Friday, April 30, 2021

நானும் கோவாவும்.

 அது யுஜி படிக்குற சமயம். வகுப்பில் வம்சி கிருஷ்ணானு ஒரு பையன் இருப்பான். படிப்பைத் தவிர மத்த எல்லா விசயத்திலும் எனக்கும் அவனுக்கும் நீயா-நானா போட்டி. இரண்டாம் ஆண்டா இல்ல மூன்றாம் ஆண்டானு சரியா ஞாபகம் இல்ல. ஒரு செப்டம்பர் மாதம் அவனோட ஸ்கூல் ஃப்ரென்ஸ் ஓட கோவாவுக்கு கிளம்பிட்டான்.

 

கோவால இருந்து திரும்பியதும் மச்சி   தன்னியில பைக் ஓட்டினேன் தெரியுமா, டிஸ்கோ போனேன்; பொன்னுங்களோட டான்ஸ் ஆடினேன்; பியர் குடித்தேன்; பிகினி உடையில் பெண்களை பார்த்தேன் இப்படி ஒரு வாரத்துக்கு ஏதோ ஒரு விஷயம் கோவாவை சுற்றியே அவனது பேச்சு இருக்கும்.

 

அதற்கு முன்பே நான் கோவா பெயர் கேள்வி பட்டிருந்தாலும் அவன் மூலம்தான் கோவாவை பற்றிய சித்திரம்  மனதில் வரையத் துவங்கினேன். அன்றில் இருந்து நானும் கோவா சென்று குதுகலத்தை அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆழ்மனதில் பதிந்து விட்டது.

 

இப்போது  துபாய் லண்டன் அமேரிக்கா போகனும்னு ஆசை இருந்தாலும் ஒரு காலத்தில் கோவாதான்  பெரிய இலக்காக எனக்கு இருந்தது.

 

2015க்கு பிறகு நண்பர்களோடு பல முறை நானும் கோவாவுக்கு போகணும்னு திட்டமிட்டிருந்தாலும் எல்லாத்துக்கும் நேரம்னு ஒன்னு சொல்லுவாங்க இல்லையா அது எனக்கு அமையல.

சரியா மூணு வருஷத்துக்கு முன்னாடி...

 

2018 ஆம் வருடம் மே தினம் செவ்வாய் கிழமை வந்திருந்தது. ஏப்ரல் முப்பது திங்கள் ஒருநாள் அலுவலகத்திற்கு போகாமல் விடுப்பு  போட்டால் நாங்காவது சனி; ஞாயிறு; திங்கள் மற்றும் செவ்வாய் என மொத்தம் நான்கு நாட்கள் கிடைக்கும். என்காச்சும் போய்ட்டு வருவோம்னு திட்டமிட ஆரம்பிச்சதில்  கேரளாவில் இருக்கும் அதிரப்பல்லி நீர்வீழ்ச்சிக்கும், கர்நாடகாவில் இருக்கும் முர்டேஷ்வர் மற்றும் பலரது ட்ரீம் டெஸ்டினேஷனான இந்தியாவின் தாய்லாண்டான கோவாவிற்கு சென்றிருந்தோம் நானும்-தம்பியும்.

 

நான்கு நாட்கள்; மூன்று மாநில பயணம் என சூப்பர் சக்ஸஸ் ஆச்சு அந்த ட்ரிப்.

 

  ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை  இரவு திருப்பதியில்  புறப்பட்டு ஏப்ரல் 28 சனிக்கிழமை காலையில் திரிசூரில் இறங்கினோம். நாள் முழுவதும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்று வரவே நேரம் சரியாக இருந்தது. அன்று இரவு திரிசூரில் இருந்து புறப்பட்டு ஏப்ரல் 29 ஞாயிற்றுக்கிழமை காலையில் முர்டேஷ்வர் ரயில் நிலையத்தில் இறங்கி உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை பார்க்கச் சென்றோம்.

 

அடுத்து  நாங்கள் கோவா செல்ல முர்டேஷ்வரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பட்கல் ரயில் நிலையம் வந்து கோவா செல்ல ரயில் ஏறினோம்.

 

மதியம் ஒரு இரண்டு மணி அளவில் கோவா மட்காவ்ன் ரயில் நிலையத்தில் இறங்கினோம்.

 

***

 

ஆகஸ்ட் 15, 1947ஆம் வருடம் ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றிருந்தாலும் கோவா பகுதி மட்டும் 1961 ஆம் ஆண்டு வரையிலும் போர்த்துகீசியர்களின் ஆளுகையின் கீழ்தான் இருந்தது. அந்த வருடம்தான்  இந்திய அரசு படைகளை அனுப்பி கோவா மாநிலத்தில் இருந்த போர்த்துகீசியப் படைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, கோவா பகுதிகளை இந்தியாவோடு இணைத்துக் கொண்டது.

 

  ஆரம்ப காலத்தில் யூனியன் பிரதேசமாக இருந்த கோவா 1987 ஆம் வருடம் மாநில அந்தஸ்து கொடுத்து இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் என பெயர் பெற்றது.

 

  வடக்கே மகாராஷ்டிராவையும்; கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் கர்நாடகாவும்; மற்றும் மேற்கே அழகிய அரபிக் கடலையும் கொண்ட கோவா தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட நிலப்பரப்பை விடவும் அளவில் சிறியது.

 

வடக்கு மற்றும் தெற்கு கோவா என இரண்டு மாவட்டங்களை கொண்ட கோவா  தலைநகர் பனாஜி வடக்கு கோவா மாவட்டத்தில் இருக்கிறது.

 

நாங்கள் கோவா சென்றிருந்தபோது தங்கி இருந்த ஒன்னரைநாளில் புகழ் பெற்ற கலங்கூட், பாகா, மற்றும் அஞ்சுனா கடற்கரைக்குச்  சென்றிருந்தோம். இந்த மூன்று பீச்சுக்களும் வடக்கு கோவாவில்தான் இருக்கிறது.

 

சென்னையில் இருந்து கோவாவிற்கு நேரடி விமான சேவை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் நபருக்கு இரண்டாயிரத்திற்கெல்லாம் டிக்கெட் கிடைக்கும்.

 

ரயில் மார்கம் என்றால் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும்  சென்னை செண்ட்ரலில் இருந்து கோவாவிற்கு நேரடி ரயில் இருக்கிறது. ஆனால் பயண

சமயமோ  20 மணி நேரம்....
Thursday, April 29, 2021

வாரணாசி - 2. மூன்று மாநில பயணத்தின் நிறைவு பகுதி.

காசி விஸ்வநாதர்  மற்றும் அன்னபூரணி தரிசனத்திற்கு பிறகு விசாலாக்ஷி கோவில் செல்லாமலே அடுத்து நாங்கள் சென்றது கால பைரவர் கோவிலுக்கு. டுக்டுக்  என உள்ளூர் மக்களால் அழைக்க படும் இ - ரிக்‌ஷாவில் சென்றோம்.

 

காசி விஸ்வநாதர் கோவில்  அளவு ப்ரோகிதர்களின் தொல்லையும் பாதுகாப்பு கெடுபுடிகள் எதுவும் இல்லாததால் பூஜை பொருட்கள் விற்கும் ஒரு பெண் கடையில் செருப்பை மட்டும் விட்டு கால பைரவர் கோவிலினுள்ளே சென்று பக்தர்கள் கூட்டம் இல்லாததினால் ஒரு பத்து நிமிடத்தில் வெளியே வந்துவிட்டோம். கடையில் செருப்பை விட்டு சென்றதற்காக பத்து ரூபாய் கொடுத்தால் வேண்டாம் என சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்ததாக நாங்கள் சென்றது....

***

 

  கங்கையின் மேற்குக் கரையில் வருணா மற்றும் ஹசி என்னும் இரண்டு நதிகளுக்கிடையே காசி நகரம் இருப்பதால் இதை   வாரணாசி என்று அழைக்கப்படுகிறது.

 

காசியின் அடையாலமான  காட்ஸ் என அழைக்கப்படும் படித்துறைகள் காசியில் மொத்தம்  64  கங்கை கரைகள் இருக்கிறது. அவற்றில் மிகவும் பழமையான  மணிகர்ணிகா மற்றும்  அரிச்சந்திர  காட்ஸ் பார்க்க செல்வதுதான் எங்களது திட்டம்...

 

இந்த இரண்டு படித்துறைகளின்  சிறப்பே நாள் முழுவதும் இரவு பகல், மழை வெய்யில் பார்க்காமல் பிணங்கள் கொண்டு வரப்பட்டு எரித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த இரண்டு இடங்களைத் தவிர வேறு எந்த படித்துறையிலும் காசியில் பிணங்கள் எரிக்க அனுமதி கிடையாது.

 

பொதுவா  காசியோட  அழகே காசி தெருக்கள்தான் சொல்லுவாங்க. கால பைரவர் கோவிலுக்கு அடுத்து மணிகர்ணிகா காட் செல்லும்போதுதான் காசி  நகரத்தோட குறுகலான சந்துக்கள் வழியாக நடக்க ஆரம்பித்தோம்.

 

நான்கு முதல் ஐந்து அடி மட்டுமே அகலம் கொண்ட காசி சந்துக்களில் நடப்பது காசி எத்தகைய பழமையான நகரம்; அசுத்தமான நகரம் என்பதை பார்க்க முடிந்தது.

 

படித்துறை செல்ல  குறுகலான  சந்தில் நடக்க ஆரம்பித்தால் எது வடக்கு; எது கிழக்கு;  என்றெல்லாம் எதுவும் நமக்கு புரியாது. அதோடு மணிகர்ணிகா காட் செல்லும் வழியில்  வரிசையாக இரண்டு நிமிடங்களுக்கு ஒரு பிணம் பாடையில் தூக்கிக் கொண்டு ராம் நாம் சத்யஹே, ஸ்ரீ ராம் நாம் சத்யஹே சொல்லி கொண்டு வருவதால் அவர்களுக்கு  வழி கொடுக்க ஏதோ ஒரு வீட்டு வாசற்படியில் நாம் ஏற வேண்டி இருக்கும்.
மணிகர்ணிகா காட் அடைந்ததும் முதன் முதலாக கங்கையை பார்த்தோம். சரி கால்

நனைப்போம் என பத்து படி இறங்கி கங்கையில் கால் நனைத்தோம்.

 

காசியில் தகனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்கிற  நம்பிக்கை இந்துக்களுக்கு இருப்பதால் காசி சுற்று வட்டத்தில் இறப்பவர்களை கொண்டு வந்து  கங்கை நதியில் மூன்று முறை முக்கி எடுத்த பிறகு எரிக்கிறார்கள். சடலம் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனதும் சாம்பலை கங்கையில் கரைத்துவிடுகிறார்கள். இதை எல்லாம்   மிக அருகில் சென்று பார்த்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்தது நாங்கள்  சென்றது அரிச்சந்திரா காட்...

 

மணிகர்ணிகா காட் செல்லும் வழியில் குறுகலான சந்துக்களில் நடந்து சென்ற மாதிரி அரிச்சந்திரா காட் செல்ல நடக்க வேண்டிய அவசியம் இல்லை. காட் வரைக்குமே சாலை வசதி இருக்கிறது.

 

  மணிகர்ணிகா காட் போலவே இங்கும் பிணங்கள் கொண்டு வரப்பட்டு கங்கை நதியில் மூன்று முறை முக்கி எடுத்த பிறகு   எரிக்கிறார்கள். சடலம் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனதும் சாம்பலை கங்கையில்  கரைத்துவிடுகிறார்கள்.

