரும்.


ஏப்ரல் 10,  2015... சரியா இன்றைய தினத்துல இருந்து அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி...
***
அன்னைக்குதான்  PG லாஸ்ட் working day  எங்களுக்கு. அதன் பிறகு  ஒரு வாரம் என்னவோ  ஸ்டடீ ஹாலிடேஸ். பிறகு  final semester. so அன்னைக்கு class லதான் கடைசியா எல்லாரும் பேசிகிட்டது. சிலர் போட்டோ எடுத்துக்குறதுல பிசியா இருந்தாங்க; ஒரு சிலர் ஸ்லாம் புக் கொடுத்து தங்களது கருத்தை எழுதச் சொல்லிக் கொண்டிருந்தாங்க. நா  மட்டும் எதுவுமே பண்ணல. அங்கு நடக்குரத மட்டும் observe பண்ணிட்டு இருந்தேன். அன்னைக்கு  சாரதா மேடம்தான் கடைசி க்ளாஸ்  எடுத்தாங்க. க்ளாஸ்  முடிச்சதுமே பசங்க எல்லாரும் மேடமோடு நின்னு  போட்டோ எடுத்துக்கிட்டோம். கடைசியா மேடம் க்ளாச விட்டு வெளியே வருவதற்கு சில நொடிகளுக்கு முன்புதான் நான்  வெளியே வந்து நின்னுட்டிருந்தேன்.
மேடம்  என்னிடம் வந்து  பேசுனாங்க. என்ன பேசுனாங்கனு எல்லாம் ஞாபகம் இல்ல. ஆனா கன்னத்த பிடிச்சுகிட்டு ‘டைம் இருக்கும்போது வீட்டுக்கு வா கண்ணா’னு சொன்னது மட்டும் ஞாபகம் இருக்கு. அது போதாதா  நமக்கு. மனதுக்கு பிடித்த ஒருத்தர் அழைப்பு விட்ட பிறகு அதுக்கு மேல என்ன வேணும். ’சரிங்க மேடம்’னு சொன்னேன்.
department ல இருக்கும்  மத்த  professor களிடம் இருக்கும் நெருக்கம் மாணவர்களுக்கு சாரதா மேடம் கிட்ட இருக்காது. அவுங்கள பசங்க  lady tigerனுதான் சொல்லுவாங்க.
அந்த அளவுக்கு அவுங்கனா எல்லாருக்கும் பயம்.  (எனக்கும்தான்). ஆனால் ஏதோ ஒரு  ஒரு உணர்வு பயத்தையும் தாண்டி
அவரை எனக்கு பிடிக்கும். மே பி  அவுங்க தமிழ் என்பதால என்னவோ.

***

பீ.ஜி ல எனக்கு இருந்த ஒரு ஃப்ரெண்டுனா  அது நவீன். கோயம்புத்தூரைச் சேர்ந்தவன். பெருமாளின்மீது கொண்ட ஈடுபாட்டினால் திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா யூனிவர்சிட்டியிலதான் படிக்கணும்னு எம்.ஏ சீட் அவனுக்கு பாண்டிச்சேரி யூனிவர்சிடியில  கிடைச்சாலும் வேணாம்னு திருப்பதிக்கு வந்தான். எங்கள் வகுப்பில்  இருக்கும் 50 மானவர்களில்  எனக்கு மட்டும்தான் தமிழ் தெரியும். நவீனுக்கு தெலுங்கு தெரியாது.  அதனால் அதிக நேரம் நவீனுடன் பேசுவதால் நானும் அவனும் நண்பர்களானோம்.
