Friday, January 29, 2021

வித்தியாசமான பயணம்.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நான்  இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து சுற்றி பார்த்திருக்கிறேன்;

  தவிரவும் கடல் கடந்தும் சில நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன்.


போகும் இடம் எதுவாக இருக்கட்டும்; முடிந்தவரை  முன் கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடுகள் அனைத்தும் செய்த பிறகுதான் பயணம் மேற்கொள்வது எனது வழக்கம்


ஒருவகையில் இது மாதிரி நான் புது இடங்களுக்கு செல்லும்போது தேவை இல்லாத சில தொந்தரவுகளை தவிர்க்க முடிகிறது;

நிம்மதியாக சுற்றி பார்த்து வர முடிகிறது


இன்னொரு வகையில் புதிதாக பயண ஏற்ப்பாடுகள் செய்யும்போது கொஞ்சம் சலிப்பாகவும் இருக்கும். எல்லாமே நானே இழுத்து போட்டு

செய்கிறோமோ அப்படீங்கிறதொரு எண்ணமும் வந்துவிடுகிறது...


இதனால் எனக்கு பதிலாக யாராவது பொறுப்பை எடுத்துக் கொண்டு  என்னை எங்காவது கூட்டிச் சென்றால் நன்றாய் இருக்கும்னு அடிக்கடித் தோணும்.

  நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லையே...


ரொம்ப நாளா தம்பி ஹைதராபாத்தையும் பெங்கலூரையும் சுற்றி பார்க்கணும் சொல்லிட்டிருப்பான். இரண்டு இடங்களையும் நான் பல முறை சுற்றி பார்த்திருக்கிறேன். அதனாலையே தம்பியோட ஆசைய நா பெருசா எடுத்துக்கல...


போன வாரம் புதன் கிழமை காலையில திடீரென ஒரு எண்ணம் எனக்கு. வீக்கெண்ட் ஹைதராபாத் போய்ட்டு வருவோமாணு தம்பியிடம்

கேட்டிருந்தேன். உடனே அவன் சரி போகலாம்ணு சொன்னான்.


  மொதல்ல  ட்ரைன் டிக்கெட்ஸ் இருக்கானு பார்ப்போம் அப்பறம் மத்தத பேசுவோம்னு தம்பியே சொன்னதால ஐஆர்சிடிசி வெப்சைட்ல டிக்கெட்ஸ்  இருக்கானு பார்த்தோம்.

  ஹைதராபாத் போவதர்க்கு ச்லீப்பர் க்லாச்லையும் வரும்போது எசி த்ரிடையர்லையும் டிக்கேட்  முன்பதிவு செய்தோம்.


அடுத்ததாக தம்பி  ஹைதராபாதில் இருக்கும்   அவனது நண்பர்களை தொடர்பு கொண்டு ஹைதராபாத் திட்டம் தயார் செய்ய ஆரம்பிக்க

ஒரு மாறுதலுக்காக நானும் அவன் பொறுப்பில் விட்டுவிட்டு என்னுடைய வேலையில் மூழ்கிவிட்டேன்.


  ஹைதராபாத்தில் இருக்கும் தேஜ சாய் சனி மற்றும் ஞாயிறு  இரண்டு நாட்களில் எங்க சுத்தி பார்க்கனும்; எங்க சாப்பிடனும்னு  ஒரு

ஐடினரி போட்டு தம்பிக்கு அனுப்பி இருந்தான் அதை அவன் எனக்கு காட்டினான்.


அந்த சமயம்  எனக்குத் தெரியாது தேஜ சாய் போட்டுக் கொடுத்த திட்ட படிதான் நாங்கள் ஹைதராபாதில் சுத்தி பார்க்க போகிறோம் அப்படீங்கற விஷயம்...


தேஜ சாயின் ஊரும் திருப்பதிதான். தம்பியும் அவனும் ப்லஸ்வன்னில் இருந்து நண்பர்கள். ப்லஸ்டு பிறகு தம்பி இஞ்சனீரிங் வந்துவிட

தேஜ சாயோ நாஷ்னல் லா ஸ்கூலில் ஐந்தாண்டுகள்  சட்டப் படிப்பு படித்து தற்போது தெலங்கானா ஹைகோர்ட்டில் ஒரு சீனியர்  அட்வகேட்டிடம் ஜூனியராக பணி புரிகிறான்.

தேஜ சாயை சுருக்கமாக நாங்கள் பிஜெ சொல்லி அழைப்பதுதான் பழக்கம். இன்னை வரைக்கும் பிஜெ அப்படீஞ்கிறதுக்கு என்ன அர்த்தம்னு இது வரைக்கும் எனக்கு தெரியாது என்பது வேறு விஷயம்.


***


பிஜெ திட்டப்படி எங்களை செகந்தராபாதில் ரூம் எடுக்க சொல்லி இருந்தான். சனிக்கிழமை காலையில் நாங்கள் இறங்குவதோ காச்சிகூடாவில். அங்கிருந்து செகர்ந்தரபாத் போய்  ரூம் செக்கின் செய்வதைவிடவும்

காச்சிகூடா ரயில்வேஷ்டேஷனுக்கு அருகில் எதாவது ஒரு லார்ஜில் ரூம் எடுத்துக்கலாம்னு சொல்லி இருந்தேன்.


வெள்ளிக்கிழமை காலையில் தம்பி ஹைதராபாதில் ஓயோவில் எர்லி செக்கின் ஃப்ரியா கிடைக்குறமாதிரி ரூம் ஏதாவது இருக்குமானு தேடி பார்த்து  எதுவும் கிடைக்காததினால அடுத்து ஓயோ எக்ஸ்யூகிட்டிவ்விற்கு  கால் பண்ணி

அவுங்க மூலம் எர்லி செக்கின்  ரூம் எதாவது கிடைக்குமானு  அந்த முயற்சியில் இறங்கினான்.


ஒருநாளுக்கு  இரண்டாயிரம் ரூபாய் மதிப்புடைய டீலக்ஸ் ரூம் ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தது. அதனுடன் எர்லி செக்கினும் இருந்ததால உடனே    எக்ஸிகிட்டீவ் கிட்ட பேசிட்டிருக்கும்போதே ரூம் புக் பண்ண சொல்லிட்டோம்.

எதுக்கும் ஒன்னு ரெண்டு தடவை எர்லி செக்கின் இருக்கானு தம்பி திரும்ப திரும்ப கேட்டான்.

  வன்னாட்ஃபைவ்  பர்செண்ட் நா கெரண்டி  தர்றேன் சார்ன்னு ஓயோ எக்சிகிட்டீவ்  சொல்லி இருந்தாங்க...


சரியாக வெள்ளிக்கிழமை மாலை ஆறு நாற்பதுக்கு வீட்டில் இருந்து தம்பியும் நானும் ஹைதரபாத் நோக்கி புறப்பட்டோம். திருப்பதியில்

இருந்து நேராக ஹைதராபாத் செல்ல  டிக்கெட் கிடைக்காததால் செங்கல்பட்டு -காச்சிகுடா தினசரி ரயிலில்  ரேணிகுண்டாவிலிருந்து

காச்சி கூடா வரை ஸ்லீப்பர் க்லாசில் முன்பதிவு செய்திருந்தோம்.


இரண்டு ஷேர் ஆட்டோக்கள் மாறி இரவு ஏழரைக்கு ரேணிகுண்டா ரயில்வேஸ்டேஷனை நாங்கள் அடையவும் ஃப்லாட்பாமில்

செங்கல்பட்டு - காச்சிகுடா எக்ஸ்பிரெஸ் வரவும் சரியாக இருந்தது.


கடைசியாக போன வருடம் மார்ச்-21 சனிக்கிழமை ரயில் பயணம் செய்தேன். அதன்

பிறகு சரியாக பத்து மாதங்களுக்கு பிறகு இப்போது ரயிலில் ஏறியது...

கிட்டதட்ட மூனரை வருடம் தினமும் ரயிலில் பயணம் செய்திருந்தாலும் பல மாதங்களுக்கு பிறகு இப்போது  ரயில் பயணம் புதிதாக இருந்தது; கொஞ்சம் பயமாகவும் இருந்தது.


சரியாக 7:55க்கு செங்கல்பட்டு - காச்சிகுடா  எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது.

நைட் சாப்பிட அம்மா ஆளுக்கு மூணு பூரியும்  உருழைகிழங்கும் கட்டி கொடுத்திருந்தாங்க. கொஞ்ச நேரத்தில அதை எடுத்து சாப்பிட

ஆரம்பிச்சோம்.


அது முடிஞ்சதும் படுத்துக்குவோம்னு பார்த்தால்  எங்களுக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ஒருத்தர் அவருக்கும் அவரது மனைவி

இருவருக்கும் அப்பர் பெர்த் வந்திருப்பதால் எங்களோட  லோயர் பர்த் அவரது மனைவிக்கு கொடுக்க முடியுமானு

கேட்டிருந்தார். நான் மிடில் பெர்த்தில் படுத்துக்க தம்பி அப்பர் பெர்த்தில் படுத்துகிட்டான்.


படுத்த கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடுச்சு.

  திடீரென நடு ராத்திரில தூக்கம் கலைஞ்சிடுச்சு.


ஒரு பக்கம் ட்ரைன் போற வேகத்துக்கு ஒரே சத்தம்னு பார்த்தா இன்னொரு பக்கம் எனக்கு கீழ லோயர் பர்த்தில்

படுத்திருக்கும்  குழந்தை வேறு அடிக்கடி அழ ஆரம்பிச்சிடுது. உடனே அந்த குழந்தையோட அம்மா முலிச்சுகிட்டு அழாத இங்கதான் நா இருக்கேனு சொல்ல அந்த குழந்தையும் அமைதியா திரும்பவும் தூங்கிடுது.

நானும்  கொஞ்ச நேரம் தூங்க குழந்தையோட அழுகை  எழுப்பிவிட

உடனே அந்த குழந்தையோட அம்மாவும் முலிச்சுகிட்டு அழாத இங்கதான் நா இருக்கேனு சொல்ல...

  சரியாவே தூங்க முடியல.


சனி கிழமை காலையில முழிப்பு வரும்போது நேரம் பார்த்தால்  ஏழாகி இருந்தது. சன்னல்கள் மூடி இருந்தாலும் நல்லாவே குளிர்

ஃபீல் பண்ண முடிந்தது. 


  கீழ இறங்கி  டாய்லெட் போவோமா வேனாமானு ஆயிரத்து  எட்டு முறை யோசித்து  ஒருவழியா  டாய்லெட்டுக்குள்ள நுழைஞ்சாச்சு.

எந்த  அளவு எனக்கு ரயில் பயணம் பிடிக்குமோ அதே அளவு ஐ ஹேட் ரயில்வே டாய்லெட்ஸ்...


நா பயந்த  அளவு ஒன்னும் டாய்லெட் பெருசா ஸ்மெல் இல்ல.

ஒருவழியா எல்லாம் முடிஞ்சு  சீட் கிட்ட வரவும் கொஞ்ச நேரத்துல ஒரு மஹா நகரத்தின் முக்கியமான ரயில் நிலையத்திற்குள்

நுழைகிறோம் என்கிற எந்த ஒரு பரபரப்பான அறிகுறியும் இல்லாமல்  காச்சிகுடா ரயில் நிலையத்தில் வந்து இறங்கினோம்.


இறங்கிய இடத்தில்  இருந்து ஒரு பத்து அடி எடுத்து வைத்ததுமே எஸ்கலேட்டர் இருந்தது. அதில் ஏறி மேலே வந்து முதல் ஃப்ளாட் பார்ம்

இருக்கும் திசை நோக்கி நடந்து படி வழியாக கீழே இறங்கி முதல் ஃப்ளாட்பாரத்தில் கொஞ்ச தூரம் நடந்து

காச்சிகூடா ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம்.3 comments:

 1. தெலுங்கான பற்றி தொடர்ந்து பகிருங்கள்§[[

  ReplyDelete
 2. ஆஹா... ஒரு பயணம் தொடங்கி விட்டது! நானும் பயணிக்க வேண்டும் - இன்னும் வாய்ப்பும் வேளையும் வரவில்லை. பார்க்கலாம்.

  தொடருங்கள் உங்கள் பயணம் குறித்த பதிவுகளை. படிக்க நானும் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. சுவாரசியமான பயணப்பகிரர்வு. தொடர்கிறேன்.

  ReplyDelete