 

அடுத்து நாங்கள் சென்றது பனாரஸ் இந்து யூனிவர்சிட்டியில் உள்ள புது விஸ்வநாதர் கோவிலுக்கு. பிர்லா குடும்பத்தாரால் கட்டப் பட்ட இந்த கோவில் இரண்டு தளங்களைக் கொண்டது.
யூனிவர்சிட்டியில் மிகவும் அமைதியான சூழலில்  செண்ட்ரல் லைப்ரரிக்கு அருகில் இருக்கும் இந்த கோவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது.

கொஞ்ச நேரம் அங்கு உட்கார்ந்து கால்களுக்கு ஓய்வு கொடுத்ததை அடுத்து காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததாலும் வாரணாசி வெயில் கொழுத்துவதாலும் அன்னபூரணி ரெஸ்டாரண்ட் சென்று லன்ச் முடித்து ரூம் திரும்பும்போது மதியம் ஒரு மணி ஆனது.

 

  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போமுன்னு தூங்கியதும் மாலை ஐந்து மணிக்கு ரூமிலிருந்து கிளம்பி தஸ் அஸ்வமேத காட் சென்றோம். அங்குதான் மாலை ஏழு மணிக்கு கங்கா ஆரத்தி  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அதை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது  வழக்கம். ஒரே நேரத்தில், சுமார் ஆறேழு  பூசாரிகளால் கங்கைக்கு  ஆரத்தி எடுப்பார்களாம்.

 

எங்களது முக்கிய திட்டமே கங்கா ஆரத்தியை படகில் இருந்து பார்க்கனும்னு இருந்தோம். கங்கையை தெய்வமாக கருதி கங்கைக்கு ஆரத்தி எடுக்கும்போது அது படகில் உட்கார்ந்திருக்கும் நமக்கே எடுக்குற மாதிரி இருக்கும்.

 

நாங்கள் சென்றபோது கொரானா காரணமாக தினமும் ஒருவர் மட்டுமே கங்கைக்கு ஆரத்தி எடுப்பதாவும்; படகில் இருந்து பார்க்க அனுமதி இல்லைன்னு சொன்னார்கள்.

 

அடுத்து என்ன செய்யணும்னு யோசித்த போது கங்கையில் இறங்கி குளிக்கனும்னு ஆசையாக இருந்தாலும் உடம்புக்கு எதாவது ஆகிடுமோனு பயத்தில் ஆசையை அடக்கிக் கொண்டு ஹரிதுவாரில் பார்த்துக்குவோம்னு காசிக்கு வந்ததற்கு கங்கையில் படகு சவாரி செய்வோம்னு கங்கையில் எங்களது படகு பயணம் துவங்கியது.

 

படகில் நான் தம்பி மற்றும் படகோட்டி என மொத்தம் மூன்றே நபர்கள்தான். படகோட்டி  காசியில் எந்தெந்த படங்கள் எல்லாம் ஷூட் செய்திருக்கிறார்கள்  என்கிற தகவல்களில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு படித்துறையின் பெயரும் சொல்லிட்டு வந்தார்.

 


சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் புறப்பட்டு நன்றாக இருட்டத் துவங்கியதும் கரைக்கு திரும்பிய அனுபவம்  நன்றாக இருந்தது.

 

இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த கங்கா ஆரத்தியை பார்க்க படித்துறையில் உட்கார்ந்தோம். முழு ஆரத்தி முடிய அரை மணி நேரத்திற்கும் மேலானது. அடுத்து  முஸ்லிம் கடைகளில் ஒரிஜினல் பனாரஸ் புடவை கிடைக்கும்னு படகோட்டி சொன்னதால் ஒரு ரெண்டு புடவை மட்டும் வாங்கலாம்னு நினைக்க தம்பி  வேணாம்னு சொன்னதால் கொஞ்சம் வருத்தத்தோடு ரூமுக்கு வந்து இரவு உணவு ஆடர் செய்து சாப்பிட்டு படுத்தோம்.

 

***

 

அடுத்தநாள் (ஏப்ரல் 14 புதன் கிழமை)  காலையில் எழுந்துரித்து  குளித்து தயார் ஆகி பைகள் எல்லாம் பேக் செய்த பிறகு சரியாக ஒன்பது மணிக்கு ரூம் செக் அவுட் செய்து ஹோட்டலைவிட்டு வெளியே வந்தோம்.மதியம் ஒரு மணிக்கு சென்னைக்கு எங்களுக்கு விமானம் இருப்பதால்  விமான நிலையம் செல்ல ஓலா கேப்  புக் செய்தோம்.

வாரணாசியில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலை அருமையாக இருந்தது. அரை மணி நேரத்தில்  26 கிலோமீட்டர்  பயணம் செய்து லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.நாங்கள் பயணிக்க இருப்பது  இண்டிகோ நிறுவனத்தின் விமானம் என்பதால் முதலில் இண்டிகோ கவுண்டருக்குச் சென்று இரண்டு பைகள் செக்-இன் லக்கேஜில் போட்டோம். அடுத்து  செக்கூரிட்டி செக் எல்லாம் முடிந்ததும் வெயிட்டிங் ஹால் வந்து ஒரு இடத்தில் உட்கார்ந்ததும் டைம் பார்த்தால் பத்தரைதான் ஆகியிருந்தது.

 

காலையில் எதுவும் சாப்பிடாததால் ஆளுக்கொரு வெஜ் சாண்ட்விஜ் வாங்கி சாப்பிட்டோம். அடுத்து விமான நிலையத்தில் இருக்கும் ஒன்னு ரெண்டு ட்யூட்டிஃப்ரீ கடைகள் சுற்றி பார்த்து திரும்பவும் வந்து உட்கார்ந்துவிட்டோம்.

 

மதியம் ஒரு பனிரெண்டு மணிக்கு நா பன்னீர் சாண்ட்விஜ்  வாங்க தம்பிக்கு கப் நூடில்ஸ் வாங்கி சாப்பிட்டோம். பணிரெண்டரைக்கு எங்களது ஃப்லைட்டுக்கான  போர்டிங் துவங்கியதும் போர்டிங் பாசில் குறிப்பிட்டிருந்த கேட்டிற்குச் சென்று வரிசையில் நின்றோம். ஒரு ஐந்து நிமிடத்தில்  aerobridge வழியாக நடந்து

விமானத்திற்குள்ளே நுழைந்தோம்.இரண்டு பக்கமும் மூன்று மூன்று  பேர் உட்கார்ந்து பயணிக்க கூடிய விமானத்தில் கோவிட் காரணமாக நடு சீட் ஆனது காலியாக விட்டுவிட்டார்கள்.

 

சரியாக பனிரெண்டு ஐம்பதுக்கு விமானத்தின் கதவுகள் மூடுமாறு பைலட்டிடம் இருந்து அறிவிப்பு வந்ததை அடுத்து ஏர் ஹோஸ்டஸ் கதவுகள் மூடியதும் ஒரு ஐந்து நிமிடத்தில் சென்னையை நோக்கி விமானம் புறப்பட்டது.இது எனக்கு ஏழாவது ஃப்லைட். ரன்வேயில் ஓட ஆரம்பிச்சதில் இருந்து டேக்காப்  ஆர வரைக்கும்தான்  ஸ்வாரஸ்யமாக இருந்தது அதன் பிறகு மேலே வந்ததும் போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. கொஞ்ச நேரம் தூங்குவோம்னு கண்ண மூடியதில் ஒரு மணி நேரம் தூங்கி இருக்கேன். முழிப்பு வந்தபோது ரெண்டரைதான் ஆகி இருந்தது.

 சரியாக மூனு இருவதுக்கு சென்னை  விமான நிலையத்தில் இறங்கினோம்.

ஏரோ பிரிட்ஜ் வழியாக  டர்மினலுக்குள்ளே வந்து செக்-இன் லகேஜில் போட்ட பைகளை எடுக்க கன்வேயர்  பெல்ட் இருக்கும் இடத்துக்கு போனோம்.  ஒரு அஞ்சு நிமிஷத்தில் எங்களது  பைகள் வந்துவிட அவற்றை எடுத்துட்டு வெளியே வந்து சென்னை விமான நிலையம் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து பச்சை வழித்தடத்தில்  திருமங்கலம்வரை பயணம் செய்து அங்கிருந்து ஆட்டோவில் மாதவரம் பேருந்து நிலையம் வந்து திருப்பதிக்கு பஸ் ஏறினோம்.

இரவு எட்டேகாலுக்கு திருப்பதி பஸ் டாண்டில் இறங்கி  எட்டரைக்கு மூன்று மாநில பயணம் முடித்துக் கொண்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்.

 

கொரொனா,  லாக்டவுன் என ஆயிரத்தி எட்டு பிரச்சனைகளோடு நாடே  இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் சமயத்தில் பயணம் செய்தது   ரிஸ்கான ஒரு விஷயம் என்றாலும் பெருசா எந்த ஒரு  சிக்கலிலும் மாட்டிக்காமல் ஐந்து நாட்கள் மொழி தெரியாத மாநிலங்களில் பயணிச்சது   வாழ்வில் மறக்க முடியாத  நினைவுகளாக என்றேன்றும் நினைவில் இருக்கும்.

 

இப்போது நாடு எதிர்கொள்ளும் இரண்டாம் அலை நிலைமை சீர் ஆனதும் அடுத்து தி மோஸ்ட் அட்வென்சர் ட்ரிப் மனாலி-லே லடாக்-ஸ்ரிநகர் போகணும்னு  ஒரு திட்டம் இருக்கு. பார்ப்போம் எந்த  அளவு அது சாத்தியப்படும்னு.

 

இந்த மூன்று மாநில பயண தொடர் முதல் பதிவிலிருந்து வாசித்து தொடர்ந்து பின்னோட்டம் இட்டு உற்சாக படுத்திய அனைவருக்கும் நன்றிகள்.

 

அடிக்கடிப் பயணம் மேற்கொள்ளுங்கள். புத்துணர்வோடு என்றென்றும் இருங்கள்!

அன்புடன் திருப்பதி மஹேஷ்.

 29.04.2021.

Friday, April 23, 2021

வாரணாசி - 1. காசி விசுவநாதர் கோவில் அனுபவம்.

 


 கொல்கத்தா மற்றும் கயாவுக்கு  அடுத்தபடியாக நாங்கள் சென்றது உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசிக்கு. ஏப்ரல் 12 திங்கட் கிழமை மதியம் 2:50க்கு கயாவில் இருந்து புறப்பட்டு  நான்கு மணி நேர ரயில் பயணத்தில் 230 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து சரியாக மாலை  6:50க்கு வாரணாசி ஸ்டேஷனில் இறங்கினோம்.

 

இரண்டு நாட்கள் வாரணாசியில் தங்குவதற்கு  ஓயோ ஹோட்டல் அஷோகா கிராண்டில்  முன்பதிவு செய்தது வாரணாசி ஸ்டேஷனுக்கு அருகில் என்பதால் நடந்தே செல்வோம் என நடக்க  ஆரம்பித்தோம்.

 

ஹோட்டலை கண்டுபிடிப்பதில் எந்த  சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை. இரவு ஏழு மணிக்கெல்லாம் செக்-இன் செய்து ரூமுக்கு வந்துவிட்டோம்.

 

எடுத்ததும் முதலில் ஒரு நல்ல குளியலை போட்ட பிறகு கொல்கத்தாவில் சாப்பிட முடியாமலும் தூக்கி போட மனசு இல்லாததாலும் பைய்யில் வைத்த ரசகுல்லா ஞாபகத்துக்கு வரவும் வெளியே எடுத்து  வாசனை  பார்த்ததும் கெடவில்லை என

உறுதி செய்து கொண்டதும்  வாரணாசியில் கொல்கத்தா ரசகுல்லா ஆளுக்கு   மூனு சாப்பிட்டிருப்போம்...