நவீனுடன்  பேசும்போது எங்கள் இருவருக்கும் இடையே  சாரதா மேடம் பத்தி பேச்சு அடிபடும்போதெல்லாம் அவரை அத்தைனு  சொல்லுறது  பழக்கமா போச்சு. வீட்டுல கூட மேடம் பத்தின பேச்சு அடி பட்டால் அத்தைனுதான் சொல்லுவேன். அது என்னவோ அப்படி அவுங்கள அழைக்கிறதுல அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. (அவுங்களுக்கு ரெண்டு பொண்ணு இருக்கும் ஒரே காரணம் என்னவோ தெரியல:)))

சாரதா மேடம் அன்னைக்கு பேசிட்டு போன  போது டைம்  மதியம் பன்னிரெண்டரை இருக்கும். அன்று மதியம்  இரண்டரைக்கு என்னவோ திருப்பதியில இருந்து கோயம்புத்தூருக்கு ட்ரைன்
இருப்பதால நவீன் வீட்டுக்கு போறதால அந்த ட்ரைன் பிடிக்க அவன் ஹாஸ்டலுக்கு போய்ட்டான்.
வகுப்பில் நா மட்டும் அப்பாவுக்காக  காத்திருந்தேன். அப்போதான் அது நடந்தது.
’இங்க குமார்னு யாராவது உங்களுக்கு தெரியுமா’னு ஒருத்தர் என்னிடம் வந்து கேட்டார்.
’ஓ  தெரியுமே. அவன் என்னோட ஜூனியர்’னு சொன்னேன்.
‘அவன பார்க்க முடியுமா’னு அவர் கேட்டார்.
‘இல்ல  அவன் ஊருக்கு போய் இருக்கான்’னு சொன்னேன்.
‘ அவனோட ஃபோன் நெம்பர் கிடைக்குமா’னு அவர் கேட்டார்.
‘என் கிட்ட இல்ல’னு பதில் சொன்னேன்.
சில நொடிகள் அவர்  அமைதியா இருந்தார்.
‘என்ன விஷயமா நீங்க அவன பார்க்கணும்’னு  நானே பேச்சை மீண்டும் ஆரம்பிச்சேன்.
‘அவன் ஏதோ  சாஃப்ட்வேர வெச்சு லேப்டாப் யூஸ் பண்ணுறானாமே. அத பத்தி தெரிஞ்சுக்கணும்’னு சொன்னார். (குமாரும் பார்வைச் சவாலைச் சந்திக்கும் மாணவன்). உடனே எனக்குள்ள இருக்கும் சுயநலவாதி முழிச்சுகிட்டான்.
’ஐய்யோ  அவனுக்கு எதுவும் தெரியாதுங்க. சும்மா லேப்டாப்  எடுத்துகிட்டு  சீன் போட்டுகிட்டு இருப்பான். அத பத்தி எனக்கும் தெரியும்.
உங்களுக்கு  என்ன தெரிஞ்சுக்கணும்’னு  சொல்லுங்க’னு சொன்னேன். ’ரிடையர்ட் ப்ரொஃபொசர் ஒருத்தர் ஏதோ  அந்த பையன் கிட்ட கேட்கணுமாம்’னு சொன்னார். சரி என்னோட ஃபோன் நெம்பர் கொடுக்குறேன். ப்ரொஃபொசரை என்னிடம் பேச சொல்லுங்கனு சொல்லி என்னோட மொபைல்  நம்பர் வந்தவரிடம் கொடுத்தேன். அவர் சென்ற  பிறகு கொஞ்ச நேரத்துல அப்பா என்னைய வீட்டுக்கு அழைச்சிட்டு போக  வந்திருந்தார்.
அன்று மதியமே  முதன் முறையா முனிரத்தினம் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்திருந்தது. தன்னை பற்றி முதலில் சொல்லிவிட்டு என்னை பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.
பிறவியிலயே பார்வை திறன் குறைபாட்டால் பிறந்த முனிரத்தினம் சார் தெலுங்கில்  முனைவர் பட்டம் பெற்று ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைகழகத்தில் பணியில் சேர்ந்து 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2012இல் என்னவோ  அமேரிக்காவில் இருக்கும் அவரது அண்ணன் மகன் இவருக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். என்னோட ஜூனியர் கல்லூரியில் லேப்டாப்  பயன்படுத்துறான் என்பதை அவரிடம் யாரோ சொல்லுற வரைக்கும் பார்வையற்றவர்கள் கணினிபயன்படுத்துவார்கள் என்கிற விஷயம் அவருக்கு தெரியாதாம். சரியா என்னோட கடைசி கல்லூரி நாளான அன்னைக்குதான் குமாரோட ஃபோன் நெம்பர் வாங்கிட்டு வர சொல்லி
கல்லூரிக்கு  முனிரத்தினம் சார் ஒருத்தரை அனுப்பி இருந்திருக்கார். ‘தம்பி நா கம்ப்யூட்டர் கத்துக்கணும்’னு  எங்களது முதல் தொலைபேசி உரையாடலில் முனிரத்தினம் சார்  சொன்னபோது
’ஒண்ணும் பிரச்சன இல்ல சார் கத்துக்கலாம்’னு சொல்லி இருந்தேன். பார்வையற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுப்பதில் எனக்கு ஓரளவு  அந்தச் சமயம் அனுபவம் இருந்ததால் கண்டிப்பா சொல்லி தரேன் சார்னு சொல்லி இருந்தேன். சரி என்னோட செமஸ்டர் எக்ஸாம்ஸ்  முடியட்டும் நாம மேற்கொண்டு பேசிக்கலாம்னு சார் சொல்லி இருந்தார்.

***

2013 ஆம் வருடம்  மே மாதம்...
 அதுவரைக்கும் என்னோட மன நிலை விளையாட்டுத் தனமா  வீட்டுல எத பத்தியும் கண்டுக்காம எனக்கு பிடிச்ச மாதிரி இருந்திட்டேன். அந்த வருடம்தான் தம்பி +2 எக்ஸாம் எழுதி  ரிசல்ட்ஸ்காக காத்திருந்தான். தம்பியோட  எக்சாம்ஸ்  ரிசல்ட்ஸ்  வந்ததுல இருந்து என்னோட மன நிலை மாற ஆரம்பிச்சுடுச்சு. அவனோட மார்க்ஸ்  பார்த்திட்டு  மிகப்பெரிய disappointment எனக்கு. வீட்டுல  அப்பா  தம்பிக்கு ஃபீஸ் கட்டுறதோட சரி. அம்மா  சமைச்சு கேரியர் கொடுக்குறதோட சரி. பர்சனலா  அவன கேர் எடுத்து எப்படி படிக்கிற; என்ன படிக்கிற;
அடுத்து என்ன பண்ண போற; யாரும் அவன கண்டுக்கவும்; கேட்கவும்; யாரும் இல்ல.
பத்தாவதில்  அவன்  மேக்ஸ்  சப்ஜட்டில் 100  மதிப்பெண்கள் எடுத்ததுமே. +2  முடிச்சதுமே எப்படியாவது ஏதோ ஒரு ஐஐடீயில அவன் சேர்ந்து படிக்கணும்னு ஆசை பட்டேன். அவனோட +2 மார்க்ஸ்  பார்த்ததுமே 'அவனோட எதிர் காலம் என்ன ஆகுமோ'னு எனக்கு பயம் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு.
‘திருப்பதியில மட்டும் அவன் இஞ்சினீரிங் சேர்ந்தான்னா வேலை கிடைக்கிறது கஷ்டம்;  அவனது எதிர்காலம் கேள்விகுறியாகிடும்; At any cost அவன் சென்னையிலதான் படிக்கணும். அப்போதான் ஏதோ ஒரு கம்பனியில  on campus placement  மூலம் நுழைய முடியும்’னு அப்பா கிட்ட சொன்னேன். அவரும் சரினு சொல்லிட்டார். ஆரம்பத்துல சென்னைக்கு போக ஒத்துகிட்ட தம்பி எந்த காலேஜ் முடிவு ஆனதுமே எங்க கிட்ட சொல்லாட்டியும்; அவனோட ஃப்ரென்ட்ஸ் கிட்ட பேசி இருக்கான். அவனுக்கு சென்னைக்கு போக பிடிக்கலைனு.
அதை அவனோட  ஃப்ரெண்ட் ஒருத்தன் மூலம் எனக்கு விஷயம் வந்து சேர்ந்தது. ‘அண்ணா  தமிழ் நாடு இஞ்ஜினீரிங் சிலபஸ்  ரொம்ப டஃப்பாமே அவன் படிக்க கஷ்ட படுவான்’னு  அவனது ஃப்ரெண்ட் என்னிடம் சொல்ல 'நா  எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல. அவனோட எதிர் காலம் நல்லா இருக்கணும்னா
கண்டிப்பா  சென்னைலதான் படிக்கணும்’னு சொல்லி அதோடு அந்த  கான்வர்சேஷனுக்கு ஃபுல்ஸ்டாப் வெச்சுட்டேன்.
