Sunday, March 07, 2021

கொல்கத்தா - கயா - வாரணாசி.

வரும்  ஏப்ரல் 9-வெள்ளிக்கிழமை மதியம் லன்ச் பிறகு  அலுவலகத்தில் பர்மிஷன் கேட்டு வீட்டுக்கு புறப்படணும். அன்று மாலை 6:30க்கு

கூடூர் வரை செல்ல முதலில் ரயில் பிடிக்கணும்.


திருப்பதியிலிருந்து கொல்கத்தாவிற்கு  நேரடியாக செல்ல தினசரி ஒரு ரயில் இருக்கிறதுதான். ஆனால் கோவிட் பிறகு அந்த ரயில்

நேரம் மாற்றி விட்டதால் அதனுடைய தற்போதைய நேரம் எங்களுக்கு  ஒத்து வராததால்  இங்கிருந்து  கூடூர் (90கிமி) வரை சென்று

அங்கிருந்து சென்னை - ஹவுரா மெயில் பிடித்து கொல்கத்தா செல்வதுதான் எங்களது திட்டம்...


திருப்பதியில் இருந்து கூடூர் வரை செல்ல ஒன்னரை மணி நேர பயணம். மாலை 6:30க்கு புறப்பட்டால்  இரவு எட்டு மணிக்கு கூடூரில்

இறங்கி  ஒரு மணி நேர காத்திருப்புக்கு  பிறகு அடுத்த ரயில் அங்கிருந்து

எங்களுக்கு  ஒன்பது  மணிக்குத்தான்.


சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மாலை 7:15க்கு புறப்படும் ஹவுரா  மெயில் கூடூர் ஸ்டேஷனுக்கு இரவு ஒன்பது

மணிக்கு வரும். அதில் நாங்கள் ஏறினால் 26 மணி நேர தொடர் பயணத்திற்கு

பிறகு சனிக்கிழமை இரவு பதினோரு மணிக்கு  ஹவுரா சென்றடைவோம்.


***


மூன்று மாநில பயணத்தின்  ஒரு பகுதியாக கொல்கத்தா செல்கிறேன் என்பதை கேள்விபட்டதுமே நண்பர் ஒருத்தர் ’இந்த டைம்ல

வெஸ்ட் பெங்கால் போவது அவசியமா’னு கேட்டிருந்தார்.


இப்படிதான் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2019) அதுவும் ஏப்ரல்

மாதம்தான். வங்கியில் தொடர் விடுமுறை கிடைப்பதே அபூர்வம்

அதுவும் ஒரு நாள்   விடுப்பு எடுத்துக் கொண்டால் மொத்தம் ஐந்து நாட்கள் கிடைப்பதைக் கொண்டு கொல்கத்தா மட்டும் சென்று சுற்றி

வரத் திட்டம் எல்லாம் போட்டு தயாராக இருக்க  கடைசியில் அந்த  நேரம்

நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால்  திட்டம் கைவிட்டாச்சு...


அதன் பிறகு இப்போது மீண்டும் கொல்கத்தா  ஆசை துளிர் விட இதோ இப்போது ஏப்ரல்

மாதம் நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதில் மேற்கு வங்காளமும்  ஒன்று...


இம்முறை  தேர்தல் காரணம் காட்டி கொல்கத்தா பயணத்தைக் கைவிட மனசு இடம் கொடுக்கவில்லை...


***


ஏப்ரல் மாதம் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்பது தெரிந்ததுமே முதலில் மூன்றாவது வெளிநாட்டு  பயணமாக ஸ்ரீ லங்கா

சென்று வரணும்ணுதான் ஆசை பட்டேன்.


அது என்னவோ தெரியல  திட்டம் எல்லாம் போட்டு  விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்னு  தயாராக இருக்குற சமயத்துலதான்

ஸ்ரிலங்காவுல  கோவிட் ரிஸ்ட்ரிக்‌ஷன் காரணமாக மூனாவது வருஷமா இப்போ ஏப்ரல்

மாசம் போகனும்னு போடுற இண்டர்னேஷ்னல் ட்ரிப் கைவிட்டாச்சு...


2019 துபாய்;

2020 ஆஸ்திரேலியா;

2021 ஸ்ரிலங்கா...


  இப்போதைக்கு  ஸ்ரிலங்கா  போகுற திட்டம் தற்காலிகமாக கைவிட்டதை அடுத்து ஐந்து நாட்கள் விடுமுறையில் எங்கு போகலாம்னு

யோசித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது கொல்கத்தாதான்...


இம்முறை வெறும் கொல்கத்தா மட்டும் சென்று வர்ர மாதிரி திட்டமிடாமல் கூடவே ஒன்னு ரெண்டு இடங்களை சேர்த்து கொண்டு

சுற்றிப் பார்த்து வரனும் ஆசை பட்டதன்  பலனாக

வரும் ஏப்ரல் மாதம் அடுத்த பயணம்  மேற்கு வங்காளம் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் என

  மூன்று மாநிலங்களில் இருக்கும் கொல்கத்தா - கயா -  வாரணாசி

  இடங்களை தேர்ந்தெடுத்து  சுற்றிப் பார்க்க இருக்கிறேன்...

சுற்றுலாவின் ஒரு பகுதியாக ரயில் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்தாகி விட்டது.


என்னதான் பயணத்தில் ஆர்வம் இருந்தாலும்; புது இடங்களைச் சுற்றி பார்க்கும் ஆசை இருந்தாலும்

  பயணத்திற்கான ஏற்பாடுகள் பேச்சைதாண்டி செயலுக்கு வரும்போது கொஞ்சம்

  தயக்கமாகத்தான் இருக்கும்;

சலிப்பாகவும் இருக்கும்.

ஆனாலும் சோர்ந்துவிடக் கூடாது...

ஏன்னா பயணம் எனக்கு ரொம்ப முக்கியம்...

திரும்பி பார்க்கும்போது அது மட்டுமே எப்போதும் உண்மையான சந்தோஷத்தையும்

  உற்சாகத்தையும் தரக்கூடிய நினைவுகளைக் கொண்டது...

அதனாலையே - நான் அதிகம் பயணம் செய்ய விரும்புகிறேன்.


---

திருப்பதி மஹேஷ்

07/03/2021.

5 comments:

 1. அது என்னவோ நீ பயணம் சம்பந்தமா எழுதன்றத படிக்குன் போது சீட் நுனியில் திரில்லர் படம் பாக்குற உணர்வு... பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
  நீ பயணம் சென்றால்தானே எங்களுக்கும் படிக்க நிறைய கண்டெண்ட்டுகள் வரும்.

  ReplyDelete
 3. பயணம் சிறக்க வாழ்த்துகள். எச்சரிக்கைகளைக் கைக்கொண்டு கவனமாக இருங்கள்.

  ReplyDelete
 4. பயணம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் மகேஷ்.

  மூன்று இடங்களுமே பழமையான இடங்கள். கயா செல்லும் போது புத்தகயா சென்று வர மறக்காதீர்கள். வாரணாசி - படகுப் பயணம் செய்து பாருங்கள்.

  ReplyDelete
 5. All the best Mahesh.KO

  ReplyDelete