Saturday, January 16, 2021

கைலாச கோனா.

கைலாச கோனா  அருவி இந்த பதிவை வாசிப்பதற்கு முன்பு நேற்று எழுதி இருந்த 

நேற்றைய பொங்கல் தினம்.

 பதிவை வாசித்து விட்டு தொடரவும். அந்த பதிவின் தொடர்ச்சிதான் இந்த பதிவு...


 *** 


ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் நாராயணவனம் என்ற இடத்தில் இருந்து சுமார்  பத்து கீமி தொலைவில் அமைந்திருக்கிறது கைலாச கோனா அருவி.

எங்களது  பூர்வீக கிராமத்தில் இருந்து வெறும் எட்டு கீமி தூரம்தான் அருவிக்கு. 


சிறுவயதில் கோடைகால விடுமுறையில் ஊருக்கு போற சமயம் தவறாமல் ஒருமுறை கைலாச கோனா

அருவிக்கு செல்வதுண்டு. 2010 செப்டம்பர் இருக்கும். ஊருக்கு சென்றிருந்த சமயம் அண்ணாவோடு கைலாச கோனா அருவிக்கு போனதா  ஞாபகம் இருக்கு. அதன் பிறகு  நான் ஊருக்கு போவது படி படியாக குறைந்து விட்டது. எப்போதாவது ஊருக்கு போனாலும் கைலாச கோனா அருவிக்கு போவது  நின்று விட்டது...


2019 ஜூன் மாதம் ஜீவா அக்காவின் துர்கா மாதா புத்தக வெளியீடு ஃபங்க்ஷனுக்கு மதுரைக்கு சென்றிருந்த சமயம் ஃபேஸ்புக்கில் குற்றால சீசன் ஸ்டார்ட் ஆச்சுனு நண்பர் ஒருத்தர் எழுதி இருந்ததை வாசிச்சதுமே உடனே குற்றாலம் போகனும்னு ஆசை வந்திடுச்சு...

 முதல்நாள் மதுரையில மீனாச்சியம்மன் கோயில்; திருப்பரங்குன்றம்; பழமுதிர்ச்சோலை சென்றிருந்தோம். அடுத்தநாள் காலையில் 

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை-செங்கோட்டை தினசரி பொதிகை எக்ஸ்பிரஸ்ஸில்  தென்காசி வரை பயணித்து தென்காசியிலிருந்து ஒரு இருவது நிமிஷம் பேருந்தில் பயணித்து  குற்றாலம் போய் இறங்கினோம்.


 முதலில் நாங்கள் பேரருவிக்கு சென்றோம். நீண்ட வரிசையில் காத்திருந்து  பிறகுதான் குளிக்க முடியும்னு தெரிஞ்சதுமே பாதி

ஆர்வம் போய்டுச்சு.  அரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஐந்து நிமிடம் மட்டுமே பேரருவியில் குளித்து அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க அங்கிருந்து நகர வேண்டிய சமயம் வரவும் மனம் இல்லாமல் இடத்தை விட்டு நகர்ந்தேன். குற்றாலம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு நிறைய கற்பனைகளோடும் எதிர் பார்ப்புகளோடு வந்தவனுக்கு குற்றாலம் பெரிய டிஸப்பாயிண்ட்மெண்ட்...


 சரி இங்க மட்டும்தான் இவ்வளவு கூட்டம்னு கிளம்பி ஐந்தருவிக்கு போனா... தண்ணிய பார்த்தத விடவும் தண்ணிய போட்டு இல்லாத

தண்ணியில் ஆட்டம் போடுற கூட்டத்த பார்த்ததுமே இதுக்கு பேரருவியே பரவாலைனு நினைச்சுகிட்டு வந்து இரங்கிய ஆட்டோலையே ஏரி திரும்பவும் பேரருவி கிட்ட வந்து இரங்கினோம்.


மொதல்ல பார்த்தத விடவும் அருவியில இப்போ தண்ணி விழுறதும் கம்மியாகிடுச்சு வரிசையின் நீலமும் கூடிடுச்சு... அதுனால இனி குற்றால அருவிகள்ல குளிச்சது போதும்னு முடிவு பண்ணியதும் ஒரு பாய் கடையில் பிரியாணி சாப்பிட்டு பஸ் பிடிச்சு மதியம் ஒரு  மணிக்கெல்லாம்  தென்காசி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து மக்கள் நடமாட்டம் இல்லாத ஃப்லாட்ஃபார்ம் ல இருக்கும் ஒரு பெஞ்ச பார்த்துபடுத்தாச்சு... 


