Saturday, January 30, 2021

ஹைதராபாதில் இறங்கியதும்..

சனிக்கிழமை காலை 7:50க்கு   காச்சிகூடா  ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததுமே ’சார் ஆட்டோ’ ‘பைய்யா அட்டோன்’னு

நாங்கைந்து பேர் வந்து எங்களை சூழ்ந்து கொண்டனர். அவர்களை கடந்து கொஞ்ச தூரம் போனால் பைய்யா ரூம் ஒன்லி  சிக்ஸ் 


ஹண்ட்ரட். பக்கத்துலதான் இருக்கு வாங்க போகலாம்னு சொல்லி ஒருத்தர் எங்களோடவே நடக்க ஆரம்பிச்சிட்டார். இல்ல நாங்க 


ஏற்கனவே ரூம் ஆன்லைன்ல புக்  பண்ணியாச்சுன்னு சொன்னாலும் ஹும் கேக்கல. காசா பணமா எவ்வளவு தூரம் வரியோ வானு 


கண்டுக்காம நாங்க கூகுல் ஆண்டி சொல்லுற டைரெக்‌ஷன்ல நடக்க ஆரம்பிச்சிட்டோம்.


காச்சிகூடா ஸ்டேஷனில் இருந்து ஒரு பத்து நிமிஷம் நடந்திருப்போம். நாங்கள் புக் செய்திருந்த   OYO Flagship 76915 ஹோட்டலை 


அடைந்ததும் நேராக ரிசப்ஷன் பகுதியில் இருப்பவரிடம் சென்று  ’ரூம் புக் செய்திருந்தோம் எர்லி-செக்கினோட’னு சொன்னதும் எங்களுக்கு

எர்லி -செக்கின் பத்தி எந்த தகவலும் வரலையே சார் சொல்லி இருந்தார். அது

மட்டும் இல்லாம இப்போ எந்த ரூமும் உங்களுக்கு ஒதுக்க காலியாக  இல்ல.  யாராவது  செக்-அவுட் செய்தால் மட்டுமே  உங்களுக்கு 


ரூம் தர முடியும்னு அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாக  தம்பி உடனே ரூம் எர்லி செக்கின் இருக்கிறதா  பத்து முறை கேட்டு

கன்ஃபார்ம் செய்த பிறகுதான் ஓயோ எக்சிகிட்டிவ் மூலம் ரூம் புக் செய்திருந்தோம்னு சொன்னதுமே...

கொஞ்ச நேரம் உட்காருங்கள் சார். ரூம் காலியானதுமே   கொடுக்கிறோம்னு ரிசப்ஷனிஸ்ட் சொல்லி இருந்தார்.


ரூமுக்காக ஆயிரம் ரூபாய் ஏற்கனவே  பே பண்ணியாச்சு. அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே ரிசப்ஷன் பகுதியில் போடப்பட்டிருந்த 


சோபாவில் வந்து உட்கார்ந்தோம் இல்லாட்டி போங்கடா டேய் நீங்களும் உங்க ஹோட்டலும்னு வெளியே  வந்து  நல்லா இருக்கோ

மோசமா இருக்கோ குளிச்சிட்டு கிளம்ப ஊருல  லார்ஜுக்கா பஞ்சம்...னு மைண்ட் வாயிஸ் வசனம் எல்லாம் பேசிகிட்டாலும் இனி ஓயோ 


மாதிரியான  ஸ்டாண்டடான ஹோட்டல்ஸ்ல  மட்டுமே  தங்கனும்னு ஒரு சில அனுபவங்கள் இதற்கு முன்பு  எங்களுக்கு  


ஏற்பட்டிருந்ததால் அமைதியாக கொஞ்ச நேரம் மௌன விரதத்துல  இறங்கிட்டேன்.


  பெரும்பாலும் நீண்ட தூரம் அல்லது இரவு நேர பயணம் செய்து வெளியூர் செல்பவர்கள் ஃப்ரெஷப் ஆக காலையில் ரூம் எடுக்க 


வேண்டிய  சூழல் இருக்கும். அதுவும் பெண்கள் குழந்தைகள் இருந்தால்... எப்படியும் அவர்கள் ஹோட்டலைத்தான் தேடி போய் ஆகணும்.

மார்னிங்  ஒரு ஏழு மணி அளவுல செக்-இன்  ஆகுற மாதிரி ஹோட்டல்ஸ் நேரம் ஃபிக்ஸ் பண்ணுனா நல்லாதான் இருக்கும் ஆனா 


ஹோட்டல்ஸ் நடத்துறவங்க லாபம் பார்க்க முடியாத ஒரே காரணத்துக்காக யாரும் செக்-இன் நேரம் மாத்த ரெடியா இல்லைனு

நினைக்கிறேன்...


கொஞ்ச நேரத்துல ரிசப்ஷனிஸ்ட்  எங்களை அழைத்து எண்ட்ரி போட்டுக்க சொன்னார். தம்பியோட பேருல நாங்க ரூம் புக் 


செய்திருந்ததால அவனோட  ஆதார் கார்ட் மட்டும் வாங்கி ஸ்கான் செய்து கொண்டு ஆதார் கார்ட் மற்றும் எங்களது  ரூமுக்கான

சாவியைக் கொடுத்து  ரூம் நெம்பரும் எந்த ஃப்லோரும் சொல்லியிருந்தார்.


ரிசப்ஷன் பகுதியை கடந்து கொஞ்சம் உள்ளே போனால் இடது புறம் இருந்த லிஃப்ட்டில் ஏறி நாங்காவது ஃப்லோரில் லிஃப்ட்டில் இருந்து

வெளியே வந்து எங்களுக்கான ரூமில் நுழையும்போது மணி  எட்டரை...


***நல்ல பெரிய ரூம்தான்.  தாராலமா மூனு பேர் தூங்குற அளவு  பெரிய பெட்...

டீலக்ஸ் ரூம் அப்படீங்கறதால இண்டிரியரும் நல்லா இருந்தது.


மொதல்ல நா  பாத்ரூம் போய் குளிக்க ஆரம்பிச்சேன். அப்போ ஆரம்பிச்சது புது பிரச்சனை..


பாத்ரூம்ல  என்னஎன்ன  எங்க இருக்குன்னு தம்பி காட்டிட்டு போய் இருந்தான்.

அந்த சமயம் பார்த்து  எவ நெனப்புல  பகல் கனவு கண்டிட்டிருந்திருப்பேனோ தெரியல... எல்லாம் தெரிஞ்சவனாட்டும் தம்பி

சொல்லுறத  காதுல வாங்கிக்காம அவன் சொல்லுறதுக்கெல்லாம் சரி சரின்னு சொல்லி கதவ மூடி  குளிக்க பக்கெட்ல தண்ணிய 


பிடிப்போம்னு கொழாவ திருப்புனா தண்ணியே வரக்காணோம்...


என்ன கொடுமை இதுன்னு நினைச்சுகிட்டிருக்க கொழாவுக்கு மேல ரெண்டு பக்கம் திருப்புறமாதிரி ஒரு வால்வ் இருந்தது. அதைய பிடிச்சு 


ஒரு பக்கம்   திருப்புனா சுடு தண்ணீரும் இன்னொரு பக்கம் திருப்புனா பச்சை தண்ணீரும் பக்கெட்ல ஊத்துது அதோட

அந்த கனெக்‌ஷன்லையே  ஷவருக்கும்  லிங் வெச்சிருந்தாங்கலா திடீரென தண்ணீ தல மேல பூஸ்ஸுனு ஊத்துது.

ஒரு செக்கண்ட்  ஒன்னுமே புரியல. இஷ்டத்துக்கு நா அப்படி இப்படி வால்வ திருப்பி கொஞ்ச நேரம் தடுமாறி பாதி குளியல்

முடிச்சதுக்கு அப்பறம்தான்   தெளிவு கிடைச்சது. ஹும் வாழ்க்கையும் அப்படிதான் போல...


இப்படிதான் தாய்லாண்ட் சென்றிருந்தபோது பட்டாயாவில் நாங்கள்  தங்கி இருந்த கோல்டன் பீச் ஹோட்டல் த்ரி ஸ்டாரோ இல்ல ஃபோர்

ஸ்டார் ஆனு எனக்கு சரியா ஞாபகம் இல்ல. குளிக்க பாத்ரும்ல பக்கெட்டுக்கு பதிலா பாத் டப் இருந்தது மட்டும் நல்லா ஞாபகம் 


இருக்கு...


மொதநாள் குளிக்க போன சமயம் டப் பாத் எடுக்க தொட்டியில நா படுத்துகிட்டு எப்படி தன்னி நிரப்புரதுனு தெரியாம  ஒரு கட்டத்துக்கு

மேல பொறுமைய இழந்து பாத்  டப் ல நின்னு குளிச்ச சம்பவம் எல்லாம் எங்க போய் சொல்ல...


அடுத்தநாள் எப்படி  பாத் டப்ல குளிக்கணும்னு கத்துகிட்டு ஒன்னரை அடி உயரம் கொண்ட அந்த தொட்டியில் படுத்துகிட்டு

உடம்பு தாங்குற அளவு  மிதமான சுடு தண்ணீ நிரப்பி குளிச்சதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்...


  ஒருவழியா குளிச்சு நா வெளிய வர தம்பி பாத்ரூம்ல நுழைஞ்சான்.


  பத்து நிமிஷத்துல உள்ள போனவன் வெளியே வந்து ரெடி ஆகுற கேப்புல

  அம்மா உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்னு   பைய்யில வெச்சிருந்தத பார்த்ததுமே  அன்றைய தின ப்ரேக்ஃபாஸ்ட் சிப்ஸ் பேக்கட் பிரிச்சு  சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்...


சிப்ஸ் வேறு நல்ல  காரமா ருசியா வேறு  இருந்ததா தம்பிக்கு எடுத்து வைக்கனுமேனு     தோனினாலும்  வைத்துக்குள்ள நா பாட்டுக்கு 


சிப்ஸ் தள்ளிகிட்டிருந்தேன். சும்மா ஒரு வார்த்தை அவன் கிட்ட  கேட்போம்னு ரெடி ஆகுறவன் கிட்ட சிப்ஸ்   

சாப்பிடுரியானு  கேட்டிருந்தேன். வேணாம்னு அவன் சொல்லிட்டான் அப்பறம் என்ன.. மிச்சம் இருக்குற சிப்ஸையும் மொத்தமாக முடிச்சாச்சு..


சரியாக வன்பதரைக்கு ரூம் லாக் செய்து அன்றைய தினம் சுத்தி பார்க்க கீழ இறங்கினோம்.


பிஜெ எங்களுக்கு போட்டு கொடுத்த ஐடினரி படி  சனிக்கிழமை ரூம் எடுத்து ஃப்ரெஷப் ஆனதும் எங்களை

முதலில் போக சொன்ன இடம் பிர்லா மந்திர்...

Friday, January 29, 2021

வித்தியாசமான பயணம்.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான்  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து சுற்றி பார்த்திருக்கிறேன்;

  தவிரவும் கடல் கடந்தும் சில நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன்.


போகும் இடம் எதுவாக இருக்கட்டும்; முடிந்தவரை  முன் கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடுகள் அனைத்தும் செய்த பிறகுதான் பயணம் மேற்கொள்வது எனது வழக்கம்


ஒருவகையில் இது மாதிரி நான் புது இடங்களுக்கு செல்லும்போது தேவை இல்லாத சில தொந்தரவுகளை தவிர்க்க முடிகிறது;

நிம்மதியாக சுற்றி பார்த்து வர முடிகிறது


இன்னொரு வகையில் புதிதாக பயண ஏற்ப்பாடுகள் செய்யும்போது கொஞ்சம் சலிப்பாகவும் இருக்கும். எல்லாமே நானே இழுத்து போட்டு

செய்கிறோமோ அப்படீங்கிறதொரு எண்ணமும் வந்துவிடுகிறது...


இதனால் எனக்கு பதிலாக யாராவது பொறுப்பை எடுத்துக் கொண்டு  என்னை எங்காவது கூட்டிச் சென்றால் நன்றாய் இருக்கும்னு அடிக்கடித் தோணும்.

  நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லையே...


ரொம்ப நாளா தம்பி ஹைதராபாத்தையும் பெங்கலூரையும் சுற்றி பார்க்கணும் சொல்லிட்டிருப்பான். இரண்டு இடங்களையும் நான் பல முறை சுற்றி பார்த்திருக்கிறேன். அதனாலையே தம்பியோட ஆசைய நா பெருசா எடுத்துக்கல...


போன வாரம் புதன் கிழமை காலையில திடீரென ஒரு எண்ணம் எனக்கு. வீக்கெண்ட் ஹைதராபாத் போய்ட்டு வருவோமாணு தம்பியிடம்

கேட்டிருந்தேன். உடனே அவன் சரி போகலாம்ணு சொன்னான்.


  மொதல்ல  ட்ரைன் டிக்கெட்ஸ் இருக்கானு பார்ப்போம் அப்பறம் மத்தத பேசுவோம்னு தம்பியே சொன்னதால ஐஆர்சிடிசி வெப்சைட்ல டிக்கெட்ஸ்  இருக்கானு பார்த்தோம்.

  ஹைதராபாத் போவதர்க்கு ச்லீப்பர் க்லாச்லையும் வரும்போது எசி த்ரிடையர்லையும் டிக்கேட்  முன்பதிவு செய்தோம்.


அடுத்ததாக தம்பி  ஹைதராபாதில் இருக்கும்   அவனது நண்பர்களை தொடர்பு கொண்டு ஹைதராபாத் திட்டம் தயார் செய்ய ஆரம்பிக்க

ஒரு மாறுதலுக்காக நானும் அவன் பொறுப்பில் விட்டுவிட்டு என்னுடைய வேலையில் மூழ்கிவிட்டேன்.


  ஹைதராபாத்தில் இருக்கும் தேஜ சாய் சனி மற்றும் ஞாயிறு  இரண்டு நாட்களில் எங்க சுத்தி பார்க்கனும்; எங்க சாப்பிடனும்னு  ஒரு

ஐடினரி போட்டு தம்பிக்கு அனுப்பி இருந்தான் அதை அவன் எனக்கு காட்டினான்.


அந்த சமயம்  எனக்குத் தெரியாது தேஜ சாய் போட்டுக் கொடுத்த திட்ட படிதான் நாங்கள் ஹைதராபாதில் சுத்தி பார்க்க போகிறோம் அப்படீங்கற விஷயம்...


தேஜ சாயின் ஊரும் திருப்பதிதான். தம்பியும் அவனும் ப்லஸ்வன்னில் இருந்து நண்பர்கள். ப்லஸ்டு பிறகு தம்பி இஞ்சனீரிங் வந்துவிட

தேஜ சாயோ நாஷ்னல் லா ஸ்கூலில் ஐந்தாண்டுகள்  சட்டப் படிப்பு படித்து தற்போது தெலங்கானா ஹைகோர்ட்டில் ஒரு சீனியர்  அட்வகேட்டிடம் ஜூனியராக பணி புரிகிறான்.

தேஜ சாயை சுருக்கமாக நாங்கள் பிஜெ சொல்லி அழைப்பதுதான் பழக்கம். இன்னை வரைக்கும் பிஜெ அப்படீஞ்கிறதுக்கு என்ன அர்த்தம்னு இது வரைக்கும் எனக்கு தெரியாது என்பது வேறு விஷயம்.


***


பிஜெ திட்டப்படி எங்களை செகந்தராபாதில் ரூம் எடுக்க சொல்லி இருந்தான். சனிக்கிழமை காலையில் நாங்கள் இறங்குவதோ காச்சிகூடாவில். அங்கிருந்து செகர்ந்தரபாத் போய்  ரூம் செக்கின் செய்வதைவிடவும்

காச்சிகூடா ரயில்வேஷ்டேஷனுக்கு அருகில் எதாவது ஒரு லார்ஜில் ரூம் எடுத்துக்கலாம்னு சொல்லி இருந்தேன்.


வெள்ளிக்கிழமை காலையில் தம்பி ஹைதராபாதில் ஓயோவில் எர்லி செக்கின் ஃப்ரியா கிடைக்குறமாதிரி ரூம் ஏதாவது இருக்குமானு தேடி பார்த்து  எதுவும் கிடைக்காததினால அடுத்து ஓயோ எக்ஸ்யூகிட்டிவ்விற்கு  கால் பண்ணி

அவுங்க மூலம் எர்லி செக்கின்  ரூம் எதாவது கிடைக்குமானு  அந்த முயற்சியில் இறங்கினான்.


ஒருநாளுக்கு  இரண்டாயிரம் ரூபாய் மதிப்புடைய டீலக்ஸ் ரூம் ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தது. அதனுடன் எர்லி செக்கினும் இருந்ததால உடனே    எக்ஸிகிட்டீவ் கிட்ட பேசிட்டிருக்கும்போதே ரூம் புக் பண்ண சொல்லிட்டோம்.

எதுக்கும் ஒன்னு ரெண்டு தடவை எர்லி செக்கின் இருக்கானு தம்பி திரும்ப திரும்ப கேட்டான்.

  வன்னாட்ஃபைவ்  பர்செண்ட் நா கெரண்டி  தர்றேன் சார்ன்னு ஓயோ எக்சிகிட்டீவ்  சொல்லி இருந்தாங்க...


சரியாக வெள்ளிக்கிழமை மாலை ஆறு நாற்பதுக்கு வீட்டில் இருந்து தம்பியும் நானும் ஹைதரபாத் நோக்கி புறப்பட்டோம். திருப்பதியில்

இருந்து நேராக ஹைதராபாத் செல்ல  டிக்கெட் கிடைக்காததால் செங்கல்பட்டு -காச்சிகுடா தினசரி ரயிலில்  ரேணிகுண்டாவிலிருந்து

காச்சி கூடா வரை ஸ்லீப்பர் க்லாசில் முன்பதிவு செய்திருந்தோம்.


இரண்டு ஷேர் ஆட்டோக்கள் மாறி இரவு ஏழரைக்கு ரேணிகுண்டா ரயில்வேஸ்டேஷனை நாங்கள் அடையவும் ஃப்லாட்பாமில்

செங்கல்பட்டு - காச்சிகுடா எக்ஸ்பிரெஸ் வரவும் சரியாக இருந்தது.


கடைசியாக போன வருடம் மார்ச்-21 சனிக்கிழமை ரயில் பயணம் செய்தேன். அதன்

பிறகு சரியாக பத்து மாதங்களுக்கு பிறகு இப்போது ரயிலில் ஏறியது...

கிட்டதட்ட மூனரை வருடம் தினமும் ரயிலில் பயணம் செய்திருந்தாலும் பல மாதங்களுக்கு பிறகு இப்போது  ரயில் பயணம் புதிதாக இருந்தது; கொஞ்சம் பயமாகவும் இருந்தது.


சரியாக 7:55க்கு செங்கல்பட்டு - காச்சிகுடா  எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது.

நைட் சாப்பிட அம்மா ஆளுக்கு மூணு பூரியும்  உருழைகிழங்கும் கட்டி கொடுத்திருந்தாங்க. கொஞ்ச நேரத்தில அதை எடுத்து சாப்பிட

ஆரம்பிச்சோம்.


அது முடிஞ்சதும் படுத்துக்குவோம்னு பார்த்தால்  எங்களுக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ஒருத்தர் அவருக்கும் அவரது மனைவி

இருவருக்கும் அப்பர் பெர்த் வந்திருப்பதால் எங்களோட  லோயர் பர்த் அவரது மனைவிக்கு கொடுக்க முடியுமானு

கேட்டிருந்தார். நான் மிடில் பெர்த்தில் படுத்துக்க தம்பி அப்பர் பெர்த்தில் படுத்துகிட்டான்.


படுத்த கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடுச்சு.

  திடீரென நடு ராத்திரில தூக்கம் கலைஞ்சிடுச்சு.


ஒரு பக்கம் ட்ரைன் போற வேகத்துக்கு ஒரே சத்தம்னு பார்த்தா இன்னொரு பக்கம் எனக்கு கீழ லோயர் பர்த்தில்

படுத்திருக்கும்  குழந்தை வேறு அடிக்கடி அழ ஆரம்பிச்சிடுது. உடனே அந்த குழந்தையோட அம்மா முலிச்சுகிட்டு அழாத இங்கதான் நா இருக்கேனு சொல்ல அந்த குழந்தையும் அமைதியா திரும்பவும் தூங்கிடுது.

நானும்  கொஞ்ச நேரம் தூங்க குழந்தையோட அழுகை  எழுப்பிவிட

உடனே அந்த குழந்தையோட அம்மாவும் முலிச்சுகிட்டு அழாத இங்கதான் நா இருக்கேனு சொல்ல...

  சரியாவே தூங்க முடியல.


சனி கிழமை காலையில முழிப்பு வரும்போது நேரம் பார்த்தால்  ஏழாகி இருந்தது. சன்னல்கள் மூடி இருந்தாலும் நல்லாவே குளிர்

ஃபீல் பண்ண முடிந்தது. 


  கீழ இறங்கி  டாய்லெட் போவோமா வேனாமானு ஆயிரத்து  எட்டு முறை யோசித்து  ஒருவழியா  டாய்லெட்டுக்குள்ள நுழைஞ்சாச்சு.

எந்த  அளவு எனக்கு ரயில் பயணம் பிடிக்குமோ அதே அளவு ஐ ஹேட் ரயில்வே டாய்லெட்ஸ்...


நா பயந்த  அளவு ஒன்னும் டாய்லெட் பெருசா ஸ்மெல் இல்ல.

ஒருவழியா எல்லாம் முடிஞ்சு  சீட் கிட்ட வரவும் கொஞ்ச நேரத்துல ஒரு மஹா நகரத்தின் முக்கியமான ரயில் நிலையத்திற்குள்

நுழைகிறோம் என்கிற எந்த ஒரு பரபரப்பான அறிகுறியும் இல்லாமல்  காச்சிகுடா ரயில் நிலையத்தில் வந்து இறங்கினோம்.


இறங்கிய இடத்தில்  இருந்து ஒரு பத்து அடி எடுத்து வைத்ததுமே எஸ்கலேட்டர் இருந்தது. அதில் ஏறி மேலே வந்து முதல் ஃப்ளாட் பார்ம்

இருக்கும் திசை நோக்கி நடந்து படி வழியாக கீழே இறங்கி முதல் ஃப்ளாட்பாரத்தில் கொஞ்ச தூரம் நடந்து

காச்சிகூடா ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம்.Saturday, January 16, 2021

கைலாச கோனா.

கைலாச கோனா  அருவி இந்த பதிவை வாசிப்பதற்கு முன்பு நேற்று எழுதி இருந்த 

நேற்றைய பொங்கல் தினம்.

 பதிவை வாசித்து விட்டு தொடரவும். அந்த பதிவின் தொடர்ச்சிதான் இந்த பதிவு...


 *** 


ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் நாராயணவனம் என்ற இடத்தில் இருந்து சுமார்  பத்து கீமி தொலைவில் அமைந்திருக்கிறது கைலாச கோனா அருவி.

எங்களது  பூர்வீக கிராமத்தில் இருந்து வெறும் எட்டு கீமி தூரம்தான் அருவிக்கு. 


சிறுவயதில் கோடைகால விடுமுறையில் ஊருக்கு போற சமயம் தவறாமல் ஒருமுறை கைலாச கோனா

அருவிக்கு செல்வதுண்டு. 2010 செப்டம்பர் இருக்கும். ஊருக்கு சென்றிருந்த சமயம் அண்ணாவோடு கைலாச கோனா அருவிக்கு போனதா  ஞாபகம் இருக்கு. அதன் பிறகு  நான் ஊருக்கு போவது படி படியாக குறைந்து விட்டது. எப்போதாவது ஊருக்கு போனாலும் கைலாச கோனா அருவிக்கு போவது  நின்று விட்டது...


2019 ஜூன் மாதம் ஜீவா அக்காவின் துர்கா மாதா புத்தக வெளியீடு ஃபங்க்ஷனுக்கு மதுரைக்கு சென்றிருந்த சமயம் ஃபேஸ்புக்கில் குற்றால சீசன் ஸ்டார்ட் ஆச்சுனு நண்பர் ஒருத்தர் எழுதி இருந்ததை வாசிச்சதுமே உடனே குற்றாலம் போகனும்னு ஆசை வந்திடுச்சு...

 முதல்நாள் மதுரையில மீனாச்சியம்மன் கோயில்; திருப்பரங்குன்றம்; பழமுதிர்ச்சோலை சென்றிருந்தோம். அடுத்தநாள் காலையில் 

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை-செங்கோட்டை தினசரி பொதிகை எக்ஸ்பிரஸ்ஸில்  தென்காசி வரை பயணித்து தென்காசியிலிருந்து ஒரு இருவது நிமிஷம் பேருந்தில் பயணித்து  குற்றாலம் போய் இறங்கினோம்.


 முதலில் நாங்கள் பேரருவிக்கு சென்றோம். நீண்ட வரிசையில் காத்திருந்து  பிறகுதான் குளிக்க முடியும்னு தெரிஞ்சதுமே பாதி

ஆர்வம் போய்டுச்சு.  அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஐந்து நிமிடம் மட்டுமே பேரருவியில் குளித்து அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க அங்கிருந்து நகர வேண்டிய சமயம் வரவும் மனம் இல்லாமல் இடத்தை விட்டு நகர்ந்தேன். குற்றாலம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு நிறைய கற்பனைகளோடும் எதிர் பார்ப்புகளோடு வந்தவனுக்கு குற்றாலம் பெரிய டிஸப்பாயிண்ட்மெண்ட்...


 சரி இங்க மட்டும்தான் இவ்வளவு கூட்டம்னு கிளம்பி ஐந்தருவிக்கு போனா... தண்ணிய பார்த்தத விடவும் தண்ணிய போட்டு இல்லாத

தண்ணியில் ஆட்டம் போடுற கூட்டத்த பார்த்ததுமே இதுக்கு பேரருவியே பரவாலைனு நினைச்சுகிட்டு வந்து இரங்கிய ஆட்டோலையே ஏரி திரும்பவும் பேரருவி கிட்ட வந்து இரங்கினோம்.


மொதல்ல பார்த்தத விடவும் அருவியில இப்போ தண்ணி விழுறதும் கம்மியாகிடுச்சு வரிசையின் நீலமும் கூடிடுச்சு... அதுனால இனி குற்றால அருவிகள்ல குளிச்சது போதும்னு முடிவு பண்ணியதும் ஒரு பாய் கடையில் பிரியாணி சாப்பிட்டு பஸ் பிடிச்சு மதியம் ஒரு  மணிக்கெல்லாம்  தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து மக்கள் நடமாட்டம் இல்லாத ஃப்லாட்ஃபார்ம் ல இருக்கும் ஒரு பெஞ்ச பார்த்துபடுத்தாச்சு... 


அன்றைய தினம் எங்களுக்கு சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரெஸில் வெயிட்டிங் லிஸ்ட்லதான் இடம் இருந்தது. கூட வர்க் பண்ணுறவங்க ஒருத்தங்களோட ஹஸ்பெண்ட் ரயில்வேஸ்ல வர்க் பண்ணுரதால டிக்கெட் கன்ஃபார்ம் பண்ணித் தர சொல்லிக் கேட்டிருந்தேன். சரியா அப்போதான் செல்ஃபோனுக்கு டிக்கெட் கன்ஃபார்ம்ஆன மாதிரி எஸெமெஸ் வந்திருந்தது. பக்கத்துல இருந்த மரங்கல்ல இருந்து வேகமா வீசுர காத்துல நிம்மதியா ஒரு குட்டி தூக்கம் போட்டாச்சு... 

ஒருநாலு மணி இருக்கும் மதியம் சாப்பிட்ட பிரியாணி எனக்கு வேலைய காட்ட ஆரம்பிச்சதும் டாய்லெட்டை தேடி ஓடுனது தனி கதை...


 ***


 அதே வருடம் செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை திடீரென கோனை அருவிக்கு போவோம்னு  தோனியதுமே வீட்டுல இருந்து கிழம்பி தம்பியும் நானும் கைலாச கோனா அருவிக்கு போய் இருந்தோம்.... பல வருஷத்துக்கு அப்பறம்

போவதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனோம்.  காலையில பத்து மணிக்கு முன்னாடியே நாங்க போய் இருந்ததால  ஒன்னு ரெண்டு பேர தவிர யாரையும் அருவிகிட்ட பார்க்க முடியல. இதுதான் நல்ல சான்ஸ்னு தண்ணியும் நல்ல  ஃபோற்ஸா கொட்டிட்டிருந்ததால குற்றாலத்துல விட்டத கைலாச கோனா அருவியில ஆசை தீர திருப்தியா  குளிச்சதும் இனி போதும்னு உடம்பும் மனசும் சொன்னதும் அருவிய விட்டு நகர்ந்து கீழ இறங்குறோம் எதிர்  திசையில  கொஞ்சம் கொஞ்சமா  அருவிய நோக்கி மக்கள் போவதை பார்த்தோம்...


 அதன் பிறகு எப்போவாச்சும் கைலாச கோனா அருவிக்கு வீகெண்ட்ஸ்ல போக நினைச்சாலும்; சோம்பல் ஒரு பக்கம் இருந்தாலும் கடைசியா போனபோது ஏற்பட்ட அனுபவம் மாதிரியான அனுபவம் திரும்பவும்  கிடைக்குமா கிடைக்காதா அப்படிங்கற சந்தேகத்தினாலும் தயக்கத்தினாலும் தம்பி கூப்பிட்ட போதெல்லாம் எதோ ஒரு காரணம் சொல்லி கோனை  அருவிக்கு போவதை தவிர்த்து வந்தேன்...


 ***


பல வருஷத்துக்கு அப்பறம் பொங்கல் கொண்டாட இந்த வருஷம் ஊருக்கு போனதும் திடீரென கைலாச கோனா அருவிக்கு போகலாம்னு தோனியது. தம்பிய கூப்பிட்டு கோனை ஃபால்ஸுக்கு போகலாமானு கேட்டேன். உடனே அவனும் சரி போகலாம்னு சொன்னான். அந்த செக்கண்டே கோனை ஃபால்ஸ் போவதற்கான ப்லான் போட்டாச்சு...


 காலையில திருப்பதியில இருந்து கிளம்பும்போதே தெரியும் நைட் அம்மா அப்பா ஊருல தங்கறதாவும் தம்பியும் நா மட்டும் வீட்டுக்கு வந்திடுறதாவும் முடிவு பண்ணித்தான் காலையில வீட்டுல இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்தோம்.


 மொதல்ல யாரிடமும் சொல்லாமல் ஊருல இருந்து வீட்டுக்கு கிளம்புர மாதிரி கிளம்பி நேரா  கோனை ஃபால்ஸுக்கு போய் அப்படியே குளிச்சிட்டு திருப்பதிக்கு போகனும்னு ப்லான்... கடைசி நிமிஷத்துல அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்ப வேண்டியதா போச்சு. அவுங்களும் எதுவும் சொல்லல. டவல் வேனும்னா எடுத்துட்டு போக சொன்னாங்க.

அந்த சமயம் நா எந்த யோசனையில இருந்தேனோ தெரியல அம்மா கேட்டதுக்கு வேனாம்னு சொல்லி சரியா நாலு மணிக்கு தம்பியும் நானும் வண்டியில புறப்பட்டோம்... 


பைக்ல போரச்சேதான் ஒழுங்கா அம்மா டவல் எடுத்துப்போன்னு சொன்னப்போ வாங்கி வந்திருக்கலாமோனு தோனிச்சு. விடு. தேவை பட்டா டவல் வாங்கிக்குவோம்னு தம்பி சொல்லி இருந்தான். ஊருல இருந்து புறப்பட்ட அடுத்த கால் மணி நேரத்துல கைலாச கோனா அருவி பைக் பார்கிங் ஏரியாவுக்கு வந்து சேர்ந்தோம்... 


***


 சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஒரு அருவினா அது இந்த கைலாச கோனா அருவிதான். இங்கு மட்டும்தான் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என பலதரப் பட்ட மனிதர்கள் பாதுகாப்பாக அருவிக்கு செல்லவும் குளிக்கவும் முடியும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதால் டீயென் நெம்பர் ப்லேட் போட்ட பைக்

கார்கள் நின்றிருப்பதை கவனிக்க முடிந்தது. 


இன்னைக்கே இவ்வளவு கூட்டம்னா காணும் பொங்கலுக்கு எவ்வளவு கூட்டம் குவியுமோன்னு   பேசிட்டு எங்கலோட ஷட் பெண்ட் பாக்கட்ல

இருக்குற பொருட்கள எல்லாம் ஒரு கவர்ல போட்டு அதை வண்டி டிக்கியில வெச்சு லாக் செய்து அருவிய நோக்கி நடக்க ஆரம்பிச்சோம்...


 பார்கிங் ஏரியாவுல இருந்து ஒரு பத்து படி ஏறி ஒரு நூறு மீட்டர் நடந்து போனால் வலது பக்கம் சிவன் பார்வதி இருவரும் இருக்கும் கைலாச நாதர் கோவில் இடது புறம் அருவின்னு அந்த பாதை அதோடு முடியும்...

நமக்கு   சாமிய பார்க்குறத விடவும் சமந்தாவ... ச்சே..ச்சே.. அருவியில குளிக்குறதுதான் சந்தோஷம்னு சொல்ல போய்...


 ***


 நாங்க அருவிய நெருங்க நெருங்க ஒரு புறம் உற்சாகம் இருந்தாலும் தானா லேசா  வாயில இருந்தும் மூக்குல இருந்தும் மூச்சு இழுத்து விடுறது

அதிகமானத  கவனிக்க முடிஞ்சது... தண்ணியில நனையுர வரைக்கும்தான் அதன் பிறகு அதெல்லாம் ஒன்னும் பெருசா தெரியாதுனு. என்னைய நா சமாதான படுத்திகிட்டு அருவி கீழ போய் நின்னாச்சு...


 ஆஹா என்னே ஒரு  ஆனந்தம்... கடந்த ரெண்டு மூனு நாள  ஒரே தலைவலியில  அவஸ்தை பட்டிட்டிருந்த எனக்கு நேச்சுரலா இயற்கை எனக்கு ஹெட் மசாஜ் பண்ணிவிட்டிடுச்சு..

அடுத்து நல்லா குனிஞ்சு தண்ணி ஃபோர்ஸா விழுற பகுதியில நின்னு முதுக நல்லா காட்டி முதுகுக்கும் நேச்சுரல் மசாஜ் பண்ணிகிட்டாச்சு.. 


ஒரு பத்து நிமிஷம் நல்லா அருவியில ஆசைத் தீர அனுபவிச்சு குளிச்சதுக்கு அப்பறம் மத்தவுங்க வந்து தண்ணியில நனையட்டும்னு சைடுல வந்து நின்னோம். அவ்வளவுதான் வரிசையா ஃபேமலி ஃபேமலியா வர ஆரம்பிச்சிட்டாங்க.

ஏற்கனவே அருவி கீழ நிக்குறவங்களம் வெளிய வராததுனால அருவிக்கு சைட்லையே நிக்க வேண்டியதா போச்சு. 


அந்த சமயத்துலதான் எனக்கு பக்கத்துல ஒருத்தன் மட்டமான ஒரு சரக்க குடிச்சிட்டு அருவியில குளிக்க எனக்கு பக்கத்துல வந்து நின்னான்... வயிரு குமட்டுர அளவு ஒரே நாத்தம் அவன் மேல... இதெல்லாம் குடிக்குறவுஞ்கலுக்கு தெரியுமா அவுஞ்களுக்கும்

மூக்கும் வயிரும் இருக்காதானு ஒரு சந்தேகம்... குடிக்கனும்னு முடிவு பன்னிட்டா ஏதாவது கொஞ்சம் காஸ்ட்லியான சரக்க குடிச்சு தொலைக்க வேண்டியதுதானே . தனக்கும் பெருசா கெடுதல் இருக்காது அடுத்தவனுக்கும் கஷ்டமா இருக்காது. இப்படி நா அருவி பக்கத்துல நின்னுகிட்டு மனசுக்குள்ள யோசிச்சிட்டிருக்க... அருவியில குளிச்சிட்டிருந்த

கூட்டம்   வெளிய வரவும் டக்குனு நானும் தம்பியும் அருவிக்கீழ போய் நின்னுட்டோம். 


திரும்பவும் தலை முதுகுன்னு காட்டி தண்ணி விழுற வேகத்துக்கு இப்போ உடம்புல வலி ஏற்பட்டாலும் அது ஒருவித சுகமாக இருந்தது... கடைசியா மூனாவது  முறையா ஒரு குளியல போட்டு கிளம்பிடுவோம்னு திரும்பவும் சைட்ல வந்து நின்னோம். ரெண்டு ரவுண்ட் அருவியில

குளிச்சதால லேசா ஒருவித மயக்கம் எனக்கு வர்ற மாதிரி இருந்தது. ஆனாலும் பரவால இதோடு எப்போ வருவோம்னு தெரியாததுனால ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருந்து ஆச தீர அருவி கீழ நின்னு அங்கிருந்து வெளியே வந்திட்டோம்...


 எங்க ரெண்டு பேர தவிர பெரும்பாலும் குடும்பம் குழந்த குட்டிகலோடவும் ஜோடியாவும் வந்திருக்குராங்க நாஞ்க மட்டும்தான்...

ஹும் என்ன பன்ன ஒத்துக்க வேண்டியவுங்க ஒத்துகிட்டிருந்தா ஜோடியா நயாகரா அருவிலையே போய் குளிச்சிருப்போம்... எல்லாம் அவள் விருப்பம் ஆச்சே.. 


***


 இப்படியாக பொங்கல் தினத்தன்று எங்களது கைலாச கோனா அருவி அனுபவங்கள் இருக்க தண்ணியில நனைஞ்ச ஈரத்துணியோடு அப்படியே நாஞ்க திருப்பதி வரைக்கும் நாற்பது கீமி பைக்ல வந்து வீடு தொறந்து பாத்ரூம் ல போய்   ட்ரஸ்ஸ கழட்டி போட்ட அனுபவத்தோடு இந்த பதிவ நிறுத்துக்கிறேன்... இதோடு 2021 பொங்கல் தின அனுபவம் முடியுது...

 (முற்றும்) 


***


 கைலாச கோனா அருவிக்கு ரூட் மேப்: 


சென்னையில் இருந்து வருபவர்கள் மாதவரம் பெரிய பாளையம் ஊத்து கோட்டை நாகலா புரம் வழியாக கைலாச கோனா அருவியை அடையலாம். அதுவே பூந்த மல்லி திருவள்ளூர் திருத்தணி புத்தூர் வழியாகவும் கைலாச கோனா அருவிக்கு வரலாம்...


 செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோனத்துல இருந்து கைலாச கோனா அருவிக்கு வர நினைப்பவர்கள் திருத்தணி வந்து அங்கிருந்து நகரி புத்தூர் வழியாக செல்ல வேண்டும்... 


Friday, January 15, 2021

நேற்றைய பொங்கல் தினம்.

 போன வாரம் வெள்ளிக்கிழமைஒரு பிசாசோடு  சரியான சண்டை. எங்கிருந்துதான்

அந்த தைரியம் எனக்கு வந்ததுன்னு தெரியல. அது வரைக்கும் மனதில் அடக்கி வைத்திருந்த கோவத்தை எல்லாம் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தாச்சு.


அதன் பிறகு ஒரு வாரத்துக்கு ஃபோனே இல்ல. நேத்து பொங்கல் வாழ்த்து சொல்ல மொத ஆளா அந்த பிசாசு காலையில எனக்கு ஃபோன் பண்ணிச்சு.


சரி போன வருஷ பொங்கலுக்குத்தான் கால் பண்ணினப்போ கால் எடுக்கல. இந்த வருஷ பொங்கலுக்கு அப்படி இருக்க வேணாமேனு போனா போகட்டும்னு  கால் அட்டன் பண்ணியதில் ஆரம்பிச்சது  நேற்றைய தின பொங்கல் செலிபிரேஷன்...


***


  ஏழு  வயசு இருக்கும்போது சென்னையில் ஒரு சிறப்பு பள்ளியில் என்னுடைய விடுதி வாழ்க்கை ஆரம்பம். அந்த வயசுல எனக்கு சரியா

குளிக்க வருமா; சாப்பிட தெரியுமா மத்தவுங்க பேசுறத கேட்டு நா வாய் திறந்து பதிலுக்கு பேச மொழி தெரியுமானு

என்னைய பெத்தவங்க யோசிச்சாஞ்கலானு தெரியல.


இஞ்க ஒரு டாக்டர் அப்பா கிட்ட பைய்யன சென்னையில  படிக்க வெச்சா பெரிய ஆளா வருவான்னு சொன்னத கேட்டு எத பத்தியும் யோசிக்காம நல்ல நாள் பார்த்து ஒன்றாம் வகுப்பில் என்னைய சேர்த்தாச்சு.


ஒவ்வொரு வருஷமும்  ஜூன் மாசம் மொத வாரம்  வீட்டுல இருந்து கிளம்பி ஹாஸ்டலுக்கு வந்திட்டா  அதோடு செப்டம்பர் மாத காலாண்டு விடுமுறைக்குத்தான் வீட்டுக்கு போவது. திரும்பவும் அக்டோபர் மாசம்

மொத வாரம் ஹாஸ்டலுக்கு வந்தா   தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு போவது. அதன் பிறகு டிசம்பர் மாத கடைசியில் வரும் அரையாண்டு விடுமுறை வீட்டுக்கு போய்விட்டு ஜனவரி மொதவாரத்துல ஹாஸ்டலுக்கு...

  அடுத்த ஒரு பத்து நாட்கள் ல  திரும்பவும் வீட்டுக்கு பொங்கல் பண்டிகை புண்ணியத்துல...  வீட்டுக்கு வந்திடுவேன்.

நாலுநாள் பொங்கள் விடுமுறை முடிஞ்சதும் திரும்பவும் ஹாஸ்டலுக்கு போய்விடுறது.

அதோடு மார்ச்  மாத கடைசியில் ஒரு ரெண்டு மாசம் வீட்டுல இருந்திட்டுவானு முழு ஆண்டு விடுமுறை பெயரில் வீட்டுக்கு அனுப்புவார்கள். இப்படி மொத்தமா பார்த்தால்  வருடத்தில் பெரும்பாலான மாதங்கள் வீட்டைவிட்டு பிரிஞ்சுதான் வளர்ந்திருக்கேன்.


அந்த வயசுல பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பு பாசம் கவனிப்பு எதுவும் எனக்கு கிடைக்காம வளர்ந்ததால  அதோட

தாக்கம்தான் இருக்குமோ என்னவோ நாலு வார்த்தை  என் கிட்ட அக்கரையா யாராவது பேசிட்டா போதும் கடைசி வரைக்கும்

அப்படியே இருக்க மாட்டாங்களானு கேனத்தனமா யோசிக்கத் தோணும்.


இன்னைக்கு ஒவ்வொரு பேச்சுக்கும் பின்னால் மறைந்திருக்கும் சுய நலத்த நினைச்சு பார்க்கும்போது அடுத்த  பிறவின்னு ஒன்னு இருந்தா

எதுவானாலும் பொறந்து தொலைக்கலாம் இந்த மனுஷ பிறவியா மட்டும்...

