மூணு வருஷத்துக்கு முன்பு இதே தேதியில்;
ஆகஸ்ட் 12 சனிக்கிழமை - 2017.
அதிகாலை ஒரு மணிக்கு எழுந்து குளித்து தயார் ஆகி;
தயார் நிலையில் வைத்திருந்த பைகளை எடுத்துக்கொண்டு;
மூணு மணிக்கு திருப்பதியில் இருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் ரேனிகுண்டா ரயில் நிலையம் வரை ஆட்டோவில் சென்று;
காச்சிகூடா - செங்கல்பட்டு ரயிலில் சென்னைக்கு வந்து;
காலை பதினோரு மணிக்கு ஏர் இண்டியா விமானத்தில் ஏறி;
பதினொண்ணரைக்கு விமானம் புறப்பட்ட சில நொடிகளில்
பிரேக் ஜாம் ஆன பிரச்சனை தெரிய;
மீண்டும் விமானம் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிற்க;
முதல் வெளிநாட்டு பயணம் இப்படி பிரச்சனையோடு ஆரம்பிச்சிருக்கேனு பயந்து;
ஒருவழியா பிரச்சனை சரி செய்ய பட்டதும்;
இரண்டு மணி நேரம் தாமதமாக
மதியம் ஒண்ணரைக்கு விமானம் புறப்பட்டு;
தரையில் இருந்து பனிரெண்டாயிரம் மீட்டர் உயரத்தில்;மணிக்கு சராசரியாக 800 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து;
சென்னை-சிங்கப்பூர் 3000 கிலோமீட்டர்ஐ நான்கு மணி நேரத்தில் கடந்து;
சிங்கப்பூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு சிங்கப்பூர்-சாங்கி விமானநிலையத்தில் இறங்கி
முதன் முதலில் வெளி நாட்டில் கால் வைத்த
அனுபவம்..
நினைக்க நினைக்க எத்தனை வருடங்கள் ஆனாலும் இனிக்கும் போல.
ஆகஸ்ட் - 12 மெமரீஸ்.