அன்றைய தினம் எங்களுக்கு சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரெஸில் வெயிட்டிங் லிஸ்ட்லதான் இடம் இருந்தது. கூட வர்க் பண்ணுறவங்க ஒருத்தங்களோட ஹஸ்பெண்ட் ரயில்வேஸ்ல வர்க் பண்ணுரதால டிக்கெட் கன்ஃபார்ம் பண்ணித் தர சொல்லிக் கேட்டிருந்தேன். சரியா அப்போதான் செல்ஃபோனுக்கு டிக்கெட் கன்ஃபார்ம்ஆன மாதிரி எஸெமெஸ் வந்திருந்தது. பக்கத்துல இருந்த மரங்கல்ல இருந்து வேகமா வீசுர காத்துல நிம்மதியா ஒரு குட்டி தூக்கம் போட்டாச்சு... 

ஒருநாலு மணி இருக்கும் மதியம் சாப்பிட்ட பிரியாணி எனக்கு வேலைய காட்ட ஆரம்பிச்சதும் டாய்லெட்டை தேடி ஓடுனது தனி கதை...


 ***


 அதே வருடம் செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை திடீரென கோனை அருவிக்கு போவோம்னு  தோனியதுமே வீட்டுல இருந்து கிழம்பி தம்பியும் நானும் கைலாச கோனா அருவிக்கு போய் இருந்தோம்.... பல வருஷத்துக்கு அப்பறம்

போவதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனோம்.  காலையில பத்து மணிக்கு முன்னாடியே நாங்க போய் இருந்ததால  ஒன்னு ரெண்டு பேர தவிர யாரையும் அருவிகிட்ட பார்க்க முடியல. இதுதான் நல்ல சான்ஸ்னு தண்ணியும் நல்ல  ஃபோற்ஸா கொட்டிட்டிருந்ததால குற்றாலத்துல விட்டத கைலாச கோனா அருவியில ஆசை தீர திருப்தியா  குளிச்சதும் இனி போதும்னு உடம்பும் மனசும் சொன்னதும் அருவிய விட்டு நகர்ந்து கீழ இறங்குறோம் எதிர்  திசையில  கொஞ்சம் கொஞ்சமா  அருவிய நோக்கி மக்கள் போவதை பார்த்தோம்...


 அதன் பிறகு எப்போவாச்சும் கைலாச கோனா அருவிக்கு வீகெண்ட்ஸ்ல போக நினைச்சாலும்; சோம்பல் ஒரு பக்கம் இருந்தாலும் கடைசியா போனபோது ஏற்பட்ட அனுபவம் மாதிரியான அனுபவம் திரும்பவும்  கிடைக்குமா கிடைக்காதா அப்படிங்கற சந்தேகத்தினாலும் தயக்கத்தினாலும் தம்பி கூப்பிட்ட போதெல்லாம் எதோ ஒரு காரணம் சொல்லி கோனை  அருவிக்கு போவதை தவிர்த்து வந்தேன்...


 ***


பல வருஷத்துக்கு அப்பறம் பொங்கல் கொண்டாட இந்த வருஷம் ஊருக்கு போனதும் திடீரென கைலாச கோனா அருவிக்கு போகலாம்னு தோனியது. தம்பிய கூப்பிட்டு கோனை ஃபால்ஸுக்கு போகலாமானு கேட்டேன். உடனே அவனும் சரி போகலாம்னு சொன்னான். அந்த செக்கண்டே கோனை ஃபால்ஸ் போவதற்கான ப்லான் போட்டாச்சு...


 காலையில திருப்பதியில இருந்து கிளம்பும்போதே தெரியும் நைட் அம்மா அப்பா ஊருல தங்கறதாவும் தம்பியும் நா மட்டும் வீட்டுக்கு வந்திடுறதாவும் முடிவு பண்ணித்தான் காலையில வீட்டுல இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்தோம்.


 மொதல்ல யாரிடமும் சொல்லாமல் ஊருல இருந்து வீட்டுக்கு கிளம்புர மாதிரி கிளம்பி நேரா  கோனை ஃபால்ஸுக்கு போய் அப்படியே குளிச்சிட்டு திருப்பதிக்கு போகனும்னு ப்லான்... கடைசி நிமிஷத்துல அம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்ப வேண்டியதா போச்சு. அவுங்களும் எதுவும் சொல்லல. டவல் வேனும்னா எடுத்துட்டு போக சொன்னாங்க.

அந்த சமயம் நா எந்த யோசனையில இருந்தேனோ தெரியல அம்மா கேட்டதுக்கு வேனாம்னு சொல்லி சரியா நாலு மணிக்கு தம்பியும் நானும் வண்டியில புறப்பட்டோம்... 


பைக்ல போரச்சேதான் ஒழுங்கா அம்மா டவல் எடுத்துப்போன்னு சொன்னப்போ வாங்கி வந்திருக்கலாமோனு தோனிச்சு. விடு. தேவை பட்டா டவல் வாங்கிக்குவோம்னு தம்பி சொல்லி இருந்தான். ஊருல இருந்து புறப்பட்ட அடுத்த கால் மணி நேரத்துல கைலாச கோனா அருவி பைக் பார்கிங் ஏரியாவுக்கு வந்து சேர்ந்தோம்... 


***


 சென்னைக்கு மிக அருகில் இருக்கும் ஒரு அருவினா அது இந்த கைலாச கோனா அருவிதான். இங்கு மட்டும்தான் பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என பலதரப் பட்ட மனிதர்கள் பாதுகாப்பாக அருவிக்கு செல்லவும் குளிக்கவும் முடியும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதால் டீயென் நெம்பர் ப்லேட் போட்ட பைக்

கார்கள் நின்றிருப்பதை கவனிக்க முடிந்தது. 


இன்னைக்கே இவ்வளவு கூட்டம்னா காணும் பொங்கலுக்கு எவ்வளவு கூட்டம் குவியுமோன்னு   பேசிட்டு எங்கலோட ஷட் பெண்ட் பாக்கட்ல

இருக்குற பொருட்கள எல்லாம் ஒரு கவர்ல போட்டு அதை வண்டி டிக்கியில வெச்சு லாக் செய்து அருவிய நோக்கி நடக்க ஆரம்பிச்சோம்...


 பார்கிங் ஏரியாவுல இருந்து ஒரு பத்து படி ஏறி ஒரு நூறு மீட்டர் நடந்து போனால் வலது பக்கம் சிவன் பார்வதி இருவரும் இருக்கும் கைலாச நாதர் கோவில் இடது புறம் அருவின்னு அந்த பாதை அதோடு முடியும்...

நமக்கு   சாமிய பார்க்குறத விடவும் சமந்தாவ... ச்சே..ச்சே.. அருவியில குளிக்குறதுதான் சந்தோஷம்னு சொல்ல போய்...


 ***


 நாங்க அருவிய நெருங்க நெருங்க ஒரு புறம் உற்சாகம் இருந்தாலும் தானா லேசா  வாயில இருந்தும் மூக்குல இருந்தும் மூச்சு இழுத்து விடுறது

அதிகமானத  கவனிக்க முடிஞ்சது... தண்ணியில நனையுர வரைக்கும்தான் அதன் பிறகு அதெல்லாம் ஒன்னும் பெருசா தெரியாதுனு. என்னைய நா சமாதான படுத்திகிட்டு அருவி கீழ போய் நின்னாச்சு...


 ஆஹா என்னே ஒரு  ஆனந்தம்... கடந்த ரெண்டு மூனு நாள  ஒரே தலைவலியில  அவஸ்தை பட்டிட்டிருந்த எனக்கு நேச்சுரலா இயற்கை எனக்கு ஹெட் மசாஜ் பண்ணிவிட்டிடுச்சு..

அடுத்து நல்லா குனிஞ்சு தண்ணி ஃபோர்ஸா விழுற பகுதியில நின்னு முதுக நல்லா காட்டி முதுகுக்கும் நேச்சுரல் மசாஜ் பண்ணிகிட்டாச்சு.. 


ஒரு பத்து நிமிஷம் நல்லா அருவியில ஆசைத் தீர அனுபவிச்சு குளிச்சதுக்கு அப்பறம் மத்தவுங்க வந்து தண்ணியில நனையட்டும்னு சைடுல வந்து நின்னோம். அவ்வளவுதான் வரிசையா ஃபேமலி ஃபேமலியா வர ஆரம்பிச்சிட்டாங்க.

ஏற்கனவே அருவி கீழ நிக்குறவங்களம் வெளிய வராததுனால அருவிக்கு சைட்லையே நிக்க வேண்டியதா போச்சு. 


அந்த சமயத்துலதான் எனக்கு பக்கத்துல ஒருத்தன் மட்டமான ஒரு சரக்க குடிச்சிட்டு அருவியில குளிக்க எனக்கு பக்கத்துல வந்து நின்னான்... வயிரு குமட்டுர அளவு ஒரே நாத்தம் அவன் மேல... இதெல்லாம் குடிக்குறவுஞ்கலுக்கு தெரியுமா அவுஞ்களுக்கும்

மூக்கும் வயிரும் இருக்காதானு ஒரு சந்தேகம்... குடிக்கனும்னு முடிவு பன்னிட்டா ஏதாவது கொஞ்சம் காஸ்ட்லியான சரக்க குடிச்சு தொலைக்க வேண்டியதுதானே . தனக்கும் பெருசா கெடுதல் இருக்காது அடுத்தவனுக்கும் கஷ்டமா இருக்காது. இப்படி நா அருவி பக்கத்துல நின்னுகிட்டு மனசுக்குள்ள யோசிச்சிட்டிருக்க... அருவியில குளிச்சிட்டிருந்த

கூட்டம்   வெளிய வரவும் டக்குனு நானும் தம்பியும் அருவிக்கீழ போய் நின்னுட்டோம். 


திரும்பவும் தலை முதுகுன்னு காட்டி தண்ணி விழுற வேகத்துக்கு இப்போ உடம்புல வலி ஏற்பட்டாலும் அது ஒருவித சுகமாக இருந்தது... கடைசியா மூனாவது  முறையா ஒரு குளியல போட்டு கிளம்பிடுவோம்னு திரும்பவும் சைட்ல வந்து நின்னோம். ரெண்டு ரவுண்ட் அருவியில

குளிச்சதால லேசா ஒருவித மயக்கம் எனக்கு வர்ற மாதிரி இருந்தது. ஆனாலும் பரவால இதோடு எப்போ வருவோம்னு தெரியாததுனால ஒரு அஞ்சு நிமிஷம் காத்திருந்து ஆச தீர அருவி கீழ நின்னு அங்கிருந்து வெளியே வந்திட்டோம்...


 எங்க ரெண்டு பேர தவிர பெரும்பாலும் குடும்பம் குழந்த குட்டிகலோடவும் ஜோடியாவும் வந்திருக்குராங்க நாஞ்க மட்டும்தான்...

ஹும் என்ன பன்ன ஒத்துக்க வேண்டியவுங்க ஒத்துகிட்டிருந்தா ஜோடியா நயாகரா அருவிலையே போய் குளிச்சிருப்போம்... எல்லாம் அவள் விருப்பம் ஆச்சே.. 


***


 இப்படியாக பொங்கல் தினத்தன்று எங்களது கைலாச கோனா அருவி அனுபவங்கள் இருக்க தண்ணியில நனைஞ்ச ஈரத்துணியோடு அப்படியே நாஞ்க திருப்பதி வரைக்கும் நாற்பது கீமி பைக்ல வந்து வீடு தொறந்து பாத்ரூம் ல போய்   ட்ரஸ்ஸ கழட்டி போட்ட அனுபவத்தோடு இந்த பதிவ நிறுத்துக்கிறேன்... இதோடு 2021 பொங்கல் தின அனுபவம் முடியுது...

 (முற்றும்) 


***


 கைலாச கோனா அருவிக்கு ரூட் மேப்: 


சென்னையில் இருந்து வருபவர்கள் மாதவரம் பெரிய பாளையம் ஊத்து கோட்டை நாகலா புரம் வழியாக கைலாச கோனா அருவியை அடையலாம். அதுவே பூந்த மல்லி திருவள்ளூர் திருத்தணி புத்தூர் வழியாகவும் கைலாச கோனா அருவிக்கு வரலாம்...


 செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோனத்துல இருந்து கைலாச கோனா அருவிக்கு வர நினைப்பவர்கள் திருத்தணி வந்து அங்கிருந்து நகரி புத்தூர் வழியாக செல்ல வேண்டும்... 


5 comments:

 1. அருமையான அனுபவ பகிர்வு ... அருவியில் குளிக்கும் அனுபவம் ரொம்ப நல்லா இருக்குமே ... அதற்கு ஈடு இணையே கிடையாது ... இந்த பதிவை படித்ததும் எனக்கு அருவிக்கு போகவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது... பல வருடங்கள் கழித்து ஊருக்குச் சென்று வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  ReplyDelete
 2. அருவி அணுபவம் சூப்பர்.
  ஒத்துக்கவேண்டியவங்க யாருன்னு சொல்லு.
  அவங்கள இது மாதிரி பதிவு போட்டே பன்சர் பண்ணிப்பண்ணி ஒத்துக்கச் செய்திரலாம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படிப்போடுங்க அருவாளை நட்பே!

   Delete
 3. கைலாச கோனா அருவி அனுபவம் நன்று. அருவியில் குளிப்பது ஒரு அலாதியான அனுபவம். எனக்கும் இப்படியான அருவிக் குளியல் அனுபவம் உண்டு.

  ReplyDelete
 4. அந்த அருவிக்கு அடுத்த முறை இந்தியப்பயணத்தில் போய் வர முய்ற்ச்சிக்கின்றேன். யார் அந்த உங்க அன்புக்கூடையை ஏற்காத மங்கை பெயரைச்சொல்லுங்க நீண்ட பதிவு போட்டு கலாய்ப்போம்.

  ReplyDelete