2013  ஜூலை மாதம் தம்பியை சென்னையில் ஒரு  தனியார் கல்லூரியில்  சேர்த்தோம். கல்லூரி டொனேஷன் மட்டுமே மூணரை லட்சம். தவிர முதலாம் ஆண்டுக்கான கல்லூரி டியூஷன் ஃபீஸ் மற்றும் ஹாஸ்டல் மெஸ்ஃபீஸ் சேர்த்து கிட்டதட்ட ஒன்னரை லட்சம் கட்டி இருந்தோம்.
கல்லூரி துவங்கிய மூன்றே நாட்களில் தம்பி ஃபோன் செய்திருந்தான். ‘எனக்கு இந்த கல்லூரி பிடிக்கல. நா வீட்டுக்கு வந்திடுறேன்’னு அழத்துவங்கிட்டான். எனக்கு அந்த சமயம் என்ன பண்ணுறதுனு தெரியல. தம்பி சொன்ன விஷயத்தை வீட்டுல சொன்னால் அவ்வளவுதான். அப்பா அம்மாவை பொருத்தவரை  பணம் கட்டியாச்சு. அவன் படிக்கணும். அந்த நிலமையில் ஒரு பக்கம் தம்பிய சமாதான படுத்திகிட்டு; படிப்பில கவனம் செலுத்த வெச்சு; இன்னொரு பக்கம் என்னோட படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தேன்.
ஏப்ரல் 10 2015 கல்லூரியில் கடைசி நாளும் வந்திட; நவீனும் அவனது ஊருக்கு கிளம்ப;
செமஸ்டர்  எக்ஸாம்ஸ் முடிந்ததும் அடுத்து என்ன  அப்படீங்கிறத யோசிக்கிறதுக்குள்ள முனிரத்தினம் சார்   அறிமுகம் ஆகி இருந்தார்.....
***

Friday, April 03, 2020

இட்டார்ஸியில் இருந்து ஆக்ரா வரை (வடஇந்திய பயணத்தொடர் பகுதி - 5)ஒரு பத்து நிமிஷம் இட்டார்சி ஜங்ஷன்ல ட்ரைன் நின்னிருக்கும். ஏழேகாலுக்கு என்னவோ போப்பால் நோக்கி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அடுத்த  ஒரு பத்து பதினைந்து நிமிசத்துக்குள்ள நீண்ட பாலத்தின்  வழியே ஒரு ஆற்றை கடந்து பயணிச்சோம். எப்படியும் ஆற்றின் அகலம்  இரண்டு முதல் 3  கிமீ இருக்கும். கூகுள் மேப்பில் பார்த்ததில் நர்மதை ஆறுன்னு  காட்டியது. ஆந்திராவில் கோதாவரி கிருஷ்ணா போல மத்திய பிரதேஷ் மாநிலத்தில் பாயும் பெரிய ஆறுனு நினைச்சுகிட்டேன். குஜராத் பயணத்தில் ஸ்டாச்சு ஆப் யூனிடி பார்க்க  திட்டமிடும் சமயத்தில் இந்த நர்மதை ஆற்றின் பெயர்  அடி பட்டது. ’ஓ மத்திய பிரதேஷில் இருந்து குஜராத் வரை இந்த ஆறு பாயுது போல’னு நினைச்சுகிட்டேன்.
இம்மாதம் ஒன்பதாம் தேதி  வியாழக்கிழமை  இரவு குஜராத் பயணம் ஆரம்பிச்சு ஏப்ரல் 11ஆம் தேதி சனிக்கிழமை வடோதரா சென்று  அங்கிருந்து  சுமார் 90 கிமீ பயணம் செய்து  நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் 182 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிகவும் உயரமான சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையான ஸ்டாச்சு ஆப் யூனிடியை  பார்க்க இருந்தோம். கொரொனாவினால் குஜராத்  பயணம் மட்டும் இல்லாம இந்த வருஷம் எங்கும் செல்ல வேணாம்னு முடிவு பண்ணியாச்சு.
இந்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையானது சராசரி மனிதனின் உயரத்தை விடவும் 100  மடங்கு உயரமாம். அதோடு நியூயார்க் நகரில் இருக்கும் ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டியை விட இரு மடங்கு உயரமாம். குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்த சமயத்தில் ஸ்டாச்சு ஆப் யூனிடிக்கான  அடிக்கல் நட்டு சுமார் ஐந்தாண்டுகள் கட்டுமான பணிகள் நடந்து முடிந்து மூவாயிரம் கோடி செலவில் எழுப்பபட்ட உலகில் மிக உயரமான சிலையாம் இது.  2018 அக்டோபர் மாதம் 31-ம் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் அன்று மோடி அவர்களால் இந்த ஸ்டாச்சு ஆப் யூனிடி திறந்து வைக்க பட்டது. அன்றில் இருந்து ஸ்டாச்சு ஆப் யூனிடி சுத்தி பார்க்க நாள்தோறும் சுமார்  எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருகிறார்களாம். இந்த சிலையில்  153ஆவது  மீட்டர் உயரத்தில் அமைத்திருக்கும் viewing gallery வரைச்  சென்று பார்க்க  நபருக்கு 380 ருபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
 இணையத்திலும் 

முன்பதிவு செய்யலாம்.
*
அன்றைய தினம் காலையிலும் மதியமும் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு நாக்கு இரவு சப்பாத்திய சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்சதால் ஐயார்ஸீடீஸீ மூலம் ஏதாவது ஆன்லைனில் ஆர்டர் செய்து போப்பால் நிறுத்தத்தில்  வாங்கலாம்னு  நினைச்ச  அந்த ப்ளான் வொர்க்கவுட் ஆகல. போப்பால் ஜங்ஷனில் கடைகள் காட்டுது தவிர ஆர்டர் பண்ண முடியல. ரயிலில் இருக்கும்  கேண்டின்ல இருந்து  மாலையில் இருந்தே ’டின்னருக்கு என்ன வேணும்’னு ரெண்டு மூணு தடவை வந்து கேட்டு போனாங்க. சரி ட்ரைன்ல இருக்கும் கேண்டின்லயாச்சும் எதையாவது சாப்பிடலாம்னு பார்த்தா தம்பி ‘அவுங்க எந்த தண்ணியில சமைப்பாங்களோ ரிஸ்க் எடுக்க வேணாம்’னு சொல்லிட்டான். வேற வழி எதுவும்  இல்லாததுனால  அன்று இரவும் சப்பாத்திய சகிச்சுகிட்டு சாப்பிட வேண்டிய நிலமை எனக்கு:(((
இட்டார்சிக்கு அடுத்து போப்பாலுக்கு இரவு எட்டேகாலுக்கு வந்து எட்டு இருபத்தைந்துக்கு புறப்படணும். சுமார் 90 கிமீ தூரம். நடுவில் எந்த நிறுத்தமும் கிடையாது. போபால் ரயில் நிலையம் வரவும் நாங்க சாப்பிட்டு  கை கழுவவும் சரியாக இருந்தது.
