Friday, January 01, 2021

முதல் நாள்.

புதுவருடத்தில்  பழைய கேலண்டரை தூக்கி போட்டு  புது கேலண்டர மாட்டுற மாதிரிமனுஷ வாழ்க்கையிலையும் பழைய கசப்புகள் மன வருத்தங்கள் ஏமாற்றங்கள்த்ரோகங்களின் நினைவுகள் மறந்து புது வருடத்தில் புது சிந்தனையோடும்

புத்துணர்ச்சியோடு நுழைந்தால் எப்படி இருக்கும்...

 

எழுதுவதற்கும் வாசிப்பதற்கும்   யோசிப்பதற்கும் ஸ்வாரஸ்யமாக இருக்குமே தவிர

புது ஆண்டிலும்

அதே வாழ்க்கை;

அதே மனுஷங்க;

அதே பிரச்சனை...

எதுவும் மாறப்போவது கிடையாது...

 

ஆனாலும் வருடத்தில் 365நாட்களில்  எனக்கு மிகவும் பிடித்த நாள்;

நாள் முழுவதும் உற்சாகத்தோடும்; சந்தோஷத்தோடும்

நான் கொண்டாட நினைத்து

கொண்டாடிக்கொண்டிருக்குமொருநாள்னா அது

ஜனவரி ஒன்னுதான்...

 

***

 

சின்ன வயசுல என்னுடைய புது வருட கொண்டாட்டம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே

ஆரம்பிச்சிடும். அது எந்த வயசுல இருந்து எந்த வயசுவரைக்கும்னு சரியா ஞாபகம்

வரமாட்டேங்கிறது.

  சிறுவயது புத்தாண்டு கொண்டாட்டம்னா க்ரீடிங்ஸ் கார்டும் போஸ்ட் ஆஃபிசும் அக்காவும்தான் ஞாபகத்துக்கு வருவாங்க....

 

அக்கானா  கூட பிறந்த அக்கா கிடையாது. எனக்கு இருக்குறது ஒரே ஒரு தம்பிதான். பெரியப்பா பொண்ணுதான் அந்த அக்கா...

 

வீட்டு பக்கத்துல ஒரு ஸ்டேஷ்னரி  கடை இருக்கும். அந்த கடையில அக்காவுக்கு  க்ரீடிங்ஸ் கார்ட் அனுப்ப மதியம் ஒரு மூனு

அல்லது நாலு மணிக்கு   கடைக்கு போவேன்...

 

  ஒவ்வொரு க்ரீடிங்ஸ் கார்டையும் எடுத்து ஏதோ எனக்கு படங்கள் தெரியுற மாதிரி முன்னும் பின்னும் உள்ள திறந்து  உத்து உத்து பார்ப்பேன். அப்படி  பார்த்ததுல எனக்கு நல்லா இருக்குனு தோனிய க்ரீடிங்ஸ் கார்ட்

வாங்கிட்டு வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட சொல்லி நியூ இயர் விஷஸ் என்ன எழுதீருக்குனு வாசிக்கச் சொல்லுவேன்.

அப்பா வாசிச்சு முடிச்சதும் கடைசியில  இருக்கும் with love கீழ பேனாவ பிடிச்சு  என்னுடைய பேர் சரியா எழுதுரேனானு

ஆயிரத்தி எட்டுத் தடவை அப்பா கிட்ட கேட்டுப் பெயரை சரியா எழுதுரேனானு சந்தேகத்தோடு எழுதியதெல்லாம்...

 

அதுக்கப்பறம் கார்டை ஒரு கவர்ல போட்டு சமயல் அறையில் இருந்து அம்மா கிட்ட கேட்டு நாலு சோற்றுப் பருக்கைய எடுத்து 

கார்ட்வெலியே வராதபடிக்கு ஒட்டி அக்காவோடவீட்டு அட்ரெஸ் எழுதி போஸ்ட் ஆஃபிஸ்வரைக்கும் அப்பாவோட போய் புறப்பட ரெடியா இருக்கும் போஸ்டல் பேக்ல  போட்டு சரியா க்ரீடிங்ஸ் கரெக்டா நியூ இயர்  அன்று

அக்கா கைக்கு கிடைக்குமா கிடைக்காதானு எதிர் பார்த்திட்டிருந்த காலம்  எங்க...

 

லேண்ட்லைன் கனெக்‌ஷன் வீட்டுக்கு வந்த போது

  புது வருஷ முதல்நாள் அன்னைக்கு காலையில ஃபோன் அலரிச்சுனா

அது அக்காவதான் இருக்கும்னுஒரு காலம் போச்சு...

 

லெண்ட்லைன் இருந்து செல்ஃபோன் கால வாழ்த்துக்கு மாறின சமயம்தான்

அக்காவுக்குமேரேஜாகிடுச்சு...

 

அதன் பிறகு வருஷ பிறப்பை வரவேற்க  நைட் பனிரெண்டு மணிவரைக்கும்

விழித்திருந்து பிரியமானவர்களோடு வாழ்த்து பரிமாறிக்கொண்டதெல்லாம் ஒரு சில

காலம் மட்டும்தான்...

 

ஆனால்நேற்று  ஒருத்தங்களுக்கு நைட் பனிரெண்டு மணிக்கு வாழ்த்தனும்னு தோனினாலும்

அதுக்காக யாரு தூக்கத்தை தியாகம் செய்வானு யோசிச்சு

நேத்து ஈவினிங் அந்த நபருக்கு கால் செய்திருந்தேன்.

அவர் கால் லிட்ஃப் பண்ணிய நொடியில இருந்து புத்தாண்டு செலிப்ரேஷன் மூடு ஸ்டார்ட் ஆச்சுனுசொல்லலாம்...

 

***

 

நினைத்த படி புத்தாண்டின் முதல்நாள்

வாட்ஸாப்  திறக்காமல் நண்பர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்து

மனநிறைவாக நாலு வார்த்தை பேசி  புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடியாச்சு...

 

அனைவருக்கும்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

 

___

திருப்பதி மஹேஷ்

01.01.2021.


4 comments:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தல.
  கசப்பை இனிப்பாக மாற்றவும் த்றோகங்களை மறக்கவும் ஒரே வழி அதை அளித்தவர்களின் நிலையிலிருந்து சிந்திக்கும் பக்குவத்தை வளர்ப்பதும், சுற்றியுள்ளோரின் ஆழ் விருப்பங்களை நம் விருப்பங்களோடு ஒப்பிட்டு புரிந்துகொள்வதுமே.
  ரசவாதி புத்தகத்திலிருந்து சில பொருத்தமான வரிகள் இங்கே.

  “ உங்களுக்கு எதற்காக ஒரு கைத்துப்பாக்கி?” என்று அவன் கேட்டான்.
  “ மக்கள்மீது நம்பிக்கை வைக்க அது எனக்கு உதவியது,” என்று அந்த ஆங்கிலேயர் பதிலளித்தார்.
  “ துரோகம் என்பது எதிர்பாராத நேரத்தில் வருகின்ற ஒரு சவுக்கடி. நீ உன் இதயத்தை நன்றாக அறிந்திருந்தால், அதனால் ஒருபோதும் உனக்குத் துரோகம் இழைக்க முடியாது என்பதை நீ புரிந்து கொள்ளுவாய். ஏனெனில், நீ அதன் கனவுகளையும் விருப்பங்களையும் அறிந்திருப்பாய், அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் நீ அறிந்திருப்பாய்.
  “ துன்பம் குறித்த பயம் அந்தத் துன்பத்தைவிட அதிக மோசமானது என்றும், தன் கனவுகளைப் பின்தொடர்ந்து சென்ற எந்தவோர் இதயமும் ஒருபோதும் துன்புற்றதில்லை என்றும் உன் இதயத்திடம் சொல். ஏனெனில், தேடலின் ஒவ்வொரு நொடியும் கடவுளுடனும் நிலைபேற்றுடனும் ஏற்படுகின்ற ஒரு கணநேர சந்திப்பாகும்.”
  ‘பொழுது விடிவதற்குச் சற்று முன்பாகத்தான் இரவு மிக அதிக இருட்டாக இருக்கிறது’

  ReplyDelete