Saturday, March 27, 2021

ஆட்டோ நினைவுகள்.

2019  ஆம் வருடம் ஏப்ரல் முதல் வாரம் இருக்கும். இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரு  தினங்களுக்கு வங்கி விடுமுறை   என்பதால் அந்த சமயம் எங்கையாவது  வெளியே போனால்தான்  மனசு கொஞ்சம் ஆச்சும் நிம்மதியா இருக்கும்னு..  எனக்கு தோனியதால்  ரொம்ப  தீவிரமா யோசிச்சு தம்பி கிட்ட சொன்னப்போ கர்நாடகாவுல

இருக்குற மைசூர்-கூர்க் போகலாமானு சொன்னான். அவனுக்கு ரொம்பநாளா கூர்க்  போகனும்னு ஆசை...


ரெண்டு நாள்ள கூகுல்ல கூர்க்  போய்விட்    டு வர முடியுமானு கேட்டப்போ முடியாது

இன்னொரு நாள் தேவை படும்னு கூகுள் தேவதை

சொன்னாள்.


இருப்பதோ  இரண்டுநாள். கூர்க்  அப்பறம் பார்த்துக்கலாம் இப்போதைக்கு மைசூர் போய்ட்டு வருவோம்னு எங்க ரெண்டு பேருக்கு மட்டும்

ட்ரைன் டிக்கேட் முன்பதிவு செய்த பிறகு அம்மா கிட்ட சொன்னால்...

’எங்களையும் கூட்டீட்டு போகலாம்ல’னு அம்மா ஆரம்பிச்சாங்க... (அம்மாவுக்கு 

பிருந்தாவன் கார்டன் பார்க்கனும்னு  ரொம்பநாள் ஆசை).


வாய் திறந்து அம்மா கேட்டுட்டாங்களே அவுங்களோட ஆசைய நிறைவேத்தாட்டி

அப்பறம் எதுக்கு இந்த வாழ்க்கை....னு வசனம் எல்லாம்

மனசுக்குல்ல பேசிகிட்டு  அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சென்னை - மைசூர்

காவேரி எக்ஸ்பிரசில் ரிசர்வேஷன் செய்தாச்சு.


ஏப்ரல் 12 வெள்ளிக்கிழமை இரவு அரக்கோணத்தில் பத்தறைக்கு ட்ரைன் ஏறி

ஏப்ரல் 13 (அடுத்தநாள்) சனிக்கிழமை காலை ஒரு ஏழரை அளவில் மைசூரில் இறங்கினோம்.


தங்கும் அறை பொருத்தவறையில் பெரியப்பா பையன் (அண்ணா) பிஎஸெனல்இல் ஒரு நல்ல

போஸ்டில் இருப்பதால்  Regional Telecom Training Centre (RTTC) ல  இரண்டு ரூம் புக் செய்து கொடுத்தார்.

திட்டம் எதுவும் இல்லாமல்தான் மைசூர் ல வந்து இறங்கியாச்சு.


  ரெடியாகி ரூமில் இருந்து வெளியே வந்து பக்கத்துல இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு ஒரு ஆட்டோகாரரிடம்

தெலுங்கும் தமிழும்  கலந்த எங்களுக்கு தெரிந்த கன்னடத்தில் சாமுண்டீஸ்வரி

கோவிலுக்கு போகணும்னு கேட்டப்போ எந்த சாமுண்டீஸ்வரி  கோவிலுக்கு போகணும்னு  ஆட்டோகாரர்  பதிலுக்கு கேட்டதற்கு

ஒரு செக்கண்ட் நா குழம்பி போய்ட்டேன்


  அதுவரைக்கும் நமக்கு தெரிஞ்சதெல்லாம் பாண்டிச்சேரியில ஒரு சாமுண்டீஸ்வரி பிசாசும்

மைசூர் ல சாமுண்டீஸ்வரி அம்மனும்தான்...


இப்போ என்னனா ஆட்டோகாரர் மைசூர் ல எந்த சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு போகனும்னு

கேட்குராரேனு ஒரே  குழப்பம்...


மொத்தத்தில் அன்றையதினம்  ஒரு மணி நேரம் பேருந்து பயணம் செய்து சாமுண்டிமலையில் இருக்கும்

சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்துவிட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் சென்று

ரங்கநாதர் கோவிலில் மூலவரான பெருமாள் கிட்ட ஒரு அட்டண்டென்ஸ் போட்டு

பிருந்தாவன் கார்டன் சுற்றி பார்த்து  இரவு அறைக்கு

திரும்பினோம்.


அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் மைசூர் ஜூ மற்றும்  மைசூர் பேலஸ் பார்த்துவிட்டு

மதியம் வயிறு செமையா பசிச்சதால ஒரு நல்ல நான் வெஜ் ரெஸ்டாரெண்ட் ஏதாவது

பக்கத்துல இருக்குமானு அருகில் இருந்த ஆட்டோகாரரிடம்  கேட்டபோது    எண்பது ரூபாய் கொடுங்கள்

  நாங்கு பேரையும் கொண்டு போய் ரெஸ்டாரெண்டில் விடுகிரேனு சொன்னார்.


மனதில் காதல் எண்ணமும் வயிற்றில்  பசி வந்துவிட்டால்  புத்தி எதையும் யோசிக்காது போல...

அதனுடைய  தேவை தீர்ந்ததும்தான் மத்ததெல்லாம்..

ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு பத்து நிமிஷத்துல ரெஸ்டாரெண்ட் வாசலில்

எங்களை ஆட்டோகாரர் இறக்கி விட்டார்...

சாப்பிட்டு முடிச்சதும் அடுத்து  போக   வேண்டிய இடத்துக்கு ஆட்டோ பிடிக்கலாம்னு

வயிறு நிறைஞ்சதும் உடம்புல தெம்பு வந்ததால

கொஞ்ச தூரம் நடந்தால்...

ரெஸ்டாரெண்ட் போக எந்த இடத்தில் ஆட்டோ ஏறினோமோ அதே இடத்திற்கு வந்து நின்னோம்...

கொடுத்த காசுக்கு நல்லாதான் நாலு தெருவ ஆட்டோகாரர்  சுத்தி காட்டி

ரெஸ்டாரெண்ட்ல எங்கள இறக்கி விட்ட விஷயம்  புத்திக்கு

உறைச்சது...


ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி

    ரெண்டு நாள்  மைசூர் போனத இப்போ எழுத காரணம்..


தினமும் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வரும்போது திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து பெரும்பாலும் தம்பிதான் வீட்டுக்கு

கூடிட்டு போவான்.


அவனுக்கு வர முடியாத சூழலில் அப்பா வருவார்.

நேற்றைய தினம்  ரெண்டு பேருமே வர முடியாத சிட்டுவேஷன்...

அம்மா நா வர்ரேனு சொன்னாங்க.

அதெல்லாம் ஒன்னும் வேனாம் நானே வீட்டுக்கு வர்ரேனு சொல்லி

திருப்பதி  பஸ்டாண்டில் இறங்கியதும்

ஆட்டோகாக காத்திருந்தேன்.

ஒரு ஆட்டோகாரர் வந்து எங்கு போகனும்னு கேட்டார்.

வீடு இருக்கும் ஏரியாவை சொன்னேன்.

எண்பது ரூபாய் கேட்டார்.

கொரொனா  முன்புவரைக்குமே நாற்பது ரூபாய் கொடுப்போம்.

இப்போ ஐம்பது கொடுக்கலாம்னு நா நினைக்க ஆட்டோகாரர் எண்பது கேட்டதுமே

சுலிர்னு கோவம் வந்திடுச்சு.

வெளியூர் இல்லங்க நா உள்ளுர்தான்  அம்பது ருபா சொன்னதற்கு

வெளியூர் ஆளுகளுக்கு மட்டும்தான் நா சவாரி போவெனு

இடத்தை விட்டு நகர்ந்தார்.


ஊருல பொன்னுகளுக்கும் ஆட்டோவுக்கும்  பஞ்சமா  என்ன

ஒரு ஆட்டோகாரர் வராட்டி என்ன  இன்னொருத்தர் வர போறாருன்னு

மனச தேத்திகிட்டு ஒரு நாலு அடி எடுத்து வெச்சு நடந்திருப்பேன்.


இன்னொரு ஆட்டோகாரர் வந்தார். எங்க போகனும்னு கேட்டார்.

இடத்தை சொன்னேன். எவ்வளவு தருவீங்கன்னு கேட்டார்.

ஐம்பது சொல்லியதும் பக்கத்துல இருந்த  ஒரு ஆட்டோகாரர் போய்ட்டு வா போனி ஆகட்டும்னு சொன்னார்.


ஆட்டோவில் ஏறி கொஞ்ச தூரம் போய் இருப்போம். சில்லரையா இருக்கா கேட்டார்.

இருக்குனு சொல்லி  என்ன உங்க கிட்ட இல்லையானு பேச்சு கொடுத்தேன்.

இன்னைக்கு நீங்கதான் முதல் சவாரினு சொன்னார். என்னது  நைட் ஏழு மணிக்கா

காலையில இருந்து எதுவும் வரலியானு கேட்டேன்.

இல்ல  நைட் டைம் தான் ஆட்டோ ஓட்டுவதாக சொன்னார்.

எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது.

பகலில் ஆட்டோ ஓட்டுபவர்கள் தெரியும்.

இரவில்  ஆட்டோ ஓட்டுபவர்கள் இருப்பார்கள்தான்

ஆனால் தினமும் நைட் ஷிஃப்ட் மாதிரி இரவு ஏழு மணில இருந்து காலை அஞ்சு மணி

வரைக்கும் தினமும் ஆட்டோ ஓட்டுபவரை

பற்றி கேள்வி பட்டதும் ஆச்சர்யமாக இருந்தது.


‘ஏன் காலையில ஆட்டோ ஓட்ட கூடாதா’னு கேட்டேன்.

ட்ராஃபிக்லையே வர்ரதுல பாதி  காசு பெட்ரோலுக்கு ஊத்த வேண்டி இருக்கு. 

அதுவே நைட்  டைம்னா  ட்ராஃபிக் தொல்ல இருக்காது; நாலு காசு  சேர்க்க முடியுதுன்னு சொன்னார்.

ரெண்டு லட்சம் அஞ்சு வருஷத்திற்கு லோன் போட்டு மாச மாசம் நாலாயிரம்

டியூவ் கட்டுறதாவும்   சொன்னார்.

அடுத்து அவரது குடும்பம் பிள்ளைகள் கதை கேட்க

ஆட்டோ ஓட்டிட்டே என் கிட்ட சொல்லிட்டு வந்தார்.


திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு ஒரு நூரு ரூபாய் நோட்டு கொடுத்து

  டிக்கெட் வாங்கியதில் கண்டெக்டர்  கொடுத்த இருவது ரூபாய் நோட்டு ஒன்னு

இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.


திருப்பதியில் இறங்கியதும் முதலில்  எங்கு போகனும்னு  வந்து கேட்ட ஆட்டோகாரரிடம் பேசியதில்

ஹர்ட் ஆன எனது ஈகோவுக்கு

நாளில் முதல் சவாரி போனி செய்யும் நான் இவரிடம் அந்த இருவது ரூபாய்

கூடுதலாக கொடுக்கலாம்னு

யோசிச்சுகிட்டே  இருக்க வீடு வந்தது.


ஆட்டோவில் இறங்கியதும் அம்மா எவ்வளவு கேட்டு ஆரம்பிப்பதற்குள்ளாக

கையில் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டு மட்டும் கொடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.


நைட் சாப்பிடும்போது  நடந்த கதை எல்லாம் அம்மாவிடம் சொன்னபோது

திருத்தனியில இருந்து திருப்பதிக்கு வர்றதுக்கு காசு ஆட்டோவுக்கு கொடுக்குறதெல்லாம்

வேஸ்ட் அதுக்குதான் நா   பஸ்டாண்டுக்கு வர்ரேனு ஆரம்பிச்சாங்க...


இப்படியாக 26.03.2021 மாலை பொழுது கழிந்தது. 

Sunday, March 07, 2021

கொல்கத்தா - கயா - வாரணாசி.

வரும்  ஏப்ரல் 9-வெள்ளிக்கிழமை மதியம் லன்ச் பிறகு  அலுவலகத்தில் பர்மிஷன் கேட்டு வீட்டுக்கு புறப்படணும். அன்று மாலை 6:30க்கு

கூடூர் வரை செல்ல முதலில் ரயில் பிடிக்கணும்.


திருப்பதியிலிருந்து கொல்கத்தாவிற்கு  நேரடியாக செல்ல தினசரி ஒரு ரயில் இருக்கிறதுதான். ஆனால் கோவிட் பிறகு அந்த ரயில்

நேரம் மாற்றி விட்டதால் அதனுடைய தற்போதைய நேரம் எங்களுக்கு  ஒத்து வராததால்  இங்கிருந்து  கூடூர் (90கிமி) வரை சென்று

அங்கிருந்து சென்னை - ஹவுரா மெயில் பிடித்து கொல்கத்தா செல்வதுதான் எங்களது திட்டம்...


திருப்பதியில் இருந்து கூடூர் வரை செல்ல ஒன்னரை மணி நேர பயணம். மாலை 6:30க்கு புறப்பட்டால்  இரவு எட்டு மணிக்கு கூடூரில்

இறங்கி  ஒரு மணி நேர காத்திருப்புக்கு  பிறகு அடுத்த ரயில் அங்கிருந்து

எங்களுக்கு  ஒன்பது  மணிக்குத்தான்.


சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மாலை 7:15க்கு புறப்படும் ஹவுரா  மெயில் கூடூர் ஸ்டேஷனுக்கு இரவு ஒன்பது

மணிக்கு வரும். அதில் நாங்கள் ஏறினால் 26 மணி நேர தொடர் பயணத்திற்கு

பிறகு சனிக்கிழமை இரவு பதினோரு மணிக்கு  ஹவுரா சென்றடைவோம்.


***


மூன்று மாநில பயணத்தின்  ஒரு பகுதியாக கொல்கத்தா செல்கிறேன் என்பதை கேள்விபட்டதுமே நண்பர் ஒருத்தர் ’இந்த டைம்ல

வெஸ்ட் பெங்கால் போவது அவசியமா’னு கேட்டிருந்தார்.


இப்படிதான் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2019) அதுவும் ஏப்ரல்

மாதம்தான். வங்கியில் தொடர் விடுமுறை கிடைப்பதே அபூர்வம்

அதுவும் ஒரு நாள்   விடுப்பு எடுத்துக் கொண்டால் மொத்தம் ஐந்து நாட்கள் கிடைப்பதைக் கொண்டு கொல்கத்தா மட்டும் சென்று சுற்றி

வரத் திட்டம் எல்லாம் போட்டு தயாராக இருக்க  கடைசியில் அந்த  நேரம்

நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால்  திட்டம் கைவிட்டாச்சு...


அதன் பிறகு இப்போது மீண்டும் கொல்கத்தா  ஆசை துளிர் விட இதோ இப்போது ஏப்ரல்

மாதம் நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதில் மேற்கு வங்காளமும்  ஒன்று...


இம்முறை  தேர்தல் காரணம் காட்டி கொல்கத்தா பயணத்தைக் கைவிட மனசு இடம் கொடுக்கவில்லை...


***


ஏப்ரல் மாதம் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பது தெரிந்ததுமே முதலில் மூன்றாவது வெளிநாட்டு  பயணமாக ஸ்ரீ லங்கா

சென்று வரணும்ணுதான் ஆசை பட்டேன்.


அது என்னவோ தெரியல  திட்டம் எல்லாம் போட்டு  விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்னு  தயாராக இருக்குற சமயத்துலதான்

ஸ்ரிலங்காவுல  கோவிட் ரிஸ்ட்ரிக்‌ஷன் காரணமாக மூனாவது வருஷமா இப்போ ஏப்ரல்

மாசம் போகனும்னு போடுற இண்டர்னேஷ்னல் ட்ரிப் கைவிட்டாச்சு...


2019 துபாய்;

2020 ஆஸ்திரேலியா;

2021 ஸ்ரிலங்கா...


  இப்போதைக்கு  ஸ்ரிலங்கா  போகுற திட்டம் தற்காலிகமாக கைவிட்டதை அடுத்து ஐந்து நாட்கள் விடுமுறையில் எங்கு போகலாம்னு

யோசித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது கொல்கத்தாதான்...


இம்முறை வெறும் கொல்கத்தா மட்டும் சென்று வர்ர மாதிரி திட்டமிடாமல் கூடவே ஒன்னு ரெண்டு இடங்களை சேர்த்து கொண்டு

சுற்றிப் பார்த்து வரனும் ஆசை பட்டதன்  பலனாக

வரும் ஏப்ரல் மாதம் அடுத்த பயணம்  மேற்கு வங்காளம் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் என

  மூன்று மாநிலங்களில் இருக்கும் கொல்கத்தா - கயா -  வாரணாசி

  இடங்களை தேர்ந்தெடுத்து  சுற்றிப் பார்க்க இருக்கிறேன்...

சுற்றுலாவின் ஒரு பகுதியாக ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்தாகி விட்டது.


என்னதான் பயணத்தில் ஆர்வம் இருந்தாலும்; புது இடங்களைச் சுற்றி பார்க்கும் ஆசை இருந்தாலும்

  பயணத்திற்கான ஏற்பாடுகள் பேச்சைதாண்டி செயலுக்கு வரும்போது கொஞ்சம்

  தயக்கமாகத்தான் இருக்கும்;

சலிப்பாகவும் இருக்கும்.

ஆனாலும் சோர்ந்துவிடக் கூடாது...

ஏன்னா பயணம் எனக்கு ரொம்ப முக்கியம்...

திரும்பி பார்க்கும்போது அது மட்டுமே எப்போதும் உண்மையான சந்தோஷத்தையும்

  உற்சாகத்தையும் தரக்கூடிய நினைவுகளைக் கொண்டது...

அதனாலையே - நான் அதிகம் பயணம் செய்ய விரும்புகிறேன்.


---

திருப்பதி மஹேஷ்

07/03/2021.