போபால் மத்திய பிரதேஷ் மாநில தலை நகரம். ஆனால் இந்தூர்தான் மாநிலத்துலயே  பெரிய நகரம். சென்னையில் இருந்து இந்தூர் மற்றும் கோரக்பூர் நகரங்களுக்குச்  செல்ல  இந்த போபால் ஜங்ஷன் வரை வந்து பிரிந்து வேறு வழிதடத்தில் பயணிக்கணும். வட இந்திய பயணம் யோசனை வருவதற்கு முன்பு ஆகஸ்ட் 23 வெள்ளிக் கிழமை நேப்பாலுக்கு தரை மார்க்கத்தில்  செல்ல தமிழ் நாடு எக்ஸ்பிரஸில் போப்பால் ஜங்ஷன் வரை பயணிச்சு கொஞ்ச நேரம் போப்பால் ஜங்ஷனில் ஓய்வெடுத்து தமிழ் நாடு எக்ஸ்பிரஸுக்கு பின்னாடியே வரும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸில் ஏறி உத்திர பிரதேஷ் மாநிலத்தில் இருக்கும் கோரக்பூர் வரை சென்று அங்கிருந்து  பேருந்து அல்லது ஜீப் பிடித்து Sonauli வரை பயணம் செய்து ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக் கிழமை இரவு Indo-Nepal Border கடந்து நேப்பால் நாட்டிற்குள் நுழைந்து பொக்கோரோ மற்றும் காட்மாண்டு சுற்றி பார்த்து விமானம் மூலம் காட்மாண்டில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு வந்து ஊர் திரும்ப திட்டம் எல்லாம் போட்டு எந்த நொடியும் முன்பதிவு செய்ய தயார் நிலையில் இருக்க  ஃப்ரெண்ட் ஒருத்தனிடம் ’நேப்பால் போறோம் என்ன நினைக்குற’னு கேட்டதற்கு ‘அவுங்க சாப்பாடு நம்மளால சாப்பிடவே முடியாது. ஒரு வாரம் எப்படி சமாளிப்ப’னு அவன் கேட்க அந்த நொடியே  நேப்பால் போகவேணாம்னு முடிவு பண்ணி கடைசியில குடும்பத்தோடு வட இந்திய பயணம் போய்ட்டு வந்தோம். அடுத்து வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் என்னவோ கண்டிப்பா நேப்பாலுக்கு போகணும்னு ஆசை இருக்கு. இமய மலை மடியில் இருக்கும் நேப்பாலில்தான் உலகின் பத்து உயரமான மலை சிகரங்களில் எட்டு இருக்கிறதாம்.
*
ஆகஸ்ட்  25. ஞாயிற்றுக் கிழமை. நாங்கள் அதிகாலை மூணேமுக்காலுக்கு ஆக்ராவில் இறங்கணும் என்பதால் எல்லாரது மொபைலிலும் மூணறைக்கு அலாரம் வைத்து படுத்தாச்சு. போப்பால் அடுத்து ஜான்சி மற்றும் குவாலியர் என இரண்டு நிறுத்தங்கள் வந்திருக்கும். நல்ல தூக்கத்தில் இருந்ததால் எதுவுமே தெரியல. நடுவுல வேற ஒரு 30 கிலோ மீட்டருக்கு ராஜஸ்தான்ல  வேற பயணிச்சிருந்திருப்போம். அதுவும்  தெரியல. ஆகஸ்ட்  25  ஞாயிற்றுக் கிழமை மூணறைக்கு அலாரம் அடிச்சதுமே எழுந்துரிச்சு  இறங்குவதற்கு  தயார் ஆகிட்டோம். சரியாக காலை நான்கு மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆக்ரா கண்டோன்மெண்ட்  நிறுத்தத்தில் போய் நின்றது. ஆகஸ்ட் 24 சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு விஜயவாடா ஜங்ஷனில் ஏறி 24 மணி நேரம் பயணம் செய்து. ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நான்கு மணிக்கு வெற்றிகரமாக வட இந்திய மண்ணில்  கால் வைத்தோம். நாங்கள்  இறங்கிய சில நிமிடங்களில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் டெல்லியை நோக்கி சென்றது.
*

Wednesday, April 01, 2020

நாக்பூரில் இருந்து இட்டார்சி வரை (வடஇந்திய பயணத்தொடர் பகுதி - 4)


நேரம் ஆவதால் நாங்கள் ஃப்ளாட்பாரத்தில் இருந்து ரயிலில் ஏறிய சில நிமிடங்களில் சரியாக மதியம் இரண்டேகாலுக்கு நாக்பூர் ஜங்ஷனில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. நாங்களும் மதிய லன்ச்சுக்கு சப்பாத்தி சாப்பிட ஆரம்பிச்சோம். ஒரு இருபது நிமிஷம் நாக்பூரை விட்டு பயணிச்சிருப்போம். வெல்கம் டூ மத்திய பிரதேஷ்னு செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்தது.
