Friday, January 15, 2021

நேற்றைய பொங்கல் தினம்.

 போன வாரம் வெள்ளிக்கிழமைஒரு பிசாசோடு  சரியான சண்டை. எங்கிருந்துதான்

அந்த தைரியம் எனக்கு வந்ததுன்னு தெரியல. அது வரைக்கும் மனதில் அடக்கி வைத்திருந்த கோவத்தை எல்லாம் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தாச்சு.


அதன் பிறகு ஒரு வாரத்துக்கு ஃபோனே இல்ல. நேத்து பொங்கல் வாழ்த்து சொல்ல மொத ஆளா அந்த பிசாசு காலையில எனக்கு ஃபோன் பண்ணிச்சு.


சரி போன வருஷ பொங்கலுக்குத்தான் கால் பண்ணினப்போ கால் எடுக்கல. இந்த வருஷ பொங்கலுக்கு அப்படி இருக்க வேணாமேனு போனா போகட்டும்னு  கால் அட்டன் பண்ணியதில் ஆரம்பிச்சது  நேற்றைய தின பொங்கல் செலிபிரேஷன்...


***


  ஏழு  வயசு இருக்கும்போது சென்னையில் ஒரு சிறப்பு பள்ளியில் என்னுடைய விடுதி வாழ்க்கை ஆரம்பம். அந்த வயசுல எனக்கு சரியா

குளிக்க வருமா; சாப்பிட தெரியுமா மத்தவுங்க பேசுறத கேட்டு நா வாய் திறந்து பதிலுக்கு பேச மொழி தெரியுமானு

என்னைய பெத்தவங்க யோசிச்சாஞ்கலானு தெரியல.


இஞ்க ஒரு டாக்டர் அப்பா கிட்ட பைய்யன சென்னையில  படிக்க வெச்சா பெரிய ஆளா வருவான்னு சொன்னத கேட்டு எத பத்தியும் யோசிக்காம நல்ல நாள் பார்த்து ஒன்றாம் வகுப்பில் என்னைய சேர்த்தாச்சு.


ஒவ்வொரு வருஷமும்  ஜூன் மாசம் மொத வாரம்  வீட்டுல இருந்து கிளம்பி ஹாஸ்டலுக்கு வந்திட்டா  அதோடு செப்டம்பர் மாத காலாண்டு விடுமுறைக்குத்தான் வீட்டுக்கு போவது. திரும்பவும் அக்டோபர் மாசம்

மொத வாரம் ஹாஸ்டலுக்கு வந்தா   தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு போவது. அதன் பிறகு டிசம்பர் மாத கடைசியில் வரும் அரையாண்டு விடுமுறை வீட்டுக்கு போய்விட்டு ஜனவரி மொதவாரத்துல ஹாஸ்டலுக்கு...

  அடுத்த ஒரு பத்து நாட்கள் ல  திரும்பவும் வீட்டுக்கு பொங்கல் பண்டிகை புண்ணியத்துல...  வீட்டுக்கு வந்திடுவேன்.

நாலுநாள் பொங்கள் விடுமுறை முடிஞ்சதும் திரும்பவும் ஹாஸ்டலுக்கு போய்விடுறது.

அதோடு மார்ச்  மாத கடைசியில் ஒரு ரெண்டு மாசம் வீட்டுல இருந்திட்டுவானு முழு ஆண்டு விடுமுறை பெயரில் வீட்டுக்கு அனுப்புவார்கள். இப்படி மொத்தமா பார்த்தால்  வருடத்தில் பெரும்பாலான மாதங்கள் வீட்டைவிட்டு பிரிஞ்சுதான் வளர்ந்திருக்கேன்.


அந்த வயசுல பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பு பாசம் கவனிப்பு எதுவும் எனக்கு கிடைக்காம வளர்ந்ததால  அதோட

தாக்கம்தான் இருக்குமோ என்னவோ நாலு வார்த்தை  என் கிட்ட அக்கரையா யாராவது பேசிட்டா போதும் கடைசி வரைக்கும்

அப்படியே இருக்க மாட்டாங்களானு கேனத்தனமா யோசிக்கத் தோணும்.


இன்னைக்கு ஒவ்வொரு பேச்சுக்கும் பின்னால் மறைந்திருக்கும் சுய நலத்த நினைச்சு பார்க்கும்போது அடுத்த  பிறவின்னு ஒன்னு இருந்தா

எதுவானாலும் பொறந்து தொலைக்கலாம் இந்த மனுஷ பிறவியா மட்டும்...

