Wednesday, January 13, 2021

பரபரப்பான ஒரு காலைப் பொழுது.

கடைசியாக போன வருஷம் தியேட்டருக்குச் சென்று பார்த்த படம் என்றால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்தான். அதுவும் ஊரடங்கு அறிவிப்பு வருவதற்கு ஒரு சில  நாட்களுக்கு முன்புதான் படத்துக்கு எனது மனதைக் கொள்ளை அடித்தவலோடு சென்றிருந்தேன்.


அதன் பிறகு எத்தனையோ  படங்கள் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் நெட்ஃப்லிக்ஸ்ஸில்  வீட்டில் இருந்துகொண்டு

  படம் பார்த்தாலும் தியேட்டருக்கு போய்   பெரிய ஸ்க்ரீன் முன்னாடி படம்

பார்க்குறதுக்கும் டால்பி சவுண்ட் எஃபக்ட்டில் படத்தை ரசிப்பதற்கும்..


எப்படியோ தம்பியோட புண்ணியத்தில் போன வாரம் ரிலிஸ் ஆன ஒரு தெலுங்கு படத்துக்கு நேற்று முந்தினம் இரவு காட்சிக்கு போய்

வந்தாச்சு. பல மாதங்களுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது ஒரு நல்ல அனுபவம். என்ன தம்பியோடு சென்றதுதான் கொஞ்சம் வருத்தம். அதுவே ஒரு ரம்யாவோ சவ்மியாவோ இல்ல

  ப்ரியாவோடு  போய் இருந்தால் நல்லா இருந்திருக்கும்:)


அன்றைய தினம் படம் முடிஞ்சு  வீடு சேர பனிரெண்டரைக்கு மேல ஆச்சு. தினமும் ஒன்பது மணிக்கு படுத்து  ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருக்குற நா லேட்டா படுக்குறோம்; லேட்டா எழுந்திரிப்போம்னு நினைச்சு படுத்தா...

நேத்து காலையில் தினமும் எழுந்துரிக்குற டைமுக்கு தூக்கம் கலைஞ்சிடுச்சு.


அதுக்கு மேல என்னதான் இருக்கி கண்ண மூடி தூங்க ட்ரை பண்ணினாலும் அந்த பக்கம் இந்த பக்கம்னு புரண்டு பார்த்தாலும் ஹும் தூக்கம் மட்டும் வரவே இல்ல.

இதுக்கு மேல செட் ஆகாதுனு எழுந்துரிச்சு நேரா பாத்ரூமுக்கு ஓடினேன்.


என்னவோ தெரியல நேத்து மதியத்துல இருந்து லேஸா தலை வலி ஆரம்பிச்சிடுச்சு.

நைட் தூக்கம் கம்மியானதாலதான் தலைவலின்னு நினைச்சுகிட்டு  கொஞ்ச நேரம் கண்ண மூடுவோனு படுத்தேன். ரொம்பநாள் பிறகு

மதிய நேரம் ஒரு நல்ல தூக்கம். ஒரு நான்கு மணிக்கு தூக்கம்  கலைந்தது.

தூங்கி எழுந்துரிச்ச பிறகும் தலைவலி குறையவே இல்ல. ஆறு மணிக்கு மேல தீவிரமா

வலிக்க ஆரம்பிச்சது.


என்ன பண்ணுறதுன்னு தெரியல. பேசாம திரும்பவும் தூங்கிடுவோம்னு கட்டில்ல வந்து படுத்தாச்சு. யாருக்காவது ஃபோன் பண்ணி பேசலாம்னு தோணினாலும் இன்னைக்கு அவன் அவன் தலைவலி அவனுக்கு பெருசா இருக்கு. அடுத்தவுங்கள  பத்தி யோசிக்கிறதே குறைஞ்சு போன இந்த காலத்துல என்னோட தலைவலி பிரச்சனைய பத்தி பேச ஆரம்பிச்ச அடுத்த நொடியே எதிர் முனையில

இருக்குறவங்க ரியாக்‌ஷன் என்ன இருக்கும்னு தெரியும் என்பதால அந்த முயற்சியில் ஈடு படல.

ஒரு எட்டு மணி இருக்கும். அம்மா சாப்பிட எழுப்பும்போதுதான் தெரிஞ்சது  கண்டதையும் யோசிச்சிட்டிருக்க எனக்கு தெரியாமலே தூங்கி இருக்கேன் போலும்.


எப்பவும் நாலு சப்பாத்தி சாப்பிடுறவன் ரெண்டு செப்பாத்தி

மட்டும் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் நடப்போனு நடக்குற சமயம் நவீனுக்கு ஃபோன் செய்திருந்தேன்.

எனக்கு தலைவலினா அவனுக்கு மனசு வலி. அப்போதான் புரிஞ்சுகிட்டென். மனுஷன் எல்லாருக்குமே எதோ ஒரு வலி இருக்கும்னு:)


இன்னதுன்னு காரணமே தெரியாத தலைவலி என்னைய  பீடிச்சிட்டிருக்க தூங்கலாம்னு படுத்தா தலவலி டபுல் த்ரிபுல் கூடிட்டே போகுது.