 

  நைட் டின்னர் பொருத்த வரையில் வெளியே சென்று சாப்பிட பொறுமை இல்லாததால் ஆடர் செய்தால் ஹோட்டல்  ரெஸ்டாரண்டில் இருந்து ரூமுக்கு கொண்டு வந்து கொடுப்பார்களென்று ரிசப்ஷனில் சொன்னதும் ஆடர் செய்து  சாப்பிட்டு படுத்தாச்சு...

 

ஏப்ரல் 13 செவ்வாய் கிழமை காலையில் எழுந்ததும் குளித்து விட்டு நேராக காசி விசுவநாதர் கோவிலுக்கு கிழம்பிட்டோம்.  ஹோட்டலில் இருந்து வெளியே வந்து கோவிலுக்கு எவ்வளவு  தூரம் இருக்கிறதென பார்த்தபோது மூன்று கிலோமீட்டர் என்னவோ கூகுல் மேப் காட்டியது.

 

ஓலா, ஊபர் டாக்ஸி சேவை இருந்தாலும்  மூன்று கிலோமீட்டருக்கு இருனூரு  ரூபாய் எல்லாம் ரொம்ப அதிகம்னு ரோட்டுல நடக்க ஆரம்பித்தோம்.

 

நம்ம ஊரில் ஆட்டோக்கள் போல வாரணாசி சாலைகளில் அதிக எண்ணிக்கையில் இ - ரிக்‌ஷாக்கள் ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு இ - ரிக்‌ஷாவை  நிறுத்தி காசி விஸ்வநாதர் மந்திர் போகனும்னு சொன்னதும் நூரு ரூபாய் கேட்டதும் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி உட்கார்ந்தோம்.

 

ஆட்டோவை விடவும் வடிவில் சற்று சிறியதாக நான்கு பேர் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்க பட்ட இ  ரிக்‌ஷாவில் பயணிப்பது  புது அனுபவமாக இருந்தது.

 

ஒரு  பத்து பதினைந்து நிமிடத்தில் கோவில் இருக்கும் இடத்திற்கு சில மீட்டர்கள் முன்பே எங்களை இறக்கி விட்டு அங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும் என   இ  ரிக்‌ஷா ஓட்டுனர் சொல்லி  100 ரூபாய் வாங்கி சென்று விட்டார்.

 

நாங்களும் கூகுள் ஆண்ட்டியின் உதவியோடு காசி விஸ்வநாதர் கோவிலை நோக்கி குறுகலான சந்து  வழியாக நடந்து  செல்லும் போது வழியில் ஒருவர் வந்து ’நீங்கள் தெலுங்கா’ என ஆரம்பித்து நாங்கள் பதில் சொல்வதற்கு முன்பே ’கோவிலிளுள்ளே  நீண்ட வரிசை இருக்கிறது. எப்படியும் இரண்டு மூன்று மணி நேரம் ஆவது தரிசனத்திற்கு சமயம் பிடிக்கும். நீங்கள்  என்னோடு வந்தால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் குறுக்கு வழியில் உங்களை அழைத்துச் செல்கிறேன் கடைசியில்  உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைக் கொடுத்தால் போதும். உங்கள்

சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம்’ என சொல்லிக்கொண்டே எங்களுடன் நடந்து வந்தார் ஒருத்தர்.

 

நாங்கள்  அவர் பேசுவதை அமைதியாக கேட்டுட்டே கண்டுக்காமல் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தோம். கூட வருபவரோ நிறுத்தாமல் சொன்னதையே திரும்பத்

திரும்ப  சொல்லிக் கொண்டிருக்க தம்பி கோவமாக முகம் காட்ட எதுக்கு கோவம்.

உங்கள் திருப்தி சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்.  என்ன கொடுக்கனும்னு  கடைசியில் தோன்றுகிறதோ  அதை கொடுத்தால் போதும் என திரும்பத் திரும்ப சொல்ல. சரி நமக்கு சீக்கிரம் தரிசனம் முடிஞ்சா நல்லதுன்னு மனம் இறங்கி தம்பிய ஒத்துக்க வெச்சு அவரோடு நடந்து சென்றோம்.

 

பூஜை பொருட்கள் விற்கும் ஒரு கடையின் முன்பு  நின்று கோவிலுக்குள் செல்ஃபோன் அனுமதி இல்லாததால் கடையில் இருக்கும்  லாக்கரில் வைத்துவிட்டு போகனும்னு சொன்னார்.

 

அப்போதான் எனக்கு  லேசா பயம் எடுக்க ஆரம்பிச்சது.  ரெண்டு மாசத்துக்கு

முன்னாடிதான் முப்பத்திரெண்டாயிரம் ரூபா கொடுத்து புது ஐஃபோன் வாங்கி இருந்தேன். அதைய லாக்கரில்  வைக்கனும்னு சொன்னப்போ என்ன பண்ணனும்னு தெரியல.

தம்பி எதுவும் பேசாம அவனோட ஃபோன் லாக்கரில்  வைத்து என்னோடதும் வாங்கி

வைத்து லாக்கரை  லாக் செய்தான்.

 

அடுத்ததாக ஒரு சின்ன கூடையில் ஒரு ஸ்வீட் டப்பாவும்   நாங்கைந்து இலைகளும்,

பூக்களும் வைக்கப் பட்டிருந்ததை  நீட்டி கோவிலினுள்ளே சாமிக்கு அபிஷேகம் செய்ய வாங்கிக்குமாறு எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் சொன்னதும், இல்லை நீங்க வாங்கிதான் ஆகணும்னு

 கடைக்காரர் முன்பு வாங்க கட்டாயப் படுத்தினார்.

 

சரி  வாங்கி தொலைப்போம்னு  எவ்வளவு  கேட்டால் 350ரூபாய் சொல்லுறார். இது என்ன கொடுமை ஐம்பது ரூபா கூட தேறாத  பொருட்களை இப்படி நம்ம தலையில 350ரூபாய்க்கு  கட்ட பார்க்குறாங்களேன்னு யோசித்து

’எங்களுக்கு வேணாம். சாமி தரிசனம் மட்டும் போதும்’ சொல்ல...

இல்லை நீங்கள் வாங்கிதான் ஆகணும்னு அவர் சொல்ல... அந்த இடத்தில் அடுத்து

என்ன பண்ணனும்னு தெரியல சரி போகட்டும்னு தம்பி எதோ ஒன்னு ரெண்டு பூஜை

பொருட்களை மட்டும் எடுத்து 100  ரூபாய் கடை காரரிடம் கொடுத்தான்.

 

எங்களுக்கு விரைவு தரிசனம்  செய்து தருவதாக சொன்ன ஆசாமி  அடுத்து எங்களை

புதிதாக  ஒரு நபரை காட்டி இவர்தான் உங்களை கோவிலுக்குள்ளே கூடிட்டு போவார்.

அவர் பின்னால் போகுமாறு  சொல்லி அவர் அங்கையே நின்று விட்டார்.

 

நாங்கலும்  புது மனிதர் பின்னாடி  நடந்து செல்ல குறுகலாக சென்ற ஒரு

பாதையில்  நுழைந்து  நடக்க ஒரு இடத்தில் விமான நிலையத்தில்  மெட்டல் டிடக்டர்  வைத்து  கொண்டு எப்படி எல்லாம் செக் செய்வார்களோ அது மாதிரி தலையில் இருந்து கால்வரை செக் செய்த பிறகு  தொடர்ந்து நடக்க அனுமதித்தார்கள்.

 

கொஞ்ச தூரம் நடந்ததும் ஓரமாக ஒரு இடத்தில் செருப்பை கழற்றிவிடுமாறு

சொன்னார். நாங்களும் செருப்பை கழற்றிவிட்டு அவரது பின்னால் நடந்து சென்றதில்

ஒரு இடத்தில்  வரிசையில் எங்களை நுழைத்து விட்டார்.

 

அடுத்த இரண்டு நிமிடத்திற்குள்ளாக கையில் கொண்டு வந்த பூஜை பொருட்களால்

நாங்களே காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தோம். வரிசையில் இருந்த

ஒவ்வொருவரும் பூ, பால், நீர் ஏதாவது ஒன்றைக் கொண்டு

தங்கள் கைகலாளே  அபிஷேகம் செய்கிறார்கள்.

 

விஸ்வநாதர்  தரிசனத்திற்கு பிறகு  ஒரு நாலு அடி எடுத்து வைத்ததில் ஒரு கிணற்றில் இருந்து நீர் எடுத்துப்  பக்தர்களுக்கு குடிக்க தரும் இடத்தை அடைந்தோம்.

 

  மூன்று முறை வாங்கி குடிக்கணுமாம். எனக்கு ஒரு தடவை குடிப்பதற்கே பயமாக

இருப்பதால் அந்த விபரீத விலையாட்டுக்கு போக விருப்பம் இல்லாததால் நான்

அமைதியாக நிற்க தம்பி மட்டும் மூன்று முறை வாங்கி பருகினான்.

 

அடுத்ததாக காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில்  இருக்கும்  அன்னபூரணி

சன்னதிக்கு தரிசிக்க சென்றபோது திடீரென ப்ரோகிதர் அப்பா அம்மா பெயர் கேட்டு என்ன கோத்திரம் எல்லாம் கேட்க ஆரம்பித்து அவராக நாலு மந்திரம் சொல்லி நேற்றியில்

திருநீர் வைத்து விட்டு எதாவது கொடுக்குமாரு கேட்டார்.

அடப்பாவிங்கலா. நாங்களா  இதெல்லாம் செய்யச்சொல்லி கேட்டோம். நீங்களா எதையாவது செஞ்சிட்டு பின்னாடி காசு கேட்டால்... அந்த சமயம் பார்த்து   ஷட் ஃபேண்ட் பார்க்கட்டில் தேடி பார்த்ததில்  என்னிடம் ஐம்பது நூருதான் இருந்தது.

  தம்பி கிட்ட இருந்த  பத்து ரூபாய் கொடுத்து அன்னபூரணி சன்னிதியில்

இருந்து வெளியே வந்து  பிரசாதம் விற்கும் இடத்திற்கு வந்து இரண்டு

டப்பாக்கள்  பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்த வழியிலே காசி விசுவநாதர் கோவிலை விட்டு மூவரும் வெளியே வந்தோம்.

 

செல்ஃபோன் லாக்கரில் வைத்த கடைக்கு வந்து  லாக்கரை திறந்து செல்ஃபோன்

எடுத்ததும் ஆரம்பத்தில்  எங்களை பிடித்துக் கொண்ட  நபர் பேச ஆரம்பித்தார்.

சீக்கிர தரிசன டிக்கெட்  ஒருத்தருக்கு 300 ரூபாய்;

  அதோடு அங்கு இருந்த ஒரு ப்ரோகிதரை காட்டி இவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று மொத்தமாக 1200 ரூபாய் கொடுக்குமாரு சொன்னார்.

 

கோவிலை விட்டு வெளியே வரும் சமயம்  தம்பியும் நானும் பேசிக் கொண்டதில் 200

ரூபாய் கொடுத்து இடத்தை விட்டு நகரலாம்னு பார்த்தால் 1200 ரூபாய்

கேட்க்கும்போதுதான் விஷயம் புரிய ஆரம்பித்தது.

 

காசிக்கு  பக்தியோடும் நம்பிக்கையோடு வரும் பக்தர்களிடம் பாண்டாக்கள்  பணம் பிடுங்குவதில்தான் குறியாக இருக்கிறார்கள். தென் இந்தியர்களான நமக்கு

மொழியும் வழியும் தெரியாத காரணத்தினால் இவர்களின் வலையில் எப்படியோ விழுந்துவிடுகிறோம்.

 

கோவில் நிர்வாகம் ஆவது ஒழுங்காக பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தால் ஆவது

நன்றாக இருக்கும். அதுவும் கிடையாது...

வந்தும் வராத அறைகுறை ஹிந்தியில் பேசி  ஒருவழியா  முன்னூரு ரூபாய்

கொடுத்து     நாங்க வேகமாக  அந்த இடத்தில் இருந்து

வெளியேறிட்டோம்.

 

12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானவரான காசி விஸ்வநாதரை தரிசித்த பிறகு அடுத்ததாக

 51 சக்தி பீடங்களில் ஒன்றான காசி  விசாலாக்ஷி அம்மனை தரிசிக்க போகலாம்னு

கூகுல் லொகேஷன் பார்த்ததில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில்தான்  காட்டுகிறது.

 

பாதுகாப்பு காரணமாக அங்கும் செல்ஃபோன் கொண்டு போக அனுமதி உண்டா என யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. பூஜை பொருட்கள் விற்கும் கடையில் செல்ஃபோன் வைக்கலாம்னு  பார்த்தால் முன்னூரு  நானூரு என வாய்க்கு வந்த படி இஷ்ட்டத்திற்கு விலை சொல்லி நம்

தலையில் பூஜை பொருட்களை கட்டுகிறார்கள்.

 

காசி விசுவநாதர் கோவில் தரிசனத்திற்கு சென்று வந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நாங்கள் திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க தைரியமும் பொறுமையும் இல்லாததால்   விசாலாக்ஷி  கோவிலுக்கு போக வேணாம்னு தம்பி சொன்னதும் அடுத்ததாக காசியின் காவல் தெய்வமான கால பைரவரை தரிசிக்க சென்றோம்.

---

வாரணாசி அனுபவங்கள் தொடரும்.

 

பின் குறிப்பு:

நீங்கள் காசி விஸ்வநாதர்  மற்றும்  காசி விசாலாக்ஷி தரிசனத்திற்கு செல்வதாக  இருந்தால் ரூமில்  எல்லா பொருட்களையும் வைத்து  செலவுக்கு பணம்

மட்டும் எடுத்துக் கொண்டு நிம்மதியாக வரிசையில்  சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

Wednesday, April 21, 2021

கயாவில் அரைநாள்.

 கொல்கத்தாவில் ஒருநாள் சுற்றிவிட்டு ஞாயிறு இரவு 11:30க்கு புறப்படும் ஹவுரா - ஜோத்பூர் எக்ஸ்பிரஸில் கயா  நோக்கி எங்களது பயணம் துவங்கியது.

 

கொல்கத்தா - கயா 450 கிலோமீட்டர். ஏழு மணி நேர பயணம். இரவு நேர பயணம் என்பதால் ஏஸிக்கு பதிலாக ஸ்லீப்பர் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்.

 

  திங்கட் கிழமை காலை கண் முளித்த போது ஜன்னல்  வழியே பார்த்தபோது நன்றாக விடிந்திருந்தது. நம்ம ஊர் பக்கம் ஆறரைக்கு இருக்கும் வெளிச்சம் வெளியே இருந்தது.

 

காலை 6:30க்கு கயா ஜெங்ஷனில் இறங்க வேண்டும். நைட் படுக்கும்போது செல்ஃபோனில் அலாரம் வைத்துதான்  படுத்தேன். போச்சு கயா ஸ்டேஷனை தாண்டி இருப்போமோ  பதற்றத்தில் டைம் பார்த்ததில் அஞ்சரைதான் ஆவதாக தெரிந்தது...

 

கயா  பொருத்தவரையில் நாங்கள் இரவு தங்க போவது கிடையாது. மதியம் 2:50க்கு கயாவில் இருந்து வாரணாசி செல்ல அடுத்த ரயில் முன்பதிவு செய்திருப்பதால்  இடை ப்பட்ட சமயத்தில்  கயாவில் இருக்கும் விஷ்ணுபாத் கோவிலையும் புத்தர் ஞானம் பெற்ற போத் கயாவையும் பார்த்துவிட்டு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் கயா ஸ்டேஷனுக்கு திரும்பிடணும் என்பதுதான்  எங்களது திட்டம்...

 

கயாவில் ரூம் எதுவும் எடுக்காமல் ஸ்டேஷனில் வெயிட்டிங் ஹால் இருந்தால் அதில் ஃப்ரெஷப் ஆவோம்ன்னு முடிவு செய்து காலை 6:30க்கு  கயா ஜென்ஷனில் முதலாம் ஃப்லாட்பாரத்தில் இறங்கினோம்.

 

எடுத்ததும்  அப்பர் க்லாஸ் வெயிட்டிங் ஹால்  இருப்பது  தெரிந்ததும் உள்ளே போய் பார்த்ததில் நாங்கள் எதிர் பார்த்ததுபோல குளியல் அறை-கழிப்பரை இரண்டும் தனித்தனியாக இருந்ததோடு பெருசா பயணிகள் கூட்டமும் இல்லாததால் கயாவில் இருக்க போவது அறைநாள். எதுக்கு ரூம் எடுத்துகிட்டு ஆயிரம் ரூபாய் தண்டச் செலவு செய்வதுன்னு வெயிட்டிங் ஹாலில் ரெடி ஆக ஆரம்பிச்சோம்...

 

ரெண்டு பேரும்  ரெடி ஆனதும் வெயிட்டிங் ஹாலை விட்டு வெளியே வரும் சமயம் வாசலில் ஒருத்தர்  எங்களது பிஎண்ஆர் கேட்டார். அப்போதுதான் தெரிந்தது நாங்கள் குளித்து ரெடி ஆன வெயிட்டிங் ஹால் ஆனது  ஏஸி க்லாஸ் பயணிகளுக்கானதென...

 

கடைசியில்  பி என் ஆர் கேட்ட நபர் இருவது ரூபாய் கேட்டதற்கு எதுவும் பேசாமல் கொடுத்து அந்த இடத்தை விட்டு வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்ததில் செக்கண்ட் க்லாஸ் வெயிட்டிங் ஹால் பார்த்தோம். கூட்டம்   இருந்தது. அக்சுவலி இங்கதான் நாம ரெடி ஆகி இருந்திருக்கணும்னு பேசிக் கொண்டே அடுத்ததாக ஸ்டேஷனில் க்லோக் (Cloak) ரூம் எங்க இருக்குனு தேட ஆரம்பிச்சோம்...

 

ஒருவழியா Cloak room இருக்கும் இடத்தை  கண்டு   பிடித்து பைகள் கொடுக்கணும்னு சொன்னால் pnr மற்றும் ஐடி ப்ரூஃப் போட்டோ காப்பி வேனும்னு   சொன்னார். முக்கியமாக  பைகளை பூட்டு போட்டு லாக் செய்திருக்க வேண்டும் எனவும்  சொன்னார்....

 

கைய்யில் ஒன்னுக்கு  மூனு ஐடி  ப்ரூஃப் இருந்தாலும் எதோட ஜெராக்ஸ் காப்பியும் இல்லாததால் என்ன செய்வதென யோசித்த போது ஸ்டேஷன் வெளியே  எங்கையாவது  ஜெராக்ஸ் கடை இருக்குமானு பார்த்து வரலாம்னு நடந்தோம்.

 

நம்ம ஊருலையே  காலங்காத்தால ஜெராக்ஸ்   கடை திறந்து வைப்பார்களா  என்பது சந்தேகம். அப்பேர்பட்டது எங்களுக்காக பீஹாரில் காலை ஏழரைக்கெல்லாம் ஜெராக்ஸ் கடை எங்க திறந்து வைக்க போராய்ங்கனு... நாங்கைந்து கயா தெருக்களில்

ட்ராலியை  இழுத்துக் கொண்டு நடந்ததில்.... வெற்றிகரமாக ஒரு கடையில்   ஆதார் கார்ட்  தம்பியோடது ஜெராக்ஸ்  எடுத்துட்டு திரும்பவும் ஸ்டேஷனுக்கு வந்து ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸ் காப்பியில் பிஎன்ஆர் மற்றும் செல்ஃபோன்  நெம்பர் எழுதி கொடுத்ததும் எங்களது பைகளை வாங்கிக் கொண்டு அரை மணி நேரம் முன்னதாக வருமாறு சொல்லி இருந்தார்.சுமார் எட்டு மணி அளவில் கயா ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தோம். முதலில் நாங்க போக  நினைத்த இடம் விஷ்ணு பாதம் கோவில். ஸ்டேஷனில்  இருந்து சுமார் 4கிமி தொலைவு இருக்கலாம்.

 

ஸ்டேஷன் உள்ளே விசாரித்ததில் பஸ்ஸுக்கு பதிலாக ஆட்டோவில் செல்ல பரிந்துரைத்தார்கள். அதற்கேற்ப ஸ்டேஷன் முன்பு நிறைய ஷேர் ஆட்டோக்கள் நிற்பதை பார்க்க முடிந்தது. ஒரு ஆட்டோகாரரிடம் விஷ்ணு பாதம் போகுமானு கேட்டு ஏறி உட்கார்ந்தோம்.

 

ஷேர் ஆட்டோ என்பதால் முன்பக்கம் பின் பக்கம் ஃபுல் ஆனதுதான் ஆட்டோ கிளம்பியது. ஒரு பதினைந்து  நிமிடம் பயணித்திருப்போம்.

 

ஒரு  இடத்தில் ஆட்டோகாரர் எங்களை இறக்கி விட்டு  கோவில் செல்லும் பாதையை காட்டி அதில் நடந்து போகச்   சொல்லி இருந்தார்.

 

நாங்களும் ஆட்டோவில் இருந்து இறங்கி விஷ்ணு பாத் கோவிலுக்கு போகும் வழியில்

நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு இடத்தில்  சூடாக பூரி   விற்றுக் கொண்டிருப்பதை பார்த்ததும் மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிடுவோம்னு  ரோட்டோர தல்லு வண்டி கடையில் ஆளுக்கொரு  ப்லேட்  புரி சொல்லி இருந்தோம்.

 

ஒரு தட்டில் சுடச் சுட மூன்று பூரியும் சுண்டல் குழம்பும் ஊற்றி கொடுத்தார்கள்.

சுவை  நன்றாக இருந்தது. ரெண்டு பேருக்கும் சேர்த்து ஐம்பது ரூபாயில் ஒரு வேலை உணவு  முடித்த திருப்தியில் பேசிக் கொண்டே கோவில் நோக்கி நடக்க ஆரம்பிக்க...

 

ஒருவர் தெலுங்கில் வந்து பேச ஆரம்பித்தார். உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் சொல்லுங்க செஞ்சு வெச்சிடலாம்னு சொல்லி கொண்டே எங்களுடன் நடக்க ஆரம்பித்தார்.

 

பரவாலையே நாம தெலுங்குதான்னு தெரிஞ்சுகிட்டு நம்ம கிட்ட பேசுராங்களேன்னு நினைச்சுகிட்டு பேசலாம்னு பார்த்தா...

தம்பியோ நிற்குற மாதிரி தெரியல.

 

கொஞ்ச தூரம் தெலுங்கில் பேசியவர் நின்று விட   அந்த இடத்தை இன்னொருவர் எடுத்துகிட்டு பித்ருக்களுக்கு  பிண்டதானம் செய்ரீங்கலானு ஹிந்தியில் கேட்டுட்டே உடன் நடந்து வந்தார். எங்களுக்கு அது மாதிரி எந்த ஒரு திட்டமும் இல்லாததால் தொடர்ந்து நடந்ததால் நாங்கைந்து ப்ரோகிதர்கள் வந்து எங்களை சூழ்ந்து கொண்டு மூதாதியருக்கு பிண்டதானம் செய்யச் சொல்லி கட்டாய படுத்தினார்கள்.

நாங்கள் இல்லை இல்லை சும்மா விஷ்ணு பாத் கோவில்  பார்க்க வந்தோம் சொல்லவும் அறே கோவில்    கொரொனாவினால் பந்த் ஆச்சு. கயா வந்தால் பிண்டம் கட்டாயம் கொடுக்கணும்  இது பிண்ட பூமி எங்களை சட்டை பிடித்து

மிரட்டாத குறை. என்னடா இப்படி வந்து மாட்டிக்கிட்டோம்.

எப்படியாவது அந்த பாண்டாக்கள் கூட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆகணும்னு

முயர்ச்சி எடுத்ததில் வேகமாக நடந்ததில் ஆள் நட மாட்டம் இல்லாத  ஓர்

இடத்திற்கு வந்து சேர்ந்தோம்...

 

அதன் பிறகு   ஒரு சிலரிடம்  கோவில் நெஜமாலுமே மூடி இருக்கிறதா என

விசாரித்ததில் ஆமாம் சொன்னார்கள்.

சரி பக்கத்துல ஒரு படித்துரை மாதிரி இருந்தது அதில் இறங்கி வரண்டு போன

பல்கூனி  ஆற்றில் இறங்கினோம்.

 

காசிக்கு வருபவர்கள்  கயாவில் இருக்கும் விஷ்ணுபாத் கோவிலுக்கு வந்து

தங்களது மூதாதையர்களுக்கு பிண்ட தானம் செய்து செல்வார்கள் போலும்.

 

கயாவில் பிண்டம் கொடுத்தால்  ஏழு தலைமுறையினருக்கு

சென்று சேரும்னு ஒரு நம்பிக்கை அதோடு கயாவோட  இன்னொரு சிறப்பு பெண்கள் 

இங்கு மட்டும்தான் பிண்டதானம் கொடுக்க முடியுமாம்.

 

கொரொனா காரணமாக  விஷ்ணு பாதம் கோவில்  பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு வந்த வழியிலே  திரும்பி  நடக்க ஆரம்பிச்சோம்.

போத் கயா போகலாம்னு ஒரு ஆட்டோகாரரை விசாரிக்க அங்கும் கொரொனா காரணமாக எல்லா கோவில்களுமே  மூடி இருப்பதாக சொன்னதை கேட்டதுமே அடுத்து  ஒரு செக்கண்ட் என்ன பண்ணனும்னு தோனல...

 

ஆசை ஆசையாக  புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்துக்கு கீழ உட்கார்ந்து நாமளும் தியானம் செய்து ஒரு சில விஷயங்களில் ஞானம்  பெருவோம்னு பார்த்தா...

 

விஷ்ணு பாத் கோவிலும் பார்க்க முடியல மஹாபோதி புத்தர் கோவிலும் மூடி

இருக்குன்னு கேள்வி பட்டதுமே ஒரு பக்கம் ஏமாற்றமும் அடுத்து என்ன பண்ணனும் என்ற குழப்பமும் ஒன்னு சேர வந்து சூழ்ந்து கொண்டது...

 

அப்படியே கொஞ்ச நேரம் ரோட்டோரமா நின்னதும் ஒரு தெளிவு கிடைச்சது. சரி

இவ்வளவு தூரம் வந்து விட்டோம் போத் கயா சென்று ஸ்டேஷனுக்கு செல்வோம் என முடிவு செய்து ஒரு ஆட்டோ காரரிடம் போத் கயா போகணும்னு சொன்னதும்

போத் கயாவில் இருந்து அடுத்து எங்கு போகனும்னு கேட்டார்.

 

ஸ்டேஷனுக்கு  சொன்னதுமே ஐநூறு ரூபாய் கொடுங்கள் போத் கயா சுற்றி காட்டி உங்களை  கயா ஸ்டேஷனில் இறக்கி விடுரேன்னு சொன்னார்.

 

என்னது ஐநூறு ரூபாயா பேரம் பேச ஆரம்பிச்சோம். முன்னூரு ரூபாய்னா ஆட்டோவில்

ஏறுகிறோம் சொன்னதும் அவர்  முதலில் ஒத்துக்கல. கொஞ்ச நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு இறங்கி வந்து முன்னூரு ரூபாய்க்கு ஒத்துக் கொண்டார்.

 

விஷ்ணு பாத் கோவில் இருக்கும் இடத்தில் இருந்து போத் கயா புறப்பட்டோம்.

இந்த பயணத்தில் தான்  பீஹார் சாலைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது. வழி நெடுக எங்காவது ஒரு பேருந்தாச்சும் கண்ணுல படுமானு பார்த்திட்டே போக... ஒன்னு கூட எதிர் படல.

 

அரை மணி நேர ஆட்டோ பயனத்திற்கு பிறகு ஆழ்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் ஆட்டோ நின்றது.

மஹாபோதி புத்தர் கோவில் பார்த்து  வருமாறு ஆட்டோகாரர் சொன்னார்.

 

எங்களுக்கு  வழி தெரியாது கூட வந்து கோவிலை காட்டுமாறு நாங்க சொல்ல ட்ரைவர்

ஆட்டோவில் இருந்து இறங்கி எங்களோடு நடக்க ஆரம்பித்தார்.

 

நாங்கைந்து பேரிடம் விஷ்ணு பாத் கோவில்  பகுதியில் போத் கயா பற்றி விசாரிக்க ஒரு மாசமா மூடி இருப்பதாக சொல்லி இருந்தாலும் ஒரு நம்பிக்கையில்  மஹாபோதி புத்தர்  கோவில் நுழை வாயில் வரைக்கும்   வந்து கோவில் மூடி இருப்பதை கண்கூடாக பார்த்து கொஞ்ச நேரம் அங்கு நின்று திரும்ப ஆட்டோவில் ஏறினோம்.

 

புத்தர்  பிறந்தது என்னவோ நேப்பாலில் இருக்கும் லும்பினி என்னும் பகுதியில். அவர்

ஞானம் பெற்றது இங்குதான்.  புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு போத் கயா

புனிதமான இடம் என்பதால் புத்த மதத்தை பிரதானமாக

பின்பற்றும்  நாடுகளைச் சேர்ந்த அரசாங்கம்  புத்தகயாவில் தங்களுக்கென ஒரு

புத்தர் கோவிலை கட்டி இருக்கிறது.

 

  தாய்லாந்து, வியட்னாம், ஜப்பான், திபெத்  என எந்த நாட்டவர் கோவிலுக்கு சென்றாலும் கொரொனா காரணமாக கோவில் மூடி இருக்கிறது.
 

இனி போத் கயாவில் பார்க்க எதுவும் இல்லாததால் நேராக  ட்ரைவரை கயா ஸ்டேஷனுக்கு போக சொல்லிட்டோம்.

 

காலை எட்டு மணிக்கு கயா ஸ்டேஷனில் புறப்பட்டு பதினோரு மணிக்கெல்லாம் கயா ஸ்டேஷனுக்கு திரும்ப வந்துட்டோம்.

மதியம் 2:50க்குதான்  எங்களுக்கு ரயில்  என்பதால் ஸ்டேஷனில் சும்மா உட்கார்ந்திருந்தோம்.

 

  ஒரு பன்னிரெண்டரைக்கு ஸ்டேஷனில் இருந்து வெளியே சாப்பிட வந்தால் கயா ஸ்டேஷனுக்கு எதிரில்  சுஜாதா  ரெஸ்டாரண்ட் பார்க்க நன்றாக இருக்க உள்ளே சென்றோம்.

 

. மதிய  உணவு  முடிச்சதும்  க்லோக் ரூம்  சென்று  காலையில் கொடுத்த பைகளை

வாங்கிக் கொண்டு எங்களது அடுத்த டெஸ்டினேஷனான  வாரணாசிக்கு செல்ல

ரயிலுக்காக காத்திருந்தோம்.

Tuesday, April 20, 2021

கொல்கத்தாவில் 24 மணி நேரம்...

கூடூரில்  இருந்து ஹவுரா வரை சுமார் 1500 கிலோமீட்டர்.  26 மணி நேரம் த்ரி டயர் ஏசியில் தொடர் பயணம் செய்து சனிக்கிழமை இரவு பதினோரு மணிக்கு ஹவுரா ஜெங்ஷன் வந்து சேர்ந்தோம்.


ரயிலை விட்டு  இறங்கி நடக்கும்போது நாங்கள் வந்த   சென்னை-ஹவுரா மெயில் பதினேழாவது ஃப்லாட்பாரத்தில் வந்திருக்கிறது என்கிற அறிவிப்பை  கேட்டதுமே அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு.


நம்ம  சென்னை சென்ட்ரலில் வெளியூர் செல்லும் ரயில்களுக்காக  பத்தும் புறநகர் ரயில் சேவை பயண்பாட்டிற்கு ஐந்து என  மொத்தம்

பதினைந்து ஃப்லாட்ஃபாரம்ஸ் மட்டுமே இருக்கிறது.


ஆனால்  இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் பரபரப்பான ரயில் நிலையமான இந்த ஹவுரா  ஜென்ஷனில் ஆரம்பத்தில் 15 ஃப்லாட்ஃபார்ம்ஸ் மட்டுமே கொண்டிருந்ததாம். நாளுக்கு நாள்  அதிக எண்ணிக்கையிலான ரயில்களும் மக்களும் ஹவுரா ஜென்ஷனுக்கு வந்து செல்வதால் மேலும்  எட்டு    ஃப்லாட்ஃபார்ம் திறந்து  ஹவுரா ஜென்ஷனில் தற்போது 23  ஃப்லாட்ஃபார்ம்ஸ் இருக்கிறதாம்.


ஒரு பக்கம் எனக்கு ஹவுரா ஜென்ஷன் சுற்றி பார்க்க  ஆசையாக இருந்தாலும்    மதியம் குர்தா ரோட் ஜெங்ஷனில் சாப்பிட்ட பிரியானி தவிர நடுவில் எதுவும் சாப்பிடாததால் ஒரு ஃபுட் கோர்டில் நுழைந்து என்ன இருக்கிறதென கேட்டு ரொட்டியும் எக் கரியும் வாங்கி ஒரு டேபுலில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.

ரொட்டியின் டேஸ்ட் சுமாராக இருந்தது தொட்டுக்க வாங்கிய எக் கரியும் சப்புனு இருந்தது.


பொதுவாக  நம்ம ஊரில் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் ஆட்டோ டாக்சினு நாங்கைந்து பேர் வந்து நம்மை சூழ்ந்து விடும் மாதிரியான சம்பவங்கள் ஹவுரா ஜென்ஷனை விட்டு வெளியே வந்தபோது எதுவும் எங்களுக்கு ஏற்படல.


அமைதியாக மஞ்சள்  நிற   அம்பாசிடர் கார்கள் ஸ்டாண்டில் வரிசையாக நின்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே

  முன்பதிவு செய்த ஓயோ ரூமும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பதால் கூகுல் ஆண்ட்டி உதவியோடு நடக்க ஆரம்பித்தோம்.


நிசப்தமான  கொல்கத்தா சாலையில் கொஞ்ச  தூரம் வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தோம். அதன் பிறகு ஆண்டி நீங்கள்

போற வழி தவறுன்னு சொல்லுது. அந்த சமயம் யாரிடம் ஆவது உதவி கேட்கலாம்னு

பார்த்தால்  மக்கள் நடமாட்டம் சாலையில் சுத்தமாக இல்லை. சரி ஆட்டோ எதாவது வந்தால் ஏறி போய்விடலாம்னு பார்த்தால் இங்கு எல்லாமே கார்கள்தான்.


அதுவும் நம்ம ஊர் பக்கம் முழுவதுமாக ஒழிந்து போன அம்பாசிடர் கார்கள்தான்

இங்கு அதிகமாக பயண்பாட்டில் இருக்கிறது.


ஒரு ரெண்டு நிமிஷம்  என்ன பண்ணலாம்னு சாலை ஓரம் நின்றிருப்போம். எங்களுக்கு முன்னாடி ஒரு கார்   வந்து நின்றது.

எங்க போகனும்னு   ஹிந்தியா இல்ல பெங்காலி எந்த மொழியில் கேட்டார்னு தெரியல. தம்பி அவனது ஃபோனில் ரூமுக்கு கூகுல்

மேப்பில்  காட்டிய வழியை காட்டினான் அதை பார்த்த கார் ட்ரைவர் 150 ரூபாய் கொடுங்கள் உங்களை  இறக்கி விடுகிறேன்  சொன்னார்.


நடு ராத்திரியில மொழி தெரியாத ஊருல எதுக்கு வம்பு கேட்டத கொடுத்திடுவோம்னு ட்ரைவர் கேட்டதுக்கு சரினு சொல்லி

காரில் ஏறிகிட்டோம்.

  வெறும் மூனே நிமிஷம்தான் ரூம்  எடுத்த ஹவுரா மார்கெட் பகுதியில் எங்களை இறக்கிவிட்டு 150 ரூபாய் வாங்கிக்கொண்டு  சென்றார்.


காரில் ஏறும்போது எதுவும் பேசாத  தம்பி இறங்கும்போது 150 ரூபாய் அதிகம் 100 ரூபாய்  வெச்சுக்கோங்க சொன்னால்

ட்ரைவர்  ஒத்துக்கவே இல்ல. நடந்தாலே பத்து நிமிஷத்துல வந்து சேர இடத்துக்கு

150 ரூபாய்  கொடுத்ததெல்லாம் ரொம்ப அதிகம்தான்...


நைட் ரூம் கண்டு பிடிச்சு தூங்க லேட் ஆனாலும் ஏப்ரல் 11 ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏழு மணிக்கு முழிப்பு வந்திடுச்சு.

மொதல்ல நா குளிச்சு ரெடி ஆக  அப்பறம் தம்பி ரெடி ஆனதும் சரியா காலையில் எட்டு மணிக்கு அறையை சாத்திவிட்டு

ஹவுரா மார்கெட் பகுதியில் நடக்க ஆரம்பிச்சோம்.


நைட் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில்  இப்போ ஒருவர் மீது இன்னொருவர் மோதிவிடும் அளவு மக்கள் நடமாட்டம் இருப்பதை

கவனிக்க முடிந்தது.

அடுத்ததாக நம்ம ஊரில் ஆட்டோக்கள்  ஓடுவது போல  இங்கு ரிக்‌ஷாக்கள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதை பார்க்க முடிந்தது.


  கடைகள்,  பழைய கட்டிடங்களை பார்த்துக்கொண்டே கூகூல் ஆண்ட்டி கூட்டிட்டு

போகும் சந்து பொந்தில் எல்லாம் நடந்து  ஹவுரா பிரிட்ஜ் இருக்கும் பகுதியை அடைந்தோம்.


கொல்கத்தா  செல்பவர்கள்  தவறாமல்  பார்க்க நினைக்கும் ஹவுரா பிரிட்ஜ் எண்ட்ரென்ஸ் பகுதிக்கு அருகில் நின்னுஒரு போட்டோ எடுத்துக்கலாம்னு மாஸ்க் கழற்றிவிட்டு கேமிராவுக்கு   ஃபோஸ் கொடுப்பதற்குள்ளாக அந்த  இடத்தில் ஃபோட்டோ எடுக்க கூடாதென ட்ராஃபிக் போலீஸ் சொல்லவும் வேறு வழி இல்லாமல்    அந்த இடத்தை விட்டு நகர்ந்து ஹவுரா பிரிட்ஜ் மேலே நடக்க துவங்கினோம்.


  ஹவுரா மற்றும் கொல்கத்தா  நகரங்களை இணைக்கும் ஹூக்ளி ஆற்றின் மேல் கட்டப்பட்ட இந்த  பாலம்  ஹவுரா பிரிட்ஜ் என அழைத்தாலும்   ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக ரவீந்திர சேது என்று பெயர் மாற்றப்பட்டாலும்

   ஹவுரா பிரிட்ஜ் என்றே அனைவராலும் பிரபலமாக இன்றும் அறியப்படுகிறது.

ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்தாலே பத்து நிமிடத்திற்குள்ளாக பாலத்தைக்  கடந்துவிடலாம்.  ஹவுரா பிரிட்ஜ்  பார்த்து முடிச்சதை அடுத்து நாங்கள் போக நினைத்த இடம் காளிகாட் காளி கோவில்.


  ஊபர் அல்லது ஓலா எதில் ஆவது புக் செய்து போகலாம்னு பார்த்தால் ரெண்டுலையுமே 200ரூபாவுக்கு மேல காட்டுறத பார்த்து

என்ன பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே முன்னுக்கு நடந்தால்   டாக்சி ஒன்னு நிற்பதை பார்த்து ட்ரைவரிடம் காளிகாட்  கோவிலுக்கு

போகணும்னு சொன்னதும் 150 ரூபாய் கேட்டார்.


200க்கு  150 எவ்வளவோ பரவாலையினு  காரில் ஏறி உட்கார்ந்தோம்.

இருவது நிமிடம் பயணம் செய்திருப்போம்.   காரில் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு   பத்து அடி முன்னாடி எடுத்து வைத்ததுமே ஒரு குட்டி தெரு மாதிரி ஒன்னு வந்தது.


அதற்குள் நுழைந்ததுமே  செருப்புகளை விடும் இடத்தில்  எங்களது செருப்புகளை விட்டு பக்கத்தில் இருக்கும் குழாயில் கால்களை

நனைத்துக் கொண்டு குறுகலான அந்த தெரு வழியாக தொடர்ந்து நடந்து இருபுறமும் இருக்கும் கடைகளைத் தாண்டி கோவிலுக்குள் சென்றோம்.


51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த கொல்கத்தா காளி தேவியை  வரிசையில்  கூட்டம் அதிகமில்லாத காரணத்தால் பத்து

நிமிடத்திற்குள்ளாகவே  தரிசித்து விட்டோம்.

அடுத்து எங்கு போகலாம்னு தம்பி கேட்டபோது விக்டோரியா மெமோரியல் போகலாம்னு சொன்னேன்.


பொதுவாக  ஊபர் அல்லது ஓலா சேவைகள் இருக்கும்  ஊர்களில் மொழி தெரியாட்டியும் தைரியமாக சமாளித்து விடலாம். நாங்களும்

  காளிகாட் கோவிலில் இருந்து ஓலாவில் கேப் புக் செய்து விக்டோரியா மெமோரியல்  இருக்கும் இடத்தை அடைந்தோம்.


பதினோரு மணிக்குத்தான்  டிக்கெட் கொடுத்து உள்ளே அனுமதிப்பார்கள் என தெரிந்ததுமே பக்கத்தில் இருந்த ஒரு கேண்டினுக்குச் சென்று

ரொட்டியும் தொட்டுக்க ஏதோ ஒரு சப்ஜியும் சாப்பிட்டோம். சுவை நன்றாக இருந்தது.


பதினோரு மணி ஆக இன்னும் அரை மணி  நேரம் இருந்ததால் விக்டோரியா மகாராணியின் நினைவாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான

பளிங்கு மாளிகை சுற்றிலும்  இருக்கும் பூங்காக்களைப் பார்க்க சென்றோம்.


சரியாக பதினோரு மணி அளவில் டிக்கெட் கவுண்டர் திறந்து விக்டோரியா மெமோரியல்  உள்ளே போக டிக்கட் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

டிக்கெட் ஒருவருக்கு இருவது ரூபாய். டிக்கெட் வாங்கியதை அடுத்து உள்ளே இருக்கும் அருங்காட்சியகம் எல்லாம் பார்த்து வெளியே வரவும் மதியம் பன்னிரெண்டு ஆனது.

அடுத்து எங்கு போகலாம்னு தம்பி கேட்டபோது இந்தியன் மியூசியம் போகலாம்னு சொன்னதுக்கு அது வேணாம்னு சொன்னான்.

சரி வேறு எங்கு போகலாம்னு பார்த்தப்போ எனக்கும் ஒன்னும் தெரியல அவனுக்கும் ஒன்னும் தெரியல.

அந்த நொடி  எனக்கு  புரிய ஆரம்பிச்சது புதிதாக ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால் குறைந்தபச்ச ஆயத்தம்  அவசியம் தேவைபடும்னு.


  காலையில் இருந்து ஹவுரா பிரிட்ஜ், காளிகாட்  கோவில் மற்றும் விக்டோரியா மெமோரியல்   பார்த்த வரைக்கும் போதும் பார்க் ஸ்ட்ரீட் போய்  ஏதாவது ஷாப்பிங் செய்து அங்கு இருக்கும் ஏதாவது ரெஸ்டாரண்ட்ஒன்றில் சாப்பிட்டுவிட்டு ரூம் திரும்பலாம்னு போனால் ஷாப்பிங் ஏறியாவுக்கான  அறிகுறி எதுவும் இல்லாமல் பார்க் ஸ்ட்ரீட் அமைதியாக வெறுச்சோடி இருந்தது. காரில் செல்லும்போது டெல்லியில் இருக்கும் சரோஜினி நகர் மார்க்கெட் ரேஞ்சுக்கு யூகித்திருந்தேன். கொரொனாவா இல்ல சட்டமன்ற தேர்தல் காரணமானு தெரியல. ஏதோ ஊரடங்கு போடபட்ட

பகுதியில் சுற்றினால் எப்படி இருக்கும் அது மாதிரியான அனுபவம் எங்களுக்கு பார்க் ஸ்ட்ரீட் தந்தது.


அங்கேயே கொஞ்ச  தூரம் நடந்ததில் பஞ்சாபி  ஹோட்டல் பார்த்ததுமே உள்ளே போய் மதிய உணவை முடித்து கொண்டு நேரா ரூமுக்கு வந்துவிட்டோம்.


தக்ஷிணேஷ்வர் காளி கோவில் மற்றும் பேலூர் மடம் இரண்டையும் ஈவினிங் ஒரு நாலு

மணிக்கு கிளம்பி போய் பார்க்கலாம்னு முடிவு செய்து   மதியம் கொஞ்ச  நேரம்   ரூமில் ரெஸ்ட் எடுத்தோம்.

நாலு மணிக்கு முகம் கழுவி பேலூர் மடம் ஆறு மணிக்கெல்லாம் மூடிடுவார் என்பதால் முதலில் அங்கு சென்றோம்.


  ஹூக்ளி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள பேலூர் மடம் பார்த்ததும் அடுத்ததாக ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள தக்ஷிணேஷ்வர் காளி கோவில்  பார்க்க சென்றோம்.

காளியின் ஒரு அம்சமான பவதாரிணி அம்மனை தரிசிக்க நீண்ட வரிசை இருந்தது.


கோவிலுக்கு வெளியே வந்ததும் மட்கா சாய் குடித்து ஆளுக்கு     ரெண்டு தோசை

 சாப்பிட்டுவிட்டு கொல்கத்தாவில் பார்த்த வரைக்கும்  போதும்னு பட்டதால் அன்று இரவு 11:30க்கு கயா செல்ல ரயில் முன்பதிவு செய்திருந்ததால்

  நேராக   ரூமுக்கு வந்திட்டோம்.


நைட் ஒரு ஒன்பதரை அளவில் ரூம் செக் அவுட் செய்துவிட்டு ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். திடீரென ரிக்‌ஷாவை பார்த்ததுமே

ஏறி போகணும்ன்னு ஆசை வரவும் ஒரு ரிக்‌ஷாவை அழைச்சு  ஹவுரா ஸ்டேஷனுக்கு போகணும்னு சொன்னதும் 40 ரூபாய் கேட்டார்.


நாங்கலும் ரிக்‌ஷாவில் ஏறி உட்கார ரிக்‌ஷாவை ஓட்டுபவர்    ரிக்‌ஷா மிதிக்க ஆரம்பிக்கவும் சின்ன வயதில் ரிக்‌ஷாவில் பயணம் செய்த நினைவுகள் ஞாபகத்துக்கு வரவும் முப்பது வயதில் ரிக்‌ஷாவில் செல்வது ஒரு பக்கம்  புதுமையான அனுபவமாக இருந்தாலும் மேடான பகுதியில் ரிக்‌ஷாகாரர் மிதிக்க முடியாமல்   உடம்பில் இருக்கும் ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி  அவர் மிதிப்பதை பார்க்கும்போது  கஷ்டமாக இருந்தது.

பேசாம கீழே இறங்கிட்டு அவருக்கான காசை கொடுத்துவிட்டு ஸ்டேஷன் நோக்கி நடக்கலாம்னு தோனினாலும் இன்னொரு பக்கம்

உட்காரு அதெல்லாம் அவர்களுக்கு  பழக்கப் பட்டதுன்னு மனசு தனக்கு தானே சமாதான படுத்திக்கும் நேரத்தில் ஹவுரா ஸ்டேஷன் முன்பு வந்து இறங்கிட்டோம்.


ட்ரைன் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருப்பதால் பக்கத்தில் இருக்கும் ஹவுரா  பிரிட்ஜை இரவு நேரத்தில் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட்டு வருவோம் எனச் சென்றோம்.


கொஞ்ச தூரம் மட்டும் ஹவுரா  பிரிட்ஜில் நடந்து   முழுவதுமாக நடக்க பொறுமை இல்லாததால் ஸ்டேஷனுக்கு  வந்திட்டோம்.


கயா செல்வதற்கான எங்களது   ட்ரைன் எந்த ஃப்லாட்பாரத்தில் இருந்து புறப்படும் என்பதை பார்த்து அங்கு சென்று   காத்திருந்தோம்.

சிறிது நேரத்தில்  ஃப்லாட்பாரத்திற்கு ட்ரைன் வந்ததும் எங்களது சீட்டில் ஏறி படுத்தாச்சு.

சரியாக இரவு பதிணொன்னரைக்கு நாங்கள் ஏறி இருக்கும் ஹவுரா - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ஹவுரா ஜெங்ஷனில் இருந்து புறப்பட்டது


24 மணி நேரம் கொல்கத்தாவில் எங்களுக்கு கிடைத்த  அனுபவத்தோடும் நினைவுகளோடும் மேற்கு வங்காளத்திடம் இருந்து  விடை பெற்று மூன்று மாநில பயணத்தில் இரண்டாவது மாநிலமான  பீகாரில் இருக்கும் கயா நோக்கி  பயணம் செய்தோம்.

Monday, April 19, 2021

கூடூர் டு ஹவுரா.

  கூடூர் நிறுத்தத்தில் நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ்ல் இருந்து இறங்கும்போது இரவு 8 மணி ஆனது. அங்கிருந்து இரவு ஒன்பது மணிக்குத்தான் ஹவுரா செல்ல   அடுத்த ரயில் என்பதால் முதலில் கொண்டு வந்த தயிர்சாதம் சாப்பிடுவோம்னு ரயிலை விட்டு இறங்கிய ப்லாட்பாரத்தில் பயணிகள் உட்கார போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.


சுமார் எட்டு ஐம்பது அளவில்  எங்களது ரயிலுக்கான அறிவிப்பு  வந்ததை யடுத்து நாங்கள் இருந்த ஏழாவது ஃப்லாட்பாரத்தில் இருந்து

ரயில் வரும் மூன்றாவது ஃப்லாட்பாரம் நோக்கி  நடந்தோம்.


இரவு 7:15க்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்ட சென்னை-ஹவுரா மெயில் 130 கிமீ  பயணித்து   நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு  கூடூர் ஜென்ஷனுக்குள் நுழைந்தது.


  த்ரி டயர் ஏசியில் ஹவுரா வரை முன்பதிவு செய்திருந்ததால் B1 பெட்டியில் எங்களுக்கு சீட் ஒதுக்க பட்டதால்

  B1 வரும் இடம் பார்த்து  நின்றால் அங்கு B1க்கு பதிலாக வேறு ஒரு பெட்டி வந்திருந்தது.


இரண்டு நிமிடங்கள் மட்டுமே   நிற்கும் அந்த நிறுத்தத்தில் உடனடியாக B1 பெட்டியை தேடி  வேகமாக நடக்க ஆரம்பித்தோம்.

ஒருவழியாக  B1 கண்டு பிடித்து  நாங்கள் ரயிலில் ஏறவும் ரயில் புறப்படவும்

சரியாக இருந்தது.


காலையில் செல்ஃபோனுக்கு எஸெமெஸ் மூலம் கொரோனா காரணமாக  ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி போர்வை வழங்கப்படாது என தகவல் வந்ததால் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த போர்வையை போர்த்திக்கொண்டு  படுத்தாச்சு.


ஏப்ரல் 10 சனிக்கிழமை முழிப்பு வந்த போது கண்களை திறந்து பார்த்தால் வெளியே நன்றாக விடிந்திருந்தது. நேரம் ஏழாகி  இருந்தது.

விசாகப்பட்டினம் ஜென்ஷன்  வருவதற்கு முன்பாகவே காலை கடன்களை

முடித்துவிடுவோம் என எழுந்துரித்து கழிப்பறைக்குள் புகுந்தாச்சு.


காலை 8:05க்கு விசாகபட்டினத்திற்கு வந்து 8:25க்கு  புறப்பட வேண்டிய ரயில் அன்றைய தினம்   பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே

விசாகப்பட்டினம் ஜென்ஷனுக்கு வந்துவிட்டது.


அரை மணி நேரத்திற்கும் மேலாக சமயம் இருப்பதால் ரயிலில் இருந்து இறங்கி சுற்றி பார்ப்போம் என  ப்லாட்பாரத்தில் இறங்கி பக்கத்தில் ஃபுட் பிரிட்ஜ்  இருந்ததால் அதில் ஏறி முதல் ஃப்லாட்பாரத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.


ஒரு கட்டத்தில்  ஃப்லாட்பார்ம் கடைசிக்கு வரவும் தொடர்ந்து நடக்க ஃப்லாட்பார்ம் இல்லாததால் வந்த வழியிலே திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.
எப்படியும் இன்னும் இருபது நிமிடங்களுக்கும் மேலாக ரயில் புறப்பட சமயம் இருப்பதால் காலை உணவு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவோம் என ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்ததில் மெயின் ரோட் வந்தது.

வெளியே ஏதாவது  ஹோட்டல் இருந்தால் ப்ரேக்ஃபாஸ்டுக்கு எதையாவது வாங்குவோம் என எதிர் பார்த்து  வந்த எங்களுக்கு ஏமாற்றம்.


விசாகப்பட்டினம்  சாலை ஓரமாக  நடந்த போது ஒரு தல்லுவண்டியில் சுடச் சுட தோசை விற்றுக் கொண்டிருப்பதை பார்த்ததும்

இரண்டு  தோசை பார்சல் கட்டித் தரச் சொன்னோம்.


ஸ்டேஷனில் இருந்து  எங்களது ரயிலுக்கான  அறிவிப்பு வரும்போதெல்லாம் எங்கே புறப்பட தயாராக இருக்கிறது என்கிற அறிவிப்பு வருமோ ஒரு வித பயத்துலையே சாலையில் ஓடும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டே தல்லுவண்டி முன்னால் நின்றுக் கொண்டிருந்தோம்.


8:15க்கு என்னவோ      இரண்டு மசால் தோசை பார்சல்களை தல்லுவண்டி காரர் எங்களிடம் கொடுத்ததுதான்

  வந்த வழியிலே ட்ரயின் பிடிக்க நடந்தால்  ஒரு ஆர்.பி.எஃ அதிகாரி  தூரத்தில் இருந்து  அந்த வழியாக ஸ்டேஷனுக்குள் நாங்கள் வரக்கூடாதென சைகை காட்டினார்.


கடைசி நிமிஷத்தில் இது என்ன புது பிரச்சனைனு  சாலையில் கொஞ்ச தூரம் நடந்து மெயின் எண்ட்ரன்ஸ் வழியாக ஸ்டேஷனுக்குள் நுழைந்து ஏழாவது ஃப்லாட்பாரத்தில் நிற்கும் எங்களது ரயிலில் ஏற ஓடியதில் மூச்சு வாங்கியதில் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்கிற சூழல்

வந்தபோதும்   ட்ரைனை மிஸ் பண்ணிட்டால் எல்லாம் போச்சுன்னு பயத்துலையே எங்கும் நிற்காமல்   ரயிலில் வந்து ஏறினோம்.


  விசாகப்பட்டினத்தில் ரோட்டோர தல்லு வண்டி கடையில் வாங்கிய தோசை சுமாராகத்தான் இருந்தது. சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்தில்

விஜயநகரம் நிறுத்தம் வந்தது.


இந்த மூன்று மாநில பயணம் முற்றிலுமாக  எனது முந்தைய பயணங்களில் இருந்து மாறு பட்டதென்றே சொல்லலாம்.

ரயில் மற்றும் விமான டிக்கட் முன்பதிவு செய்ததை தவிர வேறு எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல்  வீட்டில் இருந்து கிளம்பிட்டோம்.

அப்போதுதான்  கொல்கத்தாவில் அன்று இரவு தங்க  ரூம்  oyo வில் தேட ஆரம்பித்தோம்.


நாங்கள் ஹவுரா ஜெங்ஷனுக்கு     அருகில் அன்று இரவு தங்க ஓயோ ரூம் பார்க்க எல்லாம் நான்கு கிலோமீட்டர்  ஐந்து கிலோமீட்டர்

தொலைவில்தான் ரூம்ஸ் காட்டுகிறது.


இதுவேலைக்கு ஆகாதென  ஓயோ எக்ஸிகிட்டீவ் மூலம் ரூம் புக் செய்வோம்னு ஃபோன் செய்து ஒரு ரூம்

ஹவுரா ஜென்ஷனில்  இருந்து என்னூரு மீட்டர் தூரத்தில் இரண்டு நாட்களுக்கு ரூம் புக் செய்தோம்.


பொதுவாக ஓயோ பொறுத்த வரையில் செக்-இன் மதியம் பன்னிரெண்டு மணிக்கும்

செக்-அவுட் காலை பதினோரு மணிக்கும் இருக்கும்.


நாங்கள்  கொல்கத்தாவில் இருக்க போவதோ சரியாக 24 மணி நேரம். ஆனால் இரண்டுநாட்கள்  ரூம் புக் செய்ய காரணம் ஏப்ரல் பதினொன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை  கொல்கத்தா நகரில் சுற்றும்போது கூடவே

ஆளுக்கு ஒரு பையை முதுகில் சுமந்து கொண்டு ட்ராலி பேகை இழுத்துக் கொண்டு போவதால்

கடுப்பாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்பதால் ரூமில் போட்டு சென்றால்

நிம்மதியாக  சுற்றி பார்க்கலாம் அப்படீங்கிற ஒரு கணக்குதான்.

இதநாள்  ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவு ஆனாலும் நிம்மதியாக கொல்கத்தா நகரில்

சுற்றுவது எனது முடிவு.


கொல்கத்தாவில் ரூம்   கிடைத்ததை அடுத்து அதே மாதிரி எக்ஸிகிட்டீவ் மூலமே பேசி    வாரணாசிலையும்  இரண்டு நாட்களுக்கு ரூம் புக் செய்தாச்சு.

கயாவை பொருத்தவரையில் நேரில் சென்று ஏதாவது ஒரு ரூம் எடுத்துக்குவோம்னு  விட்டாச்சு.


ரூம் பஞ்சாயத்து எல்லாம் முடிச்சதும் வண்டி எங்க போய்ட்டிருக்குன்னு பார்க்க ஸ்ரீகாகுலம்  நிறுத்தம் வருவதாக தெரிந்தது.

நேரம் அப்போது காலை பத்தரைதான் ஆகி  இருந்தது.


எங்களுக்கு எதிரிலும் பக்கத்திலும் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் பெங்காலிஸ்

அதில் ஒரு பெங்கால் பெண்ணும் இல்லையேனு ஒரே வருத்தம்:(((


அதனால் என்ன  இருக்கவே இருக்குராங்க #பெங்கால் குரள் ஷ்ரேயா கோஷல்

அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அவரது பாடல்கள்   துணையாக இருந்தது.


மதியம் சாப்பாடு பொறுத்த வரையில் ரயிலில்  வாங்குவதற்கு  பதிலாக ஆன்லைனில் ஐயார்சிடிசி தளம் மூலம் ஏதாவது  ஒரு ஸ்டேஷனில்  லன்ச் ஆடர் செய்வோம்னு பார்த்தபோது  குர்தா ரோட் ஜென்ஷனில்தான் சாப்பாடு கிடைக்கும்னு

  தெரிந்ததும் அங்கு இருக்கும்    ரெஸ்டாரெண்ட்களில் ஹைதராபாத் ஹவுஸ் பெயர் பார்த்ததுமே இரண்டு

ஹைதராபாத் பிரியானி ஆடர் செய்தோம்.

பேமண்ட் செய்ததும் ஆடர் கன்ஃபார்ம் ஆனதுமே ஒருவர்  செல்ஃபோனில் அழைத்து ஆடர் உறுதி செய்து கொண்டார்.


வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு  கூடூர் நிறுத்தத்தில் ரயிலில் ஏறிய நாங்கள் சனிக்கிழமை மதியம் பணிரெண்டரைக்கு ஆந்திராவின் கடைசி நிறுத்தமான இச்சாபுரம் அடைந்தோம்.


  அதன் பிறகு ஒரு  பத்து நிமிடத்தில் ஒடிசாவில் நுழைந்து பிரம்மாபூர், பாலுகையான்

வழியாக பயணித்து மதியம் இரண்டரைக்கு குர்தா ரோட் ஜென்ஷனை அடைந்தோம்.


தினமும் ஒரு மணிக்கெல்லாம் சாப்பிடும் வழக்கம் கொண்ட  எனக்கு அன்றைய தினம் பிரியானி சாப்பிட போகிறேன் என்று தெரிந்ததில் இருந்து

கூடுதலாக  பசி எடுக்க ஆரம்பித்திருந்தது.


நாங்கள் குர்தா ரோட் வந்தும் யாரும் எங்களிடம் ஆடர் செய்த சாப்பாட்டை கொண்டு வராததால் பசியோடு காத்திருக்க

ஒருவர் வந்து  கொடுத்துச் சென்றார்.


குர்தா ரோட் ஜென்ஷனில் இறங்கலாம்னு ஆசை ஆனால் சாப்பாடு வந்துவிட்டதால் மொதல்ல பிரியானி  முக்கியம் என்பதால்

பூரி ஜெகன்நாதரை  தரிசிக்க போக எப்படியும் ஏதோ  ஒரு நாள்  இங்கு இறங்கிதான் போகனும் என்பதால் அப்போ பார்த்துக்கலாம் இப்போ பிரியானி

  பார்சல் திறந்து சாப்பிட ஆரம்பிச்சோம்.


குர்தா ரோட் ஜென்ஷனில் இருந்து ஒரு  பத்து நிமிடத்தில் ஒடிசா மாநில தலைநகரமான புவனேஸ்வர் வந்தது. அங்கும் ரயில் ஒரு ஐந்து நிமிடம் நின்றிருக்கும்.


காலையில் இருந்து உட்கார்ந்து உட்கார்ந்து முதுகு வலியும் இடுப்பு வலியும் வந்ததால்  கொஞ்ச நேரம் படுத்துக்குவோம்ன்னு பர்த் போட்டு படுத்தாச்சு.

மாலையில் முழிப்பு வந்த போது பார்த்தால் இருட்ட துவங்கி விட்டிருந்தது.


இரவு  திரும்பவும் ஐயார்சிடிசி தளத்தில் எந்த நிறுத்தத்தில் உணவு கிடைக்கும்னு பார்த்தபோது கரக்பூரில் மட்டுமே   ரெஸ்டாரண்ட் இருப்பதாக காட்டியது.


நமக்கு தெரிந்த  பெயர் எதுவும் இல்லாததால் ஹாட் பாக்ஸ்  என்கிற ரெஸ்டாரண்ட் தேர்ந்தெடுத்து ஆறு ரொட்டியும்

கடாய் பட்டர் பன்னீரும் ஆடர் செய்திருந்தோம்.


இரவு எட்டே முக்காலுக்கு  ரயில் கரக்பூர் ஜென்ஷனுக்கு வந்தது.

இரண்டு நிமிடங்கள் மூன்று நிமிடங்கள் என நேரம் ஆக ஆக யாரும் வந்து நாங்கள் ஆடர் செய்ததை கொண்டு வந்து கொடுக்காததால்

ஆடர் செய்தபோது இருந்த எண்ணுக்கு கால் செய்து சொன்னால்  அவர்களது டெலிவரி பாய்  வந்து கொண்டிருக்கிறார் என   பதில் வந்ததை அடுத்து போன் கட் செய்த அடுத்த இரண்டு நிமிடத்திற்குள்ளாக கரக்பூரில் இருந்து  ரயில் புறப்பட்டுவிட்டது.


கடைசி  நொடி வரைக்கும் யாராவது வந்து கொடுப்பார்கள் என  எதிர்பார்த்து காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றம்.


திரும்பவும் கால் செய்து எங்கே உங்களது டெலிவரி பாய், ட்ரைன் கிழம்பிடிச்சு சொன்னால் கால் துண்டித்துவிட்டார்கள்.

அதற்கு மேல் என்ன  செய்வதென்று தெரியல.

முன்னூரு ரூபாய் போச்சுனு  நினைச்சுகிட்டு

ஹவுரா ஜென்ஷனில் இறங்கியதும் எதையாவது வாங்கி சாப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டோம்

சரியாக இரவு பதினோரு மணிக்கு ஹவுரா ஜென்ஷனில் பதினேழாவது ஃப்லாட்பாரத்தில்  இறங்கினோம்.

Sunday, April 18, 2021

திருப்பதி டு கூடூர்.

                        

இது மூன்று மாநில பயண தொடரின் இரண்டாம் பதிவு என்பதால்  முதல்

 பதிவை

வாசித்து இதை தொடரவும்.

இவ்வருடம் பிப்ரவரி மாதம் இருக்கும். ஏப்ரல் மாதம் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பதை கேள்வி பட்டதுமே உடனடியாக எங்கு போகலாம்னு பயண திட்டம் போட ஆரம்பித்தோம்.


இலங்கையில் ஆரம்பித்து கடைசியில் இ    ந்தியாவிற்குள் மூன்று மாநில பயணம் போக முடிவு செய்தோம்.


ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை மதியம்-ஒரு மணி.


தினமும் அலுவலகத்தில் அஷ்வினி மேடமும்  நானும்லன்ச் சாப்பிட போகும் நேரம் அது.

அன்றைய தினம் எனக்கு மாலை 6:25க்கு திருப்பதியில் இருந்து கூடூர் செல்ல மூன்று மாநில பயணத்தின் முதல் ரயில் என்பதால் அதை பிடிக்க மதியமே திருத்தணியில் இருந்து கிளம்பினால் தான் ரயில் பிடிக்க சரியாக இருக்கும் என்பதால் மேனேஜரிடம் பர்மிஷன் கேட்டு கடைசியாக மேடமிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்புவோம்னு டைனிங் ஹால் சென்று அஷ்வினி மேடத்தின் ஹேப்பி ஜெர்னி வாழ்த்துக்களோடு திருப்பதி நோக்கி புறப்பட்டேன்.


இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு திருப்பதி பேருந்து நிலையத்தில் இறங்கி பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்து

 மதியம் எதுவும் சாப்பிடாததால் முதலில் வயிற்றை கொஞ்சம் கவனித்து விட்டு பிறகு குளித்து தயார் ஆகி

 ஐந்துநாள் பயணத்திற்கு தேவையான வற்றை பைகளில் அடுக்க ஆரம்பித்தோம்.


சரியாக மாலை 5:50க்கு அப்பாவும் நானும் பைகளை எடுத்துக் கொண்டு பைக்கில் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனை நோக்கி புறப்பட அம்மாவும் தம்பியும் நடக்க ஆரம்பித்தார்கள்.


வீட்டில் இருந்து நடந்தாலே பத்து நிமிஷத்துக்கும் குறைவான சமயத்தில் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனை அடையலாம் என்பதால்

 ஆறு மணிக்கு அம்மா அப்பா இருவரிடம் சென்று வருகிறோம் என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தோம்.


கூடூர் வரை நாங்கள் போக வேண்டிய ரயில் நான்காவது ஃப்லாட்பாரத்தில் இருப்பது தெரிந்ததும்

 முதல் ஃப்லாட்பாரத்தில் இருக்கும் லிஃப்ட் மூலம் ஃபுட் பிரிட்ஜ் அடைந்து மீண்டும் லிஃப்ட் மூலமே நான்காவது

 ஃப்லாட்பாரத்தில் இறங்கினோம்.


கொரொனா பிறகு பொது பெட்டிகள் அனைத்தும் உட்கார்ந்து செல்லக் கூடிய முன்பதிவு பெட்டிகளாக மாற்றி விட்டதால் எங்களது பெட்டி கடைசியில் இருக்கலாம் என ஒரு யூகிப்பில் ரயிலின் கடைசிக்கு சென்றால் அங்கு D1 மட்டுமே இருந்தது.


கூடூர் வரை டிக்கெட் முன்பதிவு செய்த போது D2 பெட்டியில் எங்களுக்கு சீட்

 ஒதுக்க பட்டிருந்தது.


எப்படியும் D2 இஞ்சனுக்கு பின்னாடி இருக்கும்னு புரிந்ததும். 300 மீட்டர் நீலம் கொண்ட அந்த ரயிலின் கடைசி பெட்டியில் இருந்து முதல்

 பெட்டியை நோக்கி ஃப்லாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தோம்.


ஸ்லீப்பர்  வகுப்பு பெட்டிகளே எப்படியும் ஒரு பத்து இருக்கும் போல. அடுத்து முதல் வகுப்பு ஒரு பெட்டி அதற்கு அடுத்து

ஏஸி டூடயர் த்ரி டயர் என ஒரு நாங்கைந்து பெட்டிகளை கடந்த பிறகு

D2  பெட்டி வந்ததும் ஏறி எங்களுக்கு ஒதுக்கப் பட்ட சீட் தேடி உட்கார்ந்தோம்.


6:25க்கு புறப்பட வேண்டிய திருப்பதி -செகந்தராபாத் நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் ஐந்து நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.


ரேணிகுண்டா, ஸ்ரீ காளஹஸ்தி, வெங்கடகிரி, வழியாக  தொண்ணூறு கிமி பயணித்து

  இரவு எட்டு மணிக்கு கூடூர் நிறுத்தத்தில் இறங்கினோம்.