அடுத்த நிறுத்தம் மாலை 6:40க்குதான் இட்டார்சி ஜெங்ஷன். நாக்பூர் மற்றும்  இட்டார்சி இடையே 298 கிமீ தூரம். சுமார் நாலரை மணி நேர தொடர் பயணம். நடுவில் எந்த நிறுத்தமும் கிடையாது.
2006ஆம் ஆண்டு. பத்தாவது படிக்கும்போது. இந்த வழிதடத்தில் பயணித்திருப்பதால் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் வரும் காடுகள், குகைகளை பற்றி தெரியும் என்பதால் விஜயவாடாவில்  இருந்து புது டெல்லிக்கு ரயிலில் முன்பதிவு செய்யும் போது வீட்டில் ஏஸி த்ரி-டையர் அல்லது டூ-டையர் ஏதாவது ஒன்ரில் முன்பதிவு செய்ய சொன்னாலும் ’அதெல்லாம் ஒன்னும் வேணாம்; நாக்பூரில் இருந்து போபால் இடையிலான பயணம் பகலிலும்; ச்லீப்பர் க்ளாசிலும் பயணம் செய்தால்தான் சென்னை-புதுடெல்லி ரயில் பயணத்தை ரசிக்க முடியும்’னு சொல்லி இருந்தேன். அதற்கேற்ப அன்றைய தினம் வெயில் இல்லை. எப்போது வேணும்னாலும் மழை பெய்ய தயராக இருக்கும் வானிலை.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வேகத்தை கூட்டுவதும் குறைப்பதுமா இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் ஓடி இருக்கும் நான் எதிர்பார்த்த பயணம் ஆரம்பிச்சது. அடந்த காடுகள், மலைகள், குகைகளுக்கிடையே வளைந்து, நெளிந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்  அதனுடைய  உச்ச வேகமான மணிக்கு 110 கிமீ வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுக்கு மேல போகாதானு  Where is my Train ஆப்பில் பார்த்திட்டே வர  உம்.... ஏற மாட்டேங்கிறது. குறுக்கே வரும் விந்திய மலை தொடர்களின் குகைகளுக்குள்ளே நுழைந்து வெளியெ  வந்துக் கொண்டிருந்தாலும் எத்தனை குகைகளை கடந்தாலும் அடுத்த குகை எப்போ வரும்னு இருந்தது.
ஒவ்வொரு  குகைக்குள்ளே வேகமாக ட்ரைன் நுழையும்போது சன்னலுக்கு வெளியெ திடீரென  பரவி இருக்கும் இருட்டை பார்த்துட்டு வர குகைக்குள் ட்ரைன் ஓடும் போது வரும் சப்தத்தை கேட்டுட்டே  இருக்க மனசு குழந்தைத்தனமா  மாறிடும். கொஞ்ச நேரத்துல திடீரென குகை முடிஞ்சு கண்ணுல வெளிச்சம்படும்போது ’இன்னும் கொஞ்ச குகையின் நீளம் இருக்க கூடாதா’னு தோணும். எத்தனை குகைகள் இந்த வழி தடத்தில்  கடந்திருப்போம்னு தெரியல. ஒவ்வொரு குகையும் குறைந்தது இரண்டு நிமிடத்திற்கு குறைவாக இருக்காதுனு நினைக்கிறேன்.
அவ்வப்போது சில இடங்களில் தண்டவாளத்துக்கு ஓரமாக சாலை வருவதை பார்க்க முடிந்தது. அவற்றில் பெரும்பலான சாலைகள் சமீபத்தில் பெய்த மழைக்கு சேதம் அடைந்து மழை நீருக்கு அடித்துச் சென்றதால் இருபுறமும் நிறைய லாரிக்கள் கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றுக் கொண்டிருப்பதை பார்த்துட்டே  போய்கிட்டிருந்தோம். நிறைய குட்டி குட்டி கால்வாய்க்கள் கடந்து சென்றுக் கொண்டிருந்தோம். அனைத்திலும் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
மதியம் நாக்பூர்ல புறப்பட்டபோது உட்கார்ந்தது. ரொம்ப நெரம் ஒரே இடத்துல உட்கார முடியல. அதுனால ரெண்டு  அடி எடுத்து வெச்சா  நல்லா இருக்கும்னு தோணியதால கொஞ்ச நேரம் ட்ரைனுக்குள்ள நடந்து பார்ப்போம்னு நடந்து  கடைசியா  கதவு கிட்ட நின்னு வேடிக்க பார்க்க ஆரம்பிச்சோம். ட்ரைன் போற வேகத்துக்கு ஏற்படும் அசைவுக்கு வீசுற காத்துக்கு எங்கே கீழ விழுந்திடுவோம்னு ஒரு பக்கம் பயமா இருந்தாலும் த்ரில்லா இருந்தது. ஒரு அஞ்சு நிமிஷம் கதவு கிட்ட நின்னிருப்போம். அம்மா  வந்து திட்டி சீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டாங்க.
எங்களோட பெட்டியில பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் பொழுது போக்க பேரு தெரியாத விளையாட்ட எல்லாம் விளையாடிகிட்டு இருந்தாங்க. அதுல ஒரு விளையாட்டு  எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. குலுக்கல் முறையில ஒருத்தரோட பேர தேர்ந்தெடுப்பங்க. அவுங்க தன்னோட ஃபஸ்ட் லவ் பத்தி சொல்லணும். பொண்ணுங்க பசங்களோட லவ் ஸ்டோரிய கேட்க ரொம்ப ஆர்வமா பசங்கள என்கரேஜ் பண்ணிகிட்டு இருந்தாங்க. இந்த பசங்களும்  உணர்ச்சிவசபட்டு தன்னோட ஃபஸ்ட் லவ்  நினைவுகள எல்லாம் சொல்லிட்டிருந்தாங்க. கடைசி வரைக்கும் எந்த பொண்ணும் தன்னோட ஃபஸ்ட் லவ் கதையை சொன்ன மாதிரி தெரியல. அப்போ நினைச்சுகிட்டேன் இந்த பொண்ணுங்க  பசங்ககிட்ட  பேசி விஷயத்த கறக்குறதுல எவ்வளவு உஷாருனு தெரிஞ்சுகிட்டேன்:-)))
இதெல்லாம் எங்களுக்கு பின்னால் சீட்டில் நடப்பதால் ஒரு பக்கம் அதையெல்லாம் கேட்டுட்டே இன்னொரு பக்கம் வெளிய பார்த்துட்டே வர டைம் பாஸ் ஆகிட்டிருந்தது.
கொஞ்சம் கொஞ்சமா இருட்ட துவங்கியது. இட்டார்சிக்கு மாலை ஆறு நாற்பதுக்கு வந்து ஆறேமுக்காலுக்கு புறப்படணும். ரன்னிங் ஸ்டேட்டஸ் பார்த்ததில் இருபது நிமிடங்கள் தாமதமாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போய்கிட்டு இருந்தது. Where is my Train ஏப்ல காட்டிய படி சரியா இருபது நிமிடங்கள் தாமதமாக ஏழு மணிக்கு இட்டார்சி ஜங்ஷனுக்கு நுழைஞ்சது. வந்தது லேட். எப்போ புறப்படும்னு தெரியாது என்பதால இம்முறை ட்ரைனை விட்டு இறங்கல.
தமிழகத்தில் இருந்து காசியாத்திரைக்கு செல்பவர்கள் ரயிலில் இட்டார்சி நிறுத்தம் வரை சென்னை-புது டெல்லி வழி தடத்தில் வரணும். இங்கிருந்து பிரிந்து வேறோரு பாதையில் ஜபல்பூர்,  கட்னீ,  சட்னா, ப்ரயாக்ராஜ்  அதுதான் அலகாபாத் வழியா  வாரனாசிக்கு  750 கிலோ மீட்டர் போகணும்.
ஒரு பத்து நிமிஷம் இட்டார்சி ஜங்ஷன்ல ட்ரைன் நின்னிருக்கும். ஏழேகாலுக்கென்னவோ போப்பால் நோக்கி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
*