பாட்டி இருக்குற வரைக்கும் எனக்கு கால் வலி  அடிக்கடி வரும். அப்போ பாட்டியதான் கால் அழுத்திவிட சொல்லுவேன். அது என்ன அதிசயமோ அற்புதமோ தெரியல பாட்டி இறந்து போன பிறகு அதிகமா தலைவலிக்குறதே தவிர கால் வலி வர்றதில்ல.

வேற வழி தெரியாததுனால  அம்மாவ அழைச்சு தலையை கொஞ்ச நேரத்துக்கு அழுத்திவிட சொன்னேன்.

ஒரு அஞ்சு நிமிஷம் அம்மா  தலைய அமுக்கி  விட்டிருப்பாங்க. தலைவலியில் மாற்றம் வந்ததா தெரியல

கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன் மட்டும் தெரியும்.


இன்னைக்கு காலையில  டேய் எழுந்துரி ஏலேகால் ஆச்சுனு தம்பி என்னைய எழுப்பும்போதுதான் முழிப்பே வந்தது.

திடுக்கிட்டு நா என்னது ஏலேகாலானு கேட்டென்.

ஆமாம்னு சொன்னான்.

ஆமாம் படம் ஸ்டார்ட் ஆகி இருக்குமேனு கேட்டா

அது ஏலேமுக்காலுக்குதான்  சொன்னான்

எனக்கு நம்பிக்கையே இல்ல. அது எப்படி  நேத்து டிக்கட் புக் பன்னும்போது ஏலேகால்னு தானே சொன்னான்.

நானும் சரியாதானே கேட்டேன்.

இப்போ என்ன ஏலே முக்கால்னு சொல்லுரானு யோசிச்சுகிட்டே பாத்ரூம்ல நுழைஞ்சேன்.

அவசர ஆசரமா பல்ல விலக்கி;

முஞ்ச கலுவிட்டு வெலிய வந்தா அம்மா ஸோப் போட்டு மூஞ்ச கலுவுலியானு கேக்குராங்க

அட விடுமா  இருக்கவே இருக்கு பவுடர்னு சொல்லி  பவுடர் கொட்டி இருக்கும் டப்பாவ தேடுனா

அது காணோம். இப்படிதான் அவசரத்துக்கு எதுவும் கிடைக்காது. எல்லாம் முடிஞ்சு போன பிறகுதான்

கிடைக்கும். அதுக்கு அப்பறம் கெடைச்சும் ஒன்னுதான் கிடைக்காம இருக்குறதும் ஒன்னுதான்....


முனுமுனுத்துகிட்டே வீட்டுல இருந்து வெளிய வந்து செருப்பையும் மாஸ்க்கையும் போட்டுகிட்டு அவசர அவசரமா

வண்டிய வெளிய எடுத்துட்டு தியேட்டருக்கு போனா

தியேட்டர் முன்னாடி யாரும் காணோம்னு ரோட்லையே தம்பி சொல்ல விஷயம் புரிஞ்சிடுச்சு...


பைக் பார்க் பன்னிட்டு வேக வேகமா ஓடி  தியேட்டருக்குள்ள நுழைஞ்சா

விஜய் படத்துல விஜய்சேதுபதி ஏதோ வசனம் பேசிட்டிருந்தார்.

எங்கலோட சீட்ல போய் உட்கார்ந்து படம் ஆரம்பிச்சு எவ்வளவு நேரம் ஆச்சோணு  யோசிச்சிட்டே இருக்க

ரெண்டு நிமிஷத்தில

திரையில மாஸ்டர்னு  டைட்டில்  விழுது.


அனைவருக்கும் போகி மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

7 comments:

 1. பரபரப்பா பதிவு எழுதுர அவசரத்தில பரபரப்பா உன் ஆளு சீக்ரெட் பெயர லீக் பண்ணிட்டியே தல!

  ReplyDelete
  Replies
  1. அட அரவிந்த் நீங்க வேற பொன்னுங்க காதல்தான்  gmail password மாதிரி அவுங்களுக்கு மட்டுமே அது தெரியும்.
   பசங்க காதல் எல்லாம் ஹாண்ட் கர்சீஃப்  மாதிரி  தேவை படும்போதெல்லாம் பயன்படுத்தும்போது  அடுத்தவனுக்கு எப்படியும் ஒருநாள் தெரிய போகுது:)))

   Delete
 2. மாஸ்டர் படம் பார்த்தீங்களோ தெரியாது கூடிய சீக்கிரம் பரியாவுடன் செட்டிலாகிவிடுங்க![[[அடிக்கடி பதிவுகளில் கலியாண ஏக்கம் எடிப்பார்க்கின்றது பரோ![[[[

  ReplyDelete
  Replies
  1. என்னங்க பண்ணுறது தனிமரம் அண்ணே
   அந்த அந்த  வயசுல  அதது நடந்து முடிஞ்சிட்டா இப்படி  ஏக்கம் இருக்காதே:)))

   Delete
 3. நன்று.

  பொங்கல் நல்வாழ்த்துகள் மஹேஷ்.

  ReplyDelete