ஐய்யோ பதிவோட தலைப்பு நேற்றைய பொங்கல் தினம்னு வெச்சிட்டு என்னோட புலம்பல புலம்பிட்டிருக்கேன் பாருங்க


***


அரையாண்டு விடுமுறை முடிஞ்சு ஜனவரி மாசம் ஸ்குலுக்கு போறச்சே ஒரே உற்சாகத்தோடு போவேன். என்னா  திரும்பவும் ஒரு

பத்துநாட்கள் ல வீட்டுக்கு திரும்பவும் வர  போறோமே என்கிற ஒரு சந்தோஷம்தான்.

இப்படியாக   சிறுவயதில் ஆரம்பித்த எனது பொங்கல் பண்டிகையின் மீதான நினைவுகள்...


***


எங்கள் குடும்பத்தில் பொங்கல் தீபாவளி பண்டிகைகள் மட்டும்  எங்களது பூர்வீகமா இருக்கிற ஊருக்குச் சென்று கொண்டாடுவதுதான் எங்களது

வழக்கம்.


கடந்த ஆரேழு வருஷமா  நான் பொங்கல் தீபாவளி பண்டிகைக்கு கிராமத்துக்கு போவது

நின்றுவிட்டது. அம்மா எவ்வளவோ என்னைய வற்புறுத்தி ஊருக்கு வர சொல்லி கேட்பாங்க

நா வர மாட்டேனு அடம் பிடிப்பேன். இதுனாலையே பண்டிகை சமயங்களில் எனக்கும்

அம்மாவுக்கும் இடையே    சண்டை வரும்.

கடைசியில வீட்டில் இருக்கும் மத்தவுங்க ஊருக்கு சென்று வருவார்கள்.


ஏனோ இவ்வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போய்தான் பார்ப்போமேனு தோனியதுமே நேற்று காலையில் பத்து மணிக்கு நாங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டோம்.

அம்மா அப்பா பேருந்தில் செல்ல தம்பியும் நானும் பைக்கில் புறப்பட்டோம்.

திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் எங்களது பூர்வீக கிராமம்.

லோக்கல்ல  இங்க அவசரமா ஒன்னு ரெண்டு வேலைகள்  முடிக்க வேண்டி இருக்க அதைய முடிச்சிட்டு  போறதுக்கும்;

பஸ்ஸுல வந்த அம்மா அப்பா ஊருல இறங்கவும் சரியா இருந்தது.


மணி அப்போ காலை பதினொன்னறை இருக்கும். வீட்டுல நுழையுர சமயம் சித்தி பெரியம்மா எல்லாம் சமயல்ல பிசியா இருந்தாங்க.

ஒரு அஞ்சு நிமிஷம் வீட்டுல உட்கார்ந்திருப்பேன். தொடர்ந்து உட்கார

பிடிக்காததுனால வீட்டின் பின் புறம் வந்து  தோட்டத்தின் மண் தரையில்  சிறுவயதில் மணலில் விளையாடிய மண் விளையாட்டுகளை எல்லாம் அசை

போட்டுக் கொண்டு நடந்து சின்ன வயசுல பார்த்த தென்ன மரத்தையும் மா மரத்தையும் தடவி பார்த்து இன்னும் இந்த மரங்கள்

எல்லாம் இருக்கானு ஆச்சர்ய பட்டு   தோட்டத்துல இருக்கும் மத்த மரங்களையும்  பார்த்திட்டே வர

சின்ன வயசுல பார்த்த உயரமான யூக்கலீடஸ் மரம் மட்டும்தான் மிஸ் ஆகி இருக்குனு யோசிச்சிட்டிருக்க

அந்த மரத்துக்கு என்ன ஆச்சுனு சித்திய கூப்பிட்டு கேட்டதுக்கு

ஒருதடவை பலத்த மழை பெஞ்சப்போ மரம் சாய்ஞ்சு போனதால வெட்டிட்டாங்கன்னு சொன்னாஞ்க.

ஊட்டி கொடைகானல்  மலை பிரதேசங்களுக்கு சென்றபோது எத்தனையோ யூகலீப்டஸ் மரங்களை

பார்த்திருக்கேன் அதில் இருந்து வரும் வாசனையை மூக்கில் உணர்ந்திருக்கேன்.

சின்ன வயசுல பார்த்த மொத யூகலீப்டஸ் மரம் இல்லாதத நினைவுகல்ல இருந்து 

அழியாததை நினைச்சுகிட்டு புதுசா என்ன என்ன பூசெடிங்க  வெச்சிருக்காங்கன்னு பார்த்திட்டிருக்க ஆத்திர அவசரத்துக்கு மண்தரையில் ஒன்னுக்கு போறச்சே வரும் பாருங்க சரசரவென ஒரு சத்தம் வருமே

அது மாதிரியான சத்தம் திடீரென கேட்க யாருடா அது  திரும்பி பார்த்தா சைலெண்டா எனக்குப் பின்னாடி தோட்டத்துக்கு வந்த அண்ண பொன்னு செடிகளுக்கு ஹோஸ் பைப் பிடிச்சு தன்னி விட்டிட்டிருந்தா.

எங்களோட தலைமுறை இந்த மண்ணுல எவ்வளவு விளையாட முடியுமோ அந்த அளவு விளையாடி

முடிச்சாச்சு. அடுத்த தலைமுறை எங்கள மாதிரி இந்த தோட்டத்துல விளையாடுவாங்களா தெரியாது

அட்லீஸ்ட்  தண்ணியாச்சும் ஊத்துராலேனு

நினைச்சுகிட்டு   பத்து வயசு  கார்த்திகா கிட்ட செடிக்கு நல்லா தண்ணிய விடுன்னு

சொல்லி காலுல ஒட்டி இருந்த மண்ண உதறிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.


பூஜை அறையில் சாமி கும்பிட  தேவையான எல்லா  ஏற்பாடுகளும் முடிஞ்சிருந்தது.

பூஜை  சமாச்சாரம் முடிச்சதும் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம்.

எனக்கு முன்னாடி வாழை யில விரிச்சு வரிசையா  ஒரு ஒரு ஐட்டமா  இலையில வந்து விழுந்துகிட்டிருந்தது.

நானும்  வாய் வழியா வைத்து உள்ள தள்ளிகிட்டிருந்தேன்.

ஒரு வழியா இனி போதும்டா சாமி நிறுத்திக்கோனு வயிறு சொன்னதும்

இலைய மடிச்சிட்டு எழுந்துறிச்சாச்சு.


சாப்பாடு முடிஞ்சதும் வீட்டு முற்றத்தில் இருக்கும் திண்ணையில் வந்து

உட்கார்ந்தேன். பல வருஷத்துக்கு பிறகு நம்ம மொகம் ஊருல தெரியுறதுனால அக்கம்

பக்கம் வீட்டில் இருப்பவுங்க எல்லாம் வந்து பேசிட்டு போனாங்க. ரெண்டு மூனு அத்தை முறை வேண்டியவங்க

வந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போனு சொன்னாஞ்க.


வீட்டுலையும் அதிக எண்ணிக்கையில நபர்கள் இருப்பதால ஒரே சத்தமாவே இருக்கு வெளியவும் அதிக நேரம் உட்காரவும் முடியல.


என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ தம்பிய கூப்பிட்டு கோனை ஃபால்ஸுக்கு போகலாமானு கேட்டேன்.

உடனே அவனும் சரி போகலாம்னு சொன்னான். அந்த செக்கண்டே கோனை ஃபால்ஸ் போவதற்கான

ப்லான் போட்டாச்சு.


நைட் அம்மா அப்பா ஊருல தங்கறதாவும் தம்பியும் நா மட்டும் வீட்டுக்கு

வந்திடுறதாவும் முடிவு பண்ணித்தான் காலையில வீட்டுல இருந்து புறப்பட்டோம்.

ஸோ வீட்டுக்கு கிழம்புரோம்னு சொல்லி கோனை ஃபாஸுக்கு சென்று அருவியில் குழியல் போட்டு

வீடு சேருவது   எங்களது திட்டம்.


போட்ட மாஸ்டர் ப்லான் மாஸ்டர் படம் பார்க்க ஒரு வருஷம் விஜய் ரசிகர்கள்

காத்திருந்த மாதிரி கோனை ஃபால்ஸ்  போக போட்ட மாஸ்டர் ப்லான்

  என்ன ஆச்சுனு அப்படீங்கிறத

வாசித்து தெரிஞ்சுக்க நாலை வரை டாட். 

Wednesday, January 13, 2021

பரபரப்பான ஒரு காலைப் பொழுது.

கடைசியாக போன வருஷம் தியேட்டருக்குச் சென்று பார்த்த படம் என்றால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்தான். அதுவும் ஊரடங்கு அறிவிப்பு வருவதற்கு ஒரு சில  நாட்களுக்கு முன்புதான் படத்துக்கு எனது மனதைக் கொள்ளை அடித்தவலோடு சென்றிருந்தேன்.


அதன் பிறகு எத்தனையோ  படங்கள் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் நெட்ஃப்லிக்ஸ்ஸில்  வீட்டில் இருந்துகொண்டு

  படம் பார்த்தாலும் தியேட்டருக்கு போய்   பெரிய ஸ்க்ரீன் முன்னாடி படம்

பார்க்குறதுக்கும் டால்பி சவுண்ட் எஃபக்ட்டில் படத்தை ரசிப்பதற்கும்..


எப்படியோ தம்பியோட புண்ணியத்தில் போன வாரம் ரிலிஸ் ஆன ஒரு தெலுங்கு படத்துக்கு நேற்று முந்தினம் இரவு காட்சிக்கு போய்

வந்தாச்சு. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது ஒரு நல்ல அனுபவம். என்ன தம்பியோடு சென்றதுதான் கொஞ்சம் வருத்தம். அதுவே ஒரு ரம்யாவோ சவ்மியாவோ இல்ல

  ப்ரியாவோடு  போய் இருந்தால் நல்லா இருந்திருக்கும்:)


அன்றைய தினம் படம் முடிஞ்சு  வீடு சேர பனிரெண்டரைக்கு மேல ஆச்சு. தினமும் ஒன்பது மணிக்கு படுத்து  ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருக்குற நா லேட்டா படுக்குறோம்; லேட்டா எழுந்திரிப்போம்னு நினைச்சு படுத்தா...

நேத்து காலையில் தினமும் எழுந்துரிக்குற டைமுக்கு தூக்கம் கலைஞ்சிடுச்சு.


அதுக்கு மேல என்னதான் இருக்கி கண்ண மூடி தூங்க ட்ரை பண்ணினாலும் அந்த பக்கம் இந்த பக்கம்னு புரண்டு பார்த்தாலும் ஹும் தூக்கம் மட்டும் வரவே இல்ல.

இதுக்கு மேல செட் ஆகாதுனு எழுந்துரிச்சு நேரா பாத்ரூமுக்கு ஓடினேன்.


என்னவோ தெரியல நேத்து மதியத்துல இருந்து லேஸா தலை வலி ஆரம்பிச்சிடுச்சு.

நைட் தூக்கம் கம்மியானதாலதான் தலைவலின்னு நினைச்சுகிட்டு  கொஞ்ச நேரம் கண்ண மூடுவோனு படுத்தேன். ரொம்பநாள் பிறகு

மதிய நேரம் ஒரு நல்ல தூக்கம். ஒரு நான்கு மணிக்கு தூக்கம்  கலைந்தது.

தூங்கி எழுந்துரிச்ச பிறகும் தலைவலி குறையவே இல்ல. ஆறு மணிக்கு மேல தீவிரமா

வலிக்க ஆரம்பிச்சது.


என்ன பண்ணுறதுன்னு தெரியல. பேசாம திரும்பவும் தூங்கிடுவோம்னு கட்டில்ல வந்து படுத்தாச்சு. யாருக்காவது ஃபோன் பண்ணி பேசலாம்னு தோணினாலும் இன்னைக்கு அவன் அவன் தலைவலி அவனுக்கு பெருசா இருக்கு. அடுத்தவுங்கள  பத்தி யோசிக்கிறதே குறைஞ்சு போன இந்த காலத்துல என்னோட தலைவலி பிரச்சனைய பத்தி பேச ஆரம்பிச்ச அடுத்த நொடியே எதிர் முனையில

இருக்குறவங்க ரியாக்‌ஷன் என்ன இருக்கும்னு தெரியும் என்பதால அந்த முயற்சியில் ஈடு படல.

ஒரு எட்டு மணி இருக்கும். அம்மா சாப்பிட எழுப்பும்போதுதான் தெரிஞ்சது  கண்டதையும் யோசிச்சிட்டிருக்க எனக்கு தெரியாமலே தூங்கி இருக்கேன் போலும்.


எப்பவும் நாலு சப்பாத்தி சாப்பிடுறவன் ரெண்டு செப்பாத்தி

மட்டும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் நடப்போனு நடக்குற சமயம் நவீனுக்கு ஃபோன் செய்திருந்தேன்.

எனக்கு தலைவலினா அவனுக்கு மனசு வலி. அப்போதான் புரிஞ்சுகிட்டென். மனுஷன் எல்லாருக்குமே எதோ ஒரு வலி இருக்கும்னு:)


இன்னதுன்னு காரணமே தெரியாத தலைவலி என்னைய  பீடிச்சிட்டிருக்க தூங்கலாம்னு படுத்தா தலவலி டபுல் த்ரிபுல் கூடிட்டே போகுது.

பாட்டி இருக்குற வரைக்கும் எனக்கு கால் வலி  அடிக்கடி வரும். அப்போ பாட்டியதான் கால் அழுத்திவிட சொல்லுவேன். அது என்ன அதிசயமோ அற்புதமோ தெரியல பாட்டி இறந்து போன பிறகு அதிகமா தலைவலிக்குறதே தவிர கால் வலி வர்றதில்ல.

வேற வழி தெரியாததுனால  அம்மாவ அழைச்சு தலையை கொஞ்ச நேரத்துக்கு அழுத்திவிட சொன்னேன்.

ஒரு அஞ்சு நிமிஷம் அம்மா  தலைய அமுக்கி  விட்டிருப்பாங்க. தலைவலியில் மாற்றம் வந்ததா தெரியல

கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன் மட்டும் தெரியும்.


இன்னைக்கு காலையில  டேய் எழுந்துரி ஏலேகால் ஆச்சுனு தம்பி என்னைய எழுப்பும்போதுதான் முழிப்பே வந்தது.

திடுக்கிட்டு நா என்னது ஏலேகாலானு கேட்டென்.

ஆமாம்னு சொன்னான்.

ஆமாம் படம் ஸ்டார்ட் ஆகி இருக்குமேனு கேட்டா

அது ஏலேமுக்காலுக்குதான்  சொன்னான்

எனக்கு நம்பிக்கையே இல்ல. அது எப்படி  நேத்து டிக்கட் புக் பன்னும்போது ஏலேகால்னு தானே சொன்னான்.

நானும் சரியாதானே கேட்டேன்.

இப்போ என்ன ஏலே முக்கால்னு சொல்லுரானு யோசிச்சுகிட்டே பாத்ரூம்ல நுழைஞ்சேன்.

அவசர ஆசரமா பல்ல விலக்கி;

முஞ்ச கலுவிட்டு வெலிய வந்தா அம்மா ஸோப் போட்டு மூஞ்ச கலுவுலியானு கேக்குராங்க

அட விடுமா  இருக்கவே இருக்கு பவுடர்னு சொல்லி  பவுடர் கொட்டி இருக்கும் டப்பாவ தேடுனா

அது காணோம். இப்படிதான் அவசரத்துக்கு எதுவும் கிடைக்காது. எல்லாம் முடிஞ்சு போன பிறகுதான்

கிடைக்கும். அதுக்கு அப்பறம் கெடைச்சும் ஒன்னுதான் கிடைக்காம இருக்குறதும் ஒன்னுதான்....


முனுமுனுத்துகிட்டே வீட்டுல இருந்து வெளிய வந்து செருப்பையும் மாஸ்க்கையும் போட்டுகிட்டு அவசர அவசரமா

வண்டிய வெளிய எடுத்துட்டு தியேட்டருக்கு போனா

தியேட்டர் முன்னாடி யாரும் காணோம்னு ரோட்லையே தம்பி சொல்ல விஷயம் புரிஞ்சிடுச்சு...


பைக் பார்க் பன்னிட்டு வேக வேகமா ஓடி  தியேட்டருக்குள்ள நுழைஞ்சா

விஜய் படத்துல விஜய்சேதுபதி ஏதோ வசனம் பேசிட்டிருந்தார்.

எங்கலோட சீட்ல போய் உட்கார்ந்து படம் ஆரம்பிச்சு எவ்வளவு நேரம் ஆச்சோணு  யோசிச்சிட்டே இருக்க

ரெண்டு நிமிஷத்தில

திரையில மாஸ்டர்னு  டைட்டில்  விழுது.


அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Monday, January 11, 2021

எதிர்பாரா ஒரு உறவு.

போன வருஷம் இதே  தினம்.


  2020 ஜனவரி பதினொன்னு. இரண்டாவது சனிக்கிழமை. வீட்டில்தான். காலை ஒரு ஏழரையில் இருந்து எட்டு மணிக்கு இடைப்பட்ட சமயத்தில் ஒரு ஃபோன் கால். அலைத்தது என்னவோ தெரிந்த ஒரு பெண்தான்.


இருவரும் ஒரே அலுவலகத்தில் அப்போது  வரையிலும் பணி புரிந்து வந்தோம். அவர் செய்து  வந்த வேலையில்  முறைகேடாக சில விஷயங்கள் கையாண்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு  வேலைக்கு வந்த அவரை உடனடியாக வீட்டிற்கு

கிளம்பி போய்விடுமாறு அவருக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாம்.


இருவரும் ஒரே இடத்தில் பணி புரிந்தாலும் பணிபுரியும் பிரிவு வேறு வேறு என்பதால்

என்ன நடந்தது என்பதை எனக்கு தெரிய இரண்டு நாட்கள் ஆனது.


நடந்தனவற்றை அவர் சொல்லச் சொல்ல என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அது வரையிலும் நாங்கள் இருவரும்  நெருங்கி பழகியது கிடையாது என்றாலும்

அவரை பற்றி எனக்கு தெரியும். அவர்மீது சுமத்த பட்ட குற்றச் சாட்டிற்கு அவர்

அவர் நிச்சயம் காரணமாக இருக்க மாட்டார்னு எனக்கு நன்றாகத் தெரியும்.


அதன் பிறகு அவர் அலுவலகத்திற்கு வருவது நின்று விட்டது.

ஒரு சில மாதங்களில் லாக்டவுன் அறிவிப்பும் வந்தது.

  நானும் அலுவலகத்திற்கு செல்வது நின்றுவிட்டது.


ஜெனவரி ஒன்று அன்னைக்கு எழுதி இருந்த ஒரு பதிவில் பெயர் குறிப்பிடாமல் ஒருத்தரைப் பத்தி எழுதி இருந்ததை வாசிச்சு இரண்டு மூன்று பேர்  ‘பதிவில் குறிப்பிட்டிருந்த  அந்த நபர் யார் ‘னு கேட்டிருந்தனர்.


அந்த பதிவில் பெயர் குறிப்பிடாமல் எழுதியதும்

இந்த பதிவில் இதுவரையிலும் பெயர் குறிப்பிடாமல் எழுதியதும் இருவரும் ஒரே நபர்தான்...


இன்னைக்கு  காலையில் எழுந்ததும் போன வருஷ  நிகழ்வுகள் நினைவுகளாக ஞாபகம் வரவும்

சத்யாவுக்கு அனுப்பிய மெசேஜில்

போனவருஷம்  நீ

என் கிட்ட நடந்துகிட்ட மாதிரி

வரும் நாட்களிலும்

  என் கிட்ட நீ நடந்துக்கனும்னு சொல்லி இருக்கேன்.


ஆசை படலாம் ஆனால் பேராசை பட கூடாது.

ஆனாலும் வேறு வழி இல்லை.

பார்ப்போம்

அடுத்த வருஷம்  இதே தினம் என்ன சொல்லுவேனோ.


நம்பிக்கை இருக்கு என் மேல இல்ல-சத்யா மீது:))))

Friday, January 01, 2021

முதல் நாள்.

புதுவருடத்தில்  பழைய கேலண்டரை தூக்கி போட்டு  புது கேலண்டர மாட்டுற மாதிரிமனுஷ வாழ்க்கையிலையும் பழைய கசப்புகள் மன வருத்தங்கள் ஏமாற்றங்கள்த்ரோகங்களின் நினைவுகள் மறந்து புது வருடத்தில் புது சிந்தனையோடும்

புத்துணர்ச்சியோடு நுழைந்தால் எப்படி இருக்கும்...

 

எழுதுவதற்கும் வாசிப்பதற்கும்   யோசிப்பதற்கும் ஸ்வாரஸ்யமாக இருக்குமே தவிர

புது ஆண்டிலும்

அதே வாழ்க்கை;

அதே மனுஷங்க;

அதே பிரச்சனை...

எதுவும் மாறப்போவது கிடையாது...

 

ஆனாலும் வருடத்தில் 365நாட்களில்  எனக்கு மிகவும் பிடித்த நாள்;

நாள் முழுவதும் உற்சாகத்தோடும்; சந்தோஷத்தோடும்

நான் கொண்டாட நினைத்து

கொண்டாடிக்கொண்டிருக்குமொருநாள்னா அது

ஜனவரி ஒன்னுதான்...

 

***

 

சின்ன வயசுல என்னுடைய புது வருட கொண்டாட்டம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே

ஆரம்பிச்சிடும். அது எந்த வயசுல இருந்து எந்த வயசுவரைக்கும்னு சரியா ஞாபகம்

வரமாட்டேங்கிறது.

  சிறுவயது புத்தாண்டு கொண்டாட்டம்னா க்ரீடிங்ஸ் கார்டும் போஸ்ட் ஆஃபிசும் அக்காவும்தான் ஞாபகத்துக்கு வருவாங்க....

 

அக்கானா  கூட பிறந்த அக்கா கிடையாது. எனக்கு இருக்குறது ஒரே ஒரு தம்பிதான். பெரியப்பா பொண்ணுதான் அந்த அக்கா...

 

வீட்டு பக்கத்துல ஒரு ஸ்டேஷ்னரி  கடை இருக்கும். அந்த கடையில அக்காவுக்கு  க்ரீடிங்ஸ் கார்ட் அனுப்ப மதியம் ஒரு மூனு

அல்லது நாலு மணிக்கு   கடைக்கு போவேன்...

 

  ஒவ்வொரு க்ரீடிங்ஸ் கார்டையும் எடுத்து ஏதோ எனக்கு படங்கள் தெரியுற மாதிரி முன்னும் பின்னும் உள்ள திறந்து  உத்து உத்து பார்ப்பேன். அப்படி  பார்த்ததுல எனக்கு நல்லா இருக்குனு தோனிய க்ரீடிங்ஸ் கார்ட்

வாங்கிட்டு வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட சொல்லி நியூ இயர் விஷஸ் என்ன எழுதீருக்குனு வாசிக்கச் சொல்லுவேன்.

அப்பா வாசிச்சு முடிச்சதும் கடைசியில  இருக்கும் with love கீழ பேனாவ பிடிச்சு  என்னுடைய பேர் சரியா எழுதுரேனானு

ஆயிரத்தி எட்டுத் தடவை அப்பா கிட்ட கேட்டுப் பெயரை சரியா எழுதுரேனானு சந்தேகத்தோடு எழுதியதெல்லாம்...

 

அதுக்கப்பறம் கார்டை ஒரு கவர்ல போட்டு சமயல் அறையில் இருந்து அம்மா கிட்ட கேட்டு நாலு சோற்றுப் பருக்கைய எடுத்து 

கார்ட்வெலியே வராதபடிக்கு ஒட்டி அக்காவோடவீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் ஆஃபிஸ்வரைக்கும் அப்பாவோட போய் புறப்பட ரெடியா இருக்கும் போஸ்டல் பேக்ல  போட்டு சரியா க்ரீடிங்ஸ் கரெக்டா நியூ இயர்  அன்று

அக்கா கைக்கு கிடைக்குமா கிடைக்காதானு எதிர் பார்த்திட்டிருந்த காலம்  எங்க...

 

லேண்ட்லைன் கனெக்‌ஷன் வீட்டுக்கு வந்த போது

  புது வருஷ முதல்நாள் அன்னைக்கு காலையில ஃபோன் அலரிச்சுனா

அது அக்காவதான் இருக்கும்னுஒரு காலம் போச்சு...

 

லெண்ட்லைன் இருந்து செல்ஃபோன் கால வாழ்த்துக்கு மாறின சமயம்தான்

அக்காவுக்குமேரேஜாகிடுச்சு...

 

அதன் பிறகு வருஷ பிறப்பை வரவேற்க  நைட் பனிரெண்டு மணிவரைக்கும்

விழித்திருந்து பிரியமானவர்களோடு வாழ்த்து பரிமாறிக்கொண்டதெல்லாம் ஒரு சில

காலம் மட்டும்தான்...

 

ஆனால்நேற்று  ஒருத்தங்களுக்கு நைட் பனிரெண்டு மணிக்கு வாழ்த்தனும்னு தோனினாலும்

அதுக்காக யாரு தூக்கத்தை தியாகம் செய்வானு யோசிச்சு

நேத்து ஈவினிங் அந்த நபருக்கு கால் செய்திருந்தேன்.

அவர் கால் லிட்ஃப் பண்ணிய நொடியில இருந்து புத்தாண்டு செலிப்ரேஷன் மூடு ஸ்டார்ட் ஆச்சுனுசொல்லலாம்...

 

***

 

நினைத்த படி புத்தாண்டின் முதல்நாள்

வாட்ஸாப்  திறக்காமல் நண்பர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்து

மனநிறைவாக நாலு வார்த்தை பேசி  புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடியாச்சு...

 

அனைவருக்கும்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

 

___

திருப்பதி மஹேஷ்

01.01.2021.