ஐய்யோ பதிவோட தலைப்பு நேற்றைய பொங்கல் தினம்னு வெச்சிட்டு என்னோட புலம்பல புலம்பிட்டிருக்கேன் பாருங்க


***


அரையாண்டு விடுமுறை முடிஞ்சு ஜனவரி மாசம் ஸ்குலுக்கு போறச்சே ஒரே உற்சாகத்தோடு போவேன். என்னா  திரும்பவும் ஒரு

பத்துநாட்கள் ல வீட்டுக்கு திரும்பவும் வர  போறோமே என்கிற ஒரு சந்தோஷம்தான்.

இப்படியாக   சிறுவயதில் ஆரம்பித்த எனது பொங்கல் பண்டிகையின் மீதான நினைவுகள்...


***


எங்கள் குடும்பத்தில் பொங்கல் தீபாவளி பண்டிகைகள் மட்டும்  எங்களது பூர்வீகமா இருக்கிற ஊருக்குச் சென்று கொண்டாடுவதுதான் எங்களது

வழக்கம்.


கடந்த ஆரேழு வருஷமா  நான் பொங்கல் தீபாவளி பண்டிகைக்கு கிராமத்துக்கு போவது

நின்றுவிட்டது. அம்மா எவ்வளவோ என்னைய வற்புறுத்தி ஊருக்கு வர சொல்லி கேட்பாங்க

நா வர மாட்டேனு அடம் பிடிப்பேன். இதுனாலையே பண்டிகை சமயங்களில் எனக்கும்

அம்மாவுக்கும் இடையே    சண்டை வரும்.

கடைசியில வீட்டில் இருக்கும் மத்தவுங்க ஊருக்கு சென்று வருவார்கள்.


ஏனோ இவ்வருடம் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போய்தான் பார்ப்போமேனு தோனியதுமே நேற்று காலையில் பத்து மணிக்கு நாங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டோம்.

அம்மா அப்பா பேருந்தில் செல்ல தம்பியும் நானும் பைக்கில் புறப்பட்டோம்.

திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் எங்களது பூர்வீக கிராமம்.

லோக்கல்ல  இங்க அவசரமா ஒன்னு ரெண்டு வேலைகள்  முடிக்க வேண்டி இருக்க அதைய முடிச்சிட்டு  போறதுக்கும்;

பஸ்ஸுல வந்த அம்மா அப்பா ஊருல இறங்கவும் சரியா இருந்தது.


மணி அப்போ காலை பதினொன்னறை இருக்கும். வீட்டுல நுழையுர சமயம் சித்தி பெரியம்மா எல்லாம் சமயல்ல பிசியா இருந்தாங்க.

ஒரு அஞ்சு நிமிஷம் வீட்டுல உட்கார்ந்திருப்பேன். தொடர்ந்து உட்கார

பிடிக்காததுனால வீட்டின் பின் புறம் வந்து  தோட்டத்தின் மண் தரையில்  சிறுவயதில் மணலில் விளையாடிய மண் விளையாட்டுகளை எல்லாம் அசை

போட்டுக் கொண்டு நடந்து சின்ன வயசுல பார்த்த தென்ன மரத்தையும் மா மரத்தையும் தடவி பார்த்து இன்னும் இந்த மரங்கள்

எல்லாம் இருக்கானு ஆச்சர்ய பட்டு   தோட்டத்துல இருக்கும் மத்த மரங்களையும்  பார்த்திட்டே வர

சின்ன வயசுல பார்த்த உயரமான யூக்கலீடஸ் மரம் மட்டும்தான் மிஸ் ஆகி இருக்குனு யோசிச்சிட்டிருக்க

அந்த மரத்துக்கு என்ன ஆச்சுனு சித்திய கூப்பிட்டு கேட்டதுக்கு

ஒருதடவை பலத்த மழை பெஞ்சப்போ மரம் சாய்ஞ்சு போனதால வெட்டிட்டாங்கன்னு சொன்னாஞ்க.

ஊட்டி கொடைகானல்  மலை பிரதேசங்களுக்கு சென்றபோது எத்தனையோ யூகலீப்டஸ் மரங்களை

பார்த்திருக்கேன் அதில் இருந்து வரும் வாசனையை மூக்கில் உணர்ந்திருக்கேன்.

சின்ன வயசுல பார்த்த மொத யூகலீப்டஸ் மரம் இல்லாதத நினைவுகல்ல இருந்து 

அழியாததை நினைச்சுகிட்டு புதுசா என்ன என்ன பூசெடிங்க  வெச்சிருக்காங்கன்னு பார்த்திட்டிருக்க ஆத்திர அவசரத்துக்கு மண்தரையில் ஒன்னுக்கு போறச்சே வரும் பாருங்க சரசரவென ஒரு சத்தம் வருமே

அது மாதிரியான சத்தம் திடீரென கேட்க யாருடா அது  திரும்பி பார்த்தா சைலெண்டா எனக்குப் பின்னாடி தோட்டத்துக்கு வந்த அண்ண பொன்னு செடிகளுக்கு ஹோஸ் பைப் பிடிச்சு தன்னி விட்டிட்டிருந்தா.

எங்களோட தலைமுறை இந்த மண்ணுல எவ்வளவு விளையாட முடியுமோ அந்த அளவு விளையாடி

முடிச்சாச்சு. அடுத்த தலைமுறை எங்கள மாதிரி இந்த தோட்டத்துல விளையாடுவாங்களா தெரியாது

அட்லீஸ்ட்  தண்ணியாச்சும் ஊத்துராலேனு

நினைச்சுகிட்டு   பத்து வயசு  கார்த்திகா கிட்ட செடிக்கு நல்லா தண்ணிய விடுன்னு

சொல்லி காலுல ஒட்டி இருந்த மண்ண உதறிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்.


பூஜை அறையில் சாமி கும்பிட  தேவையான எல்லா  ஏற்பாடுகளும் முடிஞ்சிருந்தது.

பூஜை  சமாச்சாரம் முடிச்சதும் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம்.

எனக்கு முன்னாடி வாழை யில விரிச்சு வரிசையா  ஒரு ஒரு ஐட்டமா  இலையில வந்து விழுந்துகிட்டிருந்தது.

நானும்  வாய் வழியா வைத்து உள்ள தள்ளிகிட்டிருந்தேன்.

ஒரு வழியா இனி போதும்டா சாமி நிறுத்திக்கோனு வயிறு சொன்னதும்

இலைய மடிச்சிட்டு எழுந்துறிச்சாச்சு.


சாப்பாடு முடிஞ்சதும் வீட்டு முற்றத்தில் இருக்கும் திண்ணையில் வந்து

உட்கார்ந்தேன். பல வருஷத்துக்கு பிறகு நம்ம மொகம் ஊருல தெரியுறதுனால அக்கம்

பக்கம் வீட்டில் இருப்பவுங்க எல்லாம் வந்து பேசிட்டு போனாங்க. ரெண்டு மூனு அத்தை முறை வேண்டியவங்க

வந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போனு சொன்னாஞ்க.


வீட்டுலையும் அதிக எண்ணிக்கையில நபர்கள் இருப்பதால ஒரே சத்தமாவே இருக்கு வெளியவும் அதிக நேரம் உட்காரவும் முடியல.


என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ தம்பிய கூப்பிட்டு கோனை ஃபால்ஸுக்கு போகலாமானு கேட்டேன்.

உடனே அவனும் சரி போகலாம்னு சொன்னான். அந்த செக்கண்டே கோனை ஃபால்ஸ் போவதற்கான

ப்லான் போட்டாச்சு.


நைட் அம்மா அப்பா ஊருல தங்கறதாவும் தம்பியும் நா மட்டும் வீட்டுக்கு

வந்திடுறதாவும் முடிவு பண்ணித்தான் காலையில வீட்டுல இருந்து புறப்பட்டோம்.

ஸோ வீட்டுக்கு கிழம்புரோம்னு சொல்லி கோனை ஃபாஸுக்கு சென்று அருவியில் குழியல் போட்டு

வீடு சேருவது   எங்களது திட்டம்.


போட்ட மாஸ்டர் ப்லான் மாஸ்டர் படம் பார்க்க ஒரு வருஷம் விஜய் ரசிகர்கள்

காத்திருந்த மாதிரி கோனை ஃபால்ஸ்  போக போட்ட மாஸ்டர் ப்லான்

  என்ன ஆச்சுனு அப்படீங்கிறத

வாசித்து தெரிஞ்சுக்க நாலை வரை டாட். 

3 comments:

 1. கொர்னாவின் நன்மை போகாத ஊருக்கு எல்லாம் போய்வா என்று ஓய்வு தந்து இருக்கு உங்களுக்கு. என்ன தான் இருந்தாலும் பூர்வீக ஊர் போல ஏதும்மில்லை.அடுத்த பதிவு அடுத்த வருடம் காக்கா வைக்காதீங்க! நீங்க எழுதும் தொடர் பதிவுகள் முற்றுப்பெற்றத்தில்லை சிங்கை பயணத்தை தவிர![[[ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

  ReplyDelete
 2. பழைய பொலம்பல்களைக் களைவதும், புது பொலம்பல்களை ஆரம்பிப்பதும் அதுதானையா நம் பொங்கல்.
  பொங்கல் வாழ்த்துக்கள்.
  அந்த பிசாசுவால் இவ்வருடம் உனக்கு இனிய ஆண்டு ஆகட்டும்.

  ReplyDelete
 3. பிசாசு- அட என்னவொரு பாசம்!

  நினைவுகள் நன்று. சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் கொண்டாட்டம் - மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். கிராமத்துப் பொங்கல் விழாவை இதுவரை பார்த்ததில்லை. எப்போது கிடைக்கும் வாய்ப